Tuesday, December 8, 2009

நில் கவனி செல்

இன்றய செய்தி இதைப்பற்றி எழுத தூண்டியது, அந்த செய்தினை முதலில் பாப்போம்,
"அதிக சம்பளம் கிடைக்கும், பெரிய வேலைகள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டும் ஏஜன்டுகளிடம் சிக்கி மலேசியாவுக்குச் செல்லும் அப்பாவிகள், அங்கு வேலை கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் அவலம் அதிகரித்து வருவதாக இந்திய ஹைகமிஷன் கவலை தெரிவித்துள்ளது." -

இதுவே செய்தி. இனி...

இந்த நாட்டிற்கு செல்வோர் மட்டும் இல்லை, மற்ற நாடுகளுக்கு
செல்வோருக்கும் இந்த கதிதான் நடக்கிறது.

நம்மவர்களை பீடித்துள்ள வியாதிகளில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக பொருளாதாரத்தை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்போர் செல்வதில் கூட ஒரு நியாம் இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் நம் நாட்டில் நல்ல சம்பளம் பெற்று கொண்டு இருப்பார்கள், அல்லது சொந்த தொழில் செய்து கொண்டு இருப்பார்கள்.

ஆனாலும் எப்படியாவது வெளி நாடு செல்ல வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள், இவர்களே பெரும்பாலும் போலி ஏஜன்ட்களின் வலையில் விழுவது.

நான் செவி வழி கேட்ட செய்தி இது... இவர்
முதலில் நம்ம ஊரில் மரம் இழைக்கும் வேலை பார்த்தவர் , ஒரு நாள் சம்பளம் rs.200 டு rs.300 வரை கிடைக்கும், "சும்மா கிடந்த சங்கை ஊத்தி கெடுத்தானாம் ஆண்டி" என்ற கதையாய் , உறவினர் ஒருவர் மூலம் வெளி நாடு சென்றால் "அம்பானி ரேஞ்சுக்கு வந்துரலாம் என்று சொல்லி " ஒரு ஏஜென்ட் மூலம் >>>>>> நாட்டில் ஒரு மரபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை, ஒரு நாள் சம்பளம் நம் ஊர் மதிப்பில் rs.400 கிடைக்கும் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கு வேண்டி ஏஜென்ட்இற்கு கொடுத்த கமிசன் பணம் மட்டும்
rs.ஒரு இலச்சம்.

அங்கு சென்ற பின்புதான் தெரிந்திருக்கிறது, இவருக்கும் அந்த நிறுவனத்திற்கும் நேரடி ஒப்பந்தம் ஏதும் இல்லை, அங்கு உள்ள sub contractor ஒருவரிடம்தான் இவர்களின் குடுமிபிடி.

இவர்கள் சென்றவுடன் (ஒரு குரூப் ஆக சென்று உள்ளார்கள்) இவர்களின் பாஸ்போர்ட் அந்த "முதலாளி" வாங்கி வைத்து கொண்டு உள்ளார்.

ஒரு மாத சம்பளம் rs.200 மட்டுமே கொடுத்துள்ளார், அதுவும் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான், மீறி கேட்டால் அடி உதை, நிலைமை கை மீறிய பின்பு இவர்களை தனியான ஒரு வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்தி இருக்கிறார்கள்.

பின்னர் கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி, உயிர் பிழைத்தால் போதும் என அங்கு உள்ள இந்திய தூதகரத்தின் மூலம் வீடு வந்து சேர்ந்து இருக்கிறார்கள்.

வெளி நாடு செல்வோரை தடுப்பதற்காக இந்த சம்பவம் கூறப்படவில்லை, செல்வதற்கு முன்பு சில
முக்கிய விசயங்களை கவனியுங்கள்,

1 நீங்கள் நாடி உள்ள மூலவர் (ஏஜென்ட்) முறையாக அரசாங்கத்தில் அவரது நிறுவனத்தை பதிவு செய்துள்ளாரா
என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.

2. நேரடியாக வெளி நாட்டு நிறுவனத்தினர் நடத்தும் நேர்முகத்தேர்வுகளில் மட்டும் கலந்து கொள்வது சிறப்பு.

3. செல்லும் முன்பு நமது பணி, சம்பள விவரங்களை உறதி செய்து கொள்ளுங்கள் (முடிந்தால் எழுத்து மூல ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்)

4. அவர்கள் கொடுக்கும் "விசா" உண்மையானதுதானா என்பதனை அந்த நாட்டு embassy சென்று சரி பார்த்து கொள்ளுங்கள், (நம் நாட்டில் உள்ள அவர்களின் embassy) முக்கியமாக அது tourist விசாவா அல்லது வேலைக்கான விசாவா என்பதனை உறுதி செய்க, விசாவின் முடிவுக்காலம் வரை)

பாதுகாப்பாக சென்று, வென்று வாருங்கள், வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு:

இங்கு நல்ல சம்பளம் கிடைத்தால் "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
என இருந்து விடுதல் நலம்."

No comments:

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)