Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Thursday, March 4, 2010

"வாயைதிற வயிறு பெருகட்டும்"

டிஸ்கி:இது ஒரு கற்பனையே, அதனால உங்க கற்பனை குதிரையை
"வேறு பாதையில்" ஓட விட வேண்டாம் :))

விமலாகிய நானும், விக்கி மற்றும் ராசு இணை பிரியா நட்புடன் இருந்தோம். அவர்கள் இருவரும்
ஒழுங்காக பள்ளி சென்றதன் பலனை நன்றாக அனுபவித்தார்கள், விக்கி அண்டை மாநிலத்தில் அரசு உத்தியோகத்தில் சேர்ந்தான். ராசு ஒரு தனியார் வானொலியில் சேர்ந்தான்.

நான் எங்கள் ஊர் கோவிலே கதி என்று இருந்ததன் பலனை தேங்காயும், சுண்டலுமாய் தின்று அனுபவித்தேன். நம்மை பற்றி ஊரே பேச வேண்டும், என்ன செய்யலாம் என தலையை சொறிந்து கொண்டே யோசிக்கும்பொழுது, நல்ல யோசனை கிட்டியது.

தலை முடியை ஒரு வருடமாகியும் வெட்டாமல் விட்டதன் பலன் என் பிட்டம் வரை வளர்ந்தது, அப்படியே எங்கள் ஊர் கோவில் அருகே அமர, அங்கு வந்த வெளியூர் மக்களில் ஒருவர் என் தலையை சுற்றி ஒளி வட்டம் தெரிவதாக கூற, அவர் பையன் அப்பா என் "பென் டோர்ச்ச" காணோம் என அழ ஆரபிக்க அவர் கவலைப்படாமல் என்னை வணங்க, இன்று எனக்கு லட்சம் பால்லோவேர்ஸ்.

என் "கம்பெனி" பேரு சுவாமி விமலானந்தா, எனக்கான கேப்சன்
"வாயைதிற வயிறு பெருகட்டும்"

எனது கொள்கை பரப்பு செயலராக என் நண்பன் ராசு பதவி ஏற்று அவர்கள் வானொலியில் தினமும் எனது அருளுரையை
"வாயைதிற வயிறு பெருகட்டும்" என்ற நிகழ்ச்சி மூலம் ஒலி பரப்ப என் புகழ் அண்டை மாநிலம் வரை பரவியது.

அங்கு உள்ள என் நண்பன் விக்கி மூலம் கொஞ்சம் "புறம்போக்கு" நிலத்தை வளைத்து எனக்கு ஆசிரமம் அமைத்தேன்.

என் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது, வேலை கேட்டு வந்தவர்களிடம், "உண்டியலில்" பணம் செலுத்த சொல்லி பின்பு விக்கியின் செல்வாக்கை பயன்படுத்தி
அவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்தேன்.

அவ்வாறு என் மூலம் "பயன் அடைந்தவர்கள்" அவர்கள் பங்குக்கு இலவசமாக என் "புகழ்" பரப்பினர்.

ராசுவின் நண்பன் வாசு அவன் பங்குக்கு நான் குச்சியால்
குத்தியே அவனுக்கு இருந்த கான்செர் குனமானதாக புருடா விட
அதை நம்பி நிறய மருத்துவர்கள் என்னிடம் அந்த "மருத்துவ
குறிப்பு" வேண்டும் என அடம் பிடிக்க அது "தேவ ரகசியம்" அதை
நான் கூறினால் உங்கள் தலை வெடித்து விடும் என பக்குவமாக
விளக்க அனைவரும் வந்த சுவடு தெரியாமல் எஸ்கேப்.

"தொழில்" சற்றே சூடு பிடிக்க சொந்தமாக கல்வி நிலையம்,
மருத்துவமனை எல்லாம் கட்டி "சேவை" புரிந்தேன்.

