Sunday, December 13, 2009

நியாய விலை

அநியாயத்துக்கு மழை பெஞ்சாலும் பெய்தது உடனே கண்ணு மண்ணு தெரியாம காய்கறி விலைய தங்க விலைக்கு கொண்டு வந்து விக்கிறே, ரெண்டு ரூபா கொறச்சி கொடு.

சாரே காலயில நாலு மணிக்கு மார்க்கெட் போயி பிரெஷ்ஆன காய்கறியா பார்த்து வாங்கி, நாக்கு தள்ள இந்த ட்ரை சைக்கிள் மிதிச் சுகிட்டு இவ்வளுவு தூரம் வரேன். எனக்கு வர லாபமே ஒத்த ரூபாதான், அதுலயும் ரெண்டு ரூபா கொறச்சி கேட்கிறே, கட்டுப்படி ஆகாது.

ரொம்ப பேசாதே, அப்புறம் இந்த அபார்ட்மென்ட் இருக்குற பக்கமே வர முடியாது பண்ணிருவேன்.

அட அவர் நியாமான விலைதான் சொல்றாரு, அவர் கேட்குரத கொடுத்திருங்க.

நீ என்ன ரெகமண்டா நாம கொடுக்கிற விலைக்கு எப்பவுமே ஒரு அர்த்தம் இருக்கணும், நியாமான விலையாகவும் இருக்கணும், இந்தப்பா இதுல நீ சொன்னத விட ரெண்டு ரூபா கம்மியா இருக்கு வாங்கிகிட்டு போய் கிட்டே இரு. கொடு மகராசா, இனிமே இந்த பக்கமே வர மாட்டேன்.

******** ********** ***********

என்னங்க இவ்வளவு கூட்டமா இருக்கு, வாங்க போயிட்டு இன்னோர் நாள் வந்துக்கலாம்.

தலைவர் படம் முதல் நாள், முதல் ஷோ பார்த்தே ஆகணும்,
யாம் இருக்கா பயம் ஏன், நீ இங்கே இரு, இதோ இப்ப வந்திடறேன்.

இதோ பார், ஐயா அடிச்சிபுடிச்சி டிக்கெட் வாங்கிட்டேன், ஆமாங்க 30 ரூபா டிக்கெட்ட நியமாமாவும், அர்த்தத்துடனும் 100 ரூபா கொடுத்து வாங்கிடீங்க.


4 comments:

பூங்குன்றன்.வே said...

/ஆமாங்க 30 ரூபா டிக்கெட்ட நியமாமாவும், அர்த்தத்துடனும் 100 ரூபா கொடுத்து வாங்கிடீங்க.//

பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :)

நம்மில் பல பேர் இப்படிதான் இருக்கோம் பாஸ். நல்லா இருக்கு பதிவு.

shortfilmindia.com said...

irreversable

cablesankar

சைவகொத்துப்பரோட்டா said...

@பூங்குன்றன்.வே

மிக்க நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

கேபிள் சங்கர் சார்

நீங்களும் நான் எழுதினத படிக்கிறீங்களா, எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

நன்றி.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)