Wednesday, March 31, 2010

காதல் போதை

தயவு செய்து
உன் பார்வையை
விலக்கு அன்பே

நான் போதைக்கு
அடிமையாக
விரும்பவில்லை.






அடுத்த முறை
செல் போனாய் பிறக்க
வரம் வேண்டுகிறேன்

அது கூட
உன் காதோடு
ரகசியம் பேசுவதால்.




ஒத்த துருவங்களில்
காந்த விசை
இருக்காதாமே

பின் எப்படி
நாம்
ஈர்க்கப்படுகிறோம்.





நீ என்ன
விக்கிரமாதித்தனின்
வம்சாவளியா

என்னுள் நுழைந்தாய்
நீயாகிப்போனேனே.


***************************************************



அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Saturday, March 27, 2010

என் பேரு

ஜானும்மா இன்னைக்கு ஸ்கூல்ல நடந்த ரன்னிங் ரேஸ்ல நான்தான் பர்ஸ்ட் பெருமையாக
வெற்றிகோப்பையை, தன்னையும் வீட்டையும் பராமரிக்கும் பணிப்பெண்னிடம் நீட்டினான்
விக்கி.

படிப்பிலும், விளையாட்டிலும் நீதானே ராசா என்னைக்கும் பர்ஸ்ட்.

ஹைய்யோ.....என் பேர் ராசா இல்லை, விக்கி.

எனக்கு நீ ராசாதான், குளிச்சிட்டு வா சாப்பிடலாம்.

அம்மா வந்திரட்டும், இன்னைக்காவது அம்மா கூட சேர்ந்து சாப்பிடனும்.

ஜானகி.....விக்கிய உள்ள படுக்க வைக்க வேண்டியதுதான, ஏன் இப்படி ஹால்ல படுக்க
வைச்சிருக்கே....

இல்லமா..........ராசா இன்னும் சாப்பிட கூட இல்ல........இன்னைக்காவது உன்கூட
சேர்ந்து சாப்பிடனும்னு...........

அறிவில்ல உனக்கு, ஆபிசில தலைக்கு மேல வேலை இருக்கு, எங்களால
இவன பார்த்துக்க முடியலைன்னுதான உன்ன வேலைக்கு வச்சி இருக்கு,
சின்னைபையன் சொன்னான்னு........

ராசா........ராசா........

ம்மா.......இன்னைக்கு ஸ்கூல்ல...........

அம்மா வரலியா.........ஜானும்மா, அம்மா எங்க.....

அவுங்க இப்பதான் வந்தாங்க, களைப்பா இருக்குன்னு தூங்க போய்ட்டாங்க ராசா, வா
சாப்பிடலாம்.......

ப்போ............எனக்கு வேணாம்.............அம்.....மா...........அம்மா...........

தூக்கம் கலைந்த அம்மா எழாமலே சொன்னாள், போய் சமத்தா சாப்பிட்டு படு விக்கி,
அம்மாவுக்கு டயர்டா இருக்கு........

அப்பா..........அப்பா.........

அவரிடம் இருந்து குறட்டை மட்டுமே வந்தது.

ஹைய்யோ.........இங்க பாருங்க சின்ன வயசு விக்கி மாதிரியே இருக்கான் நம்ம பேரன்.

விக்கி......விக்கி......இங்க பாரேன்...........

என்னங்க........விக்கி நம்ம கூட பேசவே மாட்டேங்குறான்,
நம்மள மதிக்கிறதும் இல்ல.....

தன் குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த ஜானகியிடம், சென்ற
விக்கி, உங்க பேரன கொஞ்சுற ஆர்வத்துல என்னை மறந்துராதீங்க
என்றான்.

உன்னை எப்படி ராசா மறக்க முடியும்.

அய்யோ.......என் பேரு விக்......

இல்ல ......ராசான்னே கூப்பிடுங்க ஜானும்மா,

****************************************************


அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Sunday, March 21, 2010

செக்கச்சிவந்தவளே!!

சைக்கிள் பெடல அப்படியே பின்னால சுத்துனா......

என்னோட பள்ளி பருவம் வந்திருச்சு.......
பள்ளி விடுமுறை நாட்களில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு காட்டுக்குள் செல்வது, அட நீங்க வேற அமேசான் காடெல்லாம் இல்லை, பருத்தி காடுதேன்.

