Monday, December 28, 2009

த்ரீ ரோசெஸ்

என் சரித்திரத்தில்(!!) இது இரண்டாவது கவிதை
முயற்சி. எல்லோரும் உங்க பதிவுகள்ள கவிதையா எழுதி எனக்கு உள்ள தூங்கிகிட்டு இருந்த கவிங்கன எழுப்பி உட்டீங்க.
(என்ன கொடும சார் இது)
எனக்கு கவிதைக்கான இலக்கணமோ, இலக்கியமோ தெரியாது. ஆனா, கவிதைய ரசிக்க தெரியும். என்னால முடிஞ்ச அளவு முயற்சி செய்து இருக்கேன், படிச்சு பார்த்துட்டு ரிசல்ட் சொல்லுங்க.








முரண்

உயர் சாதி செல்லப்பிரானிக்கு
உயர் ரக உணவு வைத்து விட்டு
மீந்ததை சாப்பிட்டாள்
செல்வந்தர் வீட்டு பணிப்பெண்.


உபதேசம்

குழந்தைதொழிலாளர்கள்
இல்லாத நிலை வேண்டும்
மேடையிலே முழங்கி விட்டு வந்த
தலைவரின் களைப்பு தீர
உடம்பு பிடித்து கொண்டிருந்தது
அவர் வீட்டு
வேலைக்கார சிறு பிள்ளை.

தீண்டாமை

தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்
குழந்தை மனனம் செய்து கொண்டிருந்தது
இரட்டை டம்ளர் கொண்ட
பள்ளயில்.




அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
நன்றிகள் பல.

2 comments:

Paleo God said...

எனக்கு கவிதைக்கான இலக்கணமோ, இலக்கியமோ தெரியாது. ஆனா, கவிதைய ரசிக்க தெரியும். என்னால முடிஞ்ச அளவு முயற்சி செய்து இருக்கேன், படிச்சு பார்த்துட்டு ரிசல்ட் சொல்லுங்க.//


நானும்தாங்க... தேடல்கள் நிச்சயமாய் நல்ல கவிதைகளை உங்களுக்கு தரும். பாக்கற எல்லாத்தையும் அசை போட்டுகிட்டே இருங்க இனிப்பா ஒரு சாறு வரும் பாருங்க அதுதான் கவிதை.... இதெல்லாம் சொல்றதுனால நான் பெரிய ஆளுன்னு நினைச்சீங்கனா... மேல சொன்னத மறுபடியும் படிச்சிடிங்க ::)) வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

@பலா பட்டறை

எனக்கு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி நண்பரே.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)