Thursday, December 17, 2009

மச்சக்காரி


"பயணிகளின் கனிவான கவனத்திற்கு, நாகர்கோயிலில் இருந்து, மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் மார்க்கமாக சென்னை எக்மோர் வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் மூன்றாவது பிளாட்பாரம் இல் இருந்து புறப்பட தயாராக உள்ளது, kind attention... "

மாப்ஸ் வண்டிய கிளப்ப போராங்க உன் கோச் எது சொல்லு,
2tier a/c sleeper கிளாஸ்-டா, அந்த STD-கிட்ட இருக்கும் ஓடு,ஓடு,
சரி நான் பார்த்துக்கிறேன்,

நீ கிளம்பு. தேங்க்ஸ்டா.

மாப்ஸ், தங்கச்சிய கேட்டதா சொல்லு, ஹாப்பி ஜெர்னி.

ஒரு வழியா ஏறி எனது பெர்த்தில் சென்று, லக்கேஜ் எல்லாம்
வைத்து விட்டு நிமிர்ந்தால், "என் நெஞ்சுக்குள் ஹாரிஸ் உக்காந்துகிட்டு "மாமழை" வாசிக்கிறார்.

ஆமாங்க என் முன்னால அம்சமான "பிகர்" ஒன்னு ஒயிலா உக்காந்து இருக்கு.

அதை பார்த்து ஹாய் என்றேன், அது உதட்டை பிரிக்காம, நோவாம ஒரு புன்னகையை கொடுத்திச்சு.

அப்பதான் கவனிச்சேன் அதோட கீழ் உதட்டுக்கு கிழே, ச்சே... உளற ஆரம்பிச்சுட்டேன் இல்ல, அதோட உதட்டுக்கு கீழ அழகா ஒரு மச்சம்.

பார்வைய அப்படியே எல்லா பக்கமும் ஓட்டுன அப்புறம்தான் தெரிஞ்சது, அந்த பொட்டில, நான், அந்த மச்சக்காரி அப்புறம் ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மட்டுமே இருந்தோம்

(உனக்கு இன்னைக்கு மச்சம்தாண்டி அப்படினுதான நினைக்குறீங்க)

மெதுவாக மச்சக்காரியிடம் பேச்சு கொடுத்தேன். மிஸ் நீங்க சென்னையா, யா, ஹௌ அபௌட் யு (ஸ்வீட் வாய்ஸ்)

நானும் தலைநகரம்தான் என்றேன் ஒரு அசட்டுத்தனமான சிரிப்புடன்.

பேரைக்கேட்டேன், என்னுடன் "பழகிய" பின்புதான் சொல்வாளாம்,
அப்புறம் பரஸ்பர குசல விசாரிப்புகளுக்கு பின்பு, அவள் ரசனையும், என் ரசனையும் ஒன்றாக இருக்க நாங்கள் "ரொம்ப நெருக்கமாகினோம்"

45 எங்களையே முறைத்து கொண்டு இருந்தது. அது யார் உன் அப்பாவா என்று அவளிடம் ரகசியமாக கேட்டேன்.

ச்சே.. ச்சே.. அவர் யாருன்னு எனக்கும் தெரியாது என்றாள்.

இன்று நமக்கு ஏதோ "பரவச அனுபவம்" நடக்க போகிறது என்று உள்மனது
சொல்லியது.

45 வயதும் திருச்சியில் இறங்கி விட்டது. "தடக் தடக்" திருச்சி தாண்டிய பின்பு நானும், மச்சக்காரி மட்டுமே இருந்தோம்.

தனிமை கொடுத்த தைரியத்தில் மிக இயல்பாக அவள் அருகில் சென்று அமர்ந்தேன், அவளை உரசியபடி, மறுப்பு ஏதும் வராது போகவே......

"முடித்த" பின்பு ஒரு கணம் என் குற்ற உணர்ச்சி தலை தூக்கியது, மனைவிக்கு துரோகம் செய்து விட்டோமோ...

சான்ஸ் கிடைக்கிற வரைதான் எல்லோரும் யோக்கியம் என்ற "தத்துவத்தினை" நினைத்து என்னை நானே சமாதான படுத்திக்கொண்டேன்.

