Saturday, February 27, 2010

பப்பாளியும், கணக்கு வாத்தியாரும் - பதின்ம வயது தொடர் பதிவு


பதின்ம கால நினைவுகளை "கிளறி" பார்க்கும் இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த நண்பர்
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நிறைய இனிமையான விசயங்கள் இருந்தாலும், உங்களுடன் இரண்டு விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன். (அது சரி பிளேடுன்னா ரெண்டு பக்கமும் பதம் பார்க்குமுல்ல)

எங்கள் வீட்டில் பப்பாளி மரம் இருந்தது, அதனால் தங்கு தடையின்றி நிறைய பழங்கள் சாபிட்டதன் பலன் ஒரு கட்டத்தில் பப்பாளி என்று யாராவது சொன்னாலே காத தூரம் ஓடும் அளவுக்கு வெறுப்பு வந்து விட்டது.

இதே பழத்தை, சாப்பிடாமலே, பத்து ரூபாய் தண்டம் அழுத கதைதான்
இப்போ நான் சொல்லபோறது.

நான் படித்தது, ஆங்கிலோ இந்தியன் பள்ளியில்....
இருந்து 15 கி.மீ. தள்ளி இருந்த அரசு மேல் நிலைப்பள்ளியில்.
அங்கு நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்பொழுது மைசூர், பெங்களூர், கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு, பள்ளி மூலம் சுற்றுலா சென்றோம். "எங்கள் ஆசான்" ஒருவர், ஒய்வு எடுப்பதற்காக நீர் நிலைகளின் அருகே பேருந்து நிற்கும் போதெல்லாம் வருதோ, வரலியோ எல்லோரும் போய் "உக்காந்து முயற்சி" பண்ணிட்டு வாங்க, என்று சொன்ன போதெல்லாம்
வராதது, மைசூர் பிருந்தாவனம் சென்ற பின் வந்தது.

நானும் என் இரண்டு நண்பர்களும், இடத்தை தேடி அலைந்து, கடைசியில் இடுப்பளவு முள் வேலி கொண்ட ஒரு இடத்தினை காட்டி அங்கு "போகலாம்" என நண்பன் சொல்ல, வேலியை தாண்டி
நகத்தை கூட செலுத்த விரும்பாத நான் வேண்டாம் என கூறியும்,
அவர்களின் வற்புறுத்தலாலும், "உந்துதலாலும்" வேலி தாண்டி
சென்று "முடித்து" விட்டு, வெளியாகும் முன்பு,
தடியான இரு ஆசாமிகள் எங்களை பிடித்து கொண்டனர்.

அது ஒரு பப்பாளி தோட்டம், இது வரை காணாமல் போன பப்பாளிகள் எல்லாம் நாங்கள் திருடியதாகவும், இப்பொழுது எடுத்ததை எங்கே வைத்து இருக்கிறீர்கள் எனவும் மிரட்ட
ஆரபித்து விட்டார்கள்.

பின்னர் நாங்கள் சுற்றுலா வந்த மாணவர்கள் என்றும், தோட்டத்துக்கு "உரம் போட" வந்த விசயத்தையும் விளக்கினோம்.
சரி.. சரி.. 30 ரூபா கொடுங்கள் என எங்களை மிரட்டி, வாங்கியும்
கொண்டார்கள். என்ன கொடும மேம் இது.

************************************

கணக்கு புத்தகத்தை ஒரு பக்கம் வைத்து, வேப்பங்காயை இன்னொரு பக்கம் வைத்தால், இரண்டாவதை எடுத்து கொள்வேன். அவ்வளவு "ஆர்வம்" கணக்கு பாடத்தில்.

இந்த "ஆர்வத்தை" திசை திருப்பியவர், பத்தாம் வகுப்பு கணக்கு வாத்தியார்.

ஒவ்வொரு ஸ்டெப்பையும் மிக பொறுமையாக, நிதானமாக விளக்கி கூறுவார். புரிய வில்லை என்றால், கேளுங்க கண்ணுகளா என்று அன்பாக கூறுவார். இவை அனைத்தும் பள்ளி நேரம் முடிந்து, அவரின் சொந்த டியூஷன் எடுக்கும் நேரத்தில்!! அவருக்கு செலுத்த வேண்டிய தொகை மிக
அதிகமானது.

