Tuesday, December 29, 2009

2009 கனவு தொழிற்சாலையின் சிறந்த பத்து பிளஸ் ஒன்


இந்த ஆண்டில் (2009) திரை கண்டதில், (நான் பார்த்ததில்) என்னை கவர்ந்த சில தமிழ் படங்கள் உங்கள் பார்வைக்கு.

கதைதான் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் நாயகன் என்று மற்றுமொரு முறை நிருபித்த படம்.
சின்ன பசங்களை வைத்து
பெரியவர்களுக்கு சேதி சொன்ன படம், இதன் இயல்பான கதையோட்டம் நம்மை ரசிக்க செய்கிறது.
இயக்குனர்:பாண்டிராஜ் , திரை: பசங்க


கதையினை நாயகனைக்கொண்டு எடுக்கப்பட்ட மற்றொரு படம்.
"சக் தே இந்தியா" போல் விளையாட்டை மையமாக வைத்து தமிழில் அபூர்வமாக வந்த படம்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான "கபடியை" அனேகப்பேர் மறந்து விட்ட நிலையில் இந்த விளையாட்டை மையமாக வைத்து, இதனுடன் ஒரு காதலையும் கலந்து சுவாரசியமாக எடுக்கப்பட்ட படம்.
இயக்குனர்:சுசிந்திரன், திரை:வெண்ணிலா கபடி குழு


பொதுவாக பேய்படம் என்றாலே விகரமான உருவங்களும், அகோர கட்சிகளுக்கும் பஞ்சம் இல்லாது இருக்கும். ஆனால் இவை எதுவும் இல்லாமல் நம்மை மிரட்டிய படங்கள் என இந்த இரண்டு படங்களையும் சொல்லலாம். (படம் பார்த்த பின் இரண்டு நாட்கள் தண்ணீரை
பார்த்தாலே ஈரம் படம்தான் நினைவுக்கு வந்தது.)
இயக்குனர்கள்:விக்ரம்குமார், அறிவழகன்.
திரைகள் :யாவரும் நலம், ஈரம்



காட்டிற்குள்ளேயே முழுபடமும் எடுக்கப்பட்டது
என்பது படம் முடிந்த பின்னர்தான் உறைத்தது. அந்த அளவுக்கு அலுப்பு தட்டாமல் எடுக்கப்பட்ட படம். போகிற போக்கில் அதிகார வர்க்கத்தில் உள்ள ஒரு சிலர் செய்யும் அடாவடிகளையும் தோல் உரித்து காட்டிய படம்.
ஜெயம் ரவிக்கு நல்ல பெயர் கொடுத்த படம்.
இயக்குனர்:s.p.ஜனநாதன்,
திரை:பேராண்மை


வழக்கமான மசாலா கதைதான், ஆனால்
ஆரம்பம் முதல் கடைசி வரை நம்மை கட்டி போடும் விறுவிறுப்பான திரைக்கதை. சூர்யா அனாசயமாக புகுந்து விளைடி இருப்பார்.
இயக்குனர்:k.v.ஆனந்த், திரை:அயன்


நாம் அன்றாடம் சாலையோரம் பார்க்கும் மக்களை பற்றிய படம் இது. இந்த படம் பார்த்த பின்னர்தான் தெரிகிறது, இவர்களை வைத்து தொழில் செய்யும் ஆட்களும் இருக்கிறார்கள் என்று. இப்பொழுதெல்லாம் இவர்களை பார்த்தாலே நம்மை அறியாமல் இவர்கள் மீது ஒரு பச்சாதாபம் எழுகிறது. இதில், பூஜாவுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு, அவரும் நன்றாக பயன் படுத்தி இருந்தார்.
இயக்குனர்: பாலா,
திரை:நான் கடவுள்



நகைச்சுவையும், சிறிதளவு காதல் மற்றும் கொஞ்சூண்டு துப்பு துலக்கும் கட்சிகளும் கலந்து ரசிக்கும் படியாக வந்த படம்
இது.
இயக்குனர்:நந்தினி,
திரை:திரு திரு துறு துறு


சில நாவல்களை படித்த போது நாம் அடைந்த களிப்பினை அது படமாக
உருமாறும்போது தருவதில்லை. அந்த வரிசையில் இந்த படமும் இடம் பிடித்து விட்டது வேதனையான
விஷயம். ஒரே ஆறுதல் கிட்டியின் இயல்பான நடிப்பும் மனதை மயக்கும் பாடல்களும்தான்.
இயக்குனர்:காந்தி கிருஷ்ணா,
திரை:ஆனந்த தாண்டவம்


நண்பனின், நண்பனும் நம் நண்பனே என்ற கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். நண்பர்கள் எடுத்த ரிஸ்க் எல்லாம் எப்படி விழலுக்கு இழைத்த நீராகிறது என்பதனை காட்டி இருந்தார்கள். சசியின் இயல்பான நடிப்பும்
நன்று.
இயக்குனர்:சமுத்திரகனி,
திரை: நாடோடிகள்


படம் முழுக்க ஒரே காஸ்ட்யும், ஒரே லோகேசன், ஹீரோயின் கிடையாது. விறுவிறுப்பான திரைக்கதை, கமல் & மோகன்லாலின்
அலட்டல் அற்ற நடிப்பு. இவர்களுக்கு ஈடான இரு போலிஸ் கேரக்டர்ஸ் என அமர்க்கள படுத்திய திரை இது. பாடல்கள் இல்லாதது இதற்கு வலு.
இயக்குனர்:சக்ரிடோலேடி, திரை:உன்னைப்போல் ஒருவன்





அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
நன்றிகள் பல.

10 comments:

PPattian said...

ஆனந்த தாண்டவம் ஏனோ (எனக்கு) மொக்கையாக இருந்தது. நான் சுஜாதாவின் நாவல் படித்ததில்லை.. படத்தை இன்னும் மெருகேற்றியிருக்கலாம்.

மற்ற படங்கள் இன்னும் பார்க்கலை.. TVயில் காட்சிகளும் பாடல்களும் பார்த்ததோடு சரி... நோ கொமெண்ட்ஸ்..:)

சைவகொத்துப்பரோட்டா said...

@புபட்டியன்
//படத்தை இன்னும் மெருகேற்றியிருக்கலாம்//

சரியாக சொன்னீர்கள். மற்ற படங்களை நேரம் கிடைத்தால் பாருங்கள்.

Paleo God said...

நானும் சில படங்கள் பார்த்தேன், பசங்க, நான் கடவுள், ஈரம், நாடோடிகள், உன்னைப்போல் ஒருவன்... எல்லாமே ஒகே தான் ::))

சைவகொத்துப்பரோட்டா said...

@பலா பட்டறை

நன்றி நண்பரே

புலவன் புலிகேசி said...

பேராண்மை நல்ல கதைதான். ஆனால் தாழ்த்தப் பட்டவர்கள் என்ற கருத்தை எதிர்க்கிறேன் என்று கேவலப் படுத்திய படம். மற்றவை அருமை

சைவகொத்துப்பரோட்டா said...

@புலவன் புலிகேசி

நன்றி நண்பரே உங்கள் எண்ணத்தை கூறியதற்கு.

நினைவுகளுடன் -நிகே- said...

சரியாக சொன்னீர்கள்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

சைவகொத்துப்பரோட்டா said...

@நினைவுகளுடன் -நிகே

மிக்க நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பூங்குன்றன்.வே said...

மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

@பூங்குன்றன்.வே

மகிழ்ச்சி நண்பரே. நேரம் கிடைத்தால் நிறைய (உங்களுடைய) படைப்புகளை வெளிடுங்கள்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)