Saturday, December 5, 2009

தேர்தல்

இன்றய களத்தில் மூன்று வேட்பாளர்கள், முதலாமவர் இவருக்கு சமவெளியினை விட மலை பிரதேசம் மிகவும் பிடிக்கும், பொழுதுபோக்கு:அறிக்கை விடுவது, பிடித்தவர்கள்:பார்த்தவுடன் வெட்டிய மரமாக சாயும் அனைவரும்.

அம்மம்மா இதோ இவரின் க்ளிப்பிங்க்ஸ்:

கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் இருப்பதை அவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். கூட்டணியிலிருந்து விலகிய பின் அ.தி.மு.க., குறித்து ராமதாஸ் கூறிய கருத்துக்கு நான் மதிப்பளிக்க விரும்பவில்லை. பதில் அளித்து எனது தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை.


இரண்டாமவர் இவருக்கு அடிக்கடி மவுன வலி வரும்

தல (கொஞ்சம் வயசான) இதோ இவரின் க்ளிப்பிங்க்ஸ்

கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்பர். அப்படியானால் கங்கை நீருக்குள் எப்போதும் வசித்து வரும் தவளை, தேரை, மீன் போன்றவற்றின் பாவம் அழிந்து சொர்க்கத்துக்குச் செல்கின்றனவா என்பது போன்ற கருத்துக்களைக் கன்னட அறிஞர் சர்வக்ஞர் பாடல்களில் பார்க்கலாம்

மூன்றாமவர்: "இவர் நம்மவர்", கொஞ்ச நேரம் கூட பேச முடியாது அழுது விடுவார், தமிழ்நாட்டை
நடந்தே அளந்தவர் என்ற சிறப்பு உடையவர் (நமக்கும் இதை மட்டும்தானே செய்ய முடியும், அதனாலதான் "இவர் நம்மவர்" என்று சொன்னேன்.

குண சித்திர நடிகர் அய்யகோ, இதோ இவரின் க்ளிப்பிங்க்ஸ்

பெரியாறு அணை உரிமைக்காக, 30 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.


எல்லாம் சற்றே பழைய படமாக இருந்தாலும், மனசு வச்சு உங்க ஓட்ட குத்துங்க, இந்த வார சிறந்த பேச்சாளர் வரும் திங்கள் அன்று அறிவிக்கபடுவார்.

2 comments:

Raju said...

பரவாயில்லையே தல.!
அரசியல்ல அவ்ளோ ஆர்வமா..?

சைவகொத்துப்பரோட்டா said...

சில சமயம் நடக்கிற நாடகங்களை பார்த்தால், ஒன்னும் சொல்ல முடியலை, இப்படி விருதுகள் கொடுத்தாவது எல்லோரையும் சந்தோஷ படுத்துவோம். திரு.ராஜு உங்களோட வாக்கு யாருக்கு.

நன்றி.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)