Wednesday, December 23, 2009

சேட்டைக்காரன்


முன் குறிப்பு:இது வெறும் கற்பனை மட்டுமே, நகைச்சுவை மட்டுமே இதன் நோக்கம், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை.

இடம்:சைவகொத்துபரோட்டா ஸ்டால், கற்பனையூர்.

நபர்கள்:ஹீரோ, பி.பி.(பிலிம் பித்துக்குளி), அப்பாவி அங்கு மற்றும் இயக்குனர்கள் இவர்களுடன் சிறப்பு தோற்றம்
அனுபவம் வாய்ந்த இயக்குனர் ஒருவர்.

பி.பி.(பிலிம் பித்துக்குளி):வாங்க, வாங்க ஹீரோ சார், இப்ப ஊரெல்லாம் பத்திரிக்கையில் இருந்து, வலைபதிவு வர உங்க
படத்த பத்தின பேச்சுதான் போங்க,

ஏய் அங்கு, சாருக்கு சூடா "கொத்துபரோட்டா" ஒன்னு போடுப்பா...

ஹீரோ: அட நீ வேற, அதான் ஏற்கெனவே, நம்ம படத்த எல்லோரும்
கொத்து, கொத்துன்னு கொத்துறாங்கலே.

பி.பி: நான் சொன்னது சாப்பிடற "கொத்துபரோட்டா" பாஸ் .

ஹீரோ:(மனதிற்குள்) நம்மள இந்த வாரு வாருராங்களே. நம்மளோட அடுத்த படம், சும்மா பட்டி தொட்டியெல்லாம் அதிரனும்.

யோவ் பி.பி, அடுத்த ப்ராஜெக்ட் பத்தின டிஸ்கசனுக்கு சில டிரக்டர்ஸ்
வருவாங்க, ஒவோருத்தாரா அனுப்பி வைங்க.

இப்பலாம் கெட்அப் சேன்ஜ் பண்ணுற டிரென்ட்கரதால, கெட்அப் சேன்ஜ் பண்ணி நடிச்சும் எடுபடலயே, பி.பி....

அப்பாவி அங்கு:பாஸ், நீங்க எப்ப கெட்அப் மாத்தி நடிச்சீங்க!!!

ஹீரோ:அதான், அந்த "பாட்டு சீன்ல"

பி.பி:(மனதிற்குள் சிரித்துக்கொண்டே, குழந்தைங்க சாப்பிடாம அடம் பிடிச்சா, பூச்சாண்டி கிட்ட பிடுச்சி கொடுதிருவேன்னு நிறய அம்மாக்கள் இப்ப "அந்த பாட்டைத்தான்" காண்பிக்கிறதா ஊருக்குள்ள டாக்.)

பவ்யமாக, பாஸ் நம்ம இயக்குனர்கள் எல்லாம் வந்து இருக்காங்க.

ஹீரோ:சரி, சரி, ஒவோருத்தரா அனுப்பி வைங்க.

இயக்குனர் 1: வணக்கம் சார், நம்ம கிட்ட "அருமையான ஸ்கிரிப்ட்" ஒன்னு இருக்கு, இந்த ப்ராஜெக்ட் மட்டும் பண்ணுங்க, அப்புறம் எங்கயோ போயிருவீங்க.

ஹீரோ:முதல்ல கதைய சொல்லுங்க சார்.

இயக்1: இப்ப நான் சொல்லப்போற "ஹீரோ என்ட்ரி சீன்" இது
வரை தமிழ், ஏன் உலக சினிமாவுல கூட யாரும் வைக்காத சீன்,

ஒபெனிங் சீன்ல ஒரு கள்ளிகாட்ட காண்பிக்கிறோம், ஒரு எண்பது வயசு தாத்தா சுள்ளி பொறக்கிகிட்டு இருக்கார், அப்ப வில்லன் கோஷ்டி அவர்கிட்ட, பீடி பத்த வக்க நெருப்பு கேட்குது, அவர்கிட்ட நெருப்புப்பெட்டி இல்லாது போகவே, அவர அவங்க திட்ட ஆரம்பிக்க,

பெரியவர் பயத்தில், மேல இருந்து ஒருத்தன் இது எல்லாம் பார்த்துகிட்டு இருக்கான்டா, உங்களை "வேட்டையாட" அவன் வருவாண்டா இன்னு சொல்ல,

வில்லன் கோஷ்டி, கேனத்தனமாக சிரித்துக்கொண்டே மேலே பார்த்து,
பெர்சு, மேலே வானம் இருக்கு, கிழே சுள்ளிக்காடு இருக்கு, இங்க யாரு வரபோரா அப்படின்னு சொல்லும்போதே,

"அசுர வேகத்துல" நீங்க மேல இருந்து குதிச்சு அவங்கள துவம்சம் பண்ணுறீங்க.. (ஹீரோ இடை மறித்து...)

லாஜிக் இடிக்குதே, பொட்டக்காட்டுல, நான் எங்க இருந்து
குதிக்க முடியும்,

இயக்:இப்படிதான் சார், ஆடியன்சும் குழம்புறாங்க, பைட் சீன் முடிஞ்ச அப்புறம் அப்படியே, நீங்க வந்த வழிய காண்பிக்கிறோம்,

காமிராவ, அப்படியே மேலே, மேலே ஜூம் செஞ்சா,

I.S.S (International Space Station) உள்ள நீங்க இருக்கீங்க, அந்த பெர்சு போட்ட கூச்சல் சத்தம் கேட்டு அங்க இருந்து குதிச்சு வரீங்க.

