Thursday, March 4, 2010

"வாயைதிற வயிறு பெருகட்டும்"

டிஸ்கி:இது ஒரு கற்பனையே, அதனால உங்க கற்பனை குதிரையை
"வேறு பாதையில்" ஓட விட வேண்டாம் :))

விமலாகிய நானும், விக்கி மற்றும் ராசு இணை பிரியா நட்புடன் இருந்தோம். அவர்கள் இருவரும்
ஒழுங்காக பள்ளி சென்றதன் பலனை நன்றாக அனுபவித்தார்கள், விக்கி அண்டை மாநிலத்தில் அரசு உத்தியோகத்தில் சேர்ந்தான். ராசு ஒரு தனியார் வானொலியில் சேர்ந்தான்.

நான் எங்கள் ஊர் கோவிலே கதி என்று இருந்ததன் பலனை தேங்காயும், சுண்டலுமாய் தின்று அனுபவித்தேன். நம்மை பற்றி ஊரே பேச வேண்டும், என்ன செய்யலாம் என தலையை சொறிந்து கொண்டே யோசிக்கும்பொழுது, நல்ல யோசனை கிட்டியது.

தலை முடியை ஒரு வருடமாகியும் வெட்டாமல் விட்டதன் பலன் என் பிட்டம் வரை வளர்ந்தது, அப்படியே எங்கள் ஊர் கோவில் அருகே அமர, அங்கு வந்த வெளியூர் மக்களில் ஒருவர் என் தலையை சுற்றி ஒளி வட்டம் தெரிவதாக கூற, அவர் பையன் அப்பா என் "பென் டோர்ச்ச" காணோம் என அழ ஆரபிக்க அவர் கவலைப்படாமல் என்னை வணங்க, இன்று எனக்கு லட்சம் பால்லோவேர்ஸ்.

என் "கம்பெனி" பேரு சுவாமி விமலானந்தா, எனக்கான கேப்சன்
"வாயைதிற வயிறு பெருகட்டும்"

எனது கொள்கை பரப்பு செயலராக என் நண்பன் ராசு பதவி ஏற்று அவர்கள் வானொலியில் தினமும் எனது அருளுரையை
"வாயைதிற வயிறு பெருகட்டும்" என்ற நிகழ்ச்சி மூலம் ஒலி பரப்ப என் புகழ் அண்டை மாநிலம் வரை பரவியது.

அங்கு உள்ள என் நண்பன் விக்கி மூலம் கொஞ்சம் "புறம்போக்கு" நிலத்தை வளைத்து எனக்கு ஆசிரமம் அமைத்தேன்.

என் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது, வேலை கேட்டு வந்தவர்களிடம், "உண்டியலில்" பணம் செலுத்த சொல்லி பின்பு விக்கியின் செல்வாக்கை பயன்படுத்தி
அவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்தேன்.

அவ்வாறு என் மூலம் "பயன் அடைந்தவர்கள்" அவர்கள் பங்குக்கு இலவசமாக என் "புகழ்" பரப்பினர்.

ராசுவின் நண்பன் வாசு அவன் பங்குக்கு நான் குச்சியால்
குத்தியே அவனுக்கு இருந்த கான்செர் குனமானதாக புருடா விட
அதை நம்பி நிறய மருத்துவர்கள் என்னிடம் அந்த "மருத்துவ
குறிப்பு" வேண்டும் என அடம் பிடிக்க அது "தேவ ரகசியம்" அதை
நான் கூறினால் உங்கள் தலை வெடித்து விடும் என பக்குவமாக
விளக்க அனைவரும் வந்த சுவடு தெரியாமல் எஸ்கேப்.

"தொழில்" சற்றே சூடு பிடிக்க சொந்தமாக கல்வி நிலையம்,
மருத்துவமனை எல்லாம் கட்டி "சேவை" புரிந்தேன்.

சாமி, "துறவி" என்றால் அனைத்தையும் துறக்க வேண்டுமே, நீங்கள் நிறைய சேர்க்கிறீர்களே என விவரமாக கேட்ட, சிஷ்யன் ஒருவனை
மகனே, "துறவியாக இருக்க உனக்கு தகுதி இல்லை" என வீட்டுக்கு அனுப்பி விட்டேன்.

