ஹலோ "இது உங்கள் நேரம் பூமா" யார் பேசறது, நான் த்ரிஷா பேசறேன்,
அய்யயோ பூமாதான் பேசறதா நம்பவே முடியல,
பூமா உங்க வாய்ஸ் ச்சோ ஸ்வீட் , உங்க குரலுக்காகவே நான் இந்த ப்ரோக்ராம் பார்க்கிறேன். ரொம்ப நாள் ட்ரை பண்ணி இன்னைக்குத்தான் "லைன்" கிடைச்சது, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.
தேங்க்யு த்ரிஷா, நம்ம நேயர்களுக்காக உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்க, நான் டிகிரி முடிச்சிட்டு வீட்லதான் இருக்கேன், அப்பா, கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து கிட்டு இருக்காங்க.
ஒ... கன்கிராட்ஸ் த்ரிஷா, தேங்க்யு பூமா, நீங்க எங்க இருந்து பேசுறீங்க த்ரிஷ், திருவொற்றியூர், 4-வது தெரு, ஒ... காசி தியேட்டர் இருக்குமே அந்த தெருவா, உய்யோ அதேதான் நீங்க வந்து இருக்கின்கீங்களா. ஒரு தடவ வந்து இருக்கேன்,
த்ரிஷ் இப்ப உங்க கூட வீட்ல வேற யாரு எல்லாம் இருக்காங்க.
"நான் மட்டும் தனியாத்தான் இருக்கேன், அப்பா, அம்மா, தம்பி எல்லோரும் காஞ்சிபுரம் வரை போய்
இருக்காங்க, நாளைக்குத்தான் வருவாங்க...."
மாப்பிளே, ஒரு மாசமா பைசா தேறல்லைன்னு புலம்பிகிட்டு இருந்தியே இன்னைக்கு
இருக்குடி வருமானம், நம்ம பூமாவும்,
த்ரிஷாவும் அழகா ரூட் போட்டு கொடுத்திட்டாங்க.
"அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்" பாடல்
போடுங்க, இந்த பாட்ட என் பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் "டெடிகேட்" பண்றேன்.
பை, த்ரிஷ் இதோ நீங்க கேட்ட பாடல் வந்து கிட்டே இருக்கு, பார்த்து "என்ஜாய்" பண்ணுங்க, " இது உங்கள் நேரம்"
தேங்க்யு த்ரிஷ் எங்களுக்கும் "அக்கம் பக்கம் யாரும் இல்லா வீடுதான் வேண்டும், இது நம்ம நேரம், சீக்கிரம் கிளம்புடா மாப்பிளே தொழிலுக்கு.
6 comments:
ஹி ஹி ஹி....ஷோக்கா சொன்னீங்க போங்க...
நன்றி @புலவன் புலிகேசி, நீங்கதான் நம்ம கடைக்கு முதல் ரெகுலர் கஸ்டமர், தங்கள் வரவு நல்வரவாகுக.
தமிலிஷ் இல் பக்கத்தை இணையுங்கள் நண்பரே.. நல்ல உங்கள் படைப்புகள் பலரை சென்றடையும் .. உங்களின் நில் கவனி செல் ல்லை நான் அனுப்பி உள்ளேன். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி @பலா பட்டறை.
This is very nice and differnt
மிக்க நன்றி அனாநமிஸ்
Post a Comment