Thursday, March 11, 2010

எனக்கு பிடித்த 10 - பெண்கள் - தொடர்பதிவு

இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த சகோதரி திவ்யாஹரி
அவர்களுக்கு எனது நன்றி. (தொடர் பதிவு வாரமா இது :)) )


எங்கள் நிறுவனத்தை துவக்கவும், வளர்க்கவும், உறுதுணையாக இருந்து, இதற்காக அவருக்கு வந்த நல்ல வேலை வாய்ப்பினையும் விட்டு கொடுத்தவர், என இன்று வரை அவர் கணவரால் போற்றப்படும் சுதா நாராயணன்.
(இவரின் கணவர் நாராயணன்மூர்த்தி - இன்போசிஸ்)

இவர் பாடினால் மொக்கை பாடல் கூட கேட்க மிக இனிமையாக
இருக்கும், இவர் குரலுக்கு மட்டும் இன்னும் வயதாகவில்லை,
பின்னணி பாடகி S.ஜானகி.

படிக்கும் காலத்தில் எனக்கு மிக பிடித்த பொழுதுபோக்கு இலங்கை
வானொலி நிகழ்ச்சிகள் கேட்பது. நிகழ்ச்சி தொகுத்து அளிக்கும் இவரின்
பாங்கு எனக்கு மிகவும் பிடிக்கும், இவர் குரலை கேட்டாலே உற்சாகம்
தொற்றி கொள்ளும் அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம்.

பள்ளி பாடத்தில் இவரைப்பற்றி படிக்கும்பொழுதே பிடித்தது.
போலந்து நாட்டை சேர்ந்த இவர், வேதியியல் மற்றும் இயற்பியலில் நோபல் பரிசு
வென்றவர்: மேரி க்யூரி.

நகைச்சுவை பாத்திரமா, குணசித்திரமா அனைத்திலும் இவரின் முத்திரை இருக்கும். இவர் நடிக்கும் கதாபாத்திரத்துடன் நம்மை ஒன்ற செய்து விடுவார்
நடிகையர் திலகம் சாவித்திரி.

அல்பேனிய நாட்டில் பிறந்து, இந்திய குடிஉரிமை பெற்று, ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் உதவியவர்
பாரத ரத்னா விருது பெற்ற அன்னை தெரேசா.

பொதுவாக, திருமணம் ஆகிவிட்டாலே, விளையாட்டில் இருந்து விலகி கொள்பவர்கள் அதிகம். ஒரு குழந்தைக்கு தாயான போதும் இரண்டாவது முறையாக us open - champion - பட்டம் வென்றவர், டென்னிஸ் வீராங்கனை Kim clijsters.

தொடர்ந்து மூன்று முறை இந்திய பிரதமராக இருந்தவர், மூன்று
ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நான்காவது தடவையாக தேர்ந்து
எடுக்க பட்டவர் இந்திரா காந்தி.

வானொலியில் செய்தி கேட்கும் வழக்கம் உடையவர்கள் கண்டிப்பாக
இவரது குரலை கேட்டு இருப்பீர்கள், இந்த வெண்கல குரல் எனக்கு
பிடித்த ஒன்று, குரலுக்கு சொந்தக்காரர் சரோஜ் நாராயணசுவாமி.

மின்சார ரயில் பயணத்தின்போது, சுருதி சுத்தமாக ஒரு பின்னணி
பாடகியின் நேர்த்தியுடன் பாடும் கண் பார்வை மட்டும் இழந்த
பெயர் தெரியாத, அந்த பெண்மணி(கள்).

இந்த தொடர் பதிவை தொடர, இவர்களை அன்போடு அழைக்கிறேன்:

இராமசாமி கண்ணண்

Starjan ( ஸ்டார்ஜன் )

சேட்டைக்காரன்

ஜீவன்சிவம்

ட்ரீமர்


நிபந்தனைகள் :உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,வரிசை முக்கியம் இல்லை.,ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து
*********************************************************************


அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

50 comments:

இராமசாமி கண்ணண் said...

