Wednesday, December 2, 2009

சர்வ தேச நகர்பேசி அடையாளம்

தலைப்பை பார்த்து தலை சுத்துதா "International Mobile Equipment Identity (IMEI) என்பதின் தமிழாக்கமே தலைப்பு. உங்கள் மொபைலின் அடயாள எண், அதாவது GSM (Global System forMobஇe communication) இல் உரிமம் பெற்ற தொலை பேசி தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இந்த என்னை தர முடியும்.

இதன் மூலியமாக நமது மொபைல் தொலைந்தாலோ அல்லது களவு போனாலோ நமது நெட்வொர்க் வழங்கும் நிறுவனத்தின் மூலமாக மொபைலின் இயக்கத்தை நிறுத்த முடியும். ( அவர்களிடம் Equipment Identity Register இருந்தால்)
மொபைலை எடுத்தவர்கள் சிம் கார்டு மாற்றினாலும் வேலை செய்யாது.

சேல்ஸ் பேகின் (sales pack) வெளிப்புறத்தில் IMEI எண் குறிக்க பட்டிருக்கும் இது 15 இலக்கம் கொண்டதாகும். அல்லது *#06# அழுத்துவதின் மூலம் உங்கள் IMEI என்னை அறியலாம்.

இந்த எண் உண்மையானதுதானா என்று கண்டு பிடிக்க ஒரு முறை உள்ளது,
உதாரணமாக மொபைலின் IMEI எண்:129054821801217 என்று வைத்து கொள்வோம்,

Right side-இல் இருந்து இரண்டாவது என்னில் ஆரம்பித்து (பின்னர் முறையே 4, 6,8,10,12,14) அந்த எங்களை இரண்டால் பெருக்கி கொள்ளவும்.
(4,0,8,4,16,2,2 என்று வரும்)

பின்பு இரட்டைபடையில் வரும் எங்களை கூட்டி ஒன்றாக்கவும். (16=1+6=7)

இப்பொழுது அனைத்து எண்களையும் கூட்டவும் (1+4+9+0+5+8+8+4+1+7+0+2+2+2+7=60)

நமக்கு கிடைத்த விடை 10-ஆல் வகு பட வேண்டும் (60/10=6)
இது உண்மையான என்னே (டுபாகூர் அல்ல)

இந்த கணக்கீடு "Luhn algorithm" ஆகும் .

விகிபிடியாவில் இருந்து தொகுக்கப்பட்ட தகவல் இது.

நன்றி:விகிபிடியா

No comments:

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)