Friday, September 17, 2010

ஸ்வேதா என்றொரு...

ச்சே...என்ன வாழ்க்கை இது, எந்திரம் மாதிரி காலையில் பாதி தூக்கத்திலே எல்லாக்கடனையும் முடிச்சி ஆபிஸ் போனா அந்த கடன்காரன்கிட்ட (மேனேஜர்) நாள் முழுக்க மல்லுகட்ட வேண்டி இருக்கு.

சரி இன்னைக்காவது, கடல்ல மூழ்கும் முன்னே ஆதவன பார்க்கலாம்னா
"அது" வழக்கம்போல நாலு ஆள் வேலையை என் தலை மேல வச்சிருச்சி.

கரும்பு ஜூஸ் பிழியுற மெசின் துப்புன சக்கை கெணக்கா, ரயிலுக்காக பார்க் ஸ்டேசன்ல உக்கந்திருக்கும்போதுதான், அந்த அழகு பதுமையை பார்த்தேன்.

என்னையும் அவளையும் தவிர, ஜோடிகள் ஒன்றும், குடும்பம் ஒன்றும் மட்டுமே இருந்தது.

பிளாட்போர்மில் தொங்கிய டிஜிட்டல் கடிகாரம் 22 .30 என ஒளிர்ந்தது.

பதுமையை நோட்டமிட்டேன், கையில் இருந்த புத்தகத்தில் மூழ்கி இருந்தது.

பாம்...என்ற ஓசை கேட்டு கலைந்த அனைவரும் ஒரே பெட்டியில் ஏறினோம்.

சேத்துப்பட்டு ஸ்டேசனில் நானும், பதுமையும் மட்டுமே.

இப்பொழுது S .M .S இல் மூழ்கி இருந்தது பதுமை.
ஆஹா...இன்னைக்கி, அதிர்ஷ்ட தேவதையின் ஆசிர்வாதம் முழுக்க ஒனக்குதான், என்ஜோய்டா விக்கின்னு எனக்குள்ளே மைன்ட் வாய்ஸ்!!

ஹாய்...ஐயம் ஸ்வேதா...நீங்க என்றபடியே பதுமை கை நீட்ட...

விக்கின்னு...சொல்றதுக்குள்ள எனக்கு பல தடவை விக்கல்.

சொதப்பாதடா விக்கி...இது வர நீ பாத்த எந்த பொண்ணுகிட்டையும் பேசுற தைரியம் ஒனக்கு வந்தே இல்லை, ஒன்கிட்ட முதன்முறையா ஒரு பொண்ணு பேசுது, இவள உன் வாழ்க்கை துணையா ஆக்கிகோடா...

ச்சே...ஒரு பொண்ணு நாலு வார்த்தை பேசினா உடனே இப்படியெல்லாமா யோசிக்கிறது.

ரெண்டுமே என்னோட மைன்ட் வாய்ஸ்தான்.

அவளுடன் பேசப்பேச சுய சரிதம் அத்துணையும் ஒப்பித்தேன், அவளும். அதன்பின் என் தாய், தங்கை, மேனேஜர் எல்லாம் நினைவடுக்களில் கொஞ்சம், கொஞ்சமாய் அழிந்து போய் முழுவதும் ஸ்வேதாவே இருந்தாள்.

"அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள்"
என் மொபைல் ரிங்கியது...பூஜை வேலையில் யார் அந்த கரடி...
சேகர் காலிங் என்றது ஸ்க்ரீன் டிஸ்ப்ளே...
அட்டென்ட் செய்து ஹலோ...ஹலோ...என்றவாறே டிஸ்கனெக்ட் செய்த
கையோடு சுவிட்ச் ஆப் செய்தேன்.

நானும், ஸ்வேதாவும், எங்கள் "செல்லங்களுடன்" மால்களில் உல்லாசமாக சுற்ற
ஆரம்பிக்கும் தருணத்தில் கிண்டி ஸ்டேசன் வந்து விட்டது.

