Monday, December 6, 2010

சிக்கு புக்கு கலர்புல் கோச்

செவியை கிழிக்கும் கூச்சல்கள், பன்ச் டயலாக்ஸ் இல்லாமல் மீண்டும் ஒரு படம் என்பதே சற்று ஆறுதலாக இருந்தது. நன்றி இயக்குனர் K. மணிகண்டன்.

கதை என்று பார்த்தால் 1985 -இல் அப்பாவின் காதல் (ஆர்யா, ப்ரீதிகா)
2010 -இல் மகனின் காதல்(தானா என்று யோசிக்க வைக்கிறது)
இரண்டும் என்னவாகிறது என்பதுதான்.

உண்மையில் முதல் ஹீரோ போடோக்ராபில் அசத்தி இருக்கும் R.B. குருதேவ்தான். காரைக்குடி, குன்னூர், கர்நாடகா, லண்டன் காட்சிகள் அனைத்தும் கண்ணுக்கு குளுமை, கை தேர்ந்த ஓவியன் வரைந்து வைத்த ஓவியம் போல் இருக்கிறது காட்சிகள்.



1985 ஆர்யாவின் கெட்டப்பும் நடிப்பும் சாந்தமாய் இருக்கிறது, தாத்தா ரவிச்சந்திரன், ஆச்சி சுகுமாரி மற்றும் நிறய நடிகர்கள் பட்டாலங்களுக்கிடையே ஆர்யா - ப்ரீதிகா காதலை சற்றே நகைச்சுவை கலந்து காட்சிகளை நகர்த்தி உள்ளார்கள்.
ஆனால் அம்மணி ப்ரீதிகாவின் முகம் இந்த கூட்டத்தில் ஒட்டவில்லை,
வேற்றுகிரகவாசி போல் இருக்கிறது.




ட்ரைனிங் கேம்பில் ஆர்யாவின் நண்பனாக வரும் நபர்(பெயர் தெரியவில்லை) தன் காதல் ஒருதலையாகிப்போனதை தெரிந்து கொண்ட பின்னர் அந்த வலியை காட்டும் காட்சியில் மனிதர் அசச்தி இருக்கிறார்.
சந்தானம், வையாபுரி, பாண்டு வந்து போகிறார்கள்.

2010 - காட்சிகள் அவ்வளவாக ஒட்டவில்லை, ஸ்ரேயாவின் கேரக்டர் ஓவர் அலட்டலாய் இருப்பதால் எரிச்சல்தான் மிஞ்சுகிறது.
ஆனால் ட்ரெயின், லாரி, சாலையில் நடைப்பயணம் என்று அவர்கள் செல்லும் காட்சிகள்
கண்ணுக்கு குளுமை!

இசை, ஹரிஹரன் - லெஸ்லி பாடல்களும், பின்னணியும் சுமார் ரகமே மனதில் ஒட்டவில்லை.

1985 காதலை மட்டுமே
எடுத்துக்கொண்டு கதையை நகர்த்தி இருந்தால் இன்னும் சிறப்பாக
வந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

மொத்தத்தில், நீராவி எஞ்சின் இதம் (1985 காட்சிகள்)
எலெக்ட்ரிக் எஞ்சின் கலர்புல் (2010 காட்சிகள்)

Picture thanks to:indiaglitz.com

31 comments:

Prasanna said...

வாங்க வாங்க.. வேலைப்பளு அதிகமா :)

தமிழ் உதயம் said...

மொத்தத்தில், நீராவி எஞ்சின் இதம் (1985 காட்சிகள்)
எலெக்ட்ரிக் எஞ்சின் கலர்புல் (2010 காட்சிகள்);,...///]

உவமை அழகு

Unknown said...

//1985 காதலை மட்டுமே
எடுத்துக்கொண்டு கதையை நகர்த்தி இருந்தால் இன்னும் சிறப்பாக
வந்திருக்குமோ என்று தோன்றுகிறது//
அதே தான்! :-)

RVS said...

"உலகெங்கும் கிளைகள்" தொடங்கி வளர்ந்ததற்கு வாழ்த்துக்கள். சிம்பிள் விமர்சனம். கடைசி பாரா அருமை.. ;-)

Chitra said...

2010 - காட்சிகள் அவ்வளவாக ஒட்டவில்லை, ஸ்ரேயாவின் கேரக்டர் ஓவர் அலட்டலாய் இருப்பதால் எரிச்சல்தான் மிஞ்சுகிறது.


......ஹி,ஹி,ஹி,.....Shreya is "acting"????

எல் கே said...

நல்ல விமர்சனம்

வைகை said...

காரைகுடின்னு சொல்லி எங்க ஊர ஏன் இப்பிடி கேவலப்படுத்துறாங்க?!! பரிசல் போற காரைக்குடி நான் இதுவரைக்கும் பாத்ததில்ல, 1985- இல் இவ்வளவு மாடர்ன் உடை போட்ட பெண்களை நான் காரைக்குடியில் பாத்ததில்லை!!

Anonymous said...

நீங்க மட்டும் தான் இந்தப் படத்துக்கு பாசிடிவ் விமர்சனம் எழுதியிருக்கீங்க பாஸ்!
விமர்சனம் நல்லாயிருக்கு ;)

சசிகுமார் said...

