Monday, December 27, 2010

மன் மதன் அம்பு - கா.மே.நா

படத்தை பார்ப்பதற்குமுன், நம் பதிவர்களின் விமர்சனங்களில் கடைசி பாராக்களை மட்டுமே படித்தேன்.
அப்போதான் படத்தை "அனுபவித்து" பார்க்க முடியும் என்பதால். (யாருப்பா அது கடைசி பாராவுக்கு ஓடுறது)

கதைபற்றி அனைவரும் தேவையான அளவுஅலசிவிட்டதால் என்னை "பாதித்த"
சில காட்சிகளை பகிர்ந்து கொள்கிறேன்.

மாதவன் மற்றும் த்ரிஷா காரில் சென்று கொண்டே விவாதிக்கும் காட்சி அதன்பின் நடக்கும் விபத்து, மிக சாதாரணமாய் தோன்றினாலும்
அந்த காட்சியே கதையின் திருப்பமாய் வருவது எதிர்பாராதது.

ஆரம்ப காட்சிகள் மிக சீரியஸ் ஆக இருப்பதால் மிக அழுத்தமான காதல் கதை வரப்போகிறது என எதிர்பார்த்தேன். கமல்
என்ட்ரி ஆனபின்தான் கதைக்களன் நகைச்சுவையில் பயனிக்கப்போகிறது என்பது தெரிந்தது.
வாரத்தைகளில் கிச்சுகிச்சு காட்ட முயற்சி செய்துள்ளார்கள். சில இடங்களில் வொர்க் அவுட் ஆகிறது. பல இடங்களில் "ஞே".தூங்கும்போது அந்தச்சிறுவன் கட்டைவிரல் ஆட்டும் காட்சி ஹா...ஹா...
கமலின் நண்பனாக வீடியோ சாட்டில் வரும் அந்த மொட்டையும் ஊர்வசியும் வரும் காட்சிகள் செண்டிமெண்ட்.
அந்த மொட்டைதான் ரமேஷ் அரவிந்த் என்பது படம் பார்க்கும்போது
தெரியவில்லை, படம் பார்த்தபின் நம் பதிவர்களின் விமர்சனத்தை மீண்டும் முழுமையாக படித்த பின்பு தெரிந்தது.

உஷாஉதூப், ஓவியா எல்லாம் வந்து போகிறார்கள்.

மாதவன், கமலிடம் போன் பேசிக்கொண்டே டிரைவ் செய்யும்போது "மாமாவிடம்"
மாட்டிக்கொள்ளும் காட்சி கலகல. நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டு இருக்கும் அந்த மலையாளம் பேசும் ஜோடிகள் வரும் சீன்களில் சுத்தமாக நகைச்சுவை இல்லை, முடிவில் வரும் சில காட்சிகள் தவிர்த்து.

த்ரிஷா சோகமாகவே வருகிறார், சொந்த குரலில் பேசி இருக்கிறார்.
கமலும், அவரும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சியில் த்ரிஷா "நன்றி" என்று
சொல்ல அதற்கு கமல் நீங்கள் நடிக்கும் படங்களில் இது மாதிரி தமிழே வர
மாட்டேங்குதே என்று கேட்பார். ஆனால் இதே படத்தில் நிறைய வசனங்கள் ஆங்கிலத்தில்தான் வரும்!

ஊர்வசி சீரியல் நடிகை மாதிரி கண்ணை கசக்கி கொண்டேதான் இருக்கிறார், அவ்வளவு சோகத்திலும்
சாட்டிங்கில் நிஷாவை (த்ரிஷா) பார்த்தவுடன் மிக கலகலப்பாக நான் உங்க "பேன்" என்பார்.

கதை, திரைக்கதை, வசனம்: கமல்ஹாசன்.
இயக்கம் :K .S .ரவிக்குமார்
இசை :தேவிஸ்ரீபிரசாத்
ஒளிப்பதிவு:மனுஷ்நந்தன்.

மன் மதன் அம்பு : காஸ்ட்லி மேடை நாடகம்

Picture Thanks: yahoo.com

Monday, December 13, 2010

ஓவர்

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்ததாரும் இல்லையே...
என் மொபைல் சிணுங்கியது, மணி பார்த்தேன் அதிகாலை மூன்று மணி.
இந்த நேரத்தில் அழைப்பது...அட! எங்கள் டீம் லீடர்தான்.
அகாலவேளையில் அழைத்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக முக்கியமான
ப்ராஜெக்ட் ஒன்று காத்திருக்கிறது.

சொல்லுங்க பாஸ் என்றேன் உற்சாகமாய்...

சொன்னார்...

கவனமாக கேட்டுக்கொண்டேன், பேசி முடித்த மூன்று நிமிடம் கழித்து
MMS - வந்தது.

அதன்பின் தூக்கம் வரவில்லை, நட்சத்திரத்தை எண்ணி பொழுதை
கழிக்கலாம் என முடிவு செய்து மாடிக்கு சென்றேன். கதவை திறந்ததும்
மார்கழி குளிர் சில்லென பனிக்கட்டி வைத்த மாதிரி தாக்கியது.
குளிர் தாங்காமல் உடல் நடுங்கியது, நட்சத்திரங்களுக்கு குட் நைட் சொல்லிவிட்டு நேரே சமையலறைக்குள்
புகுந்தேன்.

சூடாக இருந்த காபி குளிருக்கு மிக இதமாய் இருக்க, டீவியிடம் சரணடைந்தேன் மியூசிக் சேனலில் பல்லாங்குழியின் வட்டத்தில் பார்த்த ஒற்றை நாணயத்தைப்பற்றி சினேஹா சிலாகித்து கொண்டிருந்தார்.

குளித்தால் குளிரை விரட்டலாம் போல இருந்தது...குளித்தேன்.
இப்போது, என்னை கொஞ்சம் கவனி என்றது வயிறு. இரவு வாங்கி வந்த ப்ரெட்டை டோஸ்ட் செய்து சாப்பிட்டுவிட்டு மணி
பார்த்தேன் 4 .20 Am.

வீட்டைபூட்டிவிட்டு பைக்கை உதைக்க, அதிகாலைப்பனியுடன் கொண்டிருந்த நட்பினால் கிளம்ப மறுத்தது. ஆத்திரத்தில் ஓங்கி விட்ட உதைக்குப்பின் கிளம்பியது.

சாலை சுத்தமாக கழுவியது போல் இருந்தது, ட்ராபிக் இல்லாத சாலையில் பயணிப்பது தனி சுகம்தான்,
விதவிதமான எரிச்சலூட்டும் ஹாரன் சத்தங்கள்...வூட்ல சொல்லிட்டு வந்திட்டியா போன்ற
வசனங்கள் இன்றி, சாலை மிக அமைதியாய் இருந்தது.
விளக்கு கம்பங்கள் பனியில் குளித்து கொண்டே உற்சாகமாய் தங்கள் பணியினை செய்து கொண்டிருந்தன.

நிதானமாய் சென்றேன், இதே வேகத்தில் சென்றால் கூட இன்னும் பத்து நிமிடத்தில் பீச்சை அடைந்து
விடலாம். வானத்தில் பிளாஷ் லைட் அடித்து கொண்டிருப்பதை பார்த்தால் மழை வரும்போல் இருந்தது.

பைக்கை ஓரமாய் நிறுத்திவிட்டு ஜோக்கிங் ட்ராக்கின் அருகாமையில் இருந்த கிரவுண்டில் வார்ம்அப் பயிற்சிகளை ஆரம்பித்தேன். சற்று நேரம் கழிந்த பின்னர்,
குளிரை மீறி உடல் வியர்க்க ஆரம்பித்திருந்தது.

இப்போது பீச்சில் சில கார்களும், பைக்குகளும் முளைக்க ஆரம்பித்திருந்தது.

ஈரமாயிருந்த சிமெண்ட் பெஞ்சை துடைத்துவிட்டு உட்கார்ந்தேன்.
சற்றே மூச்சு வாங்கியது. கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலாம் போல இருந்தது, என் பையில்
துலாவிய பின்புதான் தெரிந்தது, தண்ணீர் பாட்டிலை எடுத்து வரவில்லை என்பது. ஆயாசமாய் செய்வதறியாது சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
வந்திருந்த சொற்ப "தொப்பைகளும்" அவற்றை கரைக்க வேண்டி கடமையே கண்ணாய், ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுதுதான் அவரை கவனித்தேன், சோம்பல் முறித்துக்கொண்டே கார் டிக்கியில் உட்கார்ந்தவாறே ஷூ அணியும் முயற்சியில் இருந்தார்.

அவரை நோக்கி நிதான நடை போட்டேன், சூரியபந்து கடலில் இருந்து லேசாக தலை தூக்க ஆரம்பித்து இருந்தது, மேக மூட்டமாய் இருந்ததால்
சூரியனாரின் வெளிச்சம் இருண்ட கிணத்துக்குள், இரண்டு கட்டை டார்ச் லைட் அடித்தது போல்
பலவீனமாய் இருந்தது.


அவருக்கு அருகில் சென்று நின்ற பொழுதும் அவர் என்னை கவணித்ததாய் தெரியவில்லை.
என் மொபைலை எடுத்து மீண்டும் ஒருமுறை MMS -ல் படத்தை பார்த்து உறுதி செய்து விட்டு...

எங்கள் லீடர் கொடுத்த பிளான்படி, அவரை "அதா"க்கினேன்.

உற்சாகமாய் எங்கள் லீடரை தொடர்பு கொண்டு "ஓவர்" என்றேன்.
*************************************************

Picture Thanks: freelargephotos.com/

Monday, December 6, 2010

சிக்கு புக்கு கலர்புல் கோச்

செவியை கிழிக்கும் கூச்சல்கள், பன்ச் டயலாக்ஸ் இல்லாமல் மீண்டும் ஒரு படம் என்பதே சற்று ஆறுதலாக இருந்தது. நன்றி இயக்குனர் K. மணிகண்டன்.

கதை என்று பார்த்தால் 1985 -இல் அப்பாவின் காதல் (ஆர்யா, ப்ரீதிகா)
2010 -இல் மகனின் காதல்(தானா என்று யோசிக்க வைக்கிறது)
இரண்டும் என்னவாகிறது என்பதுதான்.

உண்மையில் முதல் ஹீரோ போடோக்ராபில் அசத்தி இருக்கும் R.B. குருதேவ்தான். காரைக்குடி, குன்னூர், கர்நாடகா, லண்டன் காட்சிகள் அனைத்தும் கண்ணுக்கு குளுமை, கை தேர்ந்த ஓவியன் வரைந்து வைத்த ஓவியம் போல் இருக்கிறது காட்சிகள்.1985 ஆர்யாவின் கெட்டப்பும் நடிப்பும் சாந்தமாய் இருக்கிறது, தாத்தா ரவிச்சந்திரன், ஆச்சி சுகுமாரி மற்றும் நிறய நடிகர்கள் பட்டாலங்களுக்கிடையே ஆர்யா - ப்ரீதிகா காதலை சற்றே நகைச்சுவை கலந்து காட்சிகளை நகர்த்தி உள்ளார்கள்.
ஆனால் அம்மணி ப்ரீதிகாவின் முகம் இந்த கூட்டத்தில் ஒட்டவில்லை,
வேற்றுகிரகவாசி போல் இருக்கிறது.
ட்ரைனிங் கேம்பில் ஆர்யாவின் நண்பனாக வரும் நபர்(பெயர் தெரியவில்லை) தன் காதல் ஒருதலையாகிப்போனதை தெரிந்து கொண்ட பின்னர் அந்த வலியை காட்டும் காட்சியில் மனிதர் அசச்தி இருக்கிறார்.
சந்தானம், வையாபுரி, பாண்டு வந்து போகிறார்கள்.

2010 - காட்சிகள் அவ்வளவாக ஒட்டவில்லை, ஸ்ரேயாவின் கேரக்டர் ஓவர் அலட்டலாய் இருப்பதால் எரிச்சல்தான் மிஞ்சுகிறது.
ஆனால் ட்ரெயின், லாரி, சாலையில் நடைப்பயணம் என்று அவர்கள் செல்லும் காட்சிகள்
கண்ணுக்கு குளுமை!

இசை, ஹரிஹரன் - லெஸ்லி பாடல்களும், பின்னணியும் சுமார் ரகமே மனதில் ஒட்டவில்லை.

1985 காதலை மட்டுமே
எடுத்துக்கொண்டு கதையை நகர்த்தி இருந்தால் இன்னும் சிறப்பாக
வந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

மொத்தத்தில், நீராவி எஞ்சின் இதம் (1985 காட்சிகள்)
எலெக்ட்ரிக் எஞ்சின் கலர்புல் (2010 காட்சிகள்)

Picture thanks to:indiaglitz.com

Friday, November 12, 2010

மூன்று நூறு கூட்டல் அறுபத்தி ஐந்து

நம் நுரையீரலில் இமை முடி போன்ற மெல்லிய முடி இருக்கிறது. இதன் பணி நம் நுரையீரலில் தங்கும் சளியினை அப்புறப்படுத்துவது. தொடர்ந்து சிகரெட் புகைப்பவர்களுக்கு, இந்த முடியானது அதிகப்படியான கார்பனால் பாதிக்கப்படுகிறது. ஒரு வருடம் புகைப்பதை நிறுத்தினால், இந்த முடிகளில் படிந்துள்ள கார்பன் நீங்கி இவை தன் கடமைகளை செவ்வனே
செய்யும்.

உங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆகி விட்டதா, ஆம் என்றால் பின்வரும் டிப்ஸ் உங்களுக்க்தான்:

ஒரு வயது ஆன குழந்தைக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் ரொட்டி போன்றவை கொடுக்கலாம்.

இனிப்புகளை கொடுத்து பழக்கப்படுத்த வேண்டாம்.

நம்மைப்போல் ஒரே நேரத்தில் அவர்களால் இலைசாப்பாடெல்லாம் சாப்பிட
முடியாது. அதனால் ஒரு நாளைக்கு சிறுது சிறிதாக நான்குஅல்லது ஐந்து முறை வருமாறு உணவை
பகிர்ந்து கொடுக்கவும்.

காபி, டீ, சாக்லேட் போன்றவற்றை கொடுப்பதை தவிர்க்கவும்.

இப்போ ஏன் இந்த தகவல்லாம் என நினைக்கிறவங்களுக்கு இன்னுமா
புரியல பாஸ், நம்ம கடை ஆரம்பிச்சு இன்னையோட ஒரு வருஷம்
ஆச்சு. கடந்த வருடம் (12 .11. 2009 ) இதே நாள்லதான் கடை திறக்கப்பட்டது.

பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஸ்பெசல் பரோட்டாக்கள் சாப்பிடுங்க.இலவச இணைப்பா இந்த கேக் எடுத்துக்கோங்க.

ஆச்சா...

இந்தக்கடை போட தளம் கொடுத்த blogger.com ,கஸ்டமர்ஸ்
ஆகிய நீங்கள் இன்ட்லி, தமிழ்மணம், திரட்டி, உலவு, தமிழ்வெளி, tamil blogger மற்றும் அனைவருக்கும் எனது நன்றிகள்.

Saturday, November 6, 2010

உத்தமபுத்திரன் - ந.சு.ச.வெ

சிவா மாமா (தனுஷ்) வாங்கி வரும் முகூர்த்தப்புடவைக்காக நம்ம ஸ்ரேயா காத்து இருக்காங்க. இந்த படத்துல ஜெனிலியாதான
ஹீரோயின்னு நீங்க நினைக்கிற மாதிரிதான் நானும் நினைச்சேன்.
(நான் கூட தியேட்டர் மாறி வந்துட்டோமோன்னு நினைச்சேன்!)
ஆனா வீட்ல அரேன்ஜ் பண்ற கல்யாணம் பிடிக்காம, காதலிச்சவரை மாமா தனுஷ் உதவியோட குடும்பத்தாருக்கு தெரியாம ரகிசயமா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கறதோட ஸ்ரேயாவின் பணி ஓவர்.

இதனால் தனுஷோட குடும்ப மெம்பர்ஸ் எல்லாம் அவர வீட்டை விட்டு வெளியில்
அனுப்புறாங்க. நண்பர்களுடன் தங்கும் தனஷ் விடுமுறையில் ஊருக்கு பயணம் போகையில் அவர்களின் நண்பன் ஒருவன் சோகத்தில் இருக்க . விசாரிப்புக்குப்பின் அவரோட காதலிக்கும் வேறு நபருக்கும் கல்யாணம், என்பது தெரிய வர மண்டபத்தில் நுழைந்து அவரை தூக்கி வந்தால்,
அந்தப்பெண் ஜெனிலியா! (மண்டபம் மாறி சென்று விட , பெண்ணும் மாறி விடுகிறது)
ஜெனிலியாவிற்கும் அந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை. நான் கடவுள் மொட்டை முருகன், தனுஷ் அன்ட்கோவை துரத்தும் பொழுது
லாரியில் அடிபட்டு கோமா ஸ்டேஜிற்கு போகிறார்.


