Monday, September 27, 2010

எக்ஸின் அழைப்பு 3



திரும்பவும் அதே ராஸ்கல்தான், நல்ல வேளை அவன் நம்பரை
X எனபோட்டு வைத்தது. அட்டென்ட் செய்யலாமா வேண்டாமா
என்ற சிறு குழப்பத்திற்கு பின் ஒரு யோசனை வந்தது. சுதா சரியான வாயாடி, அவளிடம் போனை கொடுத்து
X பற்றி கூறி நன்றாக திட்டு என்றேன்.

ஜோதியிடம் போனை வாங்கிய சுதா ஹலோ என்றதும்,

"மச்சான், விஷ்வா பேசறேன்டா" என்றது மறுமுனை.

டேய் பன்னாட இன்னொர்தரம் பேசுன,தேடி வந்து முட்டிய
பேத்துருவேன்.

ஹலோ கொஞ்சம் மரியாதையா பேசுங்க மேடம், யாரு நீங்க.

யோவ், நீ கால் பண்ணிட்டு என்னையே யாருன்னு
கேட்குற. ஏதோ நம்பருக்கு கால் பண்ண வேண்டியது, அது ஒரு பொண்ணா இருந்து, கொஞ்சம் ஏமாந்தவளா இருந்தா மிளகா
அரைக்க வேண்டியது. அந்த தில்லாலங்கடியெல்லாம் இங்க
நடக்காது ராசா என சொல்லி விட்டு, இந்தா ஜோதி என்றபடியே போனை.
ஜோதியிடம் கொடுத்தாள் சுதா.

ஸ்...அடிப்பாவி சுதா, லைனை கட் செய்யாமலே என் பேர
வேற சொல்லிட்டியே.

பயப்படாத ஜோ, இனிமே அவன் கால் பண்ண மாட்டான்.

சொல்லிவிட்டு சுதா நிம்மதியாக உறங்கி விட்டாள். எனக்கு
தூக்கமே வரவில்லை, யாராக இருக்கும் இந்த X. நமக்குதெரிந்த யாராவதுதான் விளையாடி பார்க்கிறார்களோ.
நான் பேசக்கூடிய ஆண்கள் என்று பார்த்தால், உடன் வேலை
பணி புரிபவர்கள் மட்டுமே நினைவுக்கு
வந்தார்கள்.

ஆனால் இந்த லிஸ்டில் உள்ள யாரும் இது போன்ற காரியத்தில்
ஈடுபட மாட்டார்களே. யோசித்து, சலிப்பில்
அப்படியே தூங்கிப்போனேன்.

இரண்டு நாட்கள் ஓடி விட்டது, X இடம் இருந்து கால் எதுவும்
வரவில்லை, ஆனால் மொபைல் ரிங்கும்போதேல்லாம், அவனாய்
இருக்குமோ என்ற நினைப்பு வந்தது.

மூன்றாம் நாள் காலை, மீண்டும் ஒரு புதிய நம்பரில் இருந்து
அழைப்பு வந்தது. அட்டென்ட் செய்யாமலே விடலாமா என
யோசித்தேன். முக்கியமான அழைப்பாய் இருந்தால்...

ஹலோ என்றேன்,

ஹலோ ஜோதி, தயவு செய்து கோபப்படாமல் நான் சொல்றதை
கொஞ்சம் கேளுங்களேன்.

குரலை கேட்டால் X -பேசுவது போல இருந்தது. ஹலோ நீங்க
யார் பேசுறது, என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்.

நாந்தாங்க விஷ்வா, உங்களோட பிரண்ட்தான் அன்னைக்கி உங்க
பேர சொன்னாங்களே. நான் உங்ககிட்ட முக்கியமான ஒரு
விசயத்தை பத்தி பேசணும். இன்னைக்கி ஈவினிங் ஆறு மணி
மாயாஜால் வர முடியுமா.

Picture:Thanks to chennaiburrpcom

உங்கள என் பிரண்ட் அன்னைக்கி அப்படி திட்டினாளே,
இன்னும் அறிவு வரலையா சார்.

இல்ல ஜோதி...

என் பொறுமைக்கும் ஒரு எல்லை
உண்டு, மொதல்ல லைன கட் பண்ணுங்க.

ப்ளீஸ் ஜோதி நான் சொல்றத கொஞ்சம் கேளுங்களேன், போன வாரம்
நடந்த சாலை விபத்துல, பாதிக்க பட்ட நபருக்கு யாருமே உதவாதபோது
நீங்க தைரியமா செயல்பட்டு அவரை கொண்டு போய் ஹாஸ்பிட்டல்ல
சேர்த்து விட்டீங்களே அது சம்பந்தமா பேசணும்.

அத நேரடியா முதல் முறை போன் செய்யும்போதே சொல்லி
இருக்கலாமே.

இல்ல...ஜோதி...நான் யாருன்னு தெரிஞ்சா நீங்க பேசுவீங்களோ
மாட்டீங்களோ தெரியல...அதான்..

அதுக்காக இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணலாமா சார்,
உங்களோட நோக்கம்தான் என்ன, எதுக்காக நான் உங்கள
பாக்கணும்.

நான் உங்ககிட்ட மன்னிப்பும் நன்றியும் சொல்லணும் ஜோதி, நேர்ல வாங்க எல்லா விவரமும் சொல்றேன்.