நன்றி சைவகொத்துப்பரோட்டா பகிர்விற்கும் அழைப்பிற்கும்.

ர‌கு said...

ந‌ல்ல‌ தேர்வு, Kim Clijsters comebackஅ பாத்து நானும் அச‌ந்துபோனேன்:)

Chitra said...

உங்கள் மனசுல பட்டத சட்டுன்னு சொல்லிட்டீங்க.

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள், நல்ல தேர்வும் அதன் விளக்கங்களும் அருமை. மிகவும் நன்றி.

அன்புடன் மலிக்கா said...

அருமையான தேர்வு அதிலும்

[மின்சார ரயில் பயணத்தின்போது, சுருதி சுத்தமாக ஒரு பின்னணி
பாடகியின் நேர்த்தியுடன் பாடும் கண் பார்வை மட்டும் இழந்த
பெயர் தெரியாத, அந்த பெண்மணி(கள்). ]

மிக அருமை.அருமை..வாழ்த்துக்கள்

சேட்டைக்காரன் said...

அருமையான பதிவு அண்ணே! பாராட்டுக்கள்!!

சசிகுமார் said...
This comment has been removed by the author.
சசிகுமார் said...

நம்பள தான் யாரும் கூப்பிட மாட்டேங்குறாங்க சரி நமக்கு தெரிஞ்சத சொல்லுவோம்.இதில் அறிவியலுக்காக தன் இன்னுயிரை ஈண்ட கல்பனா சாவ்லா பெயரையும் சேர்த்திருக்கலாம் . நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

கலா ரசிகரா இருக்கிகளே (நான் பக்கத்து வீட்டு கலாவ சொல்லல )

பின்னோக்கி said...

சாவித்திரி, மேரி, தெரசா எனக்கும் பிடிக்கும்

பின்னோக்கி said...

சாவித்திரி, மேரி, தெரசா எனக்கும் பிடிக்கும்

டக்கால்டி said...

//எங்கள் நிறுவனத்தை துவக்கவும், வளர்க்கவும், உறுதுணையாக இருந்து, இதற்காக அவருக்கு வந்த நல்ல வேலை வாய்ப்பினையும் விட்டு கொடுத்தவர்//

நான் கூட அதே கம்பெனி தான் நைனா...

தமிழ் உதயம் said...

ராஜேஸ்வரி சண்முகத்தை மறக்க முடியுமா.

நாடோடி said...

கடைசி பெண்மணிகளின் விளக்கம் அருமை...

கட்டபொம்மன் said...

அட அட ரொம்ப நல்லாருக்கே...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமை நண்பா.. உங்களுக்கு பிடித்த பெண்கள் எனக்கும் பிடித்தவர்கள்..

தொடர் அழைப்புக்கு மிக்க நன்றி. என்னோட கருத்துக்களை பகிர்ந்து கொள்வேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

//இராமசாமி கண்ணண் said...
நன்றி சைவகொத்துப்பரோட்டா பகிர்விற்கும் அழைப்பிற்கும்.//

நன்றி ராம், கருத்துக்கும், உங்கள் பதிவிற்கும்.


//ர‌கு said...
ந‌ல்ல‌ தேர்வு, Kim Clijsters comebackஅ பாத்து நானும் அச‌ந்துபோனேன்:)//

உங்களுக்கும் பிடிக்குமா, அவங்களோட அலட்டல் இல்லாத ஆட்டம் அருமை.
நன்றி ரகு.

சைவகொத்துப்பரோட்டா said...

//Chitra said...
உங்கள் மனசுல பட்டத சட்டுன்னு சொல்லிட்டீங்க.//

ஆமா....இந்த வாசகத்தை எங்கேயோ பார்த்த நினைவு.......... :))
நன்றி சித்ரா.


//பித்தனின் வாக்கு said...
நல்ல கருத்துக்கள், நல்ல தேர்வும் அதன் விளக்கங்களும் அருமை. மிகவும் நன்றி.//

நன்றி நண்பரே, உங்கள் கருத்துக்கு.

