Showing posts with label பரோட்டா செய்திகள். Show all posts
Showing posts with label பரோட்டா செய்திகள். Show all posts

Thursday, January 14, 2010

பொங்கல் தரும் செய்தி



பஞ்சபூதங்கள் ஆகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை வழிபாடும் நாளே பொங்கல் திருநாள் ஆகும். எப்படி என்று கேட்குறீர்களா? நமது மரபுப்படி மண்பானையில் தண்ணீர் விட்டு அரிசியினை கொதிக்க வைக்க பனை ஓலை மூலம்
நெருப்பு வைக்கிறோம் வீட்டுக்கு வெளியில். நெருப்பு எறிவதற்கு காற்றும் ஒரு காரணம்.

பொங்கல் பொங்கியவுடன் சூரியனை பார்த்து நன்றி சொல்லுகிறோம். இந்த செயலில்
பஞ்ச பூதங்களும் இருப்பதை கவனித்தீர்களா.

பொங்கல் என்றதும் சிறியோர் முதல் பெரியோர் வரை நினைவுக்கு வருவது கரும்பு.
இந்த கரும்பானது நுனியில் உப்பு கரிக்கும், அடிக்கரும்பு ரொம்ப இனிப்பாகவும் இருக்கும்,
இதில் நம் வாழ்வியல் உள்ளது. ஆரம்ப காலங்களில் நாம் எதிர்கொள்ளும் சிரமங்கள் நுனிகரும்பு போன்றது, பின் பெரும் வெற்றிகள் அடிக்கரும்பு போல தித்திப்பாக இருக்கும். எனவே, தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள்.


பொங்கல, நாம தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்ன்னு மூணு நாள் கொண்டாடுறோம், அந்த காலத்துல 28 நாட்கள் கொண்டாடி
இருக்காங்க. (ம்... கொடுத்து வச்சவங்க.. இப்ப பொங்கல் நாள, காலண்டர் பாத்துதான்
தெரின்சிக்கவேண்டி இருக்கு)

அனைவருக்கும் இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.







அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Saturday, December 12, 2009

மீண்டு வரும் பழைய வியாதி

இப்பவே கண்ண கட்டுதே, தாங்க முடியல சாமி, எல்லாம்
மனவாடு மேட்டர்தான், அதாங்க தனி தெலுங்கானா.

இவ்வளவு நாள் எல்லா விசயத்திலும் ஒன்னாதான இருந்தீங்க, அதாவது பாலாற்றுக்கு குறுக்க அணை கட்டுவது வரை.

தண்ணி குடுக்க மாட்டேன்னு சொல்லி சொல்லி போராகி விட்டதோ, இப்ப உங்களுக்கு உள்ளேயே பிரிவுகள ஆரம்பிச்சுடீங்க.

இந்த போராட்டத்திற்கு காரணம் வரபோகும் தேர்தலா?
இந்த (தனி தெலுங்கனா) பிரச்னையை முன் வச்சு தேர்தல் பிரசாரம் செய்ய, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பா முடிவு எடுக்க பட்டுள்ளது . ஆந்திர மாநில சட்டசபைக்கும், லோக்சபாவுக்கும் தேர்தல் வரபோகுது. இந்த தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க , தனி தெலுங்கான மாநிலம் அமைக்கும் பிரச்னையை எடுக்க T.R.S. கட்சி முடிவு செய்துள்ளது. (செய்திதாள்கள் கூறுகின்றன)

இதுக்காக 10-நாள் உண்ணா விரதம் வேற. இதுக்கு மத்திய
மத்திய அரசும் சம்மதம் தெரிவித்து உள்ளது. தனி மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் துவக்கப்படும் என அறிவித்துள்ளது.


இதன் மோசமான விளைவு, தெலுங்கானா அல்லாத ராயலசீமா மற்றும் கடலோர பகுதிகளில் இதற்கு எதிராக நேற்று போராட்டங்கள் . விசாகப்பட்டினம், கர்னூல், கடப்பா ஆகிய மாவட்டங்களில் வன்முறை. அப்புறம் வழக்கம் போலவே, ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான பஸ்களும் எரிப்பு.