நான்கு தடியர்கள் எங்கள் கம்பார்ட்மெண்டில் ஏறினார்கள். சிறய குலுக்கலுடன் ட்ரெயின் கிளம்ப, எனக்குள் சிறிது பய அமிலம் சுரக்க
ஆரம்பித்தது.

இவனுக பார்வையே சரி இல்லையே...நம்ம "ஆள" இவங்க எதுவும்
தொல்லை பண்ணகூடாது.

நாலில் ஒன்று, ஸ்வேதாவின் பக்கத்தில் அமர, மீதி மூன்றும் என்னருகே.

ஸ்வேதாவின் தோளில் கை போட்டது அந்த வில்லன், எனக்கு
ரத்தமெல்லாம் சூடேறியது.

ஆனால் ஸ்வேதா, சிறிதும் பயப்படவில்லை.

என்ன, காயத்ரி நீ S .M .S ல சொன்ன "பட்சி" இதுதானா, எவ்வளவு
தேறும்...

பார்ட்டிக்கு 15 ,0000 ரூபாயாம் மாச
சம்பளம், இன்னைக்கி சம்பள தேதியில...புல் அமௌன்ட்
வச்சிருக்கு பரமு...இப்போதான் என்கிட்டே அவ்ளோத்தையும்
சொல்லிச்சு, என ஸ்வேதா....என்ற....அந்த மூதேவி காயத்ரி தடியனிடம்
அழகாய் போட்டு கொடுக்க...
*****************************





படம்:நன்றி கூகுள்

35 comments:

RVS said...
This comment has been removed by the author.
RVS said...

15,000 என்னாச்சு... கிளைமாக்ஸ்ல சண்டை போட்டு அந்த காயத்ரி கும்பலை போலீஸ்ல புடிச்சு கொடுத்திருக்கலாம்... நல்லா இருந்தது சை.கொ.பரோட்டா.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Thenammai Lakshmanan said...

கதையா நிஜமா.. அப்புறம் இந்த மாச செலவுக்கு என்ன பண்ணீங்க சை கொ ப..:((

Mohan said...

என்ன கொடுமை சார் இது! அழகான பொண்ணுங்களையும் நம்ப முடியாம போற சூழ்நிலை வர்றது:-)

VISA said...

//பாம்...என்ற ஓசை கேட்டு கலைந்த அனைவரும் ஒரே பெட்டியில் ஏறினோம்.
//

:)

Raju said...

பச்சைக்கிளி முத்துச்சரம்.
:-))

தமிழ் உதயம் said...

வேணும். நல்லா வேணும். வேலைக்கு போனோமா சம்பளத்தை வாங்கிட்டு ஒழுங்கா வீட்டுக்கு போனோமானு இல்லாட்டி இப்படி தான்.

பனித்துளி சங்கர் said...

நல்ல இருக்கு நண்பரே தொடரும் என்று நினைக்கிறேன்

Chitra said...

"பச்சைக்கிளி முத்துச்சரம்" effect இப்படித்தான் ஆகுமே... சூப்பர் கதைங்க!

Unknown said...

விக்கி விக்கி ஆரமிக்கும் போதே தெரியும் இது சிக்கல்ல தான் முடியும்னு...

Anisha Yunus said...

ஆஹா இப்போ ரயில் கம்பார்ட்மென்ட்டையே ரூமாக்கி யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்களா? பார்த்துங்ணா!! சூதானமா இருங்க!!

க ரா said...

பின்றீங்க சை.கொ.ப.

நாடோடி said...

சிறுக‌தை ந‌ல்லா இருக்கு..

velji said...

இதைத்தான் '.................................சிரித்து வரும் பெண்னை நம்பாதே' என ஆட்டோவில் எழுதுகிறார்களோ?!

அருமை!

சைவகொத்துப்பரோட்டா said...

@RVS
நம்ம ஹீரோ "அப்பாவி" சார் :))
நன்றி ஆர்.வீ.எஸ்.

@தேனம்மை லெக்ஷ்மணன்
அக்கா, ஏன் இவ்ளோ சோகம். இது நிஜமல்ல கதை.
நன்றி.