அந்த மாதிரி "அட்வெஞ்சர்" பயணத்தின் போது, அங்கே இருக்கும் இலந்தை பழங்களை, மிகவும் விரும்பி சாப்பிடுவேன். (யார் வீட்டு காடா?..... யாருக்கு தெரியும்)

பொழுது போகாத பொம்முவாய், வேட்டையாடி சாப்பிட்ட அந்த பழத்துல எம்பூட்டு
மகத்துவம் இருக்குன்னு இப்பதேன் தெரிஞ்சுகிட்டேன்.

வைட்டமின் - A, மற்றும் சுண்ணாம்பு சத்து இதுல நிறைய இருக்காம், எனவே இதை அடிக்கடி
சாப்பிட்டால் 100 - வயசுலயும் கரும்பு கடிக்கலாம் (நாமளும் இருந்து, பல்லும் இருந்தா),
புரூஸ்லீ மாதிரி கல்லும் ஒடைக்கலாம், எலும்பு அவ்வளவு உறுதியாகும்.

அப்புறம் சில பேர், வருவார் பின்னே ஆனால் அவர் "வாசம்" வரும் முன்னே, இந்த மாதிரி
பிரச்சனை உள்ளவங்க, வாசனை உருவாகும், இடத்துல (under arm) இலந்தை செடியோட
இலைகளை இடித்து சாறாக்கி அதனை தேய்த்து காய விட்டு, அப்பாலிக்கா கழுவுங்க.
(குளிக்கும் பழக்கம் இருந்தால் குளிப்பதற்கு முன்னும் செய்யலாம்.... ஹி.........ஹி...........டமாசு)
அப்புறம் "வாசனை" காணாமல் போய் விடும்.

சில பேர் தலை வாரிய அப்புறம் பார்த்தா, சீப்புக்கே முடி முளைச்சி இருக்கும், சிலருக்கு
முன்னாலோ அல்லது நடுவாலோ கொஞ்சம் "கிரௌண்ட்" இருக்கும், இந்த மாதிரி
உள்ளவங்க இந்த இலையோட சாறு எடுத்து தலையில தடவுங்க, உங்க முடி சீப்புக்கு
போகாது, கிரௌன்ட்ல புல்லு.........ச்சே.....முடி முளைக்கும் (அல்லோ இது சின்ன வயசுல
கிரௌண்ட் வாங்கினவங்களுக்கு மட்டும்தான்)

நீரிழிவு நோயுக்கும் இது மருந்தா செயல் படுதாம், ப்ரீயா போகவும் இது "வழி" செய்யும். (இப்பதான தெரியது, காட்டுக்கு போயிட்டு வந்த அப்புறம் ஏன் "வந்திச்சின்னு",
இது தெரியாம என் நண்பன், டேய் அந்த காட்டுக்காரன் நமக்கு "சூனியம்" வச்சிட்டான்ட்டா
அப்படின்னு புலம்பி கிட்டு இருந்தது தனி ட்ராக்)

பின் குறிப்பு:
"காசு கொடுத்தும்" இத்த வாங்கி இருக்கேன், எங்கையா.....
பள்ளிகூட வாசல்ல ஒரு பாட்டி ஜவ்வு மிட்டாயோட சேர்ந்து, இலந்தை பழமும் விப்பாங்க, அவுக கிட்டதேன்.

இப்ப எங்க கிடைக்குது அப்படின்னுதான நினைக்கிறீங்க, கிழே
படத்துல இருக்கே அது மாதிரி "ஜாம்" ஆகத்தான் கிடைக்கும்.





******************************************************************

அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Thursday, March 18, 2010

பின்னூட்ட "குலசாமிக்கு" ஒரு படையல் (தொடர் பதிவு)

இந்த தொடர் "படையலுக்கு" என்னை அழைத்த நண்பர் மங்குனி அமைச்சர்ருக்கு எனது நன்றி.

கண்டிசன்ஸ் 1 ) உங்களுக்கு வந்த , நீங்க அனுப்பிய பின்னூட்டங்கள்ள உங்களுக்கு பிடித்த பத்து2 ) மொக்கைக்கு முன்னுரிமை3 )காப்பி அடிக்க கூடாது (டீ வேனா அடிச்சுக்கல்லாம்)4 ) :-) , :-)) இப்படி போடக்கூடாதுஅப்புறம் இது தான் முக்கியமான கன்டிசன்5) மேலே உள்ள எந்த கன்டிசனையும் பாலோ பன்னக்கூடாது.