அப்புறம் ஜெனிலியாவை தன் வீட்டிலே, பெரியப்பா பாக்கியராஜின் குருஜிஅனுப்பிய பெண் என பொய் சொல்லி
தங்க வைக்கிறார் தனஷ். பின்னாலேயே தானும் வீட்டாரை சமாதன படுத்தி வீட்டுக்குள் நுழையும் தனுஷ்
ஜெனியை லவ்வுகிறார். இதனிடையே குருஜியை பாக்யராஜ் சந்திக்கும்போது குட்டு வெளிப்பட, ஜெனியின் உறவினர்கள் ஜெனியை தூக்கி வந்து அவரை
வீட்டுச்சிறை வைக்கிறார்கள்.

பெற்றோரை இழந்த ஜெனியின் சொத்தை அடைவதற்காக அவரை, தங்கள் மகனுக்கு கல்யாணம் முடிக்க அண்ணன் ஆஷிஸ் வித்யார்தியும் தம்பி ஜெயபிரகாஷும் போட்டி போடுகிறார்கள். இரு குடும்பத்துக்கும் பொதுவான ஆடிட்டர்(!) விவேக்.

ஜெனியை மீட்பதற்காக விவேக்கிடம்
உதவியாளராக சேரும் தனுஷ், ஜெனியால் முட்டிக்கொள்ளும் அவரின் இரண்டு குடும்பத்தையும் சேர்த்து வைக்க தன் குடும்பத்தாரை அங்கே வர வைத்து ஒரு நாடகாமாடி அவர்களை சேர்த்தும் வைக்கிறார். அதன்பின் ஜெனியை கல்யாணம் செய்ய முயற்சிக்கிறார்.

பாக்கியராஜ், விவேக், தனுஷ், வித்யார்தி, ஜெயபிரகாஷ், சுந்தர்ராஜன், மயில்சாமி இதோட சேந்து ஒரு பட்டாளமே அடிக்கிற லூட்டி இருக்கே, சிரிப்புக்கு பஞ்சமில்லை!

இசை விஜய் ஆண்டனி, ஒரு பாட்டு மட்டும் எனக்கு பிடிச்சது.
தெலுங்கு படமான "ரெடி"யின் ரீமகேதான் இது. இயக்கம்:மித்ரன் ஜவஹர்.

சிரித்து விட்டு வரலாம்!

உத்தமபுத்திரன் : நகைச்சுவை சரவெடி! Picture Thanks:indaiglitz

Monday, November 1, 2010

காதல் வந்தாலே...

என்னை விட
மெல்லிய மலரா
அதிசயித்தது
நீ சூடிக்கொண்ட
மல்லிகை.
*********************************************

ஸ்வரங்கள்
வசப்படவில்லை
அதனாலென்ன
சங்கீதமாய் பேசும்
உன் இதயம்
என் வசம்.


********************************


என் வீட்டு பூச்செடிகளுக்கெல்லாம்
உன் மீது கோபமாம்
அவைகளை விட
சிறப்பாய்
புன்னகைப்பூக்களை
சிந்திக்கொண்டிருக்கிறாயே!******************************************************

Picture Thanks:photo.net , Photographers direct.com, commentsxo.com

Wednesday, October 27, 2010

எக்ஸின் அழைப்பு 8 (நிறைவுப்பகுதி)

இரண்டு நாட்கள் கழித்து புதிய நபர் ஒன்றில் இருந்து அழைப்பு வந்தது,
யாராக இருக்கும் யோசித்தவாறே ஹலோ என்றேன்.

அருண், விஷ்வா பேசறேன் என்றான்.

ஏய் விஷ்வா என்ன ஆச்சு உனக்கு இரண்டு நாளா ஆளையே காணோம்,
போன் செய்தாலும் எடுக்க வில்லை.

சொல்றேன் அருண் என் வீட்டுக்கு வாயேன் என்றான்.
மாலையில் வருவதாக கூறினேன்.

மாலை சொன்னே நேரத்துக்கு அவன் வீட்டு கதவை தட்டினேன்,
யாரோ ஒரு பெண் கதவை திறந்தாள்.

சாரி விஷ்வா வீடு இதுதானே...

ஆமா அருண் உள்ள வா என்றபடியே விஷ்வா வந்தான்.

கதவை திறந்த பெண் எனக்கு வணக்கம் சொல்லிவிட்டு உள் அறைப்பக்கமாய் நகர்ந்தாள்.

விஷ்வா என்னடா இது இப்போ பொண்ணுங்களை வீட்டுக்கே கூட்டிட்டு வர ஆரம்பிச்சுட்டியா.

உஷ்...அருண் இது நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணுடா என்றான் விஷ்வா. அவங்க அம்மா கூட கோவிலுக்கு வந்தவ அப்படியே
என்னை பாத்துட்டு போலாம்ன்னு வந்தா.

எப்படா கல்யாணம், சொல்லவே இல்லை என நான் அதிர்ந்தேன்.

சாரி அருண், என் கடைக்கு அடிக்கடி வர கஸ்டமர் இந்த பொண்ணு, அப்படியே பேசி பழக்கம் ஆச்சு. ஆனா இவ, என்னை ரொம்ப தீவிரமாய் காதலிச்சிருக்கா. நான் அது தெரியாம இவளையும் டைம் பாஸ் கேசுன்னு நினைச்சி கொஞ்சம் அசால்ட்டா
இருந்திட்டேன். இவ தன் காதல சொன்னப்ப நான் ஒத்துக்கல, அப்பறம் அவங்க அப்பாகிட்ட விசயத்த சொல்ல அந்த ஆள் கொஞ்சம்
ஆள் பலம் உள்ளவர்போல, என்னை தூக்கிட்டு போய் மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் யோசிச்சி பார்த்தேன், இந்த அளவுக்கு தீவிரமா நம்மளையும் ஒரு பொண்ணு காதலிக்கும்போது அவளை கல்யாணம் செய்து கொள்வதுதான் சரின்னு பட்டதால ஒத்துகிட்டேன்.

ஆனா, இவளோட மாமா பையனுக்கு இவ மேல ஆசை, இவளுக்கு
என் மேல் காதல். எங்க கல்யாணத்தை தடுக்க அந்தப்பையன் முயற்சி செய்றதால யாருக்கும்
சொல்ல முடியலை. நாளைக்கு வடபழனி கோவில்ல கல்யாணம்,
முடிச்சிட்டு அப்படியே மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணப்போறோம்.
இதையே அழைப்பா வச்சுக்கிட்டு வந்திரு என்றான்.

மறு நாள் விஷ்வாவின் திருமணம் நடக்கும் முன்பே அந்தப்பையன்
சொந்தங்களுடன் வந்து தகராறு செய்ய, விசயம் போலிஸ் ஸ்டேசன் வரை சென்றது. இந்த களேபரம் நடக்கும்போது, என் மொபைல் ரிங்கி கொண்டே இருந்தது.
அழைப்பது யாரென்று பார்க்கும் நிலையில் இல்லை எனவே காலை
கட் செய்தேன். அப்புறம் ஒரு வழியாக சமரசம் செய்யப்பட்டு காவல்
நிலையத்தில் திருமணம் நடந்தது.

இந்த களேபரங்கள் முடிந்த பின்னர் அழைத்தது யாரென பார்த்தேன்.
அட ஜோதி! உடனே அவளுக்கு கால் செய்தேன்.
**********************************************
ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவி போல் அப்பா சொல்லப்போகும் விசயத்தை கேட்க மிக ஆவலாய்
செவிகளை கூர்மையாக்கி கொண்டேன்.

மாப்பிள்ளையைபத்தி வந்த தகவல்கள் எல்லாம் ரொம்ப திருப்தியா
இருக்கு, எனக்கு சம்மதம் ஜோதி என்று அப்பா சொன்னவுடன் ஆனந்தத்தில்
துள்ளிகுதிக்க வேண்டும் போல் இருந்தது எனக்கு.

ஒரு மாதம் ஓடி விட்டது, விஷ்வா கால் பண்ணியிருந்தான்,
எங்கள் கல்யாண பத்திரிக்கை பிரிண்ட் செய்தாகிவிட்டதாம். நானும்
அவனும் சென்று அழைப்பிதழை வாங்கி மீண்டும் ஒருமுறை சரி
பார்த்தோம்.

விஷ்வா என்ற அருண்விஷ்வாவிற்கும், ஜோதிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்...என்று தொடங்கி
அனைத்தும் சரியாக இருந்தது.

எனது சைடில் முதல் அழைப்பை என் தோழி சுதாவிடம் இருந்து
ஆரம்பித்தேன்.


Picture Thanks:alter...names.com

விஷ்வாவின் பி.கு: பள்ளி காலத்தில் என் பெயரும், விஷ்வாவின் பெயரும் ஒன்றாக
இருந்ததால் எங்களுக்குள் செய்த ஒப்பந்தத்தின்படி விஷ்வா என் பெயரின் முன் பாதியான "அருண்" என்றே அழைப்பான்.

அழைப்பு முடிந்தது.

Monday, October 25, 2010

எக்ஸின் அழைப்பு 7

என்ன ஆச்சு விஷ்வா, எடேன் போனை...ம்...ஹூம்...ரிங் போய் கொண்டே இருந்தது. ஆனால் அவனோ லைனை கட் செய்து கொண்டே இருந்தான்.

ச்சே...என்ன காதலன் இவன், நான் கால் செய்கிறேன் மடையன் கட்
பண்ணிகிட்டே இருக்கான்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து விஷ்வா கால் செய்தான்,
எனக்கோ கோபமாய் வந்தது.

வெறுப்புடன் ஹலோ என்றேன். சாரி ஜோ ஒரு முக்கியமான வேலையாய் இருந்தேன் அதான் நீ கால் பண்ணும்போது கட் செய்தேன்...

என்னை விட அப்படி என்ன முக்கியமான வேலை உனக்கு, நான் எவளோ சந்தோசமான விசயம் சொல்ல நினைத்தேன் தெரியுமா.

சாரி ஜோ, நாம எப்பவும் மீட் பண்ற இடத்துக்கு நாளைக்கு வாயேன், எல்லாத்தையும் விவரமா சொல்றேன், சரி ஏதோ சந்தோசமான விசயம் சொல்றேன்னியே என்ன அது.

ரொம்பதான் ஆசை, நாளை வரை நான் விடுமுறையில்தான் இருக்கேன். அதற்கடுத்த நாள் நேர்ல வரேன் அப்போ சொல்றேன் என்று சொல்லிவிட்டு கட் செய்தேன்.

ஆவலாய் விஷ்வாவை பார்க்க புறப்பட்டேன், எனக்கு முன்பே அவன் வந்திருந்தான்.

ஹே...விச்சு, அப்படி என்ன முக்கியமான வேலை உனக்கு.

சொல்றேன் ஜோ எனக்கு ரொம்ப நெருக்கமான பிரெண்ட் ஒருத்தன் கொஞ்சம் ஜாலியான பேர்வழி.....

அனைத்தையும் ஜோவிடம் சொல்லி முடிக்க அவள் என்னை சற்றே
ஏளனமாக பார்ப்பது போல் இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு ஆள்கிட்ட போய் ஏன் சகவாசம் வச்சுக்கிற விஷ்வா.

இல்ல ஜோ நீ நினைக்கிற மாதிரி அவன் மோசமான கேரக்டர் இல்ல,
கொஞ்சம் ஜாலியான பேர்வழி...

அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசறியே விஷ்வா...இதோட இந்த பேச்சையும் அவன் சகவாசத்தையும் நிறுத்திக்கோ. நான் சொல்ல வந்தது நம்ம கல்யாணத்தைபத்தி. எங்க அப்பாகிட்ட நம்ம காதல் விசயத்தை சொல்லிட்டேன், அவர் சம்மதம் சொல்லிட்டார்.
உங்க வீட்டுல நீ சொல்லியாச்சா.

இன்னும் சொல்லல ஜோ, எனக்கு சில கடமைகள் இருக்கு அத முடிச்ச அப்புறமா நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாமே...

Picture Thanks:visualparadox.com

என்ன இப்படி இழுக்குற, அப்போ உனக்கு என்னை பிடிக்கலையா, இல்லை உன் பிரெண்ட் மாதிரி பழகிட்டு கழட்டி விட்ரலாம்ன்னு பிளான் பண்ணிருக்கியா.

அய்யோ ஜோ, ஏன் இப்படி எல்லாம் பேசுற...நான் அப்படிப்பட்டவன் இல்ல, நான் உன்னை நிஜமாவே விரும்புறேன். ஆனா என் சூழ்நிலை
இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாது.

அப்படி என்ன பெரிய சூழ்நிலை, இது காதலிக்கிறதுக்கு முன்னாடி உனக்கு தெரியாதா? உன் வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போயேன். நானும் அவங்களை எல்லாம் பாத்து பேசி பழக வசதியா இருக்கும்.

தடாலடியா போய் நின்னா எப்படி ஜோ, அவங்க உன்னை பத்தி தவறா ஏதாவது நினைச்சிட்டா அல்லது பேசிட்டா
என்னால தாங்க முடியாது.

அவ்ளோ அன்பு இருக்கிற ஆள், என்னை உன்னோட பிரென்ட்ன்னு சொல்லி அறிமுகப்படுத்தி வை, மிச்சத்தை நான் பாத்துக்கிறேன்.

நான் தொடர்ந்து வற்புறுத்தவே, வேறு வழி இல்லாது விஷ்வா என்னை அவர்கள் வீட்டாரிடம் அறிமுகப்படுத்துவதாக ஒப்புக்கொண்டான்.

அவன் வீட்டிற்கு போய் வந்தபின் அப்பாவிடம் விவரங்களை கூறினேன்.

சரிம்மா, இனி ஆக வேண்டியதை நான் பாத்துக்குறேன். அவனைபற்றிய தகவல்கள் அத்தனையும் தீர விசாரிச்சிட்டு அப்புறம் என்னோட முடிவ சொல்றேன். அதுவரைக்கும் நீ தேவை இல்லாம எந்த கனவையும் வளத்துக்காதே,
புரிஞ்சு நடந்துக்கோ ஜோதி. பெஸ்ட் ஆப் லக் என அப்பா சொல்ல, அவர் விசாரித்தபின் எடுக்கப்போகும் முடிவினை ஆவலுடன்
எதிர்பார்த்து நாட்களை கடத்தினேன். இடையே இரண்டு முறை விஷ்வாவை சந்திக்கவும் செய்தேன், ஆனால் அப்பா அவனை "விசாரிப்பதை" மட்டும் அவனிடம் சொல்லவில்லை.

இரண்டு வாரம் கழித்து ஒரு நாள் அப்பவே என்னை பார்க்க வந்திருந்தார்.
வழக்கமான குசலம் விசாரிப்பகளுக்குப்பின் அப்பா சொல்லப்போகும்
விசயத்தை ஆவலுடன் கேட்க தயாராய் இருந்தேன். அவரோ விஷ்வாவைதவிர அணைத்து விசயங்கள் பற்றியும் பேசிகொண்டிருந்தார். நானே கேட்டு விட்டேன், அப்பா விஷ்வா விசயம் என்ன ஆச்சு, என்றேன்.

அப்பா, ஆழமாக ஒருமுறை பார்த்துவிட்டு, சொல்ல ஆரம்பித்தார்.

அழைப்பு தொடரும் அழைப்பு 8 (நிறைவுப்பகுதி)

Thursday, October 21, 2010

எக்ஸின் அழைப்பு 6

தங்கையிடம் பேசிவிட்டு விரைவாக வீட்டை அடைந்தால், கதவில் பூட்டு தொங்கியது. பக்கத்துக்கு வீட்டு அம்மா வந்து சாவி கொடுத்துவிட்டு அம்மாவை அழைத்து கொண்டு என் தங்கை J.K.ஹாஸ்பிட்டல் சென்று விட்டதாக கூறினார்கள்.

என்ன ஆச்சும்மா, எங்கம்மாவுக்கு.