@Mohan
வாங்க மோகன் சார், இது ஒரு கற்பனை மட்டுமே, நன்றி.

@VISA
நன்றி விசா.

@♠ ராஜு ♠
அட!! ஆமாம்!! அந்த சாயல் வந்திருக்கு,நன்றி.

@தமிழ் உதயம்
அப்படிதான், நல்லா சொல்லுங்க இந்த விக்கி பயலுக்கு :))
நன்றி.

@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪
இல்லை நண்பா, இது சிறுகதை :))
நன்றி.

@Chitra
ஆமாம் :)) நன்றி சித்ரா.

@கலாநேசன்
சரியா புரிஞ்சுகிட்டீங்களே!! நன்றி கலாநேசன்.

@அன்னு
ஹி...ஹி...சும்மா.....நன்றி அன்னு.

@இராமசாமி கண்ணண்
நன்றி ராம்.

@நாடோடி
நன்றி ஸ்டீபன்.

@velji
கருத்துக்கு நன்றி velji.

ஸ்ரீராம். said...

அழகான பொண்ணுங்கள்னாலே ஆபத்துதான் போல...அஞ்சாறு ஸ்டேஷன்குள்ள அத்தனையும் போச்சே...!!

Riyas said...

சிறுகதை நல்லாயிருக்கு...

சைவகொத்துப்பரோட்டா said...

@ஸ்ரீராம்.
ஆமாம் அண்ணா!! தொலைவதற்கு சில வினாடிகள் போதுமே!!

@Riyas
நன்றி ரியாஸ்.

Ahamed irshad said...

ம்ம் நல்லாயிருக்கு சை.கொ.ப..

சசிகுமார் said...

அருமையான கதை, எளிய நடையில் அனைவரும் விரும்பும் வண்ணம் எழுதி அசதி இருக்கீங்க

அன்பரசன் said...

பரோட்டா நல்லா இருக்குங்க

prince said...

நல்லாயிருக்கு...

சைவகொத்துப்பரோட்டா said...

@சசிகுமார்
ஊக்கத்திற்கு நன்றி சசி.

@அன்பரசன்
அப்போ, இன்னும் ரெண்டு பார்சல் போட்றலாமா :))
நன்றி அன்பரசன்.

@ப்ரின்ஸ்
நன்றி ப்ரின்ஸ்.

Unknown said...

க‌தை அருமையா இருக்கு..

அண்ணாமலை..!! said...

மீண்டும் ஒரு பச்சைக்கிளி முத்துச்சரம் டைப் சிந்தனை!!

சைவகொத்துப்பரோட்டா said...

@ஜிஜி
முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜிஜி.

@அண்ணாமலை..!!
கருத்துக்கு நன்றி அண்ணாமலை.

r.v.saravanan said...

க‌தை அருமை சை கொ ப.

சைவகொத்துப்பரோட்டா said...

@r.v.saravanan
நன்றி சரவணன்.

சாமக்கோடங்கி said...

ஆஹா போச்சே.. போச்சே....

ஹுஸைனம்மா said...

//ஸ்ரீராம். said...

அழகான பொண்ணுங்கள்னாலே ஆபத்துதான் போல...//

அலையும் ஆண்களால்தான் ஆபத்து!!

:-)))

சைவகொத்துப்பரோட்டா said...

@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
மொத்தமா போச்சே :))
நன்றி பிரகாஷ்.

@ஹுஸைனம்மா
நன்றி ஹுஸைனம்மா.

@மாதேவி
நன்றி மாதேவி.

thiyaa said...

நல்ல கதை தொடருங்கள்

Anonymous said...

அண்ணாத்தை.. இது பச்சைக்கிளி முத்துச்சரம் Part-2 தான?

சைவகொத்துப்பரோட்டா said...

@தியாவின் பேனா
நன்றி நண்பரே, இது சிறுகதை (தொடரல்ல)

@இந்திரா
ஆமா தங்கச்சி, நன்றி.

Jaleela Kamal said...

ஓ பச்சை கிளி முத்துச்சரமா?

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)