இல்லாதவர்களுக்கு அவர்கள் கேட்டது எல்லாம் கொடுத்தேன்,
ஒரு முறை திருமண வரம் கேட்ட பக்தைக்கு இலவச இணைப்பாக "குழந்தை வரம்" கொடுத்தேன்,
இது ஒரு தவறா?

பாருங்க என்னை கொண்டு வந்து "உள்ளே" வச்சிட்டாங்க, என் ஆசிரமத்தை விட இங்க வசதி குறைவு, என் கிட்ட 40" டி.வி. இருக்கு, இங்கு 21"- தானப்பா இருக்கு.

ஆமா சிஷ்யா, யாரு இவுங்க ரொம்ப நேரமா மானிட்டரையே
முறைச்சி பாத்துகிட்டு இருக்காங்க...

இவுங்க வலைப்பூல பதிவு போடுறவுங்க குரு....

அப்படியா, உங்களுக்கு ஒரே நாள்ல ஒரு லட்சம் ஹிட்ஸ் வேணுமா...


ப்லோக்காலோ ஜிம்கானான்னு ஒரு மந்திரம்..........
ஹலோ........ஹலோ......எங்க ஓடுறீங்க........
சிஷ்யா ஓடுறாங்க பாரு........... அவுங்க என்டர் பட்டனை புடுங்கு.............

**************************************************************************

அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

46 comments:

Anonymous said...

எல்லோரும் கொத்தி புரோட்டா உப்புமா ஆயிடிச்சு..

இராமசாமி கண்ணண் said...

அய்யோ. அய்யோ . முடியல. விட்றுங்கப்பு

ர‌கு said...

இன்னும் ஒரு வார‌மாவ‌து இந்த‌ மேட்ட‌ர் ஓடும்னு நினைக்கிறேன், நீங்க‌ளும் மீயுஜிக் ஸ்டார்ட் ப‌ண்ணிட்டிங்க‌:)

ர‌கு said...
This comment has been removed by the author.
Sangkavi said...

எப்படி இப்படி எல்லாம்.... கலக்கல்...

ஸ்ரீராம். said...

அட, இந்த டெக்னிக் நல்லா இருக்கே...இப்போ சூடான பிசினெஸ் இதான்..ஆஸ்ரம அக்ரமங்கல்னு தலைப்பு வச்சிடலாம்.

புலவன் புலிகேசி said...

தல செம கலாசல்...சூப்பர்..

Chitra said...

சாமி, "துறவி" என்றால் அனைத்தையும் துறக்க வேண்டுமே, நீங்கள் நிறைய சேர்க்கிறீர்களே என விவரமாக கேட்ட, சிஷ்யன் ஒருவனை
மகனே, "துறவியாக இருக்க உனக்கு தகுதி இல்லை" என வீட்டுக்கு அனுப்பி விட்டேன்.

........சரிதாங்க. அப்புறம் அவன் வந்து தான் வீடியோ எடுப்பார். "எதிரி" உருவாகுதுங்க. ha,ha,ha,ha.....

Sivaji Sankar said...

:) gud

சேட்டைக்காரன் said...

ஐயையோ! இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா? ஏற்கனவே நான் "ஜன்னலைத்திற; கொசு வரட்டும்,"னு புத்தகம் எழுதிட்டிருக்கேன். என் பொளப்புலே மண்ணா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

பித்தனின் வாக்கு said...

நல்லவேளை வாயைத்திற வயிறு பெருகும் என்றதும் பிரியா கொத்து புரோட்டா கிடைக்கும் என்று வந்தேன். சால்னாக் கூட இல்லை. என்ன மாமு இப்படி ஏமாத்திட்டிங்க. கட்டிங்க் போட்டு வந்துருந்ததனா உங்க கதை கந்தல் ஆகியிருக்கும்.

ஆமா உங்க நண்பன் மோசடியில் உங்களுக்கும் பங்கு இருக்குன்னி சி.பி.ஜ உங்களைத் தேடுதாமே உன்மையா?

Mohan said...

நீங்களும் ஆரம்பிச்சுடீங்களா?

DREAMER said...

நண்பா, கற்பனை அருமை...

சைவச்சாமியார் விமலானந்தா நடிகையுடன் பரோட்டா சாப்பிடுவதை ரகசிய கேமிராவில் பதிவு செய்து டிவில போட்டா சூப்பரா இருக்கும்...