திடீர்ன்னு மயக்கம் வந்து விழுந்திடாங்கப்பா, என் கணவரும் துணைக்கு போயிருக்கார். பதட்டப்படாம போயிட்டு வாப்பா.

விரைவாக J.K. சென்றேன், தங்கையை பார்த்து என்ன ஆச்சு என்றேன். பயப்பட வேண்டாம், அம்மாவுக்கு லோ பிரஷர் அதோட இன்னைக்கி விரதம் இருக்கிறேன்னு
ஒண்ணுமே சாப்பிடல அதனால மயக்கம்ன்னா. அம்மாவை பார்த்தபின்புதான் எனக்கு நிம்மதி பெருமூச்சே வந்தது. பக்கத்துக்கு வீட்டு அங்கிளுக்கு நன்றி சொன்னேன். அண்ணா உனக்கு என் பிரெண்ட் ரேவதி தெரியும்தானே என புதிர் போட்டாள் தங்கை.

ஆமா தெரியுமே அவளுக்கென்ன என்ற போது,

அருண் அம்மாவுக்கு
என்ன ஆச்சு என்றபடியே விஷ்வா வந்தான்.

ஒன்னும் இல்லைடா, இப்போ நார்மலாதான் இருக்காங்க. ஆமா
உனக்கு எப்படி விசயம் தெரியும்.

இல்ல, கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீ வேற கோபமா போன மாதிரி இருந்திச்சு, அதான் உன்ன பாத்து சமாதானமா பேசலாம்ன்னு உன் வீட்டுக்கு போனேன்,
பக்கத்து வீட்டம்மா சொன்னங்க அதான் உடனே வந்தேன் என்றான்.

சொல்லும்மா ரேவதிக்கு என்ன ஆச்சு என்றேன், அவள ஒரு கார்காரன் இடிச்சிட்டு நிக்காம போயிட்டான், அங்கே இருந்த யாரோ ஒருத்தங்க அவள சரியான நேரத்துக்கு இங்க கொண்டு வந்ததால உயிரை காப்பாத்த முடிஞ்சது.

அப்படியா! நீ போய் அவள பாத்தியா.

இல்லைன்னா இப்போ மயக்கத்துல இருக்கா, சாயந்திரம்தான் பாக்க முடியும்ன்னு டாக்டர் சொல்லிட்டார்.

அதன்பின் விஷ்வா, அம்மாவை பார்த்துவிட்டு கிளம்பிவிட்டான்.
நாங்கள் இருந்து ரேவதியை பார்த்துவிட்டு மாலையில் வீடு திரும்பினோம்.

இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு நட்சத்திரங்களை என்ன ஆரம்பித்த பொழுது தங்கை வந்து என் கணக்கை கலைத்தாள். அண்ணா ரேவதியை கொண்டு வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்தது ஒரு பெண்தான் தெரியுமா! அந்த நேரம் ரோட்ல போன யாருமே அவளுக்கு உதவ முன்வராத
போது அந்த பெண்தான் தைரியமா செயல்பட்டிருக்கா!

ரொம்ப புத்திசாலியா இருப்பா போலிருக்கு என்றவாறே, எழுந்தேன்.
சரிமா நீ போய் அம்மாவுக்கு தேவையான மாத்திரையை கொடுத்திட்டு
தூங்கு என தங்கையை அனுப்பிவிட்டு நானும் படுக்கையில் விழுந்தேன், தூக்கம்தான் வர மாட்டேன் என அடம் பிடித்தது.

காலையில் அலாரம் சத்தம் கேட்டு விழிக்கையில் கண்ணெல்லாம்
ஒரே எரிச்சல், இன்னைக்கி வேலைக்கு போலாமா வேண்டாமா என
மனசு பெண்டுலமாய் ஆட, தொலைபேசி அழைத்தது. இந்த காலை வேளையில் யாராக இருக்கும். அட விஷ்வா!

ஹலோ விஷ்வா சொல்லுப்பா, என்ன விசயம்.

அம்மாவுக்கு இப்ப எப்படி இருக்கு அருண்.

சுகமா இருக்காங்க விஷ்வா, பயப்படும்படி இன்னும் இல்லை, ரொம்ப
நன்றி நீ இவ்ளோ அக்கறையா விசாரிக்கறதுக்கு.

நன்றி எல்லாம் சொல்லி என்னை அன்னியப்படுத்தாதே அருண்.
இன்னைக்கி ஈவினிங் முடிஞ்சா என்னோட கடைப்பக்கம் வாயேன்,
முக்கியமான விசயம் ஒன்னு உன்கிட்ட சொல்லணும்.

சரி வரேன் விஷ்வா என்றுவிட்டு வேலைக்கு போகலாம் என்ற
முடிவோடு குளியலறை நோக்கி நகர்ந்தேன்.

கடந்து விட்டது இரண்டு நாட்கள், நான் சொன்ன நேரத்தில் விஷ்வாவை பார்க்க முடியவில்லை. அவன் தொலைபேசிக்கு அழைத்தால் அவன் அட்டென்ட் செய்யவில்லை.
அவன் கடையும் பூட்டி இருந்தது. பக்கத்துக்கு கடைகளில் விசாரித்தேன், அவர்களும் தெரியாது என கை விரித்தார்கள். என்ன ஆச்சு இவனுக்கு, போனிலும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

அழைப்பு தொடரும் Picture Thanks:123 vectors.com அழைப்பு 7

Monday, October 18, 2010

எக்ஸின் அழைப்பு 5


அவனைப்பார்த்தவுடனே எனக்கு பற்றி கொண்டு வந்தது, வா சுதா
மனிதாபிமானே துளி கூட இல்லாதவங்க கூட நான் பேச விரும்பல.

ஏய்...ஜோதி என்னடி ஆச்சு இவர உனக்கு முன்னமே தெரியுமா.

நான் சொல்றேன் சுதா, நான்தான் விஷ்வா போன வாரம் சாலை விபத்து ஒன்னு நடந்த சமயம் நான் அந்தப்பக்கம் எங்க நிறுவனத்தின் வாகனத்துல போய் கிட்டு இருந்தேன். அப்போ உங்க பிரெண்ட் ஜோதி அடிபட்ட நபர
ஹாஸ்பிட்டல் கொண்டு போறதுக்காக என்கிட்டே உதவி கேட்டாங்க.

போலிஸ் கேஸ் போடுவாங்க விசாரணை கோர்ட்டுன்னு அலைய வேண்டி வருமே, அதோட எங்க நிறுவனமும் என் மீது
ஆக்சன் எடுக்கும் என்ற பயத்தில் முடியாது என சொல்லிவிட்டு அந்த
இடத்தை விட்டு சென்று விட்டேன். ஆனா மனசு கேட்கல 108 போன்
பண்ணிட்டு அதோட அதை மறந்துவிட்டேன்.

ஆனா லேட்டாதான் தெரிய வந்தது அந்த விபத்துல அடிபட்டது
எனக்கு வேண்டப்பட்டவங்கன்னு. உங்க பிரண்ட்தான் விவேகமா
செயல்பட்டு அவங்க உயிரை காப்பாத்தி இருக்காங்க. அதான் அவங்களுக்கு
நேரில் நன்றி சொல்லலாம்ன்னு நினைச்சேன். ஹாஸ்பிட்டல்ல நிலைமையை எடுத்து சொல்லி ஜோதியோட நம்பர
வாங்கினேன், ஆனா ஜோதிகிட்ட நாந்தான்னு அறிமுகப்படுதிக்கிற
அளவுக்கு எனக்கு தைரியம் வரல. என் மேல எனக்கே வெறுப்பா
இருந்திச்சி.

அதுக்காக இப்படிதான் டார்ச்சர் பண்ணுவீங்களா சார் என வெடித்தாள் ஜோதி.

நான் செஞ்சது தப்புதான், தயவு செய்து என்ன மன்னிச்சிருங்க ஜோதி,
நீங்க மட்டும் அன்னைக்கி சரியான நேரத்துல உதவலைன்னா அவங்களை
காப்பாத்தி இருக்க முடியாது, உங்களுக்கு நன்றின்னு ஒரு வார்த்தை சொல்ற அருகதை கூட எனக்கு இல்லன்னு நினைக்கிறேன்.

அவன் பேசப்பேச, என் இறுக்கம் சற்றே குறைந்தது. அதன்பின் அவன்
நிலை புரிந்து கொண்டேன். அடுத்தடுத்த நாட்களில் இயல்பாக எங்கள்
சந்திப்பு அமைந்ததா, அல்லது அவனே வேண்டும் என்றே உருவாக்கிய
சந்திப்பா என்று தெரியவில்லை அடிக்கடி சந்தித்து கொண்டோம்.

எங்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. ஆனால் இது வெறும் நட்பா இல்லை காதலா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவனுடன் பேசுவது எனக்கு பிடித்திருந்தது. அவன் என்ன நினைக்கிறான்
என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு விடை சொல்வது போல்
இன்றய சந்திப்பு நிகழ்ந்தது.

நானும், விஷ்வாவும் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் இருந்தோம்,
ஓட்டிற்குள் இருந்து தலை நீட்டும் ஆமையாய் தன் காதலை
மெல்ல வெளிப்படுத்தினான் விஷ்வா.


Picture:Thanks fotoserach.com

இது சாத்தியமா விஷ்வா, என்றேன். உனக்கு என்னை பிடிசிருக்குதானே அப்புறம் என்ன பிரச்சினை என்றான்.
இல்ல எங்க வீட்டுல சம்மதம் வாங்கணுமே.

சரியான நேரத்துல உங்க வீட்டுல விசயத்தை சொல்லிவிடேன் என்றான்.

சுலபமாக சொல்லிவிட்டான், என் அப்பா கண்டிப்பானவர். அவர்
சாந்தமான மனநிலையில் இருக்கும்போது என் விசயத்தை அவரிடம் கூறினேன். என்ன வியப்பு தாம் தூம் என குதிக்க வில்லை பையன் எங்கே வேலை செய்றான், அட்ரஸ் குடு அவனைப்பற்றி விசாரிச்சிட்டு அப்புறம் இந்த காதல் வேணுமா
வேண்டாமான்னு சொல்றேன் என்றார்.

இல்லைப்பா அவர் ரொம்ப நல்ல...

இங்க பாரு ஜோதி, காதலிக்கும்போது எல்லோரும் நல்லவனாத்தான்
காட்டிக்குவான், அப்புறம்தான் சுயரூபங்களே வெளி வரும். நாமதான்
கவனமா இருக்கணும். பயப்படாத அவன் நல்ல குணமும், வேலையும் உள்ளவனா இருந்தா, எனக்கு எந்தவித ஆட்சேபனையும்
இல்லை என்று அப்பா சொன்னவுடன் எனக்கு உடல் எடை இழந்தது போல் இருந்தது.

யோசிக்கும்போதுதான் ஒரு விசயம் நினைவில் உறுத்தியது,
இத்தனை நாள் அவனோட பழகி இருக்கோம். அவனோட இருப்பிடத்தை பத்தியோ வேலை பற்றியோ ஒரு தடவ
கூட நாம கேட்டதில்லையே.
உடனே விஷ்வாவிற்கு போன் செய்தேன்.

அழைப்பு தொடரும் அழைப்பு 6

Tuesday, October 12, 2010

எக்ஸின் அழைப்பு 4


சரி அவன் பேசி முடிக்கட்டும், என காத்திருந்தேன்.

ஐந்து நிமிடம் கடந்த பின்,
வா அருண் போகலாம் என்றபோது விஷ்வாவின்
முகம் சற்றே வாடியது போல் இருந்தது.

என்ன விஷ்வா ஏதாவது பிரச்சனையா?

அதெல்லாம் ஒன்னும் இல்லை அருண், என்றவன் ஏதும் பேசாமலே
வண்டியை செலுத்தினான். வீட்டில் அம்மாவை சந்தித்து பேசி விட்டு கிளம்பினான்.

அடுத்த நாளும் விஷ்வாவை சந்தித்தேன். பேசி கொண்டிருக்கும்போதே
நிறைய தொலைபேசி அழைப்புகள் அவனுக்கு வந்த வண்ணமாகவே
இருந்தது.


picture:thanks freephoto.com

என்ன விஷ்வா, ரொம்ப பிஸியா இருக்கியா...

இல்ல அருண் இதெல்லாம் என்னோட கேர்ல் பிரண்ட்ஸ் கிட்ட வர
அழைப்புகள்.

அடேங்கப்பா, அப்போ உனக்கு ஏகப்பட்ட கேர்ள் பிரண்ட்ஸ் இருப்பாங்க
போலிருக்கே, அப்புறம் ஏம்பா இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க.

அட நீ வேற அருண், கல்யாணம் ஆகி நமக்குன்னு ஒருத்தி வந்துட்டா இப்படி ஜாலியா இருக்க முடியுமா, உனக்குத்தான் என்னைபத்தி தெரியுமே இதெல்லாம் ச்சும்மா டைம் பாஸ்
கேசுங்க.

இதெல்லாம் தப்பில்லையா விஷ்வா.

இந்த பொண்ணுங்களும் நீ நினைக்கிற மாதிரி இல்லைப்பா, இன்னைக்கி அவங்களுக்காக நான் செலவு பண்றேன், நாளைக்கே என்னை விட செலவு செய்ற ஆள் கிடச்சா என்னை மறந்திருவாங்க.

ச்சே..எல்லோரும் அப்படி இருக்க மாட்டாங்க.

உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் அருண். வேணுமின்னா ரெண்டு பொண்ணுங்க நம்பர் தரேன், பழகி பாக்குறியா.

இதில் எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை...சாரி விஷ்வா நான்
கிளம்புறேன்.

இதுக்கு போய் கோவிச்சுக்கலாமா, வா அருண் காப்பி சாப்பிடலாம்.

இல்ல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, இன்னோர் முறை பாக்கலாம் விஷ்வா, எனக்கு கோபம் எல்லாம் இல்ல,
ஆனா உன்னோட செய்கையில் எனக்கு உடன்பாடில்லை.

அவனிடம் கோபம் இல்லை என்று சொன்னாலும், பெண்களை பற்றி அவன் கொண்டிருந்த எண்ணத்தை
நினைக்கையில் எனக்கு கோபமாகத்தான் இருந்தது.

ச்சே...இந்த விஷ்வா சரியான ப்ளேபாய்யா இருப்பான் போலிருக்கே,
என்று நினைத்தவாறே இருக்கும்போது என் மொபைல் ரிங்கியது.
என் தங்கைதான், ஹலோ என்றவாறே அவள் பேசுவதை கேட்ட
எனக்கும் சற்றே பதட்டம் கூடியது.

சரிம்மா, நீ கவலைப்படாதே இதோ இப்போவே வந்திடறேன் என
அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு விரைவாக கிளம்பினேன்.

அழைப்பு தொடரும் அழைப்பு 5

Monday, October 4, 2010

எந்திரன் சிட்டி

இந்த காதல் எந்திரன் சிட்டியையும் விட்டு வைக்கவில்லை! எந்திரனுக்கு மனித உணர்வுகளை கொடுத்து விட்டு பின்பு அது படு(த்தும்)ம் பாடுகளை ரசிக்கும் விதமாய் சொல்லி இருக்கிறார்கள்.

முதல் பாதி சூப்பர் மேன் போல எந்திரனின் அதீத சக்திகளை மசாலா கலவையுடன் காட்டும் காட்சி அமைப்புகள், சிறுவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்! வசீகரனை விட ரோபோ சிட்டியே அதிகம் கவர்கிறார். ஆமா விஞ்ஞானி என்றாலே தாடியுடனும், பாகவதர் முடியுடனும்தான் இருக்க வேண்டுமா! விஞ்ஞானி ரஜினியை இன்னும் கொஞ்சம் வசீகரமாய் காட்டி இருக்கலாம்.
ஹனிபாவிற்கு எந்திரன் மால் "வெட்டும்" காட்சி, கலகலப்பு.
தண்ணி போட்டு வண்டி ஓட்டுரியா, என ஒருவர் கேட்க இல்லை பெட்ரோல்
போட்டு ஓட்டுறேன் என்று ரோபோ பதில் சொல்லும் இடங்களில்
சந்தானம், கருணாசின் வேலையை ரோபோ ரஜினியே செய்து
விடுகிறார்.கிராபிக்ஸ் காட்சிகள் நம்பும்படி அழகாய் செய்து இருக்கிறார்கள்!