சாமி, "துறவி" என்றால் அனைத்தையும் துறக்க வேண்டுமே, நீங்கள் நிறைய சேர்க்கிறீர்களே என விவரமாக கேட்ட, சிஷ்யன் ஒருவனை
மகனே, "துறவியாக இருக்க உனக்கு தகுதி இல்லை" என வீட்டுக்கு அனுப்பி விட்டேன்.

இல்லாதவர்களுக்கு அவர்கள் கேட்டது எல்லாம் கொடுத்தேன்,
ஒரு முறை திருமண வரம் கேட்ட பக்தைக்கு இலவச இணைப்பாக "குழந்தை வரம்" கொடுத்தேன்,
இது ஒரு தவறா?

பாருங்க என்னை கொண்டு வந்து "உள்ளே" வச்சிட்டாங்க, என் ஆசிரமத்தை விட இங்க வசதி குறைவு, என் கிட்ட 40" டி.வி. இருக்கு, இங்கு 21"- தானப்பா இருக்கு.

ஆமா சிஷ்யா, யாரு இவுங்க ரொம்ப நேரமா மானிட்டரையே
முறைச்சி பாத்துகிட்டு இருக்காங்க...

இவுங்க வலைப்பூல பதிவு போடுறவுங்க குரு....

அப்படியா, உங்களுக்கு ஒரே நாள்ல ஒரு லட்சம் ஹிட்ஸ் வேணுமா...


ப்லோக்காலோ ஜிம்கானான்னு ஒரு மந்திரம்..........




ஹலோ........ஹலோ......எங்க ஓடுறீங்க........




சிஷ்யா ஓடுறாங்க பாரு........... அவுங்க என்டர் பட்டனை புடுங்கு.............

**************************************************************************

அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Wednesday, December 23, 2009

சேட்டைக்காரன்


முன் குறிப்பு:இது வெறும் கற்பனை மட்டுமே, நகைச்சுவை மட்டுமே இதன் நோக்கம், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை.

இடம்:சைவகொத்துபரோட்டா ஸ்டால், கற்பனையூர்.

நபர்கள்:ஹீரோ, பி.பி.(பிலிம் பித்துக்குளி), அப்பாவி அங்கு மற்றும் இயக்குனர்கள் இவர்களுடன் சிறப்பு தோற்றம்
அனுபவம் வாய்ந்த இயக்குனர் ஒருவர்.

பி.பி.(பிலிம் பித்துக்குளி):வாங்க, வாங்க ஹீரோ சார், இப்ப ஊரெல்லாம் பத்திரிக்கையில் இருந்து, வலைபதிவு வர உங்க
படத்த பத்தின பேச்சுதான் போங்க,

ஏய் அங்கு, சாருக்கு சூடா "கொத்துபரோட்டா" ஒன்னு போடுப்பா...

ஹீரோ: அட நீ வேற, அதான் ஏற்கெனவே, நம்ம படத்த எல்லோரும்
கொத்து, கொத்துன்னு கொத்துறாங்கலே.

பி.பி: நான் சொன்னது சாப்பிடற "கொத்துபரோட்டா" பாஸ் .

ஹீரோ:(மனதிற்குள்) நம்மள இந்த வாரு வாருராங்களே. நம்மளோட அடுத்த படம், சும்மா பட்டி தொட்டியெல்லாம் அதிரனும்.

யோவ் பி.பி, அடுத்த ப்ராஜெக்ட் பத்தின டிஸ்கசனுக்கு சில டிரக்டர்ஸ்
வருவாங்க, ஒவோருத்தாரா அனுப்பி வைங்க.

இப்பலாம் கெட்அப் சேன்ஜ் பண்ணுற டிரென்ட்கரதால, கெட்அப் சேன்ஜ் பண்ணி நடிச்சும் எடுபடலயே, பி.பி....

அப்பாவி அங்கு:பாஸ், நீங்க எப்ப கெட்அப் மாத்தி நடிச்சீங்க!!!