எண்டர் பட்டனோடு சேர்த்து கேமிராவின் ரெக்கார்ட் பட்டனையும் சாமியார் பிடுங்கிவிட்டால் நல்லது..!

-
DREAMER

நாடோடி said...

கதை ரெம்ப சூடா இருக்கு..

thenammailakshmanan said...

//ஆமா சிஷ்யா, யாரு இவுங்க ரொம்ப நேரமா மானிட்டரையே
முறைச்சி பாத்துகிட்டு இருக்காங்க...

இவுங்க வலைப்பூல பதிவு போடுறவுங்க குரு....

அப்படியா, உங்களுக்கு ஒரே நாள்ல ஒரு லட்சம் ஹிட்ஸ் வேணுமா...


ப்லோக்காலோ ஜிம்கானான்னு ஒரு மந்திரம்//

சை கொ ப நீங்களும் பொழைக்கத் தெரிஞ்ச சாமி ஆகிட்டீங்க
hahahahaah
:)))))))

சைவகொத்துப்பரோட்டா said...

// Anonymous said...
எல்லோரும் கொத்தி புரோட்டா உப்புமா ஆயிடிச்சு..//


ஆனாலும் உப்புமா ஜூடா இருக்கே அனானி, நன்றி.// இராமசாமி கண்ணண் said...
அய்யோ. அய்யோ . முடியல. விட்றுங்கப்பு //


அவங்கள விட சொல்லுங்க, நானும் விட்டு விடுகிறேன்,
ஹி...ஹி..... நன்றி ராம்.

சைவகொத்துப்பரோட்டா said...

// ர‌கு said...
இன்னும் ஒரு வார‌மாவ‌து இந்த‌ மேட்ட‌ர் ஓடும்னு நினைக்கிறேன், நீங்க‌ளும் மீயுஜிக் ஸ்டார்ட் ப‌ண்ணிட்டிங்க‌:)//


ஊரோட ஒட்டி வாழணுமே ரகு.........ஹி........ஹி.....
நன்றி.// Sangkavi said...
எப்படி இப்படி எல்லாம்.... கலக்கல்...//

எல்லாம் ஒரு ப்ளோவ்ல வந்திருச்சி, நன்றி சங்கவி.

சைவகொத்துப்பரோட்டா said...

//ஸ்ரீராம். said...
அட, இந்த டெக்னிக் நல்லா இருக்கே...இப்போ சூடான பிசினெஸ் இதான்..ஆஸ்ரம அக்ரமங்கல்னு தலைப்பு வச்சிடலாம்.//


ரைட்டு, பட் ஒன் கண்டிசன், மின்சார இணைப்பும், காமிராவும் அனுமதி கிடையாது :))
நன்றி அண்ணா.// புலவன் புலிகேசி said...
தல செம கலாசல்...சூப்பர்..//


நன்றி புலவரே.

சைவகொத்துப்பரோட்டா said...

// Chitra said...

........சரிதாங்க. அப்புறம் அவன் வந்து தான் வீடியோ எடுப்பார். "எதிரி" உருவாகுதுங்க. ha,ha,ha,ha..... //

அவ்வ்...எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க :))
நன்றி சித்ரா.// Sivaji Sankar said...
:) gud //


நன்றி சங்கர்.

சைவகொத்துப்பரோட்டா said...

//சேட்டைக்காரன் said...
ஐயையோ! இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா? ஏற்கனவே நான் "ஜன்னலைத்திற; கொசு வரட்டும்,"னு புத்தகம் எழுதிட்டிருக்கேன். என் பொளப்புலே மண்ணா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//


தலைப்பே களை கட்டுது, சீக்கிரம் எழுதுங்க சேட்டை, ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் :))
நன்றி நண்பா.
// பித்தனின் வாக்கு said...
நல்லவேளை வாயைத்திற வயிறு பெருகும் என்றதும் பிரியா கொத்து புரோட்டா கிடைக்கும் என்று வந்தேன். சால்னாக் கூட இல்லை. என்ன மாமு இப்படி ஏமாத்திட்டிங்க. கட்டிங்க் போட்டு வந்துருந்ததனா உங்க கதை கந்தல் ஆகியிருக்கும்.

ஆமா உங்க நண்பன் மோசடியில் உங்களுக்கும் பங்கு இருக்குன்னி சி.பி.ஜ உங்களைத் தேடுதாமே உன்மையா?//


அவ்வ்.............நான் அவன் இல்லை....நல்ல வேளை நீங்க கட்டிங்க போடல.....
நன்றி பித்தரே.