பி.பி: (மெதுவாக ஹீரோ காதுக்குள்) கொஞ்ச நஞ்சம் இருக்குற உங்க இமேஜ, டேமேஜ் பண்ண பாக்குறாரு, இந்த படம் வேண்டாம்.

ஹீரோ:சார் நான் எதிர் பார்க்குறது இது இல்ல, நாம அடுத்த ப்ராஜெக்ட்ல ஒன்னு சேருவோம், ப்ளீஸ்....

பி.பி:பாட்டு எழுதற கவிகளுக்கும் உங்க மேல காண்டு பாஸு, பாட்டையும் நல்லா அலசி ஆராஞ்சு செலக்ட் பண்ணுங்க.

ஹீரோ:எத வச்சு சொல்ற?

பி.பி:பின்ன என்ன பாஸ், பாட்டுக்கு நடுவால, "சேட்டைக்காரன்
வரத பார்த்து குல நடுங்குது, குல நடுங்குது"ன்னு எழுதலாமா?

அதோட பின் விளைவுதான், எல்லோரும் நம்ம படத்தோட போஸ்டர் பார்த்தாலே "குல நடுங்கி தெறிச்சு ஓடுறாங்க."

ஹீரோ:இது வேலைக்கு ஆவாது, பேசாம அந்த "ஊர்" டிரக்டர்ஐ கூப்பிடுங்க. "ஊர்" டிரக்டர் என்டர்:பாசு, உங்க "மார்க்கெட்,பஸ், ரயில்வே ஸ்டேஷன்" எல்லாம் தூக்கி நிறுத்தற மாதிரி நம்ம கிட்ட ஒரு கதை இருக்கு கேளுங்க...

இது ஒரு ஹை டெக் கதை அப்படியே மொத சீன ஓபன் பண்ணுறேன் கேளுங்க...

ஒரு நெட் சென்டர்ல எல்லோரும் ஆன் லைன்ல சினிமா பார்க்குறாங்க, அப்ப ஒருத்தர் என்ட்ரி ஆகி, கண்ணா எல்லோரும் திரை அரங்குல போய் படம் பாருங்கன்னு சொல்ல, யாரும் அவர சட்ட செய்யாம இருக்காங்க.

கோபத்துல நம்ம ஆளு, கத்திரிய எடுத்து நெட் கணக்சென வெட்டி உட்டுட்டு ஒரு பன்ச் வசனம் பேசுறாரு,

"நெட்டுக்குள்ள நீங்க பிஷ்வில் விளையாடுங்க, ஆனா, இந்த புறாகிட்ட விளையாடதீங்க"

ஹீரோ:பைன், என்னோட ஒபெனிங் சீன் நல்லா இருக்கு.

"ஊர்" டிரக்டர்:பாஸ் இந்த ஒபெனிங் சீன்ல வரது நீங்க இல்ல, நான்.

பி.பி:இப்படி எல்லா படத்துலயும் பில்ட் அப் போட்டே இவர் ஹீரோ ஆகலாம்னு பாக்குறாரு, கழட்டி உட்ருங்க பாஸ்.

ஹீரோ:எனக்கு மூட் சரி இல்ல, இன்னோர் நாளைக்கு டிஸ்கஸ் பண்ணலாம், நன்றி.

ஸ்பெஷல் கெஸ்ட் என்டர்,

தம்பி, என் கிட்ட கத இருக்கு, முதல்ல டைட்டில் கேளு,
"பட்டம் ஒரு இருட்டு"

கதைப்படி, நீ ஒரு வக்கீலுக்கு படிச்ச பட்டதாரி, ஆனா நாட்டுல நடக்குற கொடுமைகள் பார்க்க சகிக்காம, பட்டத்த தூக்கி எறிஞ்சிட்டு சட்டத்த கையில் எடுத்துகிட்டு.....

நில்லு... நில்லு...எங்க ஓடுற....தம்பி....

ஹீரோ, பி.பி, & அப்பாவி அங்கு (கோரசாக)

ரெடி, ஜூட், எஸ்கேப்........

பின் குறிப்பு:முன் குறிப்ப, மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

டிஸ்கி:இத படிச்சதால, உங்களுக்கு கொஞ்சூண்டாவது சிரிப்பு வந்துச்சா, இல்லையான்னு சொல்லிட்டு போங்க.

4 comments:

Paleo God said...

நல்லா இருக்கு ... வேற களம் ட்ரை பண்ணுங்க பாஸ்... நகைச்சுவை எழுதறது ரொம்ப கஷ்ட்டம் உங்களுக்கு நல்லா வருது.. இன்னும் அருமையான பதிவுகளை அன்புடன் எதிர் பார்க்கிறேன்.::))

சைவகொத்துப்பரோட்டா said...

@பலா பட்டறை
மிக்க நன்றி தலைவா. உங்கள் வருகைக்கு நன்றி, நீங்க கவிதையில கலக்குறீங்க. எனக்கு கவிதய ரசிக்க மட்டும்தான் தெரியும்.

நன்றி.

பித்தனின் வாக்கு said...

நகைச்சுவையில் இன்னமும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். பதிவு போல போடாமல், கலோக்கியல் நடையை உபயோகப் படுத்தினால் இன்னமும் சிறப்பாக இருக்கும். மிக்க நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

// பித்தனின் வாக்கு said...
நகைச்சுவையில் இன்னமும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். பதிவு போல போடாமல், கலோக்கியல் நடையை உபயோகப் படுத்தினால் இன்னமும் சிறப்பாக இருக்கும். மிக்க நன்றி.//


பழைய பதிவுகளையும் பொறுமையாக படித்ததற்கு நன்றி நண்பரே.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)