எச்சரிக்கை:இது 100% மொக்கை மட்டுமே, தொடர விருப்பம் இருந்தால் தொடரவும்.

இனி மொக்கை ஆ"ரம்பம்"

எனக்கு வந்த பின்னூட்டங்கள்:

பி.ஆர் said

ஏய் பரோட்டா
என் கிட்ட வச்சுக்காத கலாட்டா
அப்புறம் நீ ஆயிருவ கொத்துபரோட்டா
இப்ப நான் போய்ட்டு வரட்டா.

மதனபாப் said

:) :))

:))) :))))))))

விச்சு said

கண்ணா நீ, ஒரு பதிவையாவது உருப்படியா எழுதுவியானு
எதிர்பார்த்திருக்கேன்......
எதிர்பார்க்கிறேன்.....
எதிர்பார்த்து கொண்டே இருக்கிறேன்....

பெரியாரசு said

பழனியா........

திருப்பாச்சியா......

திருப்பதியா.......

உன் பேர் என்ன ராசா....... இந்த மொக்கை போடுற.

வெடிவேலு said

நீ வச்சு இருக்கிற பேர பாத்து நம்ம மதுரை முனியாண்டி விலாஸ்
கணக்கா, ஜூடா பரோட்டா கொடுப்பியோன்னு நினைச்சு "நம்பி"
வந்தனைய்யா........ஏன்யா இந்த கொல வெறி...........நடக்கட்டும்....

அல்லோ, நானும் பதிவர்தான்..... நானும் பதிவர்தான்.........வரட்டா,,,,,,,,


இனி நான் அனுப்பிய பின்னூட்டங்கள்:

To: அரசு போக்குவரத்து கழக கடமையாளர்

கடமை உணர்ச்சி பற்றிய உங்களின் இந்த இடுகையில், "இலவச பஸ் பாஸ்" எடுத்து வராத "பள்ளி சீருடை அணிந்திருந்த" எட்டாம் வகுப்பு மாணவியிடம் அபராத தொகை வசூலித்த உங்களின் கடமை
உணர்ச்சியை அறிந்து கொண்டேன், "பாராட்ட" தமிழில் வார்த்தைகள் இல்லை. (அனைவரயும் இலவசமாக பயணப்பட அனுமதியுங்கள் என்று
கேட்கவில்லை, குறைந்த பட்சம் அந்த மாணவியை அடுத்த முறை
பாஸ் இல்லாமல் பயணம் செய்ய இயலாது என அறிவுரை கூறி
விட்டு இருக்கலாமே)

To:"ஆராய்ச்சியாளர்"

நான் ஒரு "ஆராய்ச்சியாளன்" என்ற உங்களின் இந்த இடுகை அருமை,
இனிமை , இளமை . நானும் உங்கள் ஆராய்ச்சி கூடத்தில் சேர ஆவலை
தூண்டுகிறது இந்த இடுகை. ஆனால் "சீருடை" மட்டும் மாற்றி விடுங்களேன்.

To:தொல்லைகாட்சிகள்

குழந்தைகளும் உங்கள் இடுகைகளை பார்ப்பதை
நினைவில் வைத்து கொள்ளுங்கள், இனிமேல் "அந்த" மாதிரி படங்களை
போட்டு கொண்டு இருக்காதீர்கள்.

To: மாண்புமிகு "மாண்புமிகுக்கள்"

உங்களின் பட்ஜெட் பற்றிய இந்த இடுகை அருமை, ஆனால் பெட்ரோல்
"பற்றிய" விஷயம் மற்றும் என் வயிற்றில் நெருப்பை கட்டியது போல்
இருக்கிறது.

To:பொது ஜனங்கள்

எவ்வளவு அடித்தாலும், "உரலாகி" நிற்கும் உங்கள் வலிமையும்,
அலுவலகத்தில், (or) தொழிற்சாலையில் எப்படி பிழிந்தாலும்,
"இடியாப்பமாய்" வெளி வரும் உங்களின் "திறமையையும்" இந்த
இடுகை பறை சாற்றுகிறது.


