Sunday, December 20, 2009

நீங்களும் கடவுள்தான்

தானத்தில் சிறந்த ஒன்று "இரத்த தானம்." நாம் உயிருடன்
இருக்கும் பொழுதே கொடுக்க முடிவது, மேலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கொடுக்க முடிவது இதன் சிறப்பு.

நம்மில் பலருக்கு இந்த பக்கம் போகவே பயமாக இருக்கும் (என்னையும் சேர்த்துதான்), சில சந்தேககங்களும் இருக்கும், அதை
பற்றி, நான் படித்து தெரிந்து கொண்டதை உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்.

யார் எல்லாம் இரத்த தானம் கொடுக்க முடியும்?

குறைந்த பட்ச வயது 17 ஆவது இருக்க வேண்டும்

உங்கள் எடை குறைந்தது 49.90kg-யாவது (அதாவது 50-kg) இருக்க வேண்டும். (இவை அடிப்படை தகுதிகள் மட்டுமே)

யார் எல்லாம் இரத்த தானம் கொடுக்க முடியாது?

ஹெபடைடிஸ், எய்ட்ஸ், கான்செர், இருதய நோய் உள்ளோர், சமீபமாக
அறுவை சிகிச்சை செய்து கொண்டோர் கொடுக்க முடியாது.

உடல் நிலை சரி இல்லாதோர், சளி, பல் வலி, உடையோர், கர்ப்பிணிகள், புதிதாக பிரசவித்தவ தாய்மார்கள் கொடுக்க முடியாது

நாம் சென்றவுடன் இரத்தம் எடுத்து விட மாட்டார்கள், அதற்கு
முன் சில பரிசோதனைகள் இருக்கின்றன

நம் இரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபின் அளவு, நம் நாடித்துடிப்பு, blood pressure, உடல் வெப்பநிலை ஆகியவை முதலில் சரியாக உள்ளதா என பரிசோதனை செய்யப்படும்.
எவ்வளவு நேரம் ஆகும் என்றால்,

சுமார் ஒரு மணி நேரத்தில் முடியும், (10 நிமிடம் இரத்தம் கொடுக்க , 15 நிமிடம் கட்டாய ஓய்வு)

சிலருக்கு வலிக்குமோ என்ற கேள்வி எழும்,

முதலில் needle சொருகும் பொழுது சிறய வலி இருக்கும், பின்னர் வலி இருக்காது.



இரத்தம் கொடுப்பதற்கு முன் நாம் வழக்கமாக என்ன சப்பிடுவோமோ
அந்த உணவு வகைகளே சாப்பிடலாம்.(உணவு கட்டுப்பாடு இல்லை)

நாம் இரத்தம் கொடுப்பதால் நம் இரத்த அளவு குறையுமோ என
பயப்பட தேவை இல்லை.


24 மணி நேரத்தில் நாம் கொடுத்த இரத்தம் ஊறி விடும்.
ஆனால், இரத்தத்தில் பிளாஸ்மா உருவாக 2 - 3 நாட்கள் ஆகும்
சிகப்பு அணுக்கள் உருவாக 4 இல் இருந்து 8 வாரங்கள் ஆகும்.

தானம் கொடுத்த பின்னர் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியவை,

நிறய நீர் ஆகாரம் குடிக்க வேண்டும், (ஜூஸ் வகைகள்) பழங்கள், பிஸ்கட் சாப்பிட வேண்டும்

24 மணி நேரத்திற்கு, கடுமையான வேலைகளை தவிர்த்தல்.
வேண்டும்.

4 முதல் 5 மணி நேரம் வரை கண்டிப்பாக கடினமான பொருட்களை தூக்க கூடாது

எத்தனை கால இடை வெளியில் கொடுக்கலாம் என பார்த்தால்,

56 -நாட்களுக்கு (8 வாரம்) ஒரு முறை கொடுக்கலாம் (12 வாரம் ஒரு முறை நல்லது)

பிறர் நலத்தில் சுய நலம் போல், கொடுப்பதால், நமக்கும் சில
நன்மை கிடைக்கும். அவை,

நம் உடலில் தோராயமாக 650 கலோரிகள் எரிக்கபடுகிறது.

இருதய நோய் இன் தீவிரத்தை குறைக்கும்.

அளவுக்கு அதிகமாக உள்ள இரும்புசத்து குறையும்

இரதத்தில் உள்ள நச்சு இரசாயன பொருட்களின் அளவு (e.g: mercury, pesticides, fire retardants) சீராகும்.

எடுக்கப்பட்ட இரத்தம் 42 நாள் வரை பாதுகாப்பாக வைக்க முடியும்.

(ஒரு யூனிட் என்பது 450 மில்லிமீட்டர் ஆகும்.)

A, B. குரூப் கொண்டவர்கள் - O குரூப் இடம் இருந்து பெற முடியும்.

O குரூப் மற்றஒரு O கருப் இடம் இருந்து மட்டுமே பெற முடியும் ( rh காரணியும் பொருந்தினால்)

நீங்கள் கொடுக்கும் இரத்தத்தால் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும், பலருக்கு உயிர் அளிக்கிறீர்கள்.


எனவே, நீங்களும் கடவுள்தான்.


டிஸ்கி:இது ஒரு கட்டுரை தொகுப்பு மட்டுமே, மேலதிக விவரங்களுக்கு மருத்துவர் ஆலோசனை பெறவும்.

2 comments:

aazhimazhai said...

நல்ல விஷயம் பகிர்ந்தமைக்கு நன்றிகள்

சைவகொத்துப்பரோட்டா said...

@ஆழிமலை


உங்கள் கருத்தை கூறியதற்கு நன்றி

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)