Sunday, January 3, 2010

உள்ளங்கையில் உலகம்

வாசு,எப்ப பார்த்தாலும் அந்த கம்ப்யுட்டர்-ஐ கட்டி அழுதுகிட்டு இருக்காம கொஞ்சம் வீட்டுக்குள்ள
இருக்கிற எங்களையும் கவனி, என கத்துறது என்னோட அம்மா.

போம்மா, இப்ப உலகமே நம்ம வீடு மாதிரி, உள்ளங்கையில இருக்கு, உலகம் சுருங்கிருச்சும்மா,
என நான் குடி இருந்த கோவிலை அடக்கி விட்டு, வலையில் மீராவுடன் அரட்டையை தொடர்ந்தேன்.

மீரா, கடந்த ஆறு மாதமாக நெட் சாட்டிங் வாயிலாக எனக்கு அறிமுகமானாள், முதலில் சாதாரணமாக தொடங்கிய அரட்டை, இப்பொழுது அவளுடன் ஒரு நாள் சாட்டாவிட்டால் கூட "சேது" மாதிரி
விட்டத்தை பார்க்கும் நிலை, அவளுக்கும் "அதே."

இது வரை அவள் முகத்தை, ஏன் போட்டோ கூட என் கண்ணில் காட்டவில்லை. ஆனால் நான் என்னோட திருமுகம் மட்டுமில்லாது, இலவச இணைப்பா என்னோட நாற்புறமும் தெரியிற மாதிரி விதவிதமான போசுல
போட்டோ எடுத்து
அவளுக்கு அனுப்பினேன். ஆனா அந்த கள்ளி, அதுக்கப்புறம் கூட அவளோட சுண்டு விரலைக்கூட படம் எடுத்து அனுப்பல.

நாளை நல்ல முகூர்த்த நாள் போல,
ஒரு காபி ஷோபில் எங்க நட்புப்பாலத்தின்
திறப்பு விழா.

விடிந்தும் விடியாத காலை நேரத்தில் எழுந்து, மூணு நாள் முள்ளு
காட்டை துவம்சம் செய்து விட்டு மணி எப்ப ஒன்பது ஆகும்ன்னு 90 முறை செல் போனின்
திரை பார்த்து, ஆனதும்...

ஹலோ... ஹலோ... நான் இப்ப அண்ணா சாலையில இருக்கேன், இங்க... இங்க... பாருங்க "கருப்பு கலர் பல்சர் தெரியுதா" அது நாந்தேன். விடாம என்ன பாலோவ் பண்ணுங்க.

மீரா எப்படி இருப்பா, கருப்பா, சிகப்பா,
நெட்டையா, குட்டையா என்னுள் ஆயிரம் கேள்விகள் மண்டையை
குடைந்தது. ஒரு வேளை பல் எல்லாம் நீட்டிக்கொண்டு "கல்யாண ராமன் கமல்" மாதிரி இருப்பாளோ.
இல்லை, பத்திரிகைகளில் வர மாதிரி "அவளா இவன்" ஆக
இருப்பானோ, ச்சே இது என்ன நினைப்பு,
அவ எப்படி இருந்தா எனக்கு என்ன,
இதுவரை சாட்டியதன் மூலம் அவள் மனசு கள்ளம் கபடமற்றது (!!)
என்பது மட்டும் தெரிகிறது...

நான் யோசித்து கொண்டே வந்ததில் என் முன்னே சென்ற கார் திரும்புவதை கவனிக்க வில்லை...

"சங்கி மங்கி" மாதிரி நான் விழுந்து கிடந்தது வரைதான் நினைவு இருந்தது.

சொர்க்கமா, நரகமா, இதுதான் நான் மெல்ல கண் விழித்தவுடன் என் உள் ஓடிய முதல் கேள்வி.

வாசு, உனக்கு ஒன்னும் இல்ல, அதிர்ச்சிஇனால உண்டான சின்ன மயக்கம்தான்,
அப்படின்னு சொல்ற பெரியவர் யார்னு எனக்கு தெரியல.

ரொம்ப நன்றி சார், உங்களுக்கு எப்படி என் பெயர் தெரியும், நீங்க எனக்கு தூரத்து சொந்தமா?

அந்த பெரியவர் சிரித்துகொண்டே, இந்த உலத்துல எல்லோருமே சொந்த பந்தங்கள்தான். ஆனா நாம ரொம்ப தூரம் எல்லாம் இல்ல உங்க வீட்டுக்கும், என் வீட்டுக்கும் இடையில ஒரு கான்க்ரீட் சுவர்தான் இருக்கு என்றார்.(அம்மாகிட்ட சாரி சொல்லணும், பின்ன உலகம் சுருங்கிருச்சும்மான்னு இரண்டாவது பாராவில நான்
சொன்னது தப்புதான)

அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
நன்றிகள் பல.

10 comments:

பலா பட்டறை said...

நல்லா இருக்கே நண்பரே.. :)) கமெண்ட் பத்தி கவலை படாம நல்ல கதைகளோ, கவிதைகளோ பதிவு பண்ணிக்கிட்டே இருங்க ..

குப்பன்.யாஹூ said...

These type of chat related stories, poems were popular in 1990's. Now the generation has moved into mobile phone/blackberry facebook, orkut, twitter, blogs.

சைவகொத்துப்பரோட்டா said...

@பலா பட்டறை

மிக்க நன்றி, நண்பரே.

சைவகொத்துப்பரோட்டா said...

@குப்பன்.யாஹூ

Thankyou, for your comment.

புலவன் புலிகேசி said...

சொன்ன விதம் மிக அருமை...உலகம் சுருங்கவில்லை மனித மனம்தான் சுருங்கி போயிருக்கிறது

சைவகொத்துப்பரோட்டா said...

@புலவன் புலிகேசி
//மனித மனம்தான் சுருங்கி போயிருக்கிறது//

இதேதான் நான் சொல்ல வந்தது. மிக்க நன்றி நண்பரே.

அன்புடன் மலிக்கா said...

ஆகா சூப்பராயிருக்கே
உள்ளங்கையில் உலகம். கலகுங்க சாரி கொத்துங்க பரோட்டாவை பதிவுலகில் புகுந்து விளையாடுங்க வாழ்த்துக்கள்.

நேரம்கிடைகும்போது இதையும் பாருங்க
http://fmalikka.blogspot.com/

சைவகொத்துப்பரோட்டா said...

@அன்புடன் மலிக்கா

மிக்க நன்றி, உற்சாகமாய் இருக்கிறது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

பூங்குன்றன்.வே said...

நல்ல இடுகைக்கு பாராட்டுக்கள் நண்பா.
புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

சைவகொத்துப்பரோட்டா said...

@பூங்குன்றன்.வே

மிக்க நன்றி நண்பா , உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)