டியூஷன் செண்டர், பள்ளி வகுப்பறைதான். பள்ளி நேரத்தில் ஏனோ,தானோ என்று வகுப்பு எடுப்பார், ஒரு பயலுக்கும் ஒன்றும் விளங்காது.

அவரிடம் டியூஷன் படிக்காத பயல்களா பார்த்து கேள்வி கேட்பார்,
விடை தெரியாமல் முழித்தால் "வெளுத்து" விடுவார்.

வேற வழி, மறு நாளே அவரின் டியூஷன் வகுப்பில் அந்த பையன்
இருப்பான். என்ன கொடும சார் இது.


டிஸ்கி:
இதெல்லாம் ஒரு மலரும் நினைவுகளான்னு கேட்டீங்கன்னா,
குட்டை நண்பர் ஸ்டார்ஜனுக்கு வைங்க.

பூச்செண்டு!!!! கொடுக்கணும்னு தோணினா இங்க கொடுங்க, ஹி...ஹி...ஹி....

இத்த படிச்சதுக்கு அப்பால யாருக்கெல்லாம் பழைய நினைவுகள்
பீறிட்டு திரும்புதோ, அவங்க அனைவரும் இதை தொடர அன்புடன்
அழைக்கிறேன்.
*********************************************************************

அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Thursday, February 25, 2010

சாமி

எங்களின் பள்ளி பருவம் முதலே, சாமியை எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் என்னோட பாட்டியும், அம்மாவும் அவன் கூட பழகாதே, அவனுக்கு அந்த தகுதி கிடையாது என்று சொல்லி எங்களின் நட்பு பாலத்தை உடைக்க நிறைய சதி செய்தார்கள்.

ஆனால் என் அப்பா தூணாக தாங்கியதால் உறுதியாக நின்றது எங்கள் நட்பு பாலம்.
அம்மாவும், அவள் அம்மாவும் கறுவி கொண்டுதான் இருந்தனர். அவன் என்னுடன் படித்து கொண்டே எங்கள் வீட்டில் உள்ள (நாலு கால்) மாடுகளை பராமரிக்கும் பணி செய்தான்.

அப்பா வீட்டில் இருந்தால் சாமியிடம், மாதுளை பற்கள் தெரிய அம்மாவும், ஒட்டுப்பல் தெரிய பாட்டியும் பேசுவார்கள். அப்பா இல்லை என்றால் சாமிக்கு "பூஜைதான்." அந்த சமயங்களில் நான்
அவனுக்கு பரிந்து பேசினால் எனக்கும் "மண்டகப்படிதான்"

அவன் வேலை முடித்து புற வாசல் வழியாகத்தான் செல்ல வேண்டும், (வரவும் அதே வழிதான்) ஒரு நாள் வீட்டினுள் படையை நடுங்க செய்யும் பாம்பார் வந்து விட்டார், நம்ம சாமிதான் அவருக்கு இந்த பூலோகத்தில் இருந்து விடுதலை கொடுத்தான்.

சாமி நின்ற இடத்தை, ஒரு புல் பாட்டில் (பினயில்ப்பா!!) போட்டு கழுவினாள் பாட்டி (தீட்டு பட்டு விட்டதாம்)



ஒரு முறை அப்பா தொழில் விசயமாக பக்கத்துக்கு ஊருக்கு சென்று திரும்பும் வழியில் ஒரு சிறிய விபத்தில் மாட்டி கொண்டார்.

நிறைய இரத்தம் தேவைப்படுவதாக மருத்துவர் கூற அப்பாவின் ரத்த வகை, எங்கள் குடும்பத்தில்
பாட்டிக்கும், என் தாய் வழி மாமா ஆகிய இருவருக்கு மட்டுமே
இருந்தது.

பாட்டிக்கு "கொழுப்பு அதிகம்" என்பதால் பி.பி, மாமா முந்தைய இரவு, இலவச திட்டத்திற்கு, "நிதி வழங்கி" வந்து இருந்ததால் அவரும் இரத்தம் கொடுக்கும் தகுதியை இழந்து விட,
சாமி விஷயம் கேள்விப்பட்டு பதறியபடி வந்து இரத்தம் கொடுத்தான். (சோதனை செய்ததில் அவனுக்கும், அப்பாவுக்கும் ஒரே இரத்த வகைதான் என்று தெரிந்தது)

அம்மாவும், பாட்டியும் போட்டி போட்டு கொண்டு கடவுளுக்கு நன்றி சொல்ல, நான் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட,

அட கடன்கார, உங்கப்பன் எமனோட போராடி, இப்பதான் தேறி இருக்கான், இந்த நிலமையில உனக்கு எப்படித்தான் சிரிப்பு வருதோ என்றாள் பாட்டி.