டிஸ்கி (or) குஸ்கி :
மேலே சொல்லப்பட்ட கண்டிசனில் 5-வதை மட்டும் நான் பின்
பற்றி இருக்கிறேன். (ஹி,,,,,ஹி.....)
மேலே சொல்லப்பட்ட பின்னூட்டங்கள் அனைத்தும் எனது
கற்பனையே(!!!) இந்த தொடர் படையலை படைக்க
விருப்பம் உள்ளவர்கள், விரைவாக "சமையலை" ஆ"ரம்பி"க்குமாறு
அன்புடன் கேட்டு கொள்(கொல்)கிறேன் :))

****************************************************************


அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Sunday, March 14, 2010

பறக்கும் தட்டு

மாமூ நேத்து பொட்டில நூசு பாத்தியா...

அந்த வீடியோ மேட்டரா, பாக்கலையே மச்சி...

அட அதில்லைப்பா, நடு சாமத்துல ஒரு நூசு சொன்னாம்ப்பா, நம்ம ஊரு எல்லைக்கு அப்பால
பறக்கும் தட்டு ஒன்னு சுத்தி வந்துச்சாம்பா, அது வந்து போன தடம் கூட இன்னும் அப்படியே
இருக்காம், நம்ம பக்கத்துக்கு ஊரையே தூக்கிட்டு போயிருச்சாம் நூசுல சொன்னான், வாரியா போய் பாத்துட்டு வரலாம்.

எதுனா டுபாக்கூர் நூசா இருக்கப்போவுது, வா பொழப்ப பாப்போம்.

நிசமான நூசுதாம்பா, என் பக்கத்துக்கு வூட்டுக்காரன், அவன் வயலுக்கு காவல் இருக்கும்போது
பாத்திருக்காம்பா, நம்ம ஜம்போ பிளேன்ஐ விட பத்து மடங்கு பெருசா இருந்திச்சாம் அந்த பறக்கும் தட்டு.

அவன் விவரிக்க....எனக்கு ஆர்வம் தொற்றி கொண்டது, வா போய் பார்க்கலாம்.

நங்கள் அந்த இடத்தை (கிராமத்தை?) நெருங்க முடியாத அளவுக்கு கூட்டம், பட்டணத்துல இருந்து குறுந்தாடி
வச்ச விஞ்ஞானிகள் (!!!) எல்லாம் வந்து இருந்தாங்க. உள்ளூர் ஏட்டு அல்லாரையும் விரட்டிகிட்டு இருந்தாரு.

அந்த இடத்தை யாரும் நெருங்கவே முடியலை, ராத்திரி நூசுல பார்த்துக்கலாம்னு கிளம்பி
வந்திட்டோம்.

நூசு போடற நேரம் ஆச்சு.....ஊரு சனம் மொத்தமும் பஞ்சாயத்து பொட்டி முன்னால
உக்காந்து கிடந்துச்சுங்க.

ஒரு சோகமான செய்தி, நேற்று நள்ளிரவு, அடையாளம் தெரியாத ஒரு பறக்கும் தட்டு வந்து சென்ற பின்னர் ஒரு ஊரே காணாமல் போய் விட்டது, இது பற்றி நம் விஞ்ஞானிகள் மேலதிக தகவல் ஏதும் இப்பொழுது தர இயலாத
நிலைமையில் இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரம் கூறியது.......


ஓர் மகிழ்ச்சியான செய்தி.... நாம் அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை
கண்டு பிடித்து உள்ளது, அதோடு அனுப்பிய துணை விண்கலம்
"25 - கிராம் எடை கொண்ட மண்ணையும்" எடுத்து கொண்டு வெற்றிகரமாக நம் பூமியின் சுற்று பாதைக்குள் நுழைந்து விட்டது.






கதைக்கான விளக்கவுரை!!!!!!!

முதலில் வரும் கிராமம் இருப்பதே செவ்வாய் கிரகத்தில்தான், அவர்கள்
உருவம் மிக சிறியது!!!(எனது கற்பனைதான்) , அதை குறிக்கவே அந்த 25 - கிராம் எடை மண்ணை குறிப்பிட்டேன், அதாவது நமது விண்கலம் எடுத்து வந்த அந்த 25 - கிராம் எடை கொண்ட மண்தான் அவர்களின் "காணாமல் போன" கிராமம்.