இரண்டாம் பாதி முழுவதும் ரோபோ ரஜினி மட்டுமே, ஐஸை கடத்தி வைத்து கொண்டு போடும் ஆட்டங்கள் லக...லக...
சிறுவர்களையும் கவரும் விதமாய் இருக்கிறான், எந்திரன்.

ரஸ்கி(!):நானும் ஒரு எந்திரன் கதை எழுதி இருக்கேன்!! இங்கே
சென்றால் படிக்கலாம். எல்லாம் ஒரு சுய விளம்பரந்தேன் :))
picture:Thanks hindai.in/tamilcinema

Thursday, September 30, 2010

பதிவர்கள் மீது கோபம்

இதை எழுதுவதற்கு என்னை அழைத்த
அன்னுவிற்கு நன்றி.

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
வலைப்பதிவிற்காக நான் வைத்த பெயர் சைவகொத்துப்பரோட்டா

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா?
ஹி...ஹி... இல்லவே இல்லீங்கோ.

இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
நம்ம கடை பக்கம் உங்களை வர வைக்கும் யுத்திதான்!!

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
ஆர்வக்கோளாறுதான்.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்வெளி, திரட்டி, உலவு மற்றும் தினமணி
போன்ற திரட்டிகளில் இணைத்தேன்.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா?
ஆம்.

ஆம் என்றால் ஏன்?
நண்பர் ஸ்டார்ஜன் இந்த தொடர்பதிவுக்கு அழைத்ததால்!

அதன் விளைவு என்ன?
எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது, இதன் "பின்விளை"வாக வந்த பின்னூட்டங்களை படித்தபோது.

இல்லை என்றால் ஏன்?
அதான் "ஆம்"ன்னு சொல்லிட்டோம்ல :))

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
கதை விடலாம்ன்னுதான் (சிறுகதையை சொன்னேன்) எழுத ஆரம்பிச்சேன்.
என்னோட பதிவுகள படிச்சிட்டு நீங்க கொடுக்குற விமர்சனங்கள்
மட்டுமே இப்போதைய சம்பாத்தியம்.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்னே ஒண்ணுதான்! அதுவும் செம்மொழியான தமிழ் மொழியில்தான்!! (இந்த ஒண்ணுல பதிவு போடவே மண்ட காயுது)

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.
(அப்பாடி தலைப்புக்கும், பதிவுக்கும் சம்பந்தம் வந்திருச்சு!)
இல்லை.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
பேர் வச்சு கடை தொறந்து நாலு பதிவும் போட்டாச்சு. ஆனா
ஒரு கமெண்ட் கூட இல்லை. ஆனாலும் சளைக்காம அஞ்சாவது
பதிவு போட்டுட்டு, நாப்பது தடவ வலைப்பக்கம் வந்து எட்டிப்பார்த்து ஏமாந்து போன, 40 வது நிமிடம் ஒரு கமெண்ட் இருந்தது.
அந்த நிமிடம், எவரெஸ்ட் மேலே ஏறி நின்னா மாதிரி
ச்சும்மா ஜில்லுன்னு ஒரு பீலிங் வந்திச்சு பாருங்க...(நாம எழுதினதையும் மதிச்சு ஒருத்தர் கமெண்ட் போட்டுட்டாரே!)
அந்த கமெண்டுக்கு சொந்தக்காரர் சதுக்க பூதம் ,
நன்றி நண்பரே.

10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
என்னை பத்தி தெரிஞ்சுக்கனுமா இங்கே
போய் பாத்துக்கோங்க.

பாத்தாச்சா! சரி...சரி...மறக்காம உங்க கருத்துக்களை எழுதிட்டு போங்க,
நன்றி.

Monday, September 27, 2010

எக்ஸின் அழைப்பு 3திரும்பவும் அதே ராஸ்கல்தான், நல்ல வேளை அவன் நம்பரை
X எனபோட்டு வைத்தது. அட்டென்ட் செய்யலாமா வேண்டாமா
என்ற சிறு குழப்பத்திற்கு பின் ஒரு யோசனை வந்தது. சுதா சரியான வாயாடி, அவளிடம் போனை கொடுத்து
X பற்றி கூறி நன்றாக திட்டு என்றேன்.

ஜோதியிடம் போனை வாங்கிய சுதா ஹலோ என்றதும்,

"மச்சான், விஷ்வா பேசறேன்டா" என்றது மறுமுனை.

டேய் பன்னாட இன்னொர்தரம் பேசுன,தேடி வந்து முட்டிய
பேத்துருவேன்.

ஹலோ கொஞ்சம் மரியாதையா பேசுங்க மேடம், யாரு நீங்க.

யோவ், நீ கால் பண்ணிட்டு என்னையே யாருன்னு
கேட்குற. ஏதோ நம்பருக்கு கால் பண்ண வேண்டியது, அது ஒரு பொண்ணா இருந்து, கொஞ்சம் ஏமாந்தவளா இருந்தா மிளகா
அரைக்க வேண்டியது. அந்த தில்லாலங்கடியெல்லாம் இங்க
நடக்காது ராசா என சொல்லி விட்டு, இந்தா ஜோதி என்றபடியே போனை.
ஜோதியிடம் கொடுத்தாள் சுதா.

ஸ்...அடிப்பாவி சுதா, லைனை கட் செய்யாமலே என் பேர
வேற சொல்லிட்டியே.

பயப்படாத ஜோ, இனிமே அவன் கால் பண்ண மாட்டான்.

சொல்லிவிட்டு சுதா நிம்மதியாக உறங்கி விட்டாள். எனக்கு
தூக்கமே வரவில்லை, யாராக இருக்கும் இந்த X. நமக்குதெரிந்த யாராவதுதான் விளையாடி பார்க்கிறார்களோ.
நான் பேசக்கூடிய ஆண்கள் என்று பார்த்தால், உடன் வேலை
பணி புரிபவர்கள் மட்டுமே நினைவுக்கு
வந்தார்கள்.

ஆனால் இந்த லிஸ்டில் உள்ள யாரும் இது போன்ற காரியத்தில்
ஈடுபட மாட்டார்களே. யோசித்து, சலிப்பில்
அப்படியே தூங்கிப்போனேன்.

இரண்டு நாட்கள் ஓடி விட்டது, X இடம் இருந்து கால் எதுவும்
வரவில்லை, ஆனால் மொபைல் ரிங்கும்போதேல்லாம், அவனாய்
இருக்குமோ என்ற நினைப்பு வந்தது.

மூன்றாம் நாள் காலை, மீண்டும் ஒரு புதிய நம்பரில் இருந்து
அழைப்பு வந்தது. அட்டென்ட் செய்யாமலே விடலாமா என
யோசித்தேன். முக்கியமான அழைப்பாய் இருந்தால்...

ஹலோ என்றேன்,

ஹலோ ஜோதி, தயவு செய்து கோபப்படாமல் நான் சொல்றதை
கொஞ்சம் கேளுங்களேன்.

குரலை கேட்டால் X -பேசுவது போல இருந்தது. ஹலோ நீங்க
யார் பேசுறது, என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்.

நாந்தாங்க விஷ்வா, உங்களோட பிரண்ட்தான் அன்னைக்கி உங்க
பேர சொன்னாங்களே. நான் உங்ககிட்ட முக்கியமான ஒரு
விசயத்தை பத்தி பேசணும். இன்னைக்கி ஈவினிங் ஆறு மணி
மாயாஜால் வர முடியுமா.

Picture:Thanks to chennaiburrpcom

உங்கள என் பிரண்ட் அன்னைக்கி அப்படி திட்டினாளே,
இன்னும் அறிவு வரலையா சார்.

இல்ல ஜோதி...

என் பொறுமைக்கும் ஒரு எல்லை
உண்டு, மொதல்ல லைன கட் பண்ணுங்க.

ப்ளீஸ் ஜோதி நான் சொல்றத கொஞ்சம் கேளுங்களேன், போன வாரம்
நடந்த சாலை விபத்துல, பாதிக்க பட்ட நபருக்கு யாருமே உதவாதபோது
நீங்க தைரியமா செயல்பட்டு அவரை கொண்டு போய் ஹாஸ்பிட்டல்ல
சேர்த்து விட்டீங்களே அது சம்பந்தமா பேசணும்.

அத நேரடியா முதல் முறை போன் செய்யும்போதே சொல்லி
இருக்கலாமே.

இல்ல...ஜோதி...நான் யாருன்னு தெரிஞ்சா நீங்க பேசுவீங்களோ
மாட்டீங்களோ தெரியல...அதான்..

அதுக்காக இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணலாமா சார்,
உங்களோட நோக்கம்தான் என்ன, எதுக்காக நான் உங்கள
பாக்கணும்.

நான் உங்ககிட்ட மன்னிப்பும் நன்றியும் சொல்லணும் ஜோதி, நேர்ல வாங்க எல்லா விவரமும் சொல்றேன்.

சிறிது தயக்கத்திற்குப்பின் சரி வரேன்,ஆனால் நான் உங்களை
பார்த்ததே இல்லையே.

அந்த விபத்து நடந்த இடத்துல நாம சந்திச்சிருக்கோம் ஜோதி
நீங்க வாங்க, நானே உங்களிடம் வந்து பேசுகிறேன்.

சுதாவையும் அழைத்துக்கொண்டு அவன் குறிப்பிட்ட இடத்திற்கு
சென்றேன். சுற்றியிருந்த ஜனத்திரளில் நம்மை அழைத்த X யாராய்
இருக்கும் என நான் யோசித்து கொண்டு இருக்கும்போது,
எங்களை நோக்கி புன்னகையுடன் "அவன்" வந்தான்.

அழைப்பு தொடரும் அழைப்பு 4Friday, September 24, 2010

எக்ஸின் அழைப்பு 2

அழைப்பு 1

இரவு மணி ஒன்பதரை ஆன பொழுதும் பஸ் ஸ்டாப்பில் கூட்டம்
குறைந்தபாடில்லை. எனக்கான பஸ்சைதவிர மற்றதெல்லாம் வந்தது.
பழுதாகிப்போன என் பைக்கின் அருமை,
இப்போது புரிந்தது.

ஒரு பைக்காரன் வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல் என்னை பார்த்து க்கொண்டே சென்றான்.
என்ன நினைத்தானோ, சட்டென "யூ"டர்ன் எடுத்து என் அருகில் வந்தான்.

நீ...ங்க அருண்தானே...எப்படி இருக்கே என்றான்.

என் பெயரை சரியாக
சொன்னதோடு சட்டென ஒருமையில் அழைத்தான். நிச்சயம்
எனக்கு தெரிந்தவன்தான். ஆனால், தீவிரமாக யோசித்தும் எனக்கு
அவன் யாரென தெரியவில்லை.

மன்னிக்கணும், நீங்க யாரு...ன்னு...

தெரியலையா, நான்தாண்டா விஷ்வா.
ஆத்தூர் ஸ்கூல், பக்கத்துக்கு பெஞ்ச் நியாபகம் இருக்கா என
புதிர் போட்டான்.

ஆங்...இப்பொழுது எனக்கு நியாபகம் வந்துவிட்டது. எங்கள் குடும்பம்
ஆத்தூரில் ஒரு வருடம் இருந்தபொழுது, இவன் என் பள்ளி
நண்பன். கொஞ்சம் பந்தா பேர்வழி, பெண் பிள்ளைகளை
கண்டால் வழியலுடன் பேசிக்கொண்டே இருப்பான். அப்பொழுது பதினொன்றாம்
வகுப்பில் இருந்தோம், கூட படித்த பெண் ஒருத்தியை
காதல் செய்து கொண்டிருந்தான்.

அவள் வீட்டிற்கு விசயம் தெரிந்து, உடனே அவளுக்கு கல்யாண
ஏற்பாடெல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள். அவள் அழுது கொண்டே
இவனிடம் வர, இவனோ கூலாக டைம் பாசுக்குதான் உன்கூட
சுத்தினேன் என்றான்.

அதன்பின் அந்தபெண்ணை பள்ளி பக்கமே பார்க்கவில்லை.

அவனோட ஹிஸ்டரி முழுசும், நியாபகம் வந்து விட்டதால், ஓ..விச்சுவா பாத்து எவ்ளோ வருஷம் ஆச்சு. நல்லா இருக்கியா? எனக்கேட்டேன்.

வாயேன் காபி குடிச்சிகிட்டே பேசலாம், அப்படியே வீடு எங்கன்னு
சொல்லு, டிராப் பண்ணிட்டு போறேன் என்றான் விஷ்வா.

மறுக்க முடியாத நிலை, அருகே இருந்த ஹோட்டலில் நுழைந்தோம்.
காபியும், தோசையும் ஆர்டர் செய்துவிட்டு, தன்னுடைய பழைய வீரதீரங்களை அளந்து கொண்டிருந்தான் விச்சு.

தி.நகரில் சொந்தமாக பேன்சி ஷாப்
வைத்திருப்பதாகவும், விருகம்பாக்கத்தில் வாடகை வீட்டில்
தங்குவதாகவும் கூறினான்.


Picture:Thanks indiamike.com

அட!! நான் வடபழனியில் இருக்கேன்ப்பா, இங்க ராஜ் இன்டர்நேஷனல்
ஹோட்டல்ல கேட்டரிங்ல, இருக்கேன் என நான் சொல்லி முடிக்கும்
முன் விஷ்வாவின் மொபைல் ரிங்கியது.
தாழ்வான குரலில் யாரிடமோ பேசி விட்டு லைனை கட்
செய்தான்.

யாரு, உன் மனைவியா விஷ்வா, எனக்கேட்டேன்.

ச்சே...ச்சே...எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகலைப்பா,
கடையில வேலை பாக்குற பொண்ணு, என்றான்.

உனக்கு கல்யாணம் ஆயிருச்சா என என்னை கேட்டான்,

இன்னும் இல்லை என்றேன்.
சரி விச்சு, அம்மா காத்துகிட்டு இருப்பாங்க வாயேன் வீட்டுக்கு என
விச்சுவை அழைத்து விட்டு பில்லை கையில் எடுத்தேன்.

விச்சு வெடுக்கென பில்லை வாங்கி கொண்டு, நான்தான் பணம் கொடுப்பேன் என பிடிவாதம் பிடித்தவன் தன்
பைகளை துலாவியவன்
சற்றே கலவர முகத்துடன் என்னை பார்த்தான்.

என்ன ஆச்சு விஷ்வா என்றேன்.

பர்சை காணோம் அருண், எங்கேயோ தவற விட்டுட்டேன் என்றான்.

அடப்பாவமே, நிறய பணம் வச்சிருந்தயா...

கிட்டத்தட்ட் 500 ரூபாய் வச்சிருந்தேன், எங்கேயோ தவறி போச்சேஅருண், என்றான் பறிகொடுத்த கவலையுடன்.

இந்தா அவசரத்துக்கு வச்சுக்கோ என்று அவன் பையில் நூறு
ரூபாய் தாள் ஒன்றை திணித்துவிட்டு,
அவனிடமிருந்து பில்லை வாங்கி பணத்தை கொடுத்துவிட்டு திரும்பினால்
விஷ்வாவை காணவில்லை.

ஹோட்டலை விட்டு வெளி வந்து அவன் பைக் நிறுத்திய
திசையில் பார்த்தேன். பைக்கருகில் நின்று
கொண்டு, "மச்சான், விஷ்வா பேசறேன்டா"
என யாரிடமோ போனில் பேசி கொண்டிருந்தான்.

அழைப்பு தொடரும் அழைப்பு 3

Wednesday, September 22, 2010

எக்ஸின் அழைப்பு 1

இந்த ஒரு மணி நேர பேருந்துப்பயணம் எனக்கு ரொம்ப பிடிக்கும், கிண்டலாய் பேசிக்கொள்ளும் கல்லூரி இளசுகள், பவ்யமான பள்ளி சிறுசுகள்,
ஒரு இன்ச் பவுடர் கோட்டிங்கில் நீரோடை போல வியர்வையுடன் பயணிக்கும் ஆண்ட்டிகள் என
மனிதர்களை பார்த்து கொண்டே இருந்தால் நேரம் போவதே தெரியாது.

உன் போன்லதான் ரிங் அடிக்குதும்மா, என் பக்கத்தில் இருந்த ஆண்டி சொன்னபின்தான்
சுய நினைவு வந்தவளாய் ஹான்ட் பேக்கை திறந்து யார் அழைப்பது எனப்பார்த்தேன்.
புதிரான புதிய நம்பர்(+85 ****), யாராக இருக்கும் என யோசித்தவாறே ஹலோ என்றேன்.

