Sunday, January 17, 2010

பெர்முடா முக்கோண மர்மங்கள்

வட அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பகுதியே,
பெர்முடா முக்கோணம், என அழைக்கப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர்
சைத்தானின் முக்கோணம்.

இதன் எல்லைகள் என பார்த்தல், பஹாமாஸ், புளோரிடா நீரிணைப்பு,மொத்த கரீபியன் தீவுகள் மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை அடங்கும்.




பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது காணமல் போன விமானங்களும், கப்பல்களும் பழுது
அடையாமல் நல்ல நிலைமையில் இருக்கும்பொழுதே
மாயமாகி விட்டதாக கூறுகிறார்கள்.

இந்த மாதிரி, எந்த பொருள் அந்த பகுதியில் சென்றாலும் மறைவதற்கு விடை
கிடைக்க வில்லை. நம்மை மீறிய ஏதோ ஒரு சக்தி அங்கு
இருப்பதாக, பொதுவான கருத்து ஒன்று உள்ளது.

"காணாமல் போகும்" விபத்துகளில் அதிகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா ஜலசந்தியைச் ஒட்டிய தெற்கு எல்லைப்பகுதியில் தான்.

காணாமல் போன சில சம்பவங்களை பார்ப்போம்:
சம்பவம் 1:
பிளைட் 19 என்பது டிபிஎம் அவெஞ்சர் குண்டு வீசும் விமானங்களுக்கு பயிற்சியளிக்கும் விமானமாகும், இது டிசம்பர் 5, 1945 அன்று அட்லாண்டிக் கடல் மீது பறக்கும்பொழுது மறைந்து போனது.
அந்த விமானம் அசாதாரணமான நிகழ்வை சந்தித்தது என்றும் இயற்கைக்கு மீறிய திசைகாட்டி அளவுகளைக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் விமானம் செலுத்தப்பட்ட நேரத்தில் வானிலை நன்றாகவே
இருந்ததாம், அதன் விமானியும் நன்கு அனுபவம் வாய்ந்தவராம்.
அவர் பெயர் சார்லஸ் கரோல் டெய்லர் ஆகும்.

காணமல் போன இந்த விமானத்தை தேடுவதற்காக 13 பேர் கொண்ட குழு ஒன்று, கப்பல்படை விமானம் மூலம் அனுப்பப்பட்டது, ஆனால், அதிர்ச்சியூட்டும் விதமாக அந்த விமானத்தில் இருந்தே ஒரு தகவலும் இல்லை.

அதே நேரத்தில், புளோரிடா கடற்கரையோரம், ஒரு கப்பலில் இருந்தவர்கள், கப்பல் படை விமானம் காணமல் போன விமானத்தை தேடி ரோந்து பணியில் இருந்த அதே நேரத்தில் ஒரு வெடிப்பு சம்பவத்தை அவர்கள் பார்த்ததாக கூறினர்.

இந்த சம்பவத்தை பற்றி அமெரிக்கன் லேசன் இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டது, பிளைட் 19 விமான ஓட்டி கூறியதாக அந்த இதழ் தெரிவித்த செய்தி: நாங்கள் இப்போது வெள்ளையான நீர் பரப்பிற்குள் நுழைந்து உள்ளோம், எதுவும் சரியாக தெரிய வில்லை. நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியவில்லை, இந்த இடத்தில் தண்ணீர் பச்சை கலரில் உள்ளது. மேலும் கப்பல்படை விசாரணை குழு அதிகாரிகள் விமானங்கள் "செவ்வாய்க்கு பறந்து போனதாய்" கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
(கதை கட்டியது, இந்த சம்பவத்தை சுவாரசியமாக்க)

ஆனால் உண்மையில் இந்த சம்பவம் நடந்து முடிந்த சமயத்தில் பருவநிலை கொந்தளிப்பானதாக மாறியிருந்தது. அதே நேரத்தில் தலைமை விமானி டெய்லருக்கும், பிளைட் 19 இன் மற்ற விமானிகளுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்கள் பற்றிய கடற்படை அறிக்கைகள், எழுதப்பட்ட பதிவுகள் அந்த விமானத்தில் எந்தவிதமான காந்த பிரச்சினைகள் இருந்ததாய் அறிவிக்கவில்லை.

மர்மங்கள் தொடரும்...

செய்தி மூலம், படம்:விக்கிபீடியா - நன்றி





அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

16 comments:

கௌதமன் said...

நல்லா இருக்கு - பயப்படாம இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போயி நீங்க அலசி இருக்கலாமோன்னு தோணிச்சி --

புலவன் புலிகேசி said...

நல்லா அலசிருக்கீங்க

கமலேஷ் said...

பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்...

தேவன் மாயம் said...

ஏற்கெனவே தெரிந்தது என்றாலும் அருமை!!

சைவகொத்துப்பரோட்டா said...

@கேகவுதமன்

//பயப்படாம இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போயி நீங்க அலசி இருக்கலாமோன்னு தோணிச்சி//

ஹா..ஹா.. மர்மங்கள் தொடரும் கவுதமன், தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்.

சைவகொத்துப்பரோட்டா said...

@புலவன் புலிகேசி

நன்றி புலவரே, பொங்கல் கொண்டாட்டம் முடிந்து விட்டதா...

சைவகொத்துப்பரோட்டா said...

@கமலேஷ்

மிக்க நன்றி கமலேஷ்.

சைவகொத்துப்பரோட்டா said...

@தேவன் மாயம்

மிக்க நன்றி டாக்டர்.

Thenammai Lakshmanan said...

நல்ல பகிர்வு

நன்றி சைவகொத்துப்பரோட்டா

சைவகொத்துப்பரோட்டா said...

@தேனம்மைலக்ஷ்மணன்

மிக்க நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

முக்கோணம் said...

முக்கோணம்னு பேர் வச்சிட்டு இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடலைன்னா நல்லா இருக்காது..அதனால உங்க பதிவு சூப்பரா இருக்குங்கற உண்மையை சொல்லித் தான் தீரணும்..

சைவகொத்துப்பரோட்டா said...

@முக்கோணம்

மிக்க நன்றி. உங்க ப்ளாக் பேர் மட்டுமில்ல பின்னூட்டமிட்ட ஸ்டைலே கலக்கல்.

Anonymous said...

i saw this new design good - muthu kumar

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி, முத்துக்குமார்.

பின்னோக்கி said...

இதைப் பற்றி டிஸ்கவரி டாக்குமெண்டரி ஒன்று இருக்கு பாருங்கள். இன்னும் ஒரு செய்தி. இப்பொழுது கப்பல் மற்றும் விமானங்கள் அந்த பகுதியில் காணாமல் போவது இல்லை.

சைவகொத்துப்பரோட்டா said...

@பின்னோக்கி

மிக்க நன்றி இந்த தவலுக்கு.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)