Jaleela said...

நீங்கள் தேர்ந்தெடுத்த பத்து பெண்மணிகளும் சூப்பர்.

சைவகொத்துப்பரோட்டா said...

// அன்புடன் மலிக்கா said...
அருமையான தேர்வு அதிலும்

[மின்சார ரயில் பயணத்தின்போது, சுருதி சுத்தமாக ஒரு பின்னணி
பாடகியின் நேர்த்தியுடன் பாடும் கண் பார்வை மட்டும் இழந்த
பெயர் தெரியாத, அந்த பெண்மணி(கள்). ]

மிக அருமை.அருமை..வாழ்த்துக்கள்//

உங்களுக்கும் பிடித்து இருக்கிறதா, நன்றி மலிக்கா.


// சேட்டைக்காரன் said...
அருமையான பதிவு அண்ணே! பாராட்டுக்கள்!!//

நன்றி நண்பா, உங்களையும் இதை தொடர அழைத்து இருக்கிறேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

//சசிகுமார் said...
நம்பள தான் யாரும் கூப்பிட மாட்டேங்குறாங்க சரி நமக்கு தெரிஞ்சத சொல்லுவோம்.இதில் அறிவியலுக்காக தன் இன்னுயிரை ஈண்ட கல்பனா சாவ்லா பெயரையும் சேர்த்திருக்கலாம் . நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

கல்பனாவும் சிறந்த பெண்மணிதான், நீங்களும் தொடருங்கள் சசி, நன்றி கருத்துக்கும், வாழ்த்துக்கும்.// மங்குனி அமைச்சர் said...
கலா ரசிகரா இருக்கிகளே (நான் பக்கத்து வீட்டு கலாவ சொல்லல )//

ஹா.....ஹா.....நன்றி அமைச்சரே.

சைவகொத்துப்பரோட்டா said...

// பின்னோக்கி said...
சாவித்திரி, மேரி, தெரசா எனக்கும் பிடிக்கும்//

அப்படியா!! மிக்க மகிழ்ச்சி, நன்றி உங்கள் கருத்துக்கு.// டக்கால்டி said...
//எங்கள் நிறுவனத்தை துவக்கவும், வளர்க்கவும், உறுதுணையாக இருந்து, இதற்காக அவருக்கு வந்த நல்ல வேலை வாய்ப்பினையும் விட்டு கொடுத்தவர்//

நான் கூட அதே கம்பெனி தான் நைனா...//

அப்படியா!! வசதியா போச்சு, அப்படியே நம்ம கடைய உங்க தோஸ்துங்க எல்லோருக்கும்
அறிமுக படுத்துங்க :))
நன்றி நண்பரே.

சைவகொத்துப்பரோட்டா said...

// தமிழ் உதயம் said...
ராஜேஸ்வரி சண்முகத்தை மறக்க முடியுமா.//

முடியவே முடியாது :)) நன்றி நண்பரே.// நாடோடி said...
கடைசி பெண்மணிகளின் விளக்கம் அருமை...//

நன்றி நண்பரே, இவர்களை அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

// கட்டபொம்மன் said...
அட அட ரொம்ப நல்லாருக்கே...//

அப்படியா, மகிழ்ச்சி...... தொடர்ந்து வாருங்கள் நண்பரே.


// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமை நண்பா.. உங்களுக்கு பிடித்த பெண்கள் எனக்கும் பிடித்தவர்கள்..

தொடர் அழைப்புக்கு மிக்க நன்றி. என்னோட கருத்துக்களை பகிர்ந்து கொள்வேன்.//

நன்றி நண்பரே, காத்திருக்கிறேன் உங்களின் பகிர்வுக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

//Jaleela said...
நீங்கள் தேர்ந்தெடுத்த பத்து பெண்மணிகளும் சூப்பர்.//

மிக்க நன்றி அக்கா, உங்களின் ரெசிப்பிகளும் அருமைதான்.