டேய் பாபு, நான் விஷ்வா பேசறேன்டா நல்லா இருக்கியா மச்சான் என எதிர்முனையில் எவனோ
பேசினான்.

ஹலோ நான் பாபு இல்லீங்க, ராங் நம்பர் என்றேன்.

ஓ....சாரி...மேம்..என்று அவன் சொல்ல தொடர்பை துண்டித்தேன்.

மதியம் இரண்டு மணி அளவில், தூக்கம் கண்ணை செருக மிகவும் சிரமப்பட்டு லெட்ஜரை
முறைத்து கொண்டிருந்தேன். போன் அழைத்தது, தூக்க கலக்கத்தில்
ஹலோ என்றேன்.

மச்சான், என்னடா ஆச்சு, காலையில் இருந்து உன் நம்பருக்கு
ட்ரை பண்றேன், எவளோ ஒருத்தி பேசுறா...

ஹலோ, இப்பவும் அந்த "எவளோ ஒருத்திகிட்டதான்" பேசிகிட்டு இருக்கீங்க.

சா...ரி... மேம்...

ஹலோ சார் நீங்க எந்த நம்பருக்கு ட்ரை பண்றீங்க,

சொன்னான், ஒரு நம்பர் வித்தியாசம்!! என் நம்பர் 6-ல முடியுது சார், நீங்க கூப்பிட வேண்டிய நம்பர் 9 பின்ன எப்படி "கரெக்டா" நம்பர் மாத்தி கூப்பிடுறீங்க.

அதான் மேம், எனக்கு புரியல...

ஹலோ நக்கலா... இன்னோர்தடவை கால் பண்ணீங்கன்னாமரியாதை கெட்டிரும் என
சொல்லிவிட்டு லைனை கட் செய்தேன். அவன் நம்பரை "எக்ஸ்" எனப்போட்டு வைத்தேன்.

Picture:Thanks tradebitcom

சில்லென காற்று வீசும் இரவு, தூக்கம் வராமல் ஹாஸ்டல் மொட்டை
மாடியில் உலாத்தி கொண்டிருந்தேன். என் ரூம்மெட் சுதா
மூச்சிரைக்க ஓடி வந்தாள்.

ஜோதி உனக்கு போன் என்றவாறே சார்ஜரில் போட்டிருந்த என் மொபைலை
கொண்டு வந்தாள்.

யார் இந்த நேரத்தில் என யோசனை செய்தவாறே டிஸ்ப்ளே
பார்த்தேன் "எக்ஸ் காலிங்" என காட்டியது.

அழைப்பு தொடரும்

அழைப்பு 2

Friday, September 17, 2010

ஸ்வேதா என்றொரு...

ச்சே...என்ன வாழ்க்கை இது, எந்திரம் மாதிரி காலையில் பாதி தூக்கத்திலே எல்லாக்கடனையும் முடிச்சி ஆபிஸ் போனா அந்த கடன்காரன்கிட்ட (மேனேஜர்) நாள் முழுக்க மல்லுகட்ட வேண்டி இருக்கு.

சரி இன்னைக்காவது, கடல்ல மூழ்கும் முன்னே ஆதவன பார்க்கலாம்னா
"அது" வழக்கம்போல நாலு ஆள் வேலையை என் தலை மேல வச்சிருச்சி.

கரும்பு ஜூஸ் பிழியுற மெசின் துப்புன சக்கை கெணக்கா, ரயிலுக்காக பார்க் ஸ்டேசன்ல உக்கந்திருக்கும்போதுதான், அந்த அழகு பதுமையை பார்த்தேன்.

என்னையும் அவளையும் தவிர, ஜோடிகள் ஒன்றும், குடும்பம் ஒன்றும் மட்டுமே இருந்தது.

பிளாட்போர்மில் தொங்கிய டிஜிட்டல் கடிகாரம் 22 .30 என ஒளிர்ந்தது.

பதுமையை நோட்டமிட்டேன், கையில் இருந்த புத்தகத்தில் மூழ்கி இருந்தது.

பாம்...என்ற ஓசை கேட்டு கலைந்த அனைவரும் ஒரே பெட்டியில் ஏறினோம்.

சேத்துப்பட்டு ஸ்டேசனில் நானும், பதுமையும் மட்டுமே.

இப்பொழுது S .M .S இல் மூழ்கி இருந்தது பதுமை.
ஆஹா...இன்னைக்கி, அதிர்ஷ்ட தேவதையின் ஆசிர்வாதம் முழுக்க ஒனக்குதான், என்ஜோய்டா விக்கின்னு எனக்குள்ளே மைன்ட் வாய்ஸ்!!

ஹாய்...ஐயம் ஸ்வேதா...நீங்க என்றபடியே பதுமை கை நீட்ட...

விக்கின்னு...சொல்றதுக்குள்ள எனக்கு பல தடவை விக்கல்.

சொதப்பாதடா விக்கி...இது வர நீ பாத்த எந்த பொண்ணுகிட்டையும் பேசுற தைரியம் ஒனக்கு வந்தே இல்லை, ஒன்கிட்ட முதன்முறையா ஒரு பொண்ணு பேசுது, இவள உன் வாழ்க்கை துணையா ஆக்கிகோடா...

ச்சே...ஒரு பொண்ணு நாலு வார்த்தை பேசினா உடனே இப்படியெல்லாமா யோசிக்கிறது.

ரெண்டுமே என்னோட மைன்ட் வாய்ஸ்தான்.

அவளுடன் பேசப்பேச சுய சரிதம் அத்துணையும் ஒப்பித்தேன், அவளும். அதன்பின் என் தாய், தங்கை, மேனேஜர் எல்லாம் நினைவடுக்களில் கொஞ்சம், கொஞ்சமாய் அழிந்து போய் முழுவதும் ஸ்வேதாவே இருந்தாள்.

"அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள்"
என் மொபைல் ரிங்கியது...பூஜை வேலையில் யார் அந்த கரடி...
சேகர் காலிங் என்றது ஸ்க்ரீன் டிஸ்ப்ளே...
அட்டென்ட் செய்து ஹலோ...ஹலோ...என்றவாறே டிஸ்கனெக்ட் செய்த
கையோடு சுவிட்ச் ஆப் செய்தேன்.

நானும், ஸ்வேதாவும், எங்கள் "செல்லங்களுடன்" மால்களில் உல்லாசமாக சுற்ற
ஆரம்பிக்கும் தருணத்தில் கிண்டி ஸ்டேசன் வந்து விட்டது.

நான்கு தடியர்கள் எங்கள் கம்பார்ட்மெண்டில் ஏறினார்கள். சிறய குலுக்கலுடன் ட்ரெயின் கிளம்ப, எனக்குள் சிறிது பய அமிலம் சுரக்க
ஆரம்பித்தது.

இவனுக பார்வையே சரி இல்லையே...நம்ம "ஆள" இவங்க எதுவும்
தொல்லை பண்ணகூடாது.

நாலில் ஒன்று, ஸ்வேதாவின் பக்கத்தில் அமர, மீதி மூன்றும் என்னருகே.

ஸ்வேதாவின் தோளில் கை போட்டது அந்த வில்லன், எனக்கு
ரத்தமெல்லாம் சூடேறியது.

ஆனால் ஸ்வேதா, சிறிதும் பயப்படவில்லை.

என்ன, காயத்ரி நீ S .M .S ல சொன்ன "பட்சி" இதுதானா, எவ்வளவு
தேறும்...

பார்ட்டிக்கு 15 ,0000 ரூபாயாம் மாச
சம்பளம், இன்னைக்கி சம்பள தேதியில...புல் அமௌன்ட்
வச்சிருக்கு பரமு...இப்போதான் என்கிட்டே அவ்ளோத்தையும்
சொல்லிச்சு, என ஸ்வேதா....என்ற....அந்த மூதேவி காயத்ரி தடியனிடம்
அழகாய் போட்டு கொடுக்க...
*****************************

படம்:நன்றி கூகுள்

Thursday, September 9, 2010

பூமிக்கு எதிரி

முன்பெல்லாம் கடைகளுக்கு செல்லும்பொழுது, கூடை அல்லது
(துணி) பை எடுத்து செல்வோம். இப்பொழுது மிக அரிதாகி விட்டது
இந்த செயல்.

இவைகளை எடுத்து செல்வதே "நாகரீகம் அற்ற" செயலாகி விட்டது.
கடைகளில் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கொடுத்து
விடுகிறார்கள்.

பொருட்கள் வீடு சேர்ந்தவுடன், பைகள் ரோட்டுக்கு சென்று
விடுகிறது. இவற்றை பசித்த மாடுகள்
சாப்பிட அவைகளின் "பின் விளைவுகள்" மிக மோசமாய் இருக்கும்.

சாலை ஓரங்களில் "கலர் பலூன்களாய்" பிளாஸ்டிக் பைகளை
பார்க்கலாம். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு இது
மிக பெரிய ஆபத்தை விளைவிக்க வாய்ப்புகள் அதிகம்.
(வேகமாக செல்லும்பொழுது, இவைகள் நம் கண்ணை மறைத்தால்...)

கடல் வரையிலும் இந்த (குப்)பைகள் செல்வதால், ஆமைகள்,
டால்பின்கள், பென்குயின்கள் போன்றவை இந்த பைகளை
உணவென நினைத்து உண்பதால் இறக்க நேரிடுகின்றன.

பங்களாதேஷில் வெள்ளம் வர இதுவும் ஒரு காரணியாம்.
தெருக்களில் வீசப்படும் பைகள், கழிவு நீர் குழாய்களை அடைத்து
கொள்வதால் மழை காலங்களில் தண்ணீர் வெளியேற வழி
இல்லாது போய் விடுகிறது. எனவே அந்த நாட்டில் இந்த
பைகளின் பயன்பாட்டை தடை செய்து விட்டார்கள்.

பெட்ரோல் விலையை நினைத்தாலே நம் அடி வயிறு பற்றி
எறிய ஆரம்பித்து விடும் காலம் இது.

பிளாஸ்டிக் பைகள், பெட்ரோலிய பொருட்கள் மூலமே தயாரிக்க
படுகிறது!! பெட்ரோல் விலை குறைய வேண்டும் என்று
நினைத்தால், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டையும்
குறைத்து விடுங்கள்.

இவைகளை எரித்தால் Toxic கலந்த புகை உண்டாவதனால்
காற்று மாசு படுகிறது.
இது மண்ணோடு மண்ணாக மக்கி போவதற்கு ஆயிரம்
வருடங்கள் ஆகுமாம்!!

எனவே இதனை தவிர்த்தல் நலம்.

இது ஒரு சிறிய நினைவூட்டல் மட்டுமே.

Friday, September 3, 2010

வர்ணம்

பள்ளி முடிய இன்னும் 15 நிமிடம் இருந்தது, நிமிடங்களை விழுங்கும் பொருட்டு மனித முகங்களை படிக்க
ஆரம்பித்தேன். அநேகம் பேரிடம் ஆயாசமும், கவலைகளுமே தெரிய
இதிலிருந்து சற்றே மாறுபட்டு இருந்தால் "அவள்." கிட்டத்தட்ட என்
வயதையொட்டி இருந்தாள்.

ஒரு சிநேகப்புன்னகையை உதிர்த்தேன், அவளும்.

சம்பாத்தியம் இல்லையென்றால், நம் வீட்டு நபர்களே நம்மை
"அந்நியன்" ஆக்கி விடுகிறார்கள். மனதை ரணமாக்கும் பேச்சுக்கள்
வேறு, இவற்றில் இருந்து தற்காலிக விடுதலை அவளின் மூலம்
கிடைத்தாற்போல இருந்தது.

அடுத்து வந்த நாட்களில் அவளை பார்ப்பதற்காகவே முன் கூட்டியே
சென்று காத்திருக்க ஆரம்பித்தேன்.

வெறும் பார்வைகளும், புன்னகையுமாய் நாட்கள் கழிந்து
கொண்டிருந்தது.

இன்று மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த அடை மழை 3 மணிக்குத்தான் விட்டது.
பள்ளிக்கு 1 கிலோ மீட்டருக்கு முன்பாகவே மிகப்பெரிய கூட்டம்.
அருகே சென்ற பின் தெரிந்தது, வயதான புளிய மரம் ஒன்று நெடுஞ்சான் கிடையாக சாலையின் குறுக்கே உயிரை விட்டிருந்தது.

"போஸ்ட்மார்ட்டம்" செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும் என
நகராட்சி ஆட்கள் மூலம் செய்தி கசிய, அருகில் இருந்த டீக்கடை பாய்லர் அதிகமாக சூடு வாங்கியது.

குளிருக்கு இதமாக, டீயை வார்க்கும்போது "அவள்" வந்தாள்,
என்னங்க இப்படி ஆகிருச்சு என்றாள்.

வேற வழி இல்லீங்க, ஒரு மணி நேரம் காத்துதான் இருக்கணும்
என்ற பின், அவளுக்கும் ஒரு டீ சொல்லிவிட்டு நிறய பேச
ஆரம்பித்தோம்.

எங்களுக்குள் நல்லதொரு நட்பை ஏற்படுத்தி இருந்தது கடந்த
ஒரு மணி நேரம்.

பிரியும் பொழுதில் அந்த மரத்திற்கு மானசீகமாய் நன்றி சொல்லி
கொண்டேன்.

அதன்பின் ஒரே மாதத்தில் என் சந்தோஷ தருணங்கள் கலைந்து விட்டன.
அவளை பார்த்து இரண்டு வாரம் ஆயிற்று, எந்த
தகவலும் இல்லை. ஏனோ என் மனதில் இனம் புரியா வலி.

இரு வாரங்கள் ஆகி விட்டது, என் நிம்மதி இழந்து. பெற்றவள் என்று
கூட நினையாமல் கடுஞ்சொற்களை பேசி விட்டான், என் மகன்.
இப்போதெல்லாம், ஆட்டோவில்தான் செல்கிறாள் என் பேத்தி நான்கு தெரு தள்ளி இருக்கும் பள்ளிக்கு.

நரைகளின் நட்பிற்கும் வர்ணம் பூசப்பட்டது.

Friday, August 27, 2010

சீட்

பஸ் நிற்பதற்குள் பாதி ஆட்கள் உள்ளே ஏறிவிட வழக்கம்போல்
கைக்குட்டை வீசி எனக்கான "சீட்டை" பிடித்த பின்புதான் நிம்மதியாக
இருந்தது.

மூவர் உட்காரும் சீட்டில் நானும் இன்னோர் நபர் மட்டும் இருக்க, மிக வசதியாக சாய்ந்து கொண்டு பாக்கெட் நாவலில் மூழ்க
ஆரம்பித்தேன். பஸ் குலுங்கலுடன் ஒரு நிறுத்தத்தில் நிற்க 50 வயது
மதிக்கத்தக்க "மஞ்சள்பை" பெரியவர் ஒருவர் ஏறிய பின்பு பஸ் கிளம்பியது.

உட்கார இடம் தேடி அவர் கண்கள் அலை பாய்ந்து என் சீட் பக்கம்
நங்கூரம் இட, நான் சட்டென தூங்குவது போல் பாசாங்கு செய்ய
ஆரம்பித்தேன்.


மோட்டல் ஒன்றில் பஸ் நிற்க, இனிப்பு கலந்த "சுடு தண்ணி"
குடித்து விட்டு சற்றே வேடிக்கை பார்த்ததில் நான் வந்த பஸ்
கிளம்பியதை தாமதமாக கவனித்துவிட்டு, அவசரமாக ஓடும்
பஸ்சில் ஏறியது வரைதான் நினைவிரு..........

பயப்படாதீங்க தம்பி, உங்களுக்கு ஒன்னும் ஆகல, அடி பட்டதுல நிறய இரத்தம் இழப்பாகிருச்சு, உங்க ரத்த வகை
எங்ககிட்ட ஸ்டாக் இல்லாம தவிச்சப்ப, இதோ இவங்கதான் இரத்தம் கொடுத்தாங்க, என டாக்டர் காட்டிய நபர் அதே "மஞ்சள்பை"

Wednesday, May 19, 2010

வைரமும், வஞ்சியும்

இடம்:சைவகொத்துப்பரோட்டா ஸ்டால்

நபர்கள்:அப்பாவி அங்கு(அ.அ), பிலிம் பித்துக்குளி (பி.பி), சேட்டு,
சைவகொத்துப்பரோட்டா (எஸ்.கே.பி) மற்றும் சிறப்பு
விருந்தினர்களாகிய நீங்கள்.

சேட்டு:இன்னாப்பா, இன்னைக்கி கடையில ஒரே ஜொலிப்பாகீது!!