அந்த பஸ் எல்லாம் நம்ம சொத்து (வரிப்பணம்) அப்படிங்கற விசயமே நமக்கு மறந்து போகுது.

சரி இப்படியே எல்லோரும் எங்களுக்கும் தனி மாநிலம் கொடுன்னு கேக்க ஆரம்பிச்சுட்டா, என்ன ஆகும் நம் நாட்டோட நிலைமை.

ஊர் போய், பல மாநிலங்கள் உருவாகி விடும்.

மீண்டும் அடிமை வாழ்வுதான், ஏற்கெனவே நாம தனித்தனியா பிரிஞ்சு கிடந்ததால்தான், சுலபமாக பிரிட்டிஷ்காரன் நம்மள அடிமை ஆக்கினான்.

இத இவ்வளவு நாளும் நாங்க பாடப்புத்தகத்தில் படித்து மட்டும் தான் உணர்ந்து இருக்கிறோம், போற போக்க பார்த்தால் நீங்க அதை "அனுபவ பூர்வமாக" உணர வச்சுருவீங்க போல இருக்கு.

தேர்தலில் ஜெயிக்க வேற வழி முறைகளை பயன்படுத்துங்க, நாட்டை துண்டு பண்ண வேண்டாமே ப்ளீஸ்...

அனைவருக்கும் சம உரிமை கொடுங்கள்.

நல்ல வேலை காந்தி, குமரன்(கொடி காத்த குமரன்) விடுதலைக்காக
பாடுபட்ட இன்னும் பல நல்ல உள்ளங்கள் இல்லை, இருந்தா நொந்து
நூடுல்ஸ் ஆகி இருப்பாங்க.

இததான் நம்ம ஆளு அன்றைக்கே இப்படி சொன்னாரோ,

"நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட மனிதரை
நினைந்துவிட்டால் கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடிஎன்றா லது
பெரிதாமோ?"







அப்பாவி அங்கு:H1 N1, சிக்குன் குனியா, மட்டன் குனியா, சுனாமி இதையெல்லாம் தூக்கி சாபிட்டருவாங்க போல.

Tuesday, December 8, 2009

நில் கவனி செல்

இன்றய செய்தி இதைப்பற்றி எழுத தூண்டியது, அந்த செய்தினை முதலில் பாப்போம்,
"அதிக சம்பளம் கிடைக்கும், பெரிய வேலைகள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டும் ஏஜன்டுகளிடம் சிக்கி மலேசியாவுக்குச் செல்லும் அப்பாவிகள், அங்கு வேலை கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் அவலம் அதிகரித்து வருவதாக இந்திய ஹைகமிஷன் கவலை தெரிவித்துள்ளது." -

இதுவே செய்தி. இனி...

இந்த நாட்டிற்கு செல்வோர் மட்டும் இல்லை, மற்ற நாடுகளுக்கு
செல்வோருக்கும் இந்த கதிதான் நடக்கிறது.

நம்மவர்களை பீடித்துள்ள வியாதிகளில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக பொருளாதாரத்தை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்போர் செல்வதில் கூட ஒரு நியாம் இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் நம் நாட்டில் நல்ல சம்பளம் பெற்று கொண்டு இருப்பார்கள், அல்லது சொந்த தொழில் செய்து கொண்டு இருப்பார்கள்.

ஆனாலும் எப்படியாவது வெளி நாடு செல்ல வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள், இவர்களே பெரும்பாலும் போலி ஏஜன்ட்களின் வலையில் விழுவது.

நான் செவி வழி கேட்ட செய்தி இது... இவர்
முதலில் நம்ம ஊரில் மரம் இழைக்கும் வேலை பார்த்தவர் , ஒரு நாள் சம்பளம் rs.200 டு rs.300 வரை கிடைக்கும், "சும்மா கிடந்த சங்கை ஊத்தி கெடுத்தானாம் ஆண்டி" என்ற கதையாய் , உறவினர் ஒருவர் மூலம் வெளி நாடு சென்றால் "அம்பானி ரேஞ்சுக்கு வந்துரலாம் என்று சொல்லி " ஒரு ஏஜென்ட் மூலம் >>>>>> நாட்டில் ஒரு மரபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை, ஒரு நாள் சம்பளம் நம் ஊர் மதிப்பில் rs.400 கிடைக்கும் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கு வேண்டி ஏஜென்ட்இற்கு கொடுத்த கமிசன் பணம் மட்டும்
rs.ஒரு இலச்சம்.

அங்கு சென்ற பின்புதான் தெரிந்திருக்கிறது, இவருக்கும் அந்த நிறுவனத்திற்கும் நேரடி ஒப்பந்தம் ஏதும் இல்லை, அங்கு உள்ள sub contractor ஒருவரிடம்தான் இவர்களின் குடுமிபிடி.

இவர்கள் சென்றவுடன் (ஒரு குரூப் ஆக சென்று உள்ளார்கள்) இவர்களின் பாஸ்போர்ட் அந்த "முதலாளி" வாங்கி வைத்து கொண்டு உள்ளார்.

ஒரு மாத சம்பளம் rs.200 மட்டுமே கொடுத்துள்ளார், அதுவும் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான், மீறி கேட்டால் அடி உதை, நிலைமை கை மீறிய பின்பு இவர்களை தனியான ஒரு வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்தி இருக்கிறார்கள்.

பின்னர் கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி, உயிர் பிழைத்தால் போதும் என அங்கு உள்ள இந்திய தூதகரத்தின் மூலம் வீடு வந்து சேர்ந்து இருக்கிறார்கள்.

வெளி நாடு செல்வோரை தடுப்பதற்காக இந்த சம்பவம் கூறப்படவில்லை, செல்வதற்கு முன்பு சில
முக்கிய விசயங்களை கவனியுங்கள்,

1 நீங்கள் நாடி உள்ள மூலவர் (ஏஜென்ட்) முறையாக அரசாங்கத்தில் அவரது நிறுவனத்தை பதிவு செய்துள்ளாரா
என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.

2. நேரடியாக வெளி நாட்டு நிறுவனத்தினர் நடத்தும் நேர்முகத்தேர்வுகளில் மட்டும் கலந்து கொள்வது சிறப்பு.

3. செல்லும் முன்பு நமது பணி, சம்பள விவரங்களை உறதி செய்து கொள்ளுங்கள் (முடிந்தால் எழுத்து மூல ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்)

4. அவர்கள் கொடுக்கும் "விசா" உண்மையானதுதானா என்பதனை அந்த நாட்டு embassy சென்று சரி பார்த்து கொள்ளுங்கள், (நம் நாட்டில் உள்ள அவர்களின் embassy) முக்கியமாக அது tourist விசாவா அல்லது வேலைக்கான விசாவா என்பதனை உறுதி செய்க, விசாவின் முடிவுக்காலம் வரை)

பாதுகாப்பாக சென்று, வென்று வாருங்கள், வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு:

இங்கு நல்ல சம்பளம் கிடைத்தால் "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
என இருந்து விடுதல் நலம்."

Saturday, November 28, 2009

இனிப்பான செய்தி


ஒரு வழியாக சமச்சீர் கல்விக்கான புதிய பாடத்திட்டம் வெளி இடப்பட்டுள்ளது. இதன்படி ஆறாம் வகுப்பில் இருந்தே பொருளாதாரம், கணினி கல்வி போன்றவை இருக்கும்.


தனியார் கல்வி நிலையங்களுக்கு ஆப்பு. கொஞ்சமாவது கொள்ளை அடிப்பது குறையும் என நினைக்கிறேன்.


அப்படியே இந்தி மொழி பாடமும் (துணை மொழி) கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே. நம் மாநிலத்தை தவிர அனைத்து இடங்களிலும் உள்ளது, மற்ற மாநிலத்தை சேர்ந்தோர் இடம் நாம் ஆங்கிலத்தில் பேசும்போதே அவர்கள் நக்கலாக "மதராஸ் வாலா" என்கிறான், நெருக்கமான நட்புக்கு தடை விழுகிறது.


இது நான் நேரில் கண்டதும் மற்றும் சொந்த அனுபவமும் உள்ளது.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)