அக்பர் said...

//உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.//

சேச்சே அந்த தப்பை யாரும் பண்ண மாட்டாங்க.

உங்க செலக்ஷன் அருமை ஜி.

சைவகொத்துப்பரோட்டா said...

// அக்பர் said...
//உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.//

சேச்சே அந்த தப்பை யாரும் பண்ண மாட்டாங்க.

உங்க செலக்ஷன் அருமை ஜி.//


ஹா..........ஹா.......
நன்றி அக்பர்.

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

:)

சைவகொத்துப்பரோட்டா said...

// வெள்ளிநிலா ஷர்புதீன் said...
:)//


புன்னகைக்கு நன்றி ஷர்புதீன்.

ஸ்ரீராம். said...

சுதா நாராயணமூர்த்தி, ராஜேஸ்வரி சண்முகம், சரோஜ் நாராயணசுவாமி....

வித்யாசமான தெரிவு

மன்னார்குடி said...

கிம் க்ளைஸ்டர்ஸ் அருமையான தேர்வு. அமெரிக்க ஒப்பன் பட்டத்தை வென்ற பிறகு அவர் குழந்தையுடன் கொண்டாடிய அழகே அழகு.

lolly999 said...

mmmmm......very nice thnnks!

சைவகொத்துப்பரோட்டா said...

// ஸ்ரீராம். said...
சுதா நாராயணமூர்த்தி, ராஜேஸ்வரி சண்முகம், சரோஜ் நாராயணசுவாமி....

வித்யாசமான தெரிவு//


மறக்க முடியாத நபர்கள், நன்றி அண்ணா.// மன்னார்குடி said...
கிம் க்ளைஸ்டர்ஸ் அருமையான தேர்வு. அமெரிக்க ஒப்பன் பட்டத்தை வென்ற பிறகு அவர் குழந்தையுடன் கொண்டாடிய அழகே அழகு.//

உங்களுக்கும் பிடிக்குமா.... மகிழ்ச்சி........
நன்றி நண்பரே.//lolly999 said...
mmmmm......very nice thnnks!//

மிக்க நன்றி தோழி.

Sivaji Sankar said...

நல்லா தேர்வு ரசித்தேன்..

சைவகொத்துப்பரோட்டா said...

// Sivaji Sankar said...
நல்லா தேர்வு ரசித்தேன்..//


அப்படியா.........மகிழ்ச்சி......
நன்றி சங்கர்.

ஜாக்கி சேகர் said...

சுதா நாராயணனை எனக்கு ரொம்ப பிடிக்கும்இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் பேக் போன்... அது போல இந்த ஜாக்கியின் பேக் போன் சுதாஜாக்கிசேகர்...

நல்ல பதிவு பதிவுலக குழந்தை..

சைவகொத்துப்பரோட்டா said...

// ஜாக்கி சேகர் said...
சுதா நாராயணனை எனக்கு ரொம்ப பிடிக்கும்இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் பேக் போன்... அது போல இந்த ஜாக்கியின் பேக் போன் சுதாஜாக்கிசேகர்...

நல்ல பதிவு பதிவுலக குழந்தை..//

நன்றி தல, உங்கள் கருத்து பகிர்வுக்கு.

thenammailakshmanan said...

சரோஜ் நாராயணசாமியும் ராஜேஸ்வரி சண்முகமும் எனக்கும் மிகப் பிடித்தவர்கள் சை கொ ப

சைவகொத்துப்பரோட்டா said...

// thenammailakshmanan said...
சரோஜ் நாராயணசாமியும் ராஜேஸ்வரி சண்முகமும் எனக்கும் மிகப் பிடித்தவர்கள் சை கொ ப//


மிக்க மகிழ்ச்சி அக்கா........நன்றி உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

test

vidivelli said...

நல்ல தெரிவு.......
வாசித்தேன் அறிந்து கொண்டேன்..................
தொடருங்கள்........................