பி.பி: வாய்யா சேட்டு, நம்ம மிக்கி மண்டையனுக்கு ஜெய்லானி வைர விருது
கொடுத்திருக்காங்கோ. இப்போ "இது" அதை பகிர்ந்து கொள்ளப்போவுதாம்!!

அ.அ:அண்ணே இத நாம லவுட்டிட்டு போய் வித்துரலாமா.

பி.பி:மௌஸ் மண்டையா, இது நட்புணர்வுடன் கொடுத்ததுடா, இதுக்கு மதிப்பு போட
முடியாதே!!

எஸ்.கே.பி:என்னண்ணே, ஏதோ மதிப்பு அப்படி, இப்படின்னு பேச்சு அடிபடுது.

பி.பி:வாங்க........தம்பி.......இந்த வைர விருத பத்திதான்
பேசிகிட்டு இருக்கோம்.

எஸ்.கே.பி:ஆமாண்ணே, இதோ வந்திட்டாங்க நம்ம கஸ்டமர்ஸ்!!
சிலரிடம் இதை, பகிர்ந்து கொள்ளலாம்ன்னு நினைக்கிறேன். சிலரோட
வலையிலும் இந்த வைரத்தை பதிக்க உள்ளேன்!! ஜில்தண்ணி
கிறுக்கல்கள்
பிரசன்னா
Hanif Rifay
ப்ரின்ஸ்
r.v.saravanan
Mohan

எடுத்து கொள்ளுங்கள் நண்பர்களே!!
************************************
சேட்டு:யோவ் பி.பி சோக்கா குந்திநீனு கீதே பொண்ணு, யாருப்பா
அது!!

பி.பி:ஓ.......அதுவா.......நம்ம மருத்துவம் பேசுகிறது ! துமிழ் இருக்காங்களே, அவுங்க ரொம்ப நல்லவங்க. உபயோகமான
மருத்துவ தகவல்களும் கொடுத்து, அத்த நம்ம மிக்கி மண்டையன் போய் படிச்சதுக்கு நன்றி சொல்லி
கொடுத்திருக்காங்கப்பா!!

அ.அ: அதாவது கரும்பு தின்ன கூலி கொடுத்திருக்காங்க, அப்படிதானே!!

பி.பி:அதேதாண்டா மவுஸ் மண்டையா!!

எஸ்.கே.பி:அன்போடு எனக்கு விருது கொடுத்தவர்களுக்கு
நன்றி சொல்லும் விதமாக "துமிழ்" அவர்கள் எனக்கு கொடுத்த
இந்த நன்றி பரிசை எனக்கு விருது கொடுத்த நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன் மலிக்கா
திவ்யாஹரி
ஸ்டார்ஜன்
வந்தேமாதரம் (சசிகுமார்)
ஜெய்லானி

வாருங்கள் நண்பர்களே, என் நன்றி பரிசை எடுத்து கொள்ளுங்கள்.
***********************************
பி.பி:மிக்கி மண்டையன் நமக்கு ஏதாவது பரிசு கொடுப்பானா?

எஸ்.கே.பி:ரொம்ப நாளா லீவ் கேட்டு பி.பி, அ.அ, ரெண்டு பேரும் அடம் பிடிச்சதால நம்ம கடைக்கு ஒரு மாசம் லீவு!!

பி.பி;ஹையோ........இந்த அநியாயத்த கேட்க யாருமே இல்லையா!!
நாங்க எப்ப லீவ் கேட்டோம்!! இந்த மிக்கி மண்டையன்
ஊருக்கு போறான், நைசா எங்கள கோத்து விட்டு போறதப்பாரு.

எஸ்.கே.பி:என்னண்ணே சந்தோசமா.........

பி.பி:(முணுமுணுப்பாக) எங்களுக்கு சந்தோசமோ இல்லையோ,
நம்ம கஸ்டமர்ஸ் எல்லாம் உன் தொல்லை இல்லாம
நிம்மதியா இருப்பாங்க........

ஹி...........ஹி........."ரொம்ப சந்தோசம்" எஸ்.கே.பி.
*********************************
டிஸ்கி:ஹி......ஹி.....விடுமுறையில் செல்கிறேன். அதனால் வலை உலகில், ஒரு மாதம் இடைவேளை. முடிஞ்சா அப்பப்ப "வருவேன்" என்பதையும் கூறிக்கொள்கிறேன் :)) விடுமுறை கழிந்த பின்னர்
மீண்டும் சந்திப்போம்.
அனைத்து நண்பர்களுக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்!!
********************************************


Sunday, May 16, 2010

கிரீன் பார்க்

வாசு, குணா மறந்துராதீங்கடா நாளைக்கு காலையில பத்து மணி நேரா வந்துருங்கடா கிரீன் பார்க்குக்கு.

இரவு முச்சூடும் எனக்கு தூக்கம் வரல. நாளை அடையப்போற "உன்மத்த நிலைய" இப்பவே
மனசால அனுபவிக்க ஆரம்பிச்சேன். இதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவ அங்கே போயிருக்கேன்
அதிகாரப்பூர்வமா!!

நாளைக்கு நானும், என் நண்பர்களும் திருட்டுத்தனமா அங்க போறதா பிளான். திருட்டு
மாங்கான்னாலே தனி ருசிதானே!!

"அங்க" போறது நீங்க நினைக்கிற மாதிரி அவ்ளோ சுலபமில்லைங்க, நீங்க மில்லியனரா
இருக்கணும் அல்லது ஏதாவது "நல்ல செயல்" செஞ்சி இருந்தீங்கன்னா அங்க போக முடியும்.
முக்கியமா அங்க மட்டும்தான் சிலிண்டர் இல்லாம
"இருக்க முடியும்."

அப்போ நீ எப்படி போனேன்னு கேக்குறீங்களா!!அஞ்சு வருசத்துக்கு முன்னால அதாகப்பட்டது
கடந்த 15 May 2096 - ல, சாலை விபத்துல ஒருத்தர்
மூச்சு விட சிரமப்பட்டபோது, என்னோட "ஸ்பேர் சிலின்டர"
அவருக்கு கொடுத்து உதவினேன்.

அதுக்கு பரிசா அரசாங்கத்துல எனக்கு ஒரு ப்ரீ டிக்கெட் கொடுத்தாங்க "கிரீன் பார்க்குக்கு"

பத்து மணி ஆச்சு, இதோ வாசு, குணா ரெண்டு பெரும் வந்தாச்சு!! டேய் குணா நல்லா
கேட்டுக்க, சரியா 10 .10 மணிக்கு மெயின் கேட்டை திறப்பான்,
12.00 மணிக்கு
செக்யுரிட்டி "சார்ஜ்" ஏத்திக்கபோகும். அப்போ கிடைக்கிற ரெண்டு செகண்ட் கேப்பில நாம உள்ள பூந்துடனும் சரியா?

11.00 மணி வாக்கில கிரீன் பார்க் ஹவுஸ் புல் ஆயிருச்சு!!
எல்லாம் பண "முதலைங்க", உள்ள பூந்தவுடனே எல்லோரும்
சிலின்டர, சந்தோசமா தூக்கி எரியுதுங்க!!

இது போன்ற ஆட்களால்தான், இப்போ இந்த நிலைமைக்கே வந்திருக்கோம்ன்னு
எங்கள் முப்பாட்டர்களின் வலைப்பூ மூலமா தெரிஞ்சுகிட்டேன்.

மணி இப்போ 11.30.

சீக்கிரம் நம்ம "ஸ்பெசல் உடுப்ப" போட்டுக்கோங்க.

போட்டுகொண்டோம்.......... 11.40.................11.50..................

ஆச்சு 12.00 மணி "அது சார்ஜ்" ஏத்திக்க கிளம்பிருச்சு........

நாங்க மூணு பேரும் மின்னலென "உள்ளே" பாய்ந்தோம்.

சிலிண்டரை வீசிவிட்டு, "மரங்களோடு மரங்களாய்" ஐக்கியமாகி "இயற்கையான காற்றை" ஆனந்தமாக சுவாசிக்க ஆரம்பித்தோம்!!

********************************************************

Friday, May 14, 2010

எதுவாய்?

நீ என்னை ஏற்கா
விட்டால் என்ன...

மீண்டும்
மூங்கிலாய் பிறந்து
புல்லாங்குழலாய்
உருமாறி
உன் இதழ் ஸ்பரிசம்
பெறுவேன்

மலராய் பூத்து
உன் கூந்தலில்
அமர்வேன்

மருதானியாய்
உன் விரல்களையும்
சிவக்கச்செய்வேன்

வளையலாய்
உன் கைகளோடு
உறவாடுவேன்

புற்களாய்
உன் பாதம் வருடுவேன்

ஆனால்.....
"எதுவாய்" மாறி
உன் இதயத்தில் நுழைவது.


**********************************************

Wednesday, May 12, 2010

சஞ்சனா

மாப்ள அவ என்ன பாத்து சிரிச்சாடா, அருவி பக்கத்துல
நின்னா மாதிரி ச்சும்மா மனசெல்லாம் சில்லுன்னு இருக்குடா.

டேய், இன்னும் எத்தனை நாளைக்குடா இதயம் முரளி மாதிரி
இப்படியே இருக்கு போற. அவனவன், பாத்தமா, பேசினோமா,
கல்யாணத்தை பண்ணினோமான்னு இருக்கான். இன்னும் பீல்
பண்ணிகிட்டே இருக்கியாடா. அவகிட்ட எப்படா உன் காதலை
சொல்லப்போற.

இன்னும் நாலு வருஷம் ஒரே இடத்துலதாண்டா படிக்க போறோம்,
அவளோட பேசிப்பழகி, அவ இல்லைன்னா நான் இல்ல, நான்
இல்லைன்னா அவ இல்லைங்கிற நிலை வந்த அப்புறம்
சொல்வேண்டா, அதுல இருக்குற சுகமே தனிதான். உனக்கு ஒரு
விசயம் தெரியுமாடா எனக்கும், சஞ்சுவுக்கும் பிறந்த நாள்
ஒரே மாதம், ஒரே தேதியிலடா!!

ஆச்சு நாலு வருஷம், ஆனா எனக்குதான் சஞ்சனாவ பாத்து
என் காதல சொல்ற "தைரியம்" இன்னும் வரல.

அப்புறம் கேம்பஸ் இன்டர்வியு மூலம் எங்க ரெண்டு பேருக்கும் ஒரே
கம்பெனியில வேலை கிடைச்சது. இன்னைக்கி வரை என்
காதலை அவ கிட்ட சொல்ல முடியலை.

சஞ்சனா......ஓ.........சஞ்சனா.......என் மொபைல் ரிங்கியது........
யாராய் இருக்கும்........

ஸ்க்ரீன் டிஸ்ப்ளேயில், சஞ்சனா காலிங்.........

ஹாய் சஞ்சு, எப்படிம்மா இருக்க.........

ஐ'ம் பைன்.......ஹாப்பி பர்த் டே டூ யூ டாட்...........

என் செல்ல மகளிடம் பேசிய பின்புதான் நியாபகம் வந்து தேதி
பார்த்தேன் 13 .03 .2011௦ இன்னைக்கி என்னோட பிறந்த நாள்!!
அட இன்னைக்கிதானே "அவளுக்கும்" பிறந்த நாள்
*********************************************

Sunday, May 2, 2010

வலைச்சரத்தில் பரோட்டா!!!

வலை உலகத்துல எத்தனை தகவல்கள் கொட்டி கிடக்கு, அதுவும்
நம்ம தாய் மொழியில படிக்கும்போது ரொம்ப இயல்பா மனசுல
பதிந்து விடுகிறது.

அனைவருள்ளும் ஒளிந்து இருந்த திறமைகளை வெளிக்கொண்டு வர
இந்த வலைப்பதிவு பெரும் துணை புரியது!!!

அப்படி நாம எழுதுறது நம்மோளட நின்னு போகாம, பலரை
சென்று சேர்ந்தால்தானே சிறப்பு.

இதுக்காகவே ஒரு தளத்தை உருவாக்கி, வாரத்திற்கு ஒருவர் என்று
ஒவ்வொரு வாரமும், ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து நாம்
படிச்சதுல, நம் மனதில் நின்ற மற்றும் அனைவருக்கும் போய்
சேர வேண்டிய தகவல்கள் என நாம் நினைப்பவற்றை
பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கும் நல் உள்ளம் திரு.சீனா அய்யா
அவர்கள், வரும் வாரம் அதாவது நாளை முதல்(03.05.10 to 09.03.10) ஒரு வாரத்துக்கு வலைச்சரத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு
கொடுத்துள்ளார்கள்.

அவருக்கும், வலைச்சர குழுவினருக்கும், என் இடுகைகளுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்களே உங்களுக்கும் முதலில்
எனது நன்றிகள்!!!

இங்கே எனக்கு ஊக்கமளிக்கும் நீங்கள், வலைச்சரத்திலும் வந்து
ஆதரவு கொடுக்க வேண்டி, உங்களை அன்போடு அழைக்கிறேன்.

நாளை வலைச்சரத்தில் சந்திப்போம்.

Thursday, April 29, 2010

என் கதை(?)

நேத்து தூக்கமே வரல, என்னோட லட்சியத்த அடையப்போற இரண்டாவது படியில இன்னைக்கு கால்
வைக்கபோறேன். ஒரு சிறந்த இயக்குனர் ஆகணும்கிறது என்னோட சுவாசாம், லட்சியம் எப்படி
வேனா வச்சுக்கலாம். பல வருசம் வெறியோடு அலஞ்சு, திரிஞ்சு ஒரு வழியா இன்னைக்கு என் குருநாதர் ஏற்பாட்டில்,
ஒரு தயாரிப்பாளர் என்னை வர சொல்லி இருக்கார், கதை சொல்ல.

11 மணிக்கு அவரோட ஆபிசுக்கு வர சொல்லி இருக்கார், நான் 8 மணிக்கே அவர் ஆபிஸ்க்கு
எதிரே இருக்கும் டீ கடையில, ஸ்க்ரிப்ட்டோட உக்காந்துட்டேன்.

9 - மணிக்கு அவரோட கார் ஆபிஸ் வளாகத்திற்குள் நுழைந்தது. எல்லோரும் ரொம்ப
பரபரப்பா இருந்தாங்க, நானும் பதட்டத்துடன் உள்ளே சென்றேன்.

11.30 மணிக்கு அவர் என்னை கூப்பிட்டார். அவருக்கு மரியாதை கலந்த வணக்கத்தை சொல்லிட்டு,
என் (படத்தோட) கதையை சொல்ல ஆரம்பித்தேன். ரொம்ப ஆர்வமா கேட்டார். சொல்லி முடிச்ச
பிறகு அதில் சில மாற்றங்கள் செய்தார், அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் என்
லட்சியத்தை அடைய இது தடையாக இருக்ககூடாது என்பதால் உடன்பட்டேன்.

ஒரு சுபயோக சுப தினத்தில், ஷூட்டிங் ஆரம்பித்தோம், கிட்டத்தட்ட பாதி படம் எடுத்து விட்ட
பின்னர், ஹீரோ சாருக்கு சில காட்சிகள் பிடிக்கவில்லை என்றதால்,
அவரே மாற்றங்கள் செய்து, இயக்கியும் கொண்டார்.

இதோ இன்னைக்கி என்னோட(?) படம் ரிலீஸ்!!! தலைப்பிரசவ வேதனையுடன், முதல் குழந்தையை எதிர் நோக்கும் தாயின் மனோ
நிலையில் இருந்தேன்.

முதல் காட்சி மக்களோடு சேர்ந்து பாத்திட்டு, நெட் சென்டர் நோக்கி
ஓடினேன்.

வலைப்பூக்களில் என் படத்தோட விமர்சனம் "சூடான சங்கதி"யாக
ஓடிக்கொண்டிருந்தது. ஆர்வம் மேலிட, எனது படத்தின் விமர்சனத்தை
படித்தேன்......

மணி சார் பட்டறையில் இருந்து, வந்த இயக்குனர் சார்
உங்களிடம் நிறைய எதிர் பார்த்தோம். ஆனால்....... நீங்களும் அரைச்ச
மாவையே அரைச்சு இருக்கீங்களே,
பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்........
*******************************************************
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்) நன்றிகள் பல.

Sunday, April 25, 2010

கல்லூரி

தினமும் பள்ளிக்கூடம் சென்று திரும்பும் பொழுது வழியில் உள்ள அந்த கல்லூரியினை
கடந்து போகும் பொழுதெல்லாம் நினைத்துகொள்வேன், இந்த கல்லூரியில்தான் சேர
வேண்டும்.