ஹீரோ:அதான், அந்த "பாட்டு சீன்ல"

பி.பி:(மனதிற்குள் சிரித்துக்கொண்டே, குழந்தைங்க சாப்பிடாம அடம் பிடிச்சா, பூச்சாண்டி கிட்ட பிடுச்சி கொடுதிருவேன்னு நிறய அம்மாக்கள் இப்ப "அந்த பாட்டைத்தான்" காண்பிக்கிறதா ஊருக்குள்ள டாக்.)

பவ்யமாக, பாஸ் நம்ம இயக்குனர்கள் எல்லாம் வந்து இருக்காங்க.

ஹீரோ:சரி, சரி, ஒவோருத்தரா அனுப்பி வைங்க.

இயக்குனர் 1: வணக்கம் சார், நம்ம கிட்ட "அருமையான ஸ்கிரிப்ட்" ஒன்னு இருக்கு, இந்த ப்ராஜெக்ட் மட்டும் பண்ணுங்க, அப்புறம் எங்கயோ போயிருவீங்க.

ஹீரோ:முதல்ல கதைய சொல்லுங்க சார்.

இயக்1: இப்ப நான் சொல்லப்போற "ஹீரோ என்ட்ரி சீன்" இது
வரை தமிழ், ஏன் உலக சினிமாவுல கூட யாரும் வைக்காத சீன்,

ஒபெனிங் சீன்ல ஒரு கள்ளிகாட்ட காண்பிக்கிறோம், ஒரு எண்பது வயசு தாத்தா சுள்ளி பொறக்கிகிட்டு இருக்கார், அப்ப வில்லன் கோஷ்டி அவர்கிட்ட, பீடி பத்த வக்க நெருப்பு கேட்குது, அவர்கிட்ட நெருப்புப்பெட்டி இல்லாது போகவே, அவர அவங்க திட்ட ஆரம்பிக்க,

பெரியவர் பயத்தில், மேல இருந்து ஒருத்தன் இது எல்லாம் பார்த்துகிட்டு இருக்கான்டா, உங்களை "வேட்டையாட" அவன் வருவாண்டா இன்னு சொல்ல,

வில்லன் கோஷ்டி, கேனத்தனமாக சிரித்துக்கொண்டே மேலே பார்த்து,
பெர்சு, மேலே வானம் இருக்கு, கிழே சுள்ளிக்காடு இருக்கு, இங்க யாரு வரபோரா அப்படின்னு சொல்லும்போதே,

"அசுர வேகத்துல" நீங்க மேல இருந்து குதிச்சு அவங்கள துவம்சம் பண்ணுறீங்க.. (ஹீரோ இடை மறித்து...)

லாஜிக் இடிக்குதே, பொட்டக்காட்டுல, நான் எங்க இருந்து
குதிக்க முடியும்,

இயக்:இப்படிதான் சார், ஆடியன்சும் குழம்புறாங்க, பைட் சீன் முடிஞ்ச அப்புறம் அப்படியே, நீங்க வந்த வழிய காண்பிக்கிறோம்,

காமிராவ, அப்படியே மேலே, மேலே ஜூம் செஞ்சா,

I.S.S (International Space Station) உள்ள நீங்க இருக்கீங்க, அந்த பெர்சு போட்ட கூச்சல் சத்தம் கேட்டு அங்க இருந்து குதிச்சு வரீங்க.

பி.பி: (மெதுவாக ஹீரோ காதுக்குள்) கொஞ்ச நஞ்சம் இருக்குற உங்க இமேஜ, டேமேஜ் பண்ண பாக்குறாரு, இந்த படம் வேண்டாம்.

ஹீரோ:சார் நான் எதிர் பார்க்குறது இது இல்ல, நாம அடுத்த ப்ராஜெக்ட்ல ஒன்னு சேருவோம், ப்ளீஸ்....