இல்ல பாட்டி, அன்னைக்கி, சாமி நடுக்கூடம் வரை வந்ததுக்கே ஒரு பாட்டில் பினையில, காலி செஞ்ச, இப்ப அப்பா உடம்புல ஓடுறது அவன் இரத்தம்தான், அப்படின்னா, அப்பாவ எத்தனை பாட்டில் பினாயில் ஊத்தி குளிப்பாட்ட போறியோன்னு நினைச்சேன், சிரிப்பு
வந்திருச்சு.

***************************************************************





அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Sunday, February 21, 2010

ஆதலினால் காதல் செய்வீர்

அன்புக்குரிய
காதலியே

இரவினில் வெளியே
செல்லாதே

தடாகத்து அல்லிகள்
குழம்பி விடுகின்றன

ஒரே சமயத்தில் இரு நிலவுகளை
கண்டதால்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


என் தோட்டத்தில்
பூக்கள் வாடுவதில்லை
பூத்தவை எல்லாம்
நீ சிந்திய
புன்னகை பூக்கள்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


என் வீட்டு
நிலைக்கண்ணாடியும்
ரசம் இழந்துவிட்டது
உன்னை பாராமல்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கல்லென்றால்
செதுக்கி விடுவேன்

இரும்பென்றால்
இளக்கி விடுவேன்

பூவென்றால்
வண்டாவேன்

சொல்லடி
உன் இதயம்

கல்லா
இரும்பா
பூவா

********************************************************



அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Wednesday, February 17, 2010

தவிப்பு

சார், நான் வேலை விசயமா இந்த ஊருக்கு வந்தேன், என் கெட்ட நேரம் பணம், செல் போன் எல்லாம் ஒரு கும்பல் கிட்ட பறி கொடுத்திட்டேன். ஒரு நூறு ரூபா மட்டும் கொடுத்தீங்கன்னா ஊருக்கு போய் உங்க
அக்கவுண்டுக்கே பணம் அனுப்பிச்சிருவேன், ப்ளீஸ் ஹெல்ப் மீ சார், எனக்கு அரைகுறையாக தெரிந்த அவர்கள் மொழியில் கேட்டேன் அவரிடம்.

அட யாருய்யா நீ சாவுகிராக்கி, காலங்காத்தால, இப்படி எத்தனை பேருய்யா கிளம்பி இருக்கீங்க,
காசு இல்ல போய்யா. (அவன் சொன்னதின் தமிழ் பெயர்ப்பு!!)

என்ன கொடும சார் இது, மாசம் பொறந்தா சுளையா 35,000/- சம்பளம் எனக்கு, இப்ப என்
நிலமைய பார்த்தீங்களா.

என் வீட்டுக்கோ, நண்பர்களுக்கோ போன் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம், அதுக்கு போன் கூட இல்லையே, நான் இருக்கும்
இடமோ வேறு மாநிலம். எல்லோரும் "தார்" பாஷையில
பேசுறாணுவ, ஒருத்தன் கூட "பரங்கியில" பதில் சொல்ல
மாட்றான்.

அடச்சே, யாருக்கும், மனிதாபிமானமே கிடையாது,
மனிதம் செத்து விட்டது. பின்ன என்ன சார், மொழி தெரியாத
ஊர், எனக்கு நண்பர்களோ, உறவினர்களோ கூட இந்த ஊரில்
கிடையாது. அய்யோ நான் எப்படி ஊருக்கு செல்வேன், பசி
வேறு வயிற்றை கிள்ள, செய்வது அறியாது நின்றேன்.

நான் இதுவரை யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணலையே, கடவுளே எனக்கு
மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது.

அப்பொழுதுதான் (தெய்வம் மாதிரி) அங்கு இருந்த ஒரு பெண்மணி
(அவர் பரங்கி மொழியில் பேசினார்)
என் நிலைமை கண்டு இரக்கப்பட்டு பணம் கொடுத்து உதவினார், அவரின் முகவரி, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை வாங்கி கொண்டு அவரிடம் விடை பெற்று பஸ்சில் ஏறி அமர்ந்தேன்.