சிறிது தயக்கத்திற்குப்பின் சரி வரேன்,ஆனால் நான் உங்களை
பார்த்ததே இல்லையே.

அந்த விபத்து நடந்த இடத்துல நாம சந்திச்சிருக்கோம் ஜோதி
நீங்க வாங்க, நானே உங்களிடம் வந்து பேசுகிறேன்.

சுதாவையும் அழைத்துக்கொண்டு அவன் குறிப்பிட்ட இடத்திற்கு
சென்றேன். சுற்றியிருந்த ஜனத்திரளில் நம்மை அழைத்த X யாராய்
இருக்கும் என நான் யோசித்து கொண்டு இருக்கும்போது,
எங்களை நோக்கி புன்னகையுடன் "அவன்" வந்தான்.

அழைப்பு தொடரும் அழைப்பு 4



25 comments:

எல் கே said...

ohh rendu vithama pothuaa.. nadathunga

சசிகுமார் said...

ஆகா இன்னைக்கு தெரிஞ்சிடும் என்று சந்தோசமாக படிக்கும் போதே தொடரும் என்றுவிட்டீர்களே.

RVS said...

கொக்கி போட்டு இழுப்பது போல, ஃபோன் போட்டு இழுத்தவன் யாரோ?

சை.கொ.ப. இந்த சஸ்பென்ஸ் ரொம்ப அதிகம்.... தாங்கமுடியலை....

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Jaleela Kamal said...

அட சீக்கிரம் சொல்லுங்கல் யார் வந்தாங்கன்னு

நாடோடி said...

க‌தை ந‌ல்லா போகுது.. சீக்கிர‌ம் சொல்லுங்க‌ அது யாருனு.

r.v.saravanan said...

சீக்கிர‌ம் சொல்லுங்க‌ அது யாரு சை.கொ.ப.

Unknown said...

சீக்கிர‌ம் சொல்லுங்க‌ அது யாருனு.

ஸ்ரீராம். said...

இன்னும் நாலைந்து வரி எழுதி விட்டு தொடரும் போட்டிருக்கலாமில்லே...!

Unknown said...

mee the first.....

suppera erukkuna...

அஹமது இர்ஷாத் said...

intresting..umm..

Anonymous said...

அண்ணாத்தை.. மறுபடியும் தொடரும் போடுட்டீங்களே..

Thenammai Lakshmanan said...

interesting Saivakkoththup parotta..:))

ஜெய்லானி said...

சூப்பர் கதை :-)

ஜெய்லானி said...

சூப்பர் கதை :-)

சைவகொத்துப்பரோட்டா said...

@LK
தொடர் ஊக்கத்திற்கு நன்றி கார்த்திக்.

@சசிகுமார்
நன்றி சசி.

@RVS
விரைவில் தெரியும். நன்றி RVS.

@Jaleela Kamal
சொல்லிடறேன்...நன்றி அக்கா.

@நாடோடி
நன்றி ஸ்டீபன்.

@r.v.saravanan
நன்றி சரவணன்.

@ஜிஜி
நன்றி ஜிஜி.

@ஸ்ரீராம்.
நன்றி அண்ணா.

@siva
நன்றி சிவா.

@அஹமது இர்ஷாத்
நன்றி இர்ஷாத்.

@இந்திரா
நன்றி தங்கச்சி.

@தேனம்மை லெக்ஷ்மணன்
நன்றி அக்கா.

@ஜெய்லானி
நன்றி ஜெய்லானி.

Anonymous said...

good post...

http://kuwaittamils.blogspot.com/2010/09/blog-post_2921.html

Unknown said...

next epoo??

Unknown said...

யார் அந்த X ?... மூன்று அத்தியாயமாக நானும் எதிர்பார்க்கிறேன்...

சைவகொத்துப்பரோட்டா said...

@ஷேக்பாஷா
நன்றி ஷேக்பாஷா முதல் வருகைக்கும், கருத்துக்கும்.

@siva
வியாழன் அன்று வெளியிட முயற்சிக்கிறேன் சிவா.

@கே.ஆர்.பி.செந்தில்
விரைவில் வருவார்!!

மோகன்ஜி said...

அந்த X யாருன்னு சொல்ல மாட்டீங்களா?மண்டை காயுதுங்க..

பின்னோக்கி said...

நீங்க முடிச்சதும் வந்து படிச்சுட்டு மொத்தமா நீளமான கருத்து போடுவேன்.

Anisha Yunus said...

சைவகொத்துபரோட்டா அண்ணா, உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html

சைவகொத்துப்பரோட்டா said...

@மோகன்ஜி
கூடிய விரைவில் X வந்து விடுவார் மோகன்ஜி.

@பின்னோக்கி
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி பின்னோக்கி சார்.

@அன்னு
மகிழ்ச்சி!! அழைப்பிற்கு நன்றி அன்னு, விரைவில் தொடர்கிறேன்.

மாதேவி said...

யாருன்னு அடுத்த பதிவில் சொல்வீர்கள் தானே :)

பனித்துளி சங்கர் said...

அருமை நண்பரே இறுதியில் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திவிட்டு தொடரும் என்று சொல்லிவிட்டிர்களே . மீண்டும் வருவேன் தெரிந்துகொள்வதற்காகவே

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)