அப்புறம் "அசதியில்" அப்படியே தூங்கிப்போனேன். விடி காலை ஆறு மணிக்கு முழிப்பு வந்தது,

எழுந்தவுடன் மச்சக்காரி எங்கே என தேடினேன், ஆளை காணோம், எனக்குள் லேசாக ஒரு பரபரப்பு, எத்தனை சினிமாவுல பாத்து இருக்கோம், அதுல வர மாதிரி நமக்கு "கொடுத்து" அவளுக்கு தேவையான (நான் மதுரையில் இருந்து வாங்கி வந்த "jewels" முதல் கொண்டு) அத்தனையும் ஆட்டய போட்டிருப்பாளோ.

உடம்பு உதற என் லக்கேஜ்-ஐ தேட நான் நினச்ச மாதிரியே காணோம், தலையில கை வச்சுக்கிட்டு "அஞ்சு நிமிச சுகத்துக்காக" சொத்து
போச்சேன்னு
உட்கார்ந்து இருக்கும்போது ஒரு "கனைப்பு" சத்தம் கேட்டது.

நிமிர்ந்தேன், அட என்னோட(!!) மச்சக்காரி, என் லக்கேஜ்-ஐ கையில
வச்சுக்கிட்டு நிக்குது.

என்னையும், உன் லக்கேஜ்-ஐயும் காணாம என்னை சந்தேகப்பட்டு இருப்பியே என்றாள், ஒரு வித குற்ற உணர்ச்சி மேலிட பதில் சொல்லாது இருந்தேன்.

நீ என்ன அடிச்சுபோட்ட மாதிரி அப்படி ஒரு தூக்கம் தூங்குற, உன்னோட பேக் பெர்த்தில இருந்து கீழ விழுந்தது கூட தெரியாம, அதான் சும்மா விளையாட்டுக்கு, நான் தூக்கி வச்சுக்கிட்டு மறைவா இருந்தேன் என்றாள்.

அவளிடம் தேங்க்ஸ் சொல்லிவிட்டு, உன் பேரை இப்பவாவது சொல்லேன் என்றேன், எக்மோர் வந்த உடன் சொல்றேன் என்றாள், அதுவரை ஒரு "க்ளு" தரேன் முடிஞ்சா கண்டுபிடி என்றாள்.

அந்த "க்ளு" அவ பெயர் தமிழ்ல எழுதினா ஏழு எழுத்தாம், நான் யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள எக்மோர் வந்திருச்சி.

சொல், சொல் என அவ பின்னாடியே சென்றேன்.

இனிமே அது என் பேரு மட்டும் இல்ல, "நம்ம பேரு" என்றாள்,

பீடிகை எல்லாம் போதும் மொதல்ல பேர சொல்லு என்றேன் சற்றே
எரிச்சலுடன்.

அவள் என்னை மிக நெருங்கி கிட்டத்தட்ட என் காதருகே வந்து கிசுகிசுப்பாய் சொன்னாள், என்னை பத்தி "நல்லா" தெரிந்தவங்க என் முதுகுக்கு பின்னால முனுமுனுக்கும் எனது பெயர்,



"எய்ட்ஸ் நோயாளி"

6 comments:

குரு said...

//
(நான் மதுரையில் இருந்து வாங்கி வந்த "jewels" முதல் கொண்டு) அத்தனையும் ஆட்டய போட்டிருப்பாளோ.
...
நிமிர்ந்தேன், அட என்னோட(!!) மச்சக்காரி, என் லக்கேஜ்-ஐ கையில
வச்சுக்கிட்டு நிக்குது. ///

நல்ல ட்விஸ்ட். ஆனா முடிவு யூகிக்கறமாதிரி இருக்கு. Keep goin

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி குரு, உங்கள் கருத்து சொன்னதுக்கு.

நான் மேலும், நன்றாக எழுத கூடிய உற்சாகத்தை அளிக்கிறது உங்கள் கமெண்ட்.

PPattian said...

முடிவு கொஞ்சம் யூகிக்க முடியற மாதிரி இருக்கு.. ஆனாலும் Flow நல்லா இருக்கு

சைவகொத்துப்பரோட்டா said...

@புபட்டியன்
//முடிவு கொஞ்சம் யூகிக்க முடியற மாதிரி இருக்கு.. ஆனாலும் Flow நல்லா இருக்கு//

மிக்க நன்றி உங்க கருத்த சொன்னதுக்கு.

மாயாவி said...

பரவாயில்லை, நல்லா இருக்கு.
தொடர்ந்து எழுதுங்க!

சைவகொத்துப்பரோட்டா said...

@மாயாவி

//பரவாயில்லை, நல்லா இருக்கு.தொடர்ந்து எழுதுங்க!//



மிக்க நன்றி, உங்களின் கருத்துரைகள் எனக்கு உற்சாக டானிக்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)