காசோட மகத்துவம் இப்ப புரிஞ்சது, இனி வீக் என்ட் பார்டிக்கெல்லாம்
ஒரு எண்டு போட்டிரனும், சிகரட் நோ, காஸ்ட்லி சர்டிங்க்ஸ் நோ,
இன்னும் ஏகப்பட்ட "நோ"க்கள் மனதில் வந்து போனது. இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இப்பொழுது,
மனசுக்குள்ள ஒரு வைராக்கியம் உண்டாச்சு, இனிமேல்
ரோட்டில் ஒரு
பிச்சைக்காரன் காசு கேட்டால் கூட 50 - பைசாவாவது தரனும் (என்ன ஒரு தாராள மனசு!!)

சார், கொஞ்சம் எழுந்திருங்க, என் பக்கத்துக்கு சீட்காரர் என்
தோளை தட்ட, சட்டென முழிப்பு வந்தது,ஹைய்யா இவ்ளோ நேரம் கண்டதெல்லாம் (கெட்ட) கனவா!!

பஸ் அந்த மோட்டலில் நின்றது, அப்படியே இறங்கி சூடாக ஒரு
டீயை என் ஜீரண மண்டலத்திற்கு அனுப்பினேன்.



சார் நான் என்னோட உடமைகள தவற விட்டுட்டேன், ஒரு 35/-
ரூபா மட்டும் கொடுத்தீங்கன்னா, ஊருக்கு போன பின்ன உங்க
பணத்த அனுப்பி வச்சிருவேன்...

இப்படி எத்தன பேர் கிளம்பி
இருக்கீங்க, காசு இல்ல போய்யா,

என் அருகில் இருந்த நபர், காசு கேட்ட அந்த ஆளை விரட்ட அவன், பரிதாபமாக அடுத்து யாரிடம்
கேட்காலாம் என் யோசனையாய் என்னைப்பார்த்தபடி நிற்க....

நான் மெல்ல நழுவி என் பேருந்தை நோக்கி சென்றேன்.

****************************************************************





அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Sunday, February 14, 2010

காதல் பெட்டகம்

லட்சோப லட்ச வாசகர்களுக்கும்(!!!!!!!!!!!!!!!!!!!!), அன்பான அணைத்து
பதிவர்களுக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
I LOVE YOU EVERYBODY.

போன பதிவில் அனைவரும் உசுப்பேத்தி விட்டதால் இன்றும் கவிதை.
இளகிய மனம் படைத்தோர் கவனம், மனதிடம் உள்ளவர்கள் தொடருங்கள். இனி கவிதை.....
************************************************************************************

காதல் பெட்டகம்

உனக்கான காத்திருப்பில்
திறந்து பார்க்கிறேன் நம் காதல் பெட்டகத்தை

உன் விழி மீன்கள் மானாய் பாய்ந்ததே
என்னைத்தேடி
அன்று கண்டேன் உன் காதலை

தோழியுடன் எதிர்திசையில் நீ செல்ல
ஒரே திசையில் நாம் பயணித்தோமே
உணர்ந்தேன் நம் காதலை

மலர் பட்டு உன் தேகம் சிவக்க
வியந்தேன் உன் மென்மையை

உன் விழி வீச்சில்
பனியாய் நான் உருக, ஈரமாகி வந்தாயே அருகில்
உணர்ந்தேன் உன் அன்பை

நீ சூடிய மல்லிகை
முழுவதும் உன் நறுமணம்

நானும் பெற வேண்டும்
உன் நறுமணத்தை

எப்போது சூடப்போகிறாய்
என்னை.







***********************************************************************

அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Wednesday, February 10, 2010

அழகிய முரண்

உன்னை கண்டால்
மேககூட்டம் கூட நங்கூரம் இடுகிறது

மயிலும் குயிலும்
உன்னிடம் சரணடைந்து விட்டது

ஆயிரம் கரங்கள் கொண்ட
ஆதவன் கூட உன்னை தீண்ட முடியவில்லை

உன் வனப்பை பார்த்தாலே
என் நகக்கண் வரை குளுமை பாய்கிறது

அபாய வளைவு நெளிவுகளை
தாண்டி உன்னைச்சரணடைந்தேன்

என் எலும்பு வரை ஊடுருவி
புல்லாங்குழல் வாசிக்கிறாய்

இவ்வளவு இளமை கொண்ட
இளவரசியே

ஏனடி எழுச்சியாய் விழும் உன் கூந்தல் மட்டும்
வெண்பஞ்சு நிறமாய்.


