Sunday, December 6, 2009

சேட்டு கடை

சேட்டு சூடா ஏலக்கா டீ ஒன்னு, வாப்பா பி.பி (பிலிம் பித்துக்குளி) எந்த படத்தை பத்தி இன்னிக்கு பேசபோற. மொதல்ல கதையை கேளு சேட்டு, மௌலி ஒரு விளம்பர கம்பனி நடத்துறார், அது இப்பவோ அப்பவோன்னு புட்டுகிற நிலமையில இருக்கு, அத்த நம்ம ஹீரோவும், ஹீரோயினும் எப்படி தூக்கி நிறுத்துறாங்க அப்படிங்கறதுதான் கதை, ஆனா டைரக்டர் சோக்கா சொல்லி இருக்காபுல, பி.பி யாருப்பா டைரக்டர், எழுத்தெல்லாம் படிக்க தெரிஞ்சா நான் ஏன் உன் கடைக்கு வரபோறேன், ண்ணா, அவுக பேரு "நந்தினி" ங்கன்னநா, யாருயா இவன் அப்பப்ப வரான், பேசுறான், மாயமா போகிறான். கதையை கேளு சேட்டு, மௌலி ஒரு கஜினி, அவர்கிட்ட வேலை செய்யற அஜ்மல், இடியே விழுந்தாலும் தடி விழுந்த மாதிரி போய் கிட்டு இருக்கிற ஆளு, மஞ்சரி எட்டுக்கால் பூச்சிக்கு நிசமாவே எட்டுக்கால்தானான்னு பாக்குற ஆளு, இவுங்க எடுக்குற விளம்பரத்துக்கு ஒரு குழந்தை தேவைபடுது, குழந்தையை தேடிபோக, கடத்தப்பட்ட ஒரு குழந்தை இவங்க கையில் கிடைக்க, விளம்பர தயாரிப்பாளர் பெற்றோர் கையெழுத்து வேணுமின்னு கேக்குறாங்கோ, அவங்களை தேடி ஜோடி ரெண்டும் அலைய வழக்கம் போல காதல் வந்துருது.
பிள்ள கடத்தல் காரிய கட்டி போட்டு ரெண்டு பேரும், போலீஸ் டார்ச்சர் பண்ணுறாங்க பார், அந்த சீன போலீஸ் பார்த்தாலே சிரிப்பு வரும். பாட்டு எப்புடி, தம்மடிக்க தைரியமா வெளிய போகலாம், "ஜில்லென வீசும் பூங்காற்று" பாட்டு மட்டும் கொஞ்சம் சொகம்மா இருக்குப்பா. ஜன் டி.வீ யில சோக்கா கால் மேல கால் போட்டுக்கிட்டு பட விமர்சனத்தில ஒரு பஞ்ச் வைப்பாகளே அது மாதிரி ஒரு பஞ்ச் வை,


திரு திரு துறு துறு: சேட்டு கடை மொறு மொறு முறுக்கு.

அப்படி போடு, யோவ் சேட்டு கால் மாட்டிகிச்சு எடுத்து விடுயா

No comments:

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)