அது ஒரு தனியார் கல்லூரி என்றாலும், எங்கள் மாவட்டத்தில் மிக சிறந்த கல்லூரி அதுவேயாகும்,
அந்த கல்லூரி சூழலே எனக்கு மிகவும் பிடித்திருந்தது, முகப்பில் ஆரம்பித்து கல்லூரியின் மத்தி வரை குளுமையான மரங்களின் அணிவகுப்பு!!!

இது கல்லூரியா இல்லை தோப்பா என பலமுறை வியந்து இருக்கிறேன், எங்கள் தெருவில் உள்ள வேலு தாத்தாதான் அங்கு உள்ள செடி, மற்றும் மரங்களை பராமரிக்கும் வேலைகளை செய்து வந்தார். வேலு தாத்தா அந்த மரம், செடிகளை தன் குழந்தைகள் என பலமுறை பெருமிதமாக கூற கேட்டிருக்கிறேன். மேலும் கட்டு கோப்புடன் சென்று படித்து திரும்பும் அண்ணா, அக்காக்கள் என நிறய விஷயங்கள் எனக்கு பிடித்து போயிற்று.அப்பாவிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன், அப்பா என் கல்லூரி படிப்பை நான் இங்கதான்
படிக்க போறேன்.

இதுல நிறய காசு கேப்பாங்கடா, நீ நிறய மார்க் ஸ்கோர் பண்ணு, அப்பதான் கட்ட வேண்டிய
டொனேசன் கொஞ்சம் குறைப்பாங்க.

அப்பா சொன்ன அப்புறம் மிக தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன், முழு ஆண்டு தேர்வும்
எழுதி முடித்தாகி விட்டது. எனக்கு நிச்சயம் 95% மதிப்பெண் கிடைக்கும். நன்றாக
படித்து இருந்ததால், எனக்கு தேர்வு மிக சுலபமாகவே இருந்தது.

விடுமுறைக்கு இரண்டு வாரங்கள் வெளியூரில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு
சென்று வந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்த பின்புதான் கவனித்தேன், வேலு தாத்தா வீடு பூட்டியே கிடந்தது,
தாத்தாவையும் காணவில்லை.

புதுசா சேக்கப்போற டிபார்ட்மென்ட்க்கு கட்டடம் கட்டறதுக்காக மரங்களை எல்லாம் வெட்டிடாங்கடா, வேலு தாத்தாவையும் வேலைய விட்டு நிப்பாட்டிடாங்க என்றான் நண்பன்.

நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக எங்கள் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற
மாணவன் ஆனேன்.

இப்போது நான் "சேர விரும்பிய" கல்லூரியில் எனக்கு ஸ்காலர்ஷிப் அவர்களே கொடுப்பதாக கூறி
வந்த வாய்ப்பினை, "ஏனோ" என் மனம் ஏற்கவில்லை.
************************************************************

அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்) நன்றிகள் பல.

Monday, April 19, 2010

பத்துப்படங்கள் - தொடர்பதிவு

எனக்கு பிடித்தவற்றுள் பத்து படங்களை பற்றி பகிர்ந்து கொள்ளும்
இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்த நண்பர் philosophy பிரபாகரன்
அவர்களுக்கு எனது நன்றி.

விதிகள்:
1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)
))))))))))))))))))))))))))))))))))))))))))

'ஓஹோ" ப்ரொடக்சன் பத்தி தெரியுமா உங்களுக்கு, தெரியாதுன்னா கண்டிப்பா இந்த படத்த
பாருங்க. பாலையாவும், நாகேசும் அப்பா, மகனா நகைச்சுவையில் கலக்கி இருப்பாங்க,
நாகேஷ், பாலையா கிட்ட கத சொல்ற அந்த சீன் அற்புதமா இருக்கும், நேரமில்லைன்னு
சொல்லாம பாருங்க இந்த "காதலிக்க நேரமில்லை" படத்த.

என்னதான் வாயில வெத்தில போட்ட மாதிரி பேசினாலும், இவரோட இயல்பான
நடிப்பும், அந்த துள்ளலான ஸ்டைலும் எனக்கு பிடிக்கும். அழகான ஒரு
குடும்பத்தோட நாமளும் அருகில் இருந்த ஒரு பீல் கிடைக்கும் இந்த படத்த பாக்கும்போது,
நாலே பாட்டுனாலும், நாலும் "நச்', வருடங்கள் பல கடந்தாலும் நினைவில் நிற்கிறது
இந்த "வருஷம் 16"

தம்மாதூண்டு மீசையை வைத்து, தன் பாஸிடம் இரட்டை வேடம் போட்டு ஏமாற்றுவார் ஹீரோ, அவருக்கு அம்மாவாக நடிக்க வந்தவரும், இரட்டை வேடம் போட
வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். அந்த அம்மா, நிறைய
படங்களில் அழு மூஞ்சி கேரக்டரில் மட்டுமே நடித்திருப்பார்,
அவரே இதில் நகைச்சுவை செய்திருக்கிறார், என்றால் பாருங்களேன், இந்த "தில்லு முல்லு"வை.

ரெண்டும் கெட்டான் வயதில் மாயகாதலில் விழுந்து
"ஓடிப்போலாமா" என நினைப்பவர்கள் இந்த படத்தை
பார்த்தால், நிச்சயம் நினைப்பை மறு பரிசீலனை செய்வார்கள்.
உச்ச கட்ட காட்சிக்கு முந்தைய காட்சியில், அந்த கை இழந்த நபர் முதலில் சாதாரணமாக
பேச ஆரம்பிக்கும்போதே, ஏதோ நடக்க போகிறது என்ற உணர்வில் நம்மை
அறியாமலே, நம் வயிற்றில் பய அமிலம் சுரக்கும் இந்த
"காதல்"லை பார்த்தால்.

காதலியை கைபிடித்தே தீர வேண்டிய சூழ்நிலை, அண்ணனால்
பெற்றோர் மனமுடைந்து இருக்கும் நேரம் வேறு. அப்பாவிடம் இன்டெர்வியு செல்வதாக பொய் சொல்லி கிளம்ப
வெள்ளந்தியாக அப்பாவும் ஆசிர்வாதம் செய்து, பணம் போதுமாப்பா
என கேட்க, குற்ற உணர்ச்சியில் மகன் தவிப்பார். அப்பாவிற்குள்
ஒளிந்திருக்கும், பாசத்தையும், அக்கறையையும் அழகாய் கொடுத்துள்ளார்கள் இந்த
"தவமாய் தவமிருந்து"வில்.

சிரிப்பு போலீசை மட்டும் நிறைய படங்களில் பார்த்த நமக்கு,
அவர்களின் நிஜ பக்கங்களையும் காட்டிய சில படங்களில் இதுவும்
ஒன்று. பிடிபட்ட அந்த தீவிரவாதி உண்மையில்
தீவிரவாதியோ என நாம் அஞ்சும்படி, நடிப்பில் மிரட்டி இருப்பார்,
வீரம்ன்னா பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுன்னு, வீரத்தை
பற்றி விளக்கிய இந்த "குருதிப்புனல்"லை பாருங்களேன்.

வயதான ஒருவரும், இளம்பெண் ஒருத்தியும் கொண்ட
நட்பை, எந்த விரசமும் இல்லாமல் கிராமிய மணம் கலந்து
வந்த இந்த படத்திற்கு என்றும் "முதல் மரியாதை"தான்.
ம்.....சொல்ல மறந்துட்டேனே பாடல்கள் அத்தனையும் தேன்.

வழக்கமா ஒரே பாட்டுல நம்ம ஹீரோக்கள் எல்லாம் ஊறுகாய்
வித்தே பெரிய ஆள் ஆயிருவாங்க, அல்லது அவங்களோட
"லட்சியத்தை" அடஞ்சிருவாங்க. இப்படி இல்லாம, கொஞ்சம் யதார்த்தமாய் இந்த படம் இருந்தது, என்ட் கார்ட் போடும்
வரையிலும் இந்த ஹீரோ அவரோட இசை அமைப்பாளர்
ஆகணும்கர லட்சியத்தை அடைய முடியாமல் போனாலும்
இந்த "முகவரி" எனக்கு பிடித்து இருந்தது.

ஒரு விறுவிறுப்பான க்ரைம் நாவல் படிச்ச மாதிரி இருந்துச்சு
இந்த படத்த பாக்கும்போது. ஸ்டைலிஷான மேக்கிங்ம், ரசிக்கும்படியான பாடல்களும் வலு சேர்த்தது,
இந்த "வேட்டையாடு விளையாடு"விற்கு.

ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான திரைக்கதை, நாயக, நாயகி, "மற்றும் பலரின்" நல்ல நடிப்பு, சுகமான பாடல்கள் என அமைந்த படங்களுள்
இந்த 'மொழி" யும் ஒன்று.
)))))))))))))))))))))))))))))))

இதை தொடர நான் அழைப்பது:

சசிகுமார்
பட்டாபட்டி
ரகு
ஜெய்லானி
அக்பர்
கண்ணா
சித்ரா
ஆனந்தி
பத்மா

ஜில் தண்ணி
r.v.saravanan kudandhai
*************************************************


அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Wednesday, April 14, 2010

ஆச்சி சொன்ன கத - கத கேளு கத கேளு - தொடர்பதிவு

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இப்போ என்னதான், DTS, DOLBY சிஸ்டம், I-MAX அரங்குன்னு தேர்வு செய்து படம் பார்த்தாலும், பள்ளி விடுமுறை
நேரத்துல ஆச்சிகிட்ட (அல்லது தாத்தாகிட்ட) கதை கேட்ட அந்த அனுபவம் யாருக்கும்
மறக்க முடியாது!!!

அவர்கள் கதை சொல்லும் போதே, நம் கற்பனயில் அந்த காட்சிகள் விரியும்.

அப்படி ஆச்சியிடம் கேட்ட கதைகளுள் ஒன்றை உங்களுடன்
பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை அளித்த சிநேகிதன்
அக்பர்ருக்கு நன்றி.

ஒரு காட்டுல ஒரு நரியும், ஓநாயும் ரொம்ப கூட்டாளியா
இருந்துச்சாம். ரெண்டும் சேர்ந்துகிட்டு கண்ணுல படுற
குட்டி மிருகங்கள ஆதரவா பேசி ஏமாத்தி, சாப்பிட்டிருமாம்.

ஒரு நாள் அந்த காட்டுக்கு, வழி தவறி போய் ஒரு குதிரை
வந்திச்சாம்.

அத பார்த்த நரி, இது என்ன மிருகம் புதுசா இருக்கே,
இத கொன்னா ஒரு வாரம் வச்சிருந்து சாப்பிடலாமேன்னு
நினச்சி, ஓநாயோட கலந்து பேசி ரெண்டும் குதிரைகிட்ட
போச்சாம்.

நீ யாருப்பா, இதுக்கு முன்னாடி உன்ன பார்த்தது இல்லையே,
உன் பேர் என்னன்னு கேட்டுச்சாம்.

நரியோட தந்திரங்களை பத்தி தெரிஞ்ச குதிரை சொல்லுச்சாம்,
என் பேரு, என் பாத்ததுல (காலின் அடிப்பாகம்) எழுதி இருக்கு, வேணுமின்னா
பக்கத்துல வா காட்றேன்னு சொல்லுச்சாம்.

இதுல ஏதோ சூழ்ச்சி இருக்குனு புரிஞ்சுகிட்ட நரி, எங்களுக்கு
படிக்க தெரியாதேப்பா, நாங்க மழைக்கு கூட பள்ளிக்கூடம்
ஒதுங்குனதில்ல இவ்வளவு ஏன் தங்கர்பச்சானோட பள்ளிக்கூடம் படத்துக்கு
கூட போனதில்லன்னு
சொல்லுச்சாம்.

இத கேட்ட ஓநாய்க்கு கோபம் வந்து, அடேய் மடப்பய நரியே, உனக்கு படிக்க தெரியாதுன்னு சொல்லு, அது உண்மை.....

ஆனா, நான் ரெண்டாப்பு வர படிச்சிருக்கேன்டா, எனக்கு படிக்க தெரியம் அப்படின்னு பெருமையா சொல்ல.......

அப்ப என் கால்ல இருக்குற பேர படின்னு குதிர
சொல்லுச்சாம்.

ஓநாய், நரிய நக்கலா பாத்துகிட்டே, குதிரை கிட்ட போச்சாம்,
குதிரை ஒரு கால மட்டும் தூக்கி, ஓநாய் கிட்டக்க வந்ததும், அது முகத்துல ஓங்கி ஒரு உத விட்டுச்சாம்.

அப்புறம் என்ன நரி முத ஆளா ஓடிபோக, முகத்துல ரத்தத்தோட ஓநாய், நரி பின்னாலேயே
ஓடிச்சாம்..........அவ்ளோதான்.


நீதி:..........................................டிஸ்கி: என்ன இது நீதின்னு போட்டுட்டு ஒன்னும் எழுதலைன்னு
பாக்குறீங்களா!!!!!!

கத சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது..............ஹி..............ஹி.........

********************************************************


அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Thursday, April 8, 2010

பேருந்து காதல் - தொடர்பதிவு

பேருந்து காதல், தொடர் பதிவுக்கான பேருந்தை, ஓட்ட சொல்லி என் கையில் பேருந்தை
கொடுத்த நண்பர் பிரவின்குமார் அவர்களுக்கு நன்றி.

போலாம் ரைட்டுன்னு, கண்டக்டர் சவுண்ட் விட்டதும், பேருந்து நகர
ஆரம்பிக்க, நிறுத்துங்கன்னு ஒரு குரல், அது அழகிய பெண்ணோட
குரல்ன்னு நீங்க கற்பனை பண்ணின்னா ஐ'ம் சாரி.........
அது கரகரப்பான ஆண் குரல்.

கிரீச்சிட்டு பஸ் நிற்க, ஏறியது சாட்சாத் (அழகிய) இளம்பெண்!!
மலரை மொய்க்கும் வண்டுகளாய், அனைவரின் கண்களும்
அவளிடமே. (பஸ்ஸ நிறுத்த சொல்லி குரல் விட்டது
அவளின் அப்பா)

மறு நாள் அதே நேரம், அதே பஸ் ஆனால் அதே
பெண் வரவில்லை :(

மறு வாரம் சோகமாக என் பேக்கை ஸ்டைலாக(!!!) அணிந்து கொண்டு அதே பஸ்சில் ஏறினேன், அட
என்ன வியப்பு, அன்று அதே பெண் மீண்டும் வந்தாள்.

அவளின் கடைக்கண் பார்வைக்கு அனைவரும் ஏங்கி கிடக்க
என் அருகே வந்தாள், என் ஹார்ட் பீட் அருகில் நின்ற எனது நண்பனுக்கே கேட்டது.

புன்னகை பூவை
உதிர்த்தது
அந்த நடமாடும்
பூச்செடி(!!!)

ஹாய் என்றேன் , இந்த ஒத்த வார்த்தையை
சொல்வதற்குள் என் நாக்கு மேல் தாடையில் ஒட்டி
கொண்டு வர மாட்டேன் என்று அடம் பிடித்தது,
வலு கட்டாயமாக தாடையில் இருந்து நாக்கை பிரித்து, அதன்பின் மீண்டும் ஹலோ சொன்னேன்.

இந்த பஸ்ல எப்பவும் இப்படிதான் கூட்டமா இருக்குமா
என்று கேட்டாள், ஆமா நீங்க தினமும் இதில் வருவதாக
இருந்தால் சொல்லுங்கள், என் நண்பன் இடம் பிடித்து
வைப்பான்(!!) என்றேன்.

தேங்க்ஸ் என்றாள், அப்படியே ரெண்டு சீட்டா போட்டு வைக்க
சொல்லுங்க என்றாள்...........

அதற்கப்புறம் அவள் பேசியது எதுவும் என் காதில்
விழவில்லை, அப்போ நான் தலையை ஆட்டி கொண்டே இருந்ததை
பார்த்துதான் டைரக்டர் சசி, அந்த சீனை சுப்ரமணியபுரதில்
நுழைத்து விட்டார் (காப்பி ரைட்ஸ் இனிமே போட்டுக்கணும்ப்பா!!)

அன்று இரவு வெள்ளை உடை தேவதைகளுக்கு நடுவே
என் தேவதையும் இருந்தது.