*********************************************************

டிஸ்கி:என் காதலி கிழவியோ என்று ராஜுவும், நேபாமூடியும் நினைத்துவிட்டதால் அவளின் படத்தை
(அவள் சம்மதம் இல்லாமலே) கிழே இணைத்துள்ளேன், ஸ்டார்ட் ஸ்க்ரோல்.















ஆத்தாடி எம்பூட்டு வேகம்....















பொறுமை.......









எப்பூடி.... :))


***********************************************************

அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Sunday, February 7, 2010

மறு ஜென்மம்

அவளை பார்த்த உடனே எனக்கு உள்ளே பல்ப் (பச்சை கலர்) எரிந்தது. கல்யாணம் செய்தால் இவளையே செய்ய வேண்டும், இல்லை என்றால் பிரமச்சாரியாகவே இருந்து விடுவது என்று தீர்மானித்து விட்டேன்.

அவள் பெயர் மஹா, பெயருக்கு பொருத்தமாக மஹாலட்சுமி மாதிரி (ஜீன்ஸ் போட்ட) இருப்பாள்.
எங்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் வேலை செய்கிறாள். (நான்தான் அவளுக்கு பாஸ்)

சில நேரங்களில் பணி நிமித்தமாக வெளியூர் செல்லும்பொழுது அவள் என்னுடன் வருவாள்.
ஆனால் வரம்பு மீறி நடக்கும் மனிதன் நானில்லை என்பதானால் இதுவரை எந்த விதமான
"அசம்பாவிதமும்" நடந்ததில்லை.

நான்தான் அவளை காதலிக்கிறேன், அவள் என்னை காதலிக்கிறாளா, இல்லையா என்பது எனக்கு தெரியாது.

இந்த சமயத்தில்தான் என் வீட்டில் அப்பா கல்யாண பேச்சை எடுத்தார் ஒரு பெண்ணின் புகைபடத்தை
காட்டினார், என் மனசு முழுதும் மஹா இருந்ததால், தைரியமாக அவளை நான் விரும்பும் விசயத்தை அப்பாவிடம் கூறினேன்.

அப்பா கோபத்தில் கத்தினார், நம்ம ஸ்டேடஸ் என்ன, அவ நம்ம கிட்ட
வேலை செய்யற அடிமை இனம்டா என்றார்.

அதற்கு மேல் நான் அங்கு நிற்க பிடிக்காமல் காரை எடுத்து கொண்டு ஒரு தெளிவான முடிவோடு மஹா வீட்டை நோக்கி வாகனத்தை செலுத்தினேன்.

மஹாவின் வீட்டு அழைப்பு மணியின் விசையை தட்டும் முன் உள்ளே மஹாவின் பேச்சு குரல் கேட்டதால், சத்தமில்லாமல் சன்னல் பக்கம் நெருங்கி வீட்டின் உட்புறத்தை பார்த்தேன்.

மஹா, என் வயதை ஒத்த யாரோ ஒருவனிடம் பேசி கொண்டிருந்தாள்,
அவன் கிட்டதட்ட, அந்த கால வில்லன் நடிகர் சிபி ராஜ் சாயலில் இருந்தான். (எனக்கு வில்லன்?)

சிவா, எப்படா என்ன கல்யாணம் பண்ண போற, ஆபீஸ்ல அது விடற "லுக்கே" சரி இல்ல, அது என்ன ஒரு தலையா காதலிக்குதுன்னு நினைக்கிறேன், பயமா இருக்கு.

ஓ... இப்ப அதுங்க எல்லாம் இந்த அளவுக்கு முன்னேறி ஆச்சா, எல்லாம் நம்ம முன்னோருங்க செஞ்ச தப்பு, "சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி" அப்படிங்கற
கதையா அதுங்களுக்கு, நம்மள மாதிரி "சிந்திக்கிற திறனையும், உணர்ச்சிகளயும்" கொடுத்து, இப்ப அதுங்க நம்மை விட தொழில் நுட்பத்துல முன்னேறி, நம்மளையே அடிமை ஆக்கி வச்சிருசிங்க பாரு என்ற பொழுதே....

நான், என் இதயம்(?) நொறுங்கி சத்தமில்லாமல் வெளியேறினேன், ம்... அடுத்த ஜென்மத்திலாவது மனிதனாக பிறக்க வேண்டும்...