***********************************************************************


எனக்கான உற்சாக டானிக்கை (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Thursday, March 11, 2010

எனக்கு பிடித்த 10 - பெண்கள் - தொடர்பதிவு

இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த சகோதரி திவ்யாஹரி
அவர்களுக்கு எனது நன்றி. (தொடர் பதிவு வாரமா இது :)) )


எங்கள் நிறுவனத்தை துவக்கவும், வளர்க்கவும், உறுதுணையாக இருந்து, இதற்காக அவருக்கு வந்த நல்ல வேலை வாய்ப்பினையும் விட்டு கொடுத்தவர், என இன்று வரை அவர் கணவரால் போற்றப்படும் சுதா நாராயணன்.
(இவரின் கணவர் நாராயணன்மூர்த்தி - இன்போசிஸ்)

இவர் பாடினால் மொக்கை பாடல் கூட கேட்க மிக இனிமையாக
இருக்கும், இவர் குரலுக்கு மட்டும் இன்னும் வயதாகவில்லை,
பின்னணி பாடகி S.ஜானகி.

படிக்கும் காலத்தில் எனக்கு மிக பிடித்த பொழுதுபோக்கு இலங்கை
வானொலி நிகழ்ச்சிகள் கேட்பது. நிகழ்ச்சி தொகுத்து அளிக்கும் இவரின்
பாங்கு எனக்கு மிகவும் பிடிக்கும், இவர் குரலை கேட்டாலே உற்சாகம்
தொற்றி கொள்ளும் அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம்.

பள்ளி பாடத்தில் இவரைப்பற்றி படிக்கும்பொழுதே பிடித்தது.
போலந்து நாட்டை சேர்ந்த இவர், வேதியியல் மற்றும் இயற்பியலில் நோபல் பரிசு
வென்றவர்: மேரி க்யூரி.

நகைச்சுவை பாத்திரமா, குணசித்திரமா அனைத்திலும் இவரின் முத்திரை இருக்கும். இவர் நடிக்கும் கதாபாத்திரத்துடன் நம்மை ஒன்ற செய்து விடுவார்
நடிகையர் திலகம் சாவித்திரி.

அல்பேனிய நாட்டில் பிறந்து, இந்திய குடிஉரிமை பெற்று, ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் உதவியவர்
பாரத ரத்னா விருது பெற்ற அன்னை தெரேசா.

பொதுவாக, திருமணம் ஆகிவிட்டாலே, விளையாட்டில் இருந்து விலகி கொள்பவர்கள் அதிகம். ஒரு குழந்தைக்கு தாயான போதும் இரண்டாவது முறையாக us open - champion - பட்டம் வென்றவர், டென்னிஸ் வீராங்கனை Kim clijsters.

தொடர்ந்து மூன்று முறை இந்திய பிரதமராக இருந்தவர், மூன்று
ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நான்காவது தடவையாக தேர்ந்து
எடுக்க பட்டவர் இந்திரா காந்தி.

வானொலியில் செய்தி கேட்கும் வழக்கம் உடையவர்கள் கண்டிப்பாக
இவரது குரலை கேட்டு இருப்பீர்கள், இந்த வெண்கல குரல் எனக்கு
பிடித்த ஒன்று, குரலுக்கு சொந்தக்காரர் சரோஜ் நாராயணசுவாமி.

மின்சார ரயில் பயணத்தின்போது, சுருதி சுத்தமாக ஒரு பின்னணி
பாடகியின் நேர்த்தியுடன் பாடும் கண் பார்வை மட்டும் இழந்த
பெயர் தெரியாத, அந்த பெண்மணி(கள்).

இந்த தொடர் பதிவை தொடர, இவர்களை அன்போடு அழைக்கிறேன்:

இராமசாமி கண்ணண்

Starjan ( ஸ்டார்ஜன் )

சேட்டைக்காரன்

ஜீவன்சிவம்

ட்ரீமர்


நிபந்தனைகள் :உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,வரிசை முக்கியம் இல்லை.,ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து
*********************************************************************


அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Sunday, March 7, 2010

கண்டு கொண்டேன்!! - யார் ஞானி - தொடர் பதிவு

ஞானியை தேட சொல்லி (கவனிக்க ஞாநி அல்ல!!) என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த நண்பர் ஜீவன்சிவம் அவர்களுக்கு எனது நன்றி.