மறு நாள், கண்ணாடி பார்க்கும்பொழுது இன்னும் அதிக
அழகாக(!!!!) இருந்தேன்.

வழக்கமாக, புகையை கக்கி கொண்டே வரும் பேருந்து அன்று
மலர்களை தூவி கொண்டே வந்தது, நாரசாரமாக கேட்கும்
நண்பனின் குரல் அன்று எஸ்.பி.பாலாவின் தேன் குரல்
போல இருந்தது.

என் தேவதை ஏறும் ஸ்டாப்பில் வண்டி நின்றது, இன் இருதய
துடிப்பும் ஒரு நிமிடம் நின்று பின் இயங்கியது, என் தேவதை
ஏறியது, அவளுடன் இன்னொரு பெண்ணும்.

என்னை நோக்கி வந்தாள், என் நண்பனும், நானும் எழுந்து
கொண்டு அந்த இருக்கையில் அவளை அமர சொன்னேன்,
நன்றி புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு அமர்ந்தது, தீபா இங்கே உக்காரு, என்றாள்
உடன் வந்த பெண்ணை பார்த்து.

அந்த பெண்ணோ நான் ஜன்னல் ஓரம்தான் உக்காருவேன், நீ
இந்த பக்கம் வா "மம்மி" என்று சிணுங்கியது.

என் காலடியில் மட்டும் பூமி (பஸ்) இரண்டாக பிளந்து அப்படியே
என்னை விழுங்கியது போல் இருந்தது........:(:(ஏமாந்திங்களா!!!!!!

நான் படிச்சது எல்லாம் உள்ளூரிலேதான், தொழில்நுட்ப கல்லூரி
மட்டும் 15km தள்ளி இருந்த இன்னோர் ஊரில்.

அங்கு சென்று வர
என் அப்பா வேலை பார்த்த நிறுவனத்தில் மினி பஸ் வசதி
கொடுத்து இருந்தார்கள், அதில்தான் சென்று வருவேன். (அந்த
பேருந்தை "நாய் வண்டி" என என் நண்பர்கள் கேலி செய்வர், அந்த "ரகசியத்தை" இங்க நான் சொல்ல மாட்டேன்)

ஆகவே, எனக்கு பேருந்து காதல் "வாய்ப்பு" அமையவில்லை.

இந்த தொடரை எழுத வேண்டி, இப்படி
ஒரு "கதை" எழுதினேன்.


எப்பூடி!!!!!!!


டிஸ்கி 1:முந்தைய இடுகையின் போதே (விருது வழங்கும் விழா)
நிறய நண்பர்கள் ஆசையா பரோட்டா கேட்டாங்க, அப்படி
கேட்டவங்க, கேக்காதவங்களுக்கும் சேர்த்து பரோட்டா
சுட்டு வச்சிருக்கேன், இருந்து நிதானமா சாப்பிட்டு போங்க!!!டிஸ்கி 2 :ருசியா இருந்ததா!!!!!!!!!! :))
*******************************************************


அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Monday, April 5, 2010

விருது வழங்கும் விழா

இடம்:சைவகொத்துப்பரோட்டா ஸ்டால்

நபர்கள்:அப்பாவி அங்கு(அ.அ), பிலிம்பித்துக்குளி(பி.பி), சேட்டு
இவர்களுடன் உங்கள்
அபிமான(???!!!!) சைவகொத்துப்பரோட்டா(எஸ்.கே.பி) ,
மற்றும் மதிப்பிற்குரிய நீங்கள்.

சேட்டு:இன்னாப்பா உங்க கடையாண்ட ஒரே கும்பலா கீது.

பி.பி:வாய்யா சேட்டு, உன்கு மேட்டரே தெரியாது, இன்கு நம்ம
கடையில விர்து கொடுக்கறாங்கோ........

அ.அ:நமக்கு கொடுப்பாகளா அண்ணே.

பி.பி:வாடா பையா, இது அல்லாம் பதிவு எழுதுறாங்கோ
பாரு அவுங்களுக்கு கொடுப்பாங்கோ.

சேட்டு:நைனா, பொதுவா விருது வழங்குற விழான்னா பாட்டு
டான்ஸ் எல்லாம் இருக்குமே, இங்க எப்படி....க்கீதா...

பி.பி:அட நீ வேற எங்க ஆளு இருக்கானே மிக்கி மண்டையன்
யாரா.....அதான்ப்பா எஸ்.கே.பி அது
சொல்து, "கலை நிகழ்ச்சி" வைச்சா கடை கட்டுபடியாவாதாம்.

எஸ்.கே.பி: (வருகை) என்ன அங்க பேச்சு...........

பி.பி:வாங்கோ தம்பி, இப்பதான் ஒங்க "பெருமைகளை"
நம்பல் சேட்டுகிட்ட சொல்லிக்கிட்டு இருந்துச்சு...ஹி.....ஹி....

எஸ்.கே.பி:வேலையை பாருங்க. அங்கு, நம்ம கஸ்டமர்ஸ் எல்லாம்
வர்ற நேரமாச்சு, சேர் எல்லாம் ஒழுங்கு பண்ணு,
பி.பி அண்ணே அந்த விருதுகளை எல்லாம்
கொண்டு போய் மேடையில வையுங்க.

அ.அ:அண்ணே, எல்லோரும் வந்திட்டாங்க விழாவ
ஆரம்பிங்க.

எஸ்.கே.பி:அன்பின் பதிவர்களே, இனிய வாசகர்களே(!!!!)
நீங்கள் அனைவரும் எனக்கு கொடுத்த,
கொடுத்து கொண்டு இருக்கிற, கொடுக்க
போகிற அன்பையும், ஆதரவையும் நினைக்கையில்
எனக்கு கண்கள் பனிக்கிறது......

பி.பி: பாரு கையில மைக் கிடச்ச வுடனே என்னமா
பேசுறாரு.

எஸ்.கே.பி:என்னை மதித்து
சகோதரிகள், அன்புடன் மலிக்கா, திவ்யாஹரி
மற்றும் அன்புச்சகோதரர் ஸ்டார்ஜன் அவர்களும்
விருது(கள்) கொடுத்தார்கள்.

அவற்றை நான், நம்
நண்பர்கள் சிலருடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பி.பி :பாருய்யா!!! "விழைகிறாராம்" தமிழ் நாட்டியம்
ஆடுது.

எஸ்.கே.பி:கிழே நான் குறிப்பிட்டிருக்கும் அன்பின் நட்புகள் எங்கு
இருந்தாலும் மேடைக்கு வந்து இந்த விருதுகளை பெற்று
கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

முதலாவதாக Sunshine award goes to:

இராமசாமி கண்ணன்
ரகு
நாடோடி (ஸ்டீபன்)
DREAMER
Dr.P.Kandaswamy
Dr.எம்.கே.முருகானந்தன்
தமிழ் உதயம்
கவிதை காதலன்
பிரவின்

(அம்மாடி மூச்சு வாங்குது......) இவங்க எல்லோருக்கும் ஜோரா
கை தட்டுங்க, அப்படியே என்னோட வாழ்த்துக்களும்.

எங்க ஓடுறீங்க..........இருங்க இன்னொரு விருது இருக்குல்ல....

இரண்டாவதாக, King award goes to:
அண்ணாமலையான்
அன்புடன் மலிக்கா
கொஞ்சம் வெட்டிப்பேச்சு (சித்ரா)
தேனம்மைலக்ஷ்மணன்
ப்ரியமுடன் வசந்த்
திவ்யாஹரி
ராஜு
VISA
வந்தே மாதரம் (சசிகுமார்)
Padma
ஜலீலா
ஹுசைனம்மா

இவங்களுக்கும் ஜோரா கை தட்டுங்க.

எஸ்.கே.பி:இந்த விழாவினை சிறப்பாக நடத்த உதவிய அ.அ, பி.பி மற்றும் சேட்டுக்கும் என் நன்றிகள்.

பி.பி:(மனதிற்குள்) உன் நன்றி இருக்கட்டும், மூணு மாச சம்பள பாக்கியை எப்ப தருவ.

எஸ்.கே.பி:என்ன பி.பி அண்ணே, என்ன யோசனை.

பி.பி:விழா நல்லா நந்து முஞ்சத நினைச்சேன் தம்பி, மன்சு
சந்தோசாம்மா இற்கு.

எஸ்.கே.பி:சேட்டு கூட சேந்து பேசிப்பேசி, சென்னை வட்டார மொழியை அவர் கத்துகிட்டாரு, நீங்க அவர் பாசையில
பேசுறீங்க.

பி.பி: ஹி........ஹி............

அ.அ:அண்ணே இன்னைக்கு பரோட்டா போடலையே....

எஸ்.கே.பி:ரெண்டு நாள் கழிச்சி போடலாம். மிக்க நன்றி
நண்பர்களே, பொறுமையுடன் இருந்து விழாவை சிறப்பித்த
உங்கள் அனைவருக்கும் நன்றி.

*********************************************************
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Wednesday, March 31, 2010

காதல் போதை

தயவு செய்து
உன் பார்வையை
விலக்கு அன்பே

நான் போதைக்கு
அடிமையாக
விரும்பவில்லை.


அடுத்த முறை
செல் போனாய் பிறக்க
வரம் வேண்டுகிறேன்

அது கூட
உன் காதோடு
ரகசியம் பேசுவதால்.
ஒத்த துருவங்களில்
காந்த விசை
இருக்காதாமே

பின் எப்படி
நாம்
ஈர்க்கப்படுகிறோம்.

நீ என்ன
விக்கிரமாதித்தனின்
வம்சாவளியா

என்னுள் நுழைந்தாய்
நீயாகிப்போனேனே.


***************************************************அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Saturday, March 27, 2010

என் பேரு

ஜானும்மா இன்னைக்கு ஸ்கூல்ல நடந்த ரன்னிங் ரேஸ்ல நான்தான் பர்ஸ்ட் பெருமையாக
வெற்றிகோப்பையை, தன்னையும் வீட்டையும் பராமரிக்கும் பணிப்பெண்னிடம் நீட்டினான்
விக்கி.

படிப்பிலும், விளையாட்டிலும் நீதானே ராசா என்னைக்கும் பர்ஸ்ட்.

ஹைய்யோ.....என் பேர் ராசா இல்லை, விக்கி.

எனக்கு நீ ராசாதான், குளிச்சிட்டு வா சாப்பிடலாம்.

அம்மா வந்திரட்டும், இன்னைக்காவது அம்மா கூட சேர்ந்து சாப்பிடனும்.

ஜானகி.....விக்கிய உள்ள படுக்க வைக்க வேண்டியதுதான, ஏன் இப்படி ஹால்ல படுக்க
வைச்சிருக்கே....

இல்லமா..........ராசா இன்னும் சாப்பிட கூட இல்ல........இன்னைக்காவது உன்கூட
சேர்ந்து சாப்பிடனும்னு...........

அறிவில்ல உனக்கு, ஆபிசில தலைக்கு மேல வேலை இருக்கு, எங்களால
இவன பார்த்துக்க முடியலைன்னுதான உன்ன வேலைக்கு வச்சி இருக்கு,
சின்னைபையன் சொன்னான்னு........

ராசா........ராசா........

ம்மா.......இன்னைக்கு ஸ்கூல்ல...........

அம்மா வரலியா.........ஜானும்மா, அம்மா எங்க.....

அவுங்க இப்பதான் வந்தாங்க, களைப்பா இருக்குன்னு தூங்க போய்ட்டாங்க ராசா, வா
சாப்பிடலாம்.......

ப்போ............எனக்கு வேணாம்.............அம்.....மா...........அம்மா...........

தூக்கம் கலைந்த அம்மா எழாமலே சொன்னாள், போய் சமத்தா சாப்பிட்டு படு விக்கி,
அம்மாவுக்கு டயர்டா இருக்கு........

அப்பா..........அப்பா.........

அவரிடம் இருந்து குறட்டை மட்டுமே வந்தது.

ஹைய்யோ.........இங்க பாருங்க சின்ன வயசு விக்கி மாதிரியே இருக்கான் நம்ம பேரன்.

விக்கி......விக்கி......இங்க பாரேன்...........

என்னங்க........விக்கி நம்ம கூட பேசவே மாட்டேங்குறான்,
நம்மள மதிக்கிறதும் இல்ல.....

தன் குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த ஜானகியிடம், சென்ற
விக்கி, உங்க பேரன கொஞ்சுற ஆர்வத்துல என்னை மறந்துராதீங்க
என்றான்.

உன்னை எப்படி ராசா மறக்க முடியும்.

அய்யோ.......என் பேரு விக்......

இல்ல ......ராசான்னே கூப்பிடுங்க ஜானும்மா,

****************************************************


அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Sunday, March 21, 2010

செக்கச்சிவந்தவளே!!

சைக்கிள் பெடல அப்படியே பின்னால சுத்துனா......

என்னோட பள்ளி பருவம் வந்திருச்சு.......
பள்ளி விடுமுறை நாட்களில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு காட்டுக்குள் செல்வது, அட நீங்க வேற அமேசான் காடெல்லாம் இல்லை, பருத்தி காடுதேன்.

அந்த மாதிரி "அட்வெஞ்சர்" பயணத்தின் போது, அங்கே இருக்கும் இலந்தை பழங்களை, மிகவும் விரும்பி சாப்பிடுவேன். (யார் வீட்டு காடா?..... யாருக்கு தெரியும்)

பொழுது போகாத பொம்முவாய், வேட்டையாடி சாப்பிட்ட அந்த பழத்துல எம்பூட்டு
மகத்துவம் இருக்குன்னு இப்பதேன் தெரிஞ்சுகிட்டேன்.

வைட்டமின் - A, மற்றும் சுண்ணாம்பு சத்து இதுல நிறைய இருக்காம், எனவே இதை அடிக்கடி
சாப்பிட்டால் 100 - வயசுலயும் கரும்பு கடிக்கலாம் (நாமளும் இருந்து, பல்லும் இருந்தா),
புரூஸ்லீ மாதிரி கல்லும் ஒடைக்கலாம், எலும்பு அவ்வளவு உறுதியாகும்.

அப்புறம் சில பேர், வருவார் பின்னே ஆனால் அவர் "வாசம்" வரும் முன்னே, இந்த மாதிரி
பிரச்சனை உள்ளவங்க, வாசனை உருவாகும், இடத்துல (under arm) இலந்தை செடியோட
இலைகளை இடித்து சாறாக்கி அதனை தேய்த்து காய விட்டு, அப்பாலிக்கா கழுவுங்க.
(குளிக்கும் பழக்கம் இருந்தால் குளிப்பதற்கு முன்னும் செய்யலாம்.... ஹி.........ஹி...........டமாசு)
அப்புறம் "வாசனை" காணாமல் போய் விடும்.

சில பேர் தலை வாரிய அப்புறம் பார்த்தா, சீப்புக்கே முடி முளைச்சி இருக்கும், சிலருக்கு
முன்னாலோ அல்லது நடுவாலோ கொஞ்சம் "கிரௌண்ட்" இருக்கும், இந்த மாதிரி
உள்ளவங்க இந்த இலையோட சாறு எடுத்து தலையில தடவுங்க, உங்க முடி சீப்புக்கு
போகாது, கிரௌன்ட்ல புல்லு.........ச்சே.....முடி முளைக்கும் (அல்லோ இது சின்ன வயசுல
கிரௌண்ட் வாங்கினவங்களுக்கு மட்டும்தான்)

நீரிழிவு நோயுக்கும் இது மருந்தா செயல் படுதாம், ப்ரீயா போகவும் இது "வழி" செய்யும். (இப்பதான தெரியது, காட்டுக்கு போயிட்டு வந்த அப்புறம் ஏன் "வந்திச்சின்னு",
இது தெரியாம என் நண்பன், டேய் அந்த காட்டுக்காரன் நமக்கு "சூனியம்" வச்சிட்டான்ட்டா
அப்படின்னு புலம்பி கிட்டு இருந்தது தனி ட்ராக்)

பின் குறிப்பு:
"காசு கொடுத்தும்" இத்த வாங்கி இருக்கேன், எங்கையா.....
பள்ளிகூட வாசல்ல ஒரு பாட்டி ஜவ்வு மிட்டாயோட சேர்ந்து, இலந்தை பழமும் விப்பாங்க, அவுக கிட்டதேன்.

இப்ப எங்க கிடைக்குது அப்படின்னுதான நினைக்கிறீங்க, கிழே
படத்துல இருக்கே அது மாதிரி "ஜாம்" ஆகத்தான் கிடைக்கும்.

******************************************************************

அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)