இன்றைய நாள் என் வாழ்வின் கருப்பு தினம், ஆமா இன்னைக்கு
தேதி என்ன,













நான் நினைத்த விநாடியில் என் டிஜிட்டல் விழிப்படலம்
காட்டியது:14.02.2056

**************************************************************


அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Friday, February 5, 2010

வெங்காயம் ஓர் அ(ல)சல்.

நண்பர்களிடையே சூடான விவாதங்கள் நடக்கும்போது ஒருவன் இன்னொருத்தனை பார்த்து
போடா வெங்காயம் அப்படின்னு சொன்னான் (உன்னை பார்த்துதானே, அப்படின்னு கேட்காதீங்க!).

எவ்வளுவு சுளுவா திட்டி புடுராங்கையா. வெங்காயத்தில எம்பூட்டு மகத்துவம் இருக்குன்னு தெரியாமா. (அது சரி அவர் திட்டுனது வெங்காயத்தை இல்லையே!!)

சில நேரங்களில் நமக்கு வாந்தி வருவது போல் இருக்கும், ஆனா வராது....
ஒரே அவஸ்தையாய் இருக்கும். இந்த மாதிரி நேரத்துல சின்ன வெங்காயத்தை (மறக்காது தோல
உறிச்சி) சாப்பிடுங்க, சாப்பிட பிடிக்கலையா அத வாசனை பிடிங்க. அப்புறம் பாருங்க அந்த பீலிங் போயே போயிரும், அட வாந்தி பீலிங்க சொன்னேன்.




சில பேர் இரவுல தானும் தூங்காம அடுத்தவங்களையும் தூங்க விடாம "லொக்கு லொக்குன்னு"
இருமிக்கிட்டு இருப்பாங்க. உங்களுக்கும் இப்படி இருமல் இருக்கா, எடுங்க வெங்காயத்தை, வதக்குங்க, சாப்பிடுங்க, அட இருமல் போயே போகும். (போச்சான்னு சொல்லணும் பின்னூடத்துல)

சிலர் பேச வாயை திறந்தாலே ஜவ்வாதும், சந்தனமும் கலந்த ஒரு வாசனை(!!) அடிக்கும். அது நம்மள புலி மாதிரி இரண்டு அடி பின் வாங்க வைக்கும். இதற்கு பல காரணங்கள் (பல் விளக்கமா இருக்குறதும் ஒரு காரணந்தேன்) இருந்தாலும் வாய்ப்புண்ணும் ஒரு காரணமே.

அப்படி வாய்ப்புண் இருந்தால், வெங்காயத்தை பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கி
சாதத்துடன் கலந்து காலை வேளைகளில் சாப்பிட்டு பாருங்க. இந்த "ஆளை விரட்டும் வாசனை" பிரச்சனை தீரும்.

"தேள் கடி" பட்டுவிட்டால், வெங்காயத்தை இரண்டு துண்டா நறுக்கி, கடி பட்ட இடத்துல, விஷம் இறங்கும் வரை தேய்ச்சா வலி குறையும். (இத ஒரு முதல் உதவியா மட்டும் பயன் படுத்துங்க)

இப்ப எங்க போனாலும் சுலபமா, இலவச இணைப்பா ஏகப்பட்ட தொற்று நோய்கள் பரவுது. அந்த மாதிரி இடங்களுக்கு போக நேர்ந்தால் உங்களோட இரண்டு அல்லது மூன்று
வெங்காயத்தையும் எடுத்திட்டு போங்க, ஓரளவுக்கு தொற்று நோய்
நமக்கு வராம இது பாதுகாக்கும்.
(கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி)

டிஸ்கி:மேலே சொல்லப்பட்ட அந்தனையும் நான் படித்து தெரிந்து கொண்ட விசயங்கள் மட்டுமே.



*************************************************************************




அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Wednesday, February 3, 2010

ஏன் நண்பா?


இந்தியாவா
வாஞ்சையுடன் வினவுகிறாய் அயல்நாட்டு சந்திப்பில்

தமிழா
காதலாய் கேட்கிறாய் அண்டை மாநிலத்தில்

நம்ம ஊரா
பாசமாய் விசாரிக்கிறாய் வெளியூரில்

நம்ம இனமா
கேட்கிறாய் நம்மூரில்

இப்போது ஏன் தொலைத்தாய்
இந்தியன் என்ற உணர்வை...

***************************************************************







அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)