பி.பி:பாட்டு எழுதற கவிகளுக்கும் உங்க மேல காண்டு பாஸு, பாட்டையும் நல்லா அலசி ஆராஞ்சு செலக்ட் பண்ணுங்க.

ஹீரோ:எத வச்சு சொல்ற?

பி.பி:பின்ன என்ன பாஸ், பாட்டுக்கு நடுவால, "சேட்டைக்காரன்
வரத பார்த்து குல நடுங்குது, குல நடுங்குது"ன்னு எழுதலாமா?

அதோட பின் விளைவுதான், எல்லோரும் நம்ம படத்தோட போஸ்டர் பார்த்தாலே "குல நடுங்கி தெறிச்சு ஓடுறாங்க."

ஹீரோ:இது வேலைக்கு ஆவாது, பேசாம அந்த "ஊர்" டிரக்டர்ஐ கூப்பிடுங்க. "ஊர்" டிரக்டர் என்டர்:பாசு, உங்க "மார்க்கெட்,பஸ், ரயில்வே ஸ்டேஷன்" எல்லாம் தூக்கி நிறுத்தற மாதிரி நம்ம கிட்ட ஒரு கதை இருக்கு கேளுங்க...

இது ஒரு ஹை டெக் கதை அப்படியே மொத சீன ஓபன் பண்ணுறேன் கேளுங்க...

ஒரு நெட் சென்டர்ல எல்லோரும் ஆன் லைன்ல சினிமா பார்க்குறாங்க, அப்ப ஒருத்தர் என்ட்ரி ஆகி, கண்ணா எல்லோரும் திரை அரங்குல போய் படம் பாருங்கன்னு சொல்ல, யாரும் அவர சட்ட செய்யாம இருக்காங்க.

கோபத்துல நம்ம ஆளு, கத்திரிய எடுத்து நெட் கணக்சென வெட்டி உட்டுட்டு ஒரு பன்ச் வசனம் பேசுறாரு,

"நெட்டுக்குள்ள நீங்க பிஷ்வில் விளையாடுங்க, ஆனா, இந்த புறாகிட்ட விளையாடதீங்க"

ஹீரோ:பைன், என்னோட ஒபெனிங் சீன் நல்லா இருக்கு.

"ஊர்" டிரக்டர்:பாஸ் இந்த ஒபெனிங் சீன்ல வரது நீங்க இல்ல, நான்.

பி.பி:இப்படி எல்லா படத்துலயும் பில்ட் அப் போட்டே இவர் ஹீரோ ஆகலாம்னு பாக்குறாரு, கழட்டி உட்ருங்க பாஸ்.

ஹீரோ:எனக்கு மூட் சரி இல்ல, இன்னோர் நாளைக்கு டிஸ்கஸ் பண்ணலாம், நன்றி.

ஸ்பெஷல் கெஸ்ட் என்டர்,

தம்பி, என் கிட்ட கத இருக்கு, முதல்ல டைட்டில் கேளு,
"பட்டம் ஒரு இருட்டு"

கதைப்படி, நீ ஒரு வக்கீலுக்கு படிச்ச பட்டதாரி, ஆனா நாட்டுல நடக்குற கொடுமைகள் பார்க்க சகிக்காம, பட்டத்த தூக்கி எறிஞ்சிட்டு சட்டத்த கையில் எடுத்துகிட்டு.....

நில்லு... நில்லு...எங்க ஓடுற....தம்பி....

ஹீரோ, பி.பி, & அப்பாவி அங்கு (கோரசாக)

ரெடி, ஜூட், எஸ்கேப்........

பின் குறிப்பு:முன் குறிப்ப, மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

டிஸ்கி:இத படிச்சதால, உங்களுக்கு கொஞ்சூண்டாவது சிரிப்பு வந்துச்சா, இல்லையான்னு சொல்லிட்டு போங்க.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)