அருமை நண்பா

சைவகொத்துப்பரோட்டா said...

@Prasanna
வரவேற்பிற்கு நன்றி பிரசன்னா, ஆம் சற்றே கூடுதல்.

@தமிழ் உதயம்
கருத்துக்கு நன்றி நண்பரே.

@ஜீ...
உங்களோட கருத்தும் அதேதானா! நன்றி ஜி.

@RVS
ஹி...ஹி...குழந்தை என்பதை, நண்பர் பிரபாகர் மாற்ற சொல்லியதால் இப்படி :)) நன்றி RVS.

@Chitra
அந்த கேரக்டர் எரிச்சல் தரும் வகையில் படைக்கப்பட்டு இருக்கிறது சித்ரா, நன்றி.

@LK
நன்றி கார்த்திக்.

@வைகை
அப்போ அது காரைக்குடி இல்லையா, தகவல்களுக்கு நன்றி நண்பரே.

@Balaji saravana
ரொம்ப எதிர் பாத்துறாதீங்க பாலாஜி, சுமார் ரகம்தான், ஆனால் இந்த படத்துக்கு ஏன் வந்தோம்ன்னு பீல் பண்ற அளவுக்கு மோசம் இல்லை :))
நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

@சசிகுமார்
நன்றி சசி.

Unknown said...

நல்ல விமர்சனம்
நீண்ட நாள் கழித்து..

அப்போ பார்க்கலாம் சொல்றீங்க ஓகே ..

rightu..

சைவகொத்துப்பரோட்டா said...

@siva
பாலாஜிக்கு சொன்னதை மீண்டும் ரிப்பீட்டுகிறேன் :))
நன்றி சிவா.

r.v.saravanan said...

பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே என்று நினைத்தேன் விமர்சனம் நன்று

க ரா said...

நண்பா விமர்சனம் பின்றிங்க... நந்தலாலா பார்த்துட்டு அதுக்கும் விமர்சனம் எழுதுங்க..

Riyas said...

படத்தை பற்றி நல்லா சொல்லியிருக்கிங்க..

ரொம்ப ஆணியோ ரொம்ப நாளா கடப்பக்கம் கானோம்

சைவகொத்துப்பரோட்டா said...

@r.v.saravanan
நன்றி சரவணன்.

@இராமசாமி
நிசமாத்தான் சொல்றீயளா, அந்தப்படம் இன்னும் பார்க்கவில்லை ராம்.
கருத்துக்கும், ஊக்கத்திற்கும் நன்றி ராம்.

@Riyas
ஹி...ஹி... அதேதான்! கருத்துக்கு நன்றி ரியாஸ்.

ஸ்ரீராம். said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விமர்சனத்துடன் வெளிப்பாடா....சுருக்...நறுக்...

சைவகொத்துப்பரோட்டா said...

@ஸ்ரீராம்.
நன்றி அண்ணா.

Unknown said...

நன்றாக விமர்சிச்சிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

சைவகொத்துப்பரோட்டா said...

@பதிவுலகில் பாபு
கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி பாபு.

Philosophy Prabhakaran said...

வாங்க சைக்கோ... அட உங்க பேரைத் தான் சுருக்கி சொன்னேன்... என்ன இது சின்ன விமர்சனம்... பெருசா எழுத வேண்டியது தானே...

சைவகொத்துப்பரோட்டா said...

@philosophy prabhakaran
நிறைய எழுதும் அளவுக்கு விஷயம் இல்லையே நண்பா. அதுசரி பதிவுலகின் குழந்தை என்பதை மாத்தியாச்சு, பாத்தீங்களா. நன்றி.

Anonymous said...

அண்ணாத்தை... வந்துட்டீங்களா???
எங்க போனீங்க இத்தன நாளா???
வந்ததும் விமர்சனமா???
ஆனா விமர்சனத்தை இன்னும் கொஞ்சம் தெளிவா அலசியிருக்கலாம்ல.. சுருக்கிட்டீங்களே அண்ணாத்தை..
சரி நம்ம ப்ளாக் பக்கமும் அப்டியே வர்றது...

சைவகொத்துப்பரோட்டா said...

@இந்திரா
வாங்க தங்கச்சி, உங்க ப்ளாக் பக்கம் வந்து கொண்டுதான் இருக்கிறேன். கொஞ்சம் சோகமா இருக்கிற மாதிரி தெரிஞ்சது,அதான் என்ன கமென்ட் போடுவது எனதெரியாமல் அப்படியே சென்று விட்டேன்.

மாதேவி said...

நல்ல விமர்சனம்.

நன்றி சைவகொத்துப்பரோட்டா.

சைவகொத்துப்பரோட்டா said...

@மாதேவி
நன்றி மாதேவி.

தல தளபதி said...

எனக்கு புடிச்ச பாட்டு zaaraa zaaraa...

சைவகொத்துப்பரோட்டா said...

@தல தளபதி
வாங்க பாஸ், பகிர்வுக்கு நன்றி.

Jaleela Kamal said...

விமர்சனம் அருமை ,

More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)