சைவகொத்துப்பரோட்டா said...

// vidivelli said...
நல்ல தெரிவு.......
வாசித்தேன் அறிந்து கொண்டேன்..................
தொடருங்கள்........................//

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சூப்பர்..:)

சைவகொத்துப்பரோட்டா said...

// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
சூப்பர்..:)//


நன்றி ஷங்கர்.

ஜீவன்சிவம் said...

என்னையும் மதித்து தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி சைகொப .
கொஞ்சம் லேட்டானாலும் பதிவிடுகிறேன். ஆம்மாம்....சரோஜ் நாராயணசுவாமி என்பது பெண்ணா..
அந்த கண்ணீர் குரலுக்கு சொந்தக்காரர் ஆண் என்றுதான் இதனை நாளும் நினைத்திருந்தேன்..

சரி சரி....இவனல்லாம் பத்து பெண்களை பற்றி எழுதி நாசமா போச்சுன்னு...தானே சிரிக்கிறீங்க....
வரேன் வரேன்....நல்ல லிஸ்டோட வரேன்...

சைவகொத்துப்பரோட்டா said...

// ஜீவன்சிவம் said...
என்னையும் மதித்து தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி சைகொப .
கொஞ்சம் லேட்டானாலும் பதிவிடுகிறேன். ஆம்மாம்....சரோஜ் நாராயணசுவாமி என்பது பெண்ணா..
அந்த கண்ணீர் குரலுக்கு சொந்தக்காரர் ஆண் என்றுதான் இதனை நாளும் நினைத்திருந்தேன்..

சரி சரி....இவனல்லாம் பத்து பெண்களை பற்றி எழுதி நாசமா போச்சுன்னு...தானே சிரிக்கிறீங்க....
வரேன் வரேன்....நல்ல லிஸ்டோட வரேன்...//

வாருங்கள் உங்கள் லிஸ்ட் உடன், ஆவலாய் காத்திருக்கிறேன்.
நன்றி நண்பரே.

ஹுஸைனம்மா said...

உங்களின் இந்தப் பதிவிலிருந்து சில விவரங்கள் என் இந்தப் பதிவில் பயன்படுத்திக் கொண்டேன், ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!!

சைவகொத்துப்பரோட்டா said...

// ஹுஸைனம்மா said...
உங்களின் இந்தப் பதிவிலிருந்து சில விவரங்கள் என் இந்தப் பதிவில் பயன்படுத்திக் கொண்டேன், ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!!//

எனக்கு பிடித்தவர்கள், உங்களுக்கும் பிடித்தவர்களே என்று அறிந்து கொண்டேன், மிக்க மகிழ்ச்சி.

திவ்யாஹரி said...

//வானொலியில் செய்தி கேட்கும் வழக்கம் உடையவர்கள் கண்டிப்பாக
இவரது குரலை கேட்டு இருப்பீர்கள், இந்த வெண்கல குரல் எனக்கு
பிடித்த ஒன்று, குரலுக்கு சொந்தக்காரர் சரோஜ் நாராயணசுவாமி.

படிக்கும் காலத்தில் எனக்கு மிக பிடித்த பொழுதுபோக்கு இலங்கை
வானொலி நிகழ்ச்சிகள் கேட்பது. நிகழ்ச்சி தொகுத்து அளிக்கும் இவரின்
பாங்கு எனக்கு மிகவும் பிடிக்கும், இவர் குரலை கேட்டாலே உற்சாகம்
தொற்றி கொள்ளும் அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம். //

இருவரையும் எனக்கும் பிடிக்கும் நண்பா.. நீங்கள் சொன்னது போல கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க.. நன்றி.. நேரமின்மை காரணமாக இதுவரை பின்னூட்டம் இட முடியவில்லை..

சைவகொத்துப்பரோட்டா said...

//திவ்யாஹரி said...
//வானொலியில் செய்தி கேட்கும் வழக்கம் உடையவர்கள் கண்டிப்பாக
இவரது குரலை கