Showing posts with label மகாகவி பாரதி. Show all posts
Showing posts with label மகாகவி பாரதி. Show all posts

Friday, December 11, 2009

வழி எட்டயபுரம்

தலைப்பில் உள்ள பேருந்து வழிதடத்தினை படிக்கும்பொழுது கண்டிப்பாக இவர் நம் நினைவுக்கு வருவார்.

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.

இன்று சுப்ரமணிய பாரதி பிறந்த தினம் (பிறப்பு:டிசெம்பர் 11, 1882)

நம் வாழ்வின், சில மணித்துளிகள் நாம் கவிதையுடன் வாழ்கிறோம்,
ஆனால், இவர்
கவிதைகளுக்கு இடையில் கொஞ்சம் வாழ்ந்தவர்.

இவருக்கும்தான் தமிழின்மீது அளவுகடந்த அன்பு இருந்தது. அதுக்காக தமிழ் மட்டும் போதும் என்ற வட்டத்திற்குள் நிற்காமல், ஹிந்தி,வங்காளம், சம்ஸ்க்ருதம், ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கில மொழிகளையும் கற்று தனிப்புலமை பெற்றவர்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்"

இதை இவர்தான் கூறி இருக்கிறார், தமிழ் இனிக்கிறது என்பது மற்ற மொழிகள் கற்றதால்தனே தெரிய வந்தது.
தான் கற்ற மொழிகளில் உள்ள சிறந்த படைப்புக்களை மொழி பெயர்ப்பும் செய்துள்ளார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்கொஞ்சமோ பிரிவினைகள் - ஒருகோடியென் றாலது பெரிதாமோ ?
அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச்

(ஈகோவினால் ஏற்படும் பகையினை என்ன அழகாக கூறி உள்ளார்)

சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியேகோத்திரமொன் யிருந்தாலும் - ஒருகொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால் ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன்அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் - இவர்

(ஒரே மதம், மதத்திற்குள்ளும் பல பிரிவினைகள்)

எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்நண்ணிய பெருங்கலைகள் - பத்துநாலாயிரங் கோடி நயந்து நின்றபுண்ணிய நாட்டினிலே - இவர்பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)

("பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்"
ஒரு லட்சம் ஒரே மாதத்தில் பத்து லட்சம் ஆகும் என
கூறி கொண்டு கிளம்பும் பினான்ஸ் கம்பெனிகள் பணத்தை சுருட்டி கொண்டு ஓட வசதியாக இருப்பது நமது இந்த செயல்தான்.)


சாகா வரம் பெற்ற கவி, தம் கவிதையால் இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்.

கம்பீர கவிஞன்.


அப்பாவி அங்கு:இதோட இனிமே 2010 டிசெம்பர்-லதானே இவர் நினைவுக்கு வருவார்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)