சைவகொத்துப்பரோட்டா said...

//Mohan said...
நீங்களும் ஆரம்பிச்சுடீங்களா?//

இல்லை மோகன், இடையில் சேர்ந்து கொண்டேன்... :))
நன்றி.// DREAMER said...
நண்பா, கற்பனை அருமை...

சைவச்சாமியார் விமலானந்தா நடிகையுடன் பரோட்டா சாப்பிடுவதை ரகசிய கேமிராவில் பதிவு செய்து டிவில போட்டா சூப்பரா இருக்கும்...

எண்டர் பட்டனோடு சேர்த்து கேமிராவின் ரெக்கார்ட் பட்டனையும் சாமியார் பிடுங்கிவிட்டால் நல்லது..!

-
DREAMER//


காமிரா நாட் அல்லோவுடு.........:))
நன்றி ஹரீஷ்.

சைவகொத்துப்பரோட்டா said...

// நாடோடி said...
கதை ரெம்ப சூடா இருக்கு..//


ஆமா...கதைதான்..........
நன்றி நண்பா.
// thenammailakshmanan said...
//ஆமா சிஷ்யா, யாரு இவுங்க ரொம்ப நேரமா மானிட்டரையே
முறைச்சி பாத்துகிட்டு இருக்காங்க...

சை கொ ப நீங்களும் பொழைக்கத் தெரிஞ்ச சாமி ஆகிட்டீங்க
hahahahaah
:))))))) //


ஆமாக்கா, இல்லைனா நம்மள ஏமாத்திபுடுவாங்களே.......... :))
நன்றி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான யோசனையை சொன்ன விமலானந்தா வாழ்க.

நான் உங்க பின்னாடி வந்தா கொசு கடிக்காதே... :)))

அருமையான பகிர்வு நண்பரே..

lolly999 said...

fantastic----good idea----

திவ்யாஹரி said...

//ராசுவின் நண்பன் வாசு அவன் பங்குக்கு நான் குச்சியால்
குத்தியே அவனுக்கு இருந்த கான்செர் குனமானதாக புருடா விட
அதை நம்பி நிறய மருத்துவர்கள் என்னிடம் அந்த "மருத்துவ
குறிப்பு" வேண்டும் என அடம் பிடிக்க அது "தேவ ரகசியம்" அதை
நான் கூறினால் உங்கள் தலை வெடித்து விடும் என பக்குவமாக
விளக்க அனைவரும் வந்த சுவடு தெரியாமல் எஸ்கேப். //

ஹா..ஹா..ஹா.. எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க? முடியல.. நீங்களுமா??????

ஜீவன்சிவம் said...

கலக்கலா இருக்கு. இது கற்பனை கதை தானே..?

சைவகொத்துப்பரோட்டா said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான யோசனையை சொன்ன விமலானந்தா வாழ்க.

நான் உங்க பின்னாடி வந்தா கொசு கடிக்காதே... :)))

அருமையான பகிர்வு நண்பரே..//


கொசு வத்தி, வச்சிருவோம், கொசுத்தொல்லை இருக்காது :))
நன்றி ஸ்டார்ஜன்.// lolly999 said...
fantastic----good idea----//


ஆனால் இதை செயல் படுத்தகூடாது........ :))
நன்றி தோழி.

சைவகொத்துப்பரோட்டா said...

// திவ்யாஹரி said...
//ராசுவின் நண்பன் வாசு அவன் பங்குக்கு நான் குச்சியால்
குத்தியே அவனுக்கு.....

ஹா..ஹா..ஹா.. எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க? முடியல.. நீங்களுமா?????? //


நான் அவன் இல்லை.......:))
நன்றி திவ்யாஹரி.// ஜீவன்சிவம் said...
கலக்கலா இருக்கு. இது கற்பனை கதை தானே..?//

ஆமாம், ISI - முத்திரை பெற்ற 100% - கதையேதான் :))
நன்றி ஜீவன்சிவம்.

சசிகுமார் said...

சுவாரஸ்யமான பதிவு, தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மின்னல் said...

கற்பனையும்,கதையும் அருமை

Dr.எம்.கே.முருகானந்தன் said...

சுவார்ஸமாக இருக்கு.
எனக்கும் கொஞ்சம் அருள் தேவை !!!