உங்கள் வாழ்வில் மறக்க முடியாத பருவம் எது என கேட்டால் அனைவருக்கும் உடனே மனதில் எழுவது, பள்ளி மற்றும் கல்லூரி பருவமாகத்தான் இருக்கும்.

ஏன் நமக்கு, நிகழ்காலம் பிடிப்பதில்லை?

நிகழ்காலத்தில் நாம் நாமாக இருப்பதில்லை. பெரும்பாலான சமயங்களில், இதை செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்வார்களோ என்று, நம்மை மறந்து நாமே
அவர்களாகி விடுகிறோம்.

ஆரோக்கியமற்ற போட்டி, பொறமை, பேராசை எல்லாம் நம்முள் புகுந்து விடுவதன் பலன் மன நிம்மதியை இழக்கிறோம்.

நம்முள் இருந்த "நிம்மதியை" நாமே தொலைத்து விட்டு, பின்னர் அதை வெளியே தேடினால் எப்படி கிடைக்கும்.

வாழ்வில் லட்சியம் என்ற இலக்கு தேவைதான். அதற்காக வேண்டி நிகழ கால சந்தோஷ தருணங்களை நாம் அனுபவிக்க மறக்கிறோம்.

ஒரே ஒரு நாள் குளிப்பதில் இருந்து, சாப்பிடுவது வரை நாம் தினமும்
செய்யும் செயல்களை ரசித்து செய்து பாருங்கள். முக்கியமாக நாம்
செய்யும் வேலையினை, "விரும்பி" செய்து பாருங்கள். நிச்சயம் நம்
மனதில் ஒரு சந்தோசம் பரவும்.

உங்களால் முடிந்த வரை அடுத்தவருக்கு உதவுங்கள், அப்போது
கிடைக்கும் உற்சாகத்தை நீங்கள் மறக்கவே முடியாது.

முக்கியமாக நினைவில் நிறுத்த வேண்டியது, மந்திரத்தில் மாங்காய் கூட பறிக்க முடியாது. விதைத்து விட்டு முறையாக அதனை பராமரித்து வளர்த்தால் மட்டுமே முடியும் என்கிற போது,
எப்படி மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோயினை
அறவே மருத்துவ அறிவு இல்லாத ஒரு சந்நியாசி குணபடுத்த முடியும்.

ஆரோக்கியமான உணவு முறையினையும் கடை பிடித்து
சிறிதளவு உடற் பயிற்சியிலும் ஈடு பட்டாலே போதும்.

ஞானியை தேடும் வேலை தேவையற்ற ஒன்றாகி விடும்.

மொத்தத்தில் நாம் நாமாகவே இருந்தால் போதும், அனைவருமே
ஞானிகள்தான்.

இதை தொடர யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ, அவர்கள்
அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

********************************************************************



அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

*
*

Thursday, March 4, 2010

"வாயைதிற வயிறு பெருகட்டும்"

டிஸ்கி:இது ஒரு கற்பனையே, அதனால உங்க கற்பனை குதிரையை
"வேறு பாதையில்" ஓட விட வேண்டாம் :))

விமலாகிய நானும், விக்கி மற்றும் ராசு இணை பிரியா நட்புடன் இருந்தோம். அவர்கள் இருவரும்
ஒழுங்காக பள்ளி சென்றதன் பலனை நன்றாக அனுபவித்தார்கள், விக்கி அண்டை மாநிலத்தில் அரசு உத்தியோகத்தில் சேர்ந்தான். ராசு ஒரு தனியார் வானொலியில் சேர்ந்தான்.

நான் எங்கள் ஊர் கோவிலே கதி என்று இருந்ததன் பலனை தேங்காயும், சுண்டலுமாய் தின்று அனுபவித்தேன். நம்மை பற்றி ஊரே பேச வேண்டும், என்ன செய்யலாம் என தலையை சொறிந்து கொண்டே யோசிக்கும்பொழுது, நல்ல யோசனை கிட்டியது.