மணிப்பயல் said...

அடுத்த பதிவு வாயைத்திற வாந்தி வரட்டும்! ஆ?

சைவகொத்துப்பரோட்டா said...

//சசிகுமார் said...
சுவாரஸ்யமான பதிவு, தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//


நன்றி சசி, உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும்.
//மின்னல் said...
கற்பனையும்,கதையும் அருமை//

நன்றி மின்னல்.

சைவகொத்துப்பரோட்டா said...

//Dr.எம்.கே.முருகானந்தன் said...
சுவார்ஸமாக இருக்கு.
எனக்கும் கொஞ்சம் அருள் தேவை !!!//


அவ்வ்...........டாக்டருக்கே.. மருந்தா........... :))
நன்றி மருத்துவரே கருத்துக்கு.
//மணிப்பயல் said...
அடுத்த பதிவு வாயைத்திற வாந்தி வரட்டும்! ஆ?//


இவனுக பண்றதா பார்த்தா, அதுதான் வரும் மணி,
நன்றி மணி கருத்துக்கு.

ரோஸ்விக் said...

ஆத்தாடி இம்புட்டு குசும்பு உடம்புக்கு ஆகாது ராசா... கொத்து ரொம்ப அருமையா இருக்கு :-)))

சைவகொத்துப்பரோட்டா said...

// ரோஸ்விக் said...
ஆத்தாடி இம்புட்டு குசும்பு உடம்புக்கு ஆகாது ராசா... கொத்து ரொம்ப அருமையா இருக்கு :-)))//


நன்றி ரோஸ்விக், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து சாப்பிடுங்க :))

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வெறும் வாய்க்கு மெல்ல அவல் கெடைச்சாச்சு...

நன்றி..

சைவகொத்துப்பரோட்டா said...

// பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
வெறும் வாய்க்கு மெல்ல அவல் கெடைச்சாச்சு...

நன்றி..//


ஆமா..........எல்லோரும் மென்னு அவல் இப்ப கஞ்சி ஆயிருச்சு......ஹி.........ஹி.....

நன்றி பிரகாஷ்.

சசிகுமார் said...

இதை வைத்து ஒரு சினிமாவே தயாரிக்கலாம் போல இருக்கே நல்ல சுவாரஸ்யமான பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

// சசிகுமார் said...
இதை வைத்து ஒரு சினிமாவே தயாரிக்கலாம் போல இருக்கே நல்ல சுவாரஸ்யமான பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//


அப்படியா, அப்ப நீங்களே படத்துக்கு தயாரிப்பாளார் ஆகிடுங்க.......... ஹி....ஹி.....
நன்றி சசி வாழ்த்துக்கும், கருத்துக்கும்.

டக்கால்டி said...

நல்லாருக்குங்க ...

சைவகொத்துப்பரோட்டா said...

//டக்கால்டி said...
நல்லாருக்குங்க ...//


நன்றி நண்பரே, உங்க blog - பேர் ரொம்ப நல்லா இருக்கு :))

r.v.saravanan kudandhai said...

வாயைதிற வயிறு பெருகட்டும்

ஹி.........ஹி.....


சுவாரஸ்ய பதிவு நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

// r.v.saravanan kudandhai said...
வாயைதிற வயிறு பெருகட்டும்

ஹி.........ஹி.....


சுவாரஸ்ய பதிவு நன்றி//

நன்றி சரவணன்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////என் "கம்பெனி" பேரு சுவாமி விமலானந்தா, எனக்கான கேப்சன்
"வாயைதிற வயிறு பெருகட்டும்"////


ஆஹா ! ஒரு முடிவோட்டத்தான் இருக்கீங்க போல கலக்குங்க . ரசிக்கும் வகையில் இருந்தது . பகிர்வுக்கு நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//////என் "கம்பெனி" பேரு சுவாமி விமலானந்தா, எனக்கான கேப்சன்
"வாயைதிற வயிறு பெருகட்டும்"////


ஆஹா ! ஒரு முடிவோட்டத்தான் இருக்கீங்க போல கலக்குங்க . ரசிக்கும் வகையில் இருந்தது . பகிர்வுக்கு நன்றி//

அவ்வ்.......இது
ச்சு......ம்மா.........ஒரு காமெடிக்கு :))
நன்றி சங்கர்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)