தலை முடியை ஒரு வருடமாகியும் வெட்டாமல் விட்டதன் பலன் என் பிட்டம் வரை வளர்ந்தது, அப்படியே எங்கள் ஊர் கோவில் அருகே அமர, அங்கு வந்த வெளியூர் மக்களில் ஒருவர் என் தலையை சுற்றி ஒளி வட்டம் தெரிவதாக கூற, அவர் பையன் அப்பா என் "பென் டோர்ச்ச" காணோம் என அழ ஆரபிக்க அவர் கவலைப்படாமல் என்னை வணங்க, இன்று எனக்கு லட்சம் பால்லோவேர்ஸ்.

என் "கம்பெனி" பேரு சுவாமி விமலானந்தா, எனக்கான கேப்சன்
"வாயைதிற வயிறு பெருகட்டும்"

எனது கொள்கை பரப்பு செயலராக என் நண்பன் ராசு பதவி ஏற்று அவர்கள் வானொலியில் தினமும் எனது அருளுரையை
"வாயைதிற வயிறு பெருகட்டும்" என்ற நிகழ்ச்சி மூலம் ஒலி பரப்ப என் புகழ் அண்டை மாநிலம் வரை பரவியது.

அங்கு உள்ள என் நண்பன் விக்கி மூலம் கொஞ்சம் "புறம்போக்கு" நிலத்தை வளைத்து எனக்கு ஆசிரமம் அமைத்தேன்.

என் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது, வேலை கேட்டு வந்தவர்களிடம், "உண்டியலில்" பணம் செலுத்த சொல்லி பின்பு விக்கியின் செல்வாக்கை பயன்படுத்தி
அவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்தேன்.

அவ்வாறு என் மூலம் "பயன் அடைந்தவர்கள்" அவர்கள் பங்குக்கு இலவசமாக என் "புகழ்" பரப்பினர்.

ராசுவின் நண்பன் வாசு அவன் பங்குக்கு நான் குச்சியால்
குத்தியே அவனுக்கு இருந்த கான்செர் குனமானதாக புருடா விட
அதை நம்பி நிறய மருத்துவர்கள் என்னிடம் அந்த "மருத்துவ
குறிப்பு" வேண்டும் என அடம் பிடிக்க அது "தேவ ரகசியம்" அதை
நான் கூறினால் உங்கள் தலை வெடித்து விடும் என பக்குவமாக
விளக்க அனைவரும் வந்த சுவடு தெரியாமல் எஸ்கேப்.

"தொழில்" சற்றே சூடு பிடிக்க சொந்தமாக கல்வி நிலையம்,
மருத்துவமனை எல்லாம் கட்டி "சேவை" புரிந்தேன்.

சாமி, "துறவி" என்றால் அனைத்தையும் துறக்க வேண்டுமே, நீங்கள் நிறைய சேர்க்கிறீர்களே என விவரமாக கேட்ட, சிஷ்யன் ஒருவனை
மகனே, "துறவியாக இருக்க உனக்கு தகுதி இல்லை" என வீட்டுக்கு அனுப்பி விட்டேன்.

இல்லாதவர்களுக்கு அவர்கள் கேட்டது எல்லாம் கொடுத்தேன்,
ஒரு முறை திருமண வரம் கேட்ட பக்தைக்கு இலவச இணைப்பாக "குழந்தை வரம்" கொடுத்தேன்,
இது ஒரு தவறா?

பாருங்க என்னை கொண்டு வந்து "உள்ளே" வச்சிட்டாங்க, என் ஆசிரமத்தை விட இங்க வசதி குறைவு, என் கிட்ட 40" டி.வி. இருக்கு, இங்கு 21"- தானப்பா இருக்கு.

ஆமா சிஷ்யா, யாரு இவுங்க ரொம்ப நேரமா மானிட்டரையே
முறைச்சி பாத்துகிட்டு இருக்காங்க...

இவுங்க வலைப்பூல பதிவு போடுறவுங்க குரு....

அப்படியா, உங்களுக்கு ஒரே நாள்ல ஒரு லட்சம் ஹிட்ஸ் வேணுமா...


ப்லோக்காலோ ஜிம்கானான்னு ஒரு மந்திரம்..........




ஹலோ........ஹலோ......எங்க ஓடுறீங்க........




சிஷ்யா ஓடுறாங்க பாரு........... அவுங்க என்டர் பட்டனை புடுங்கு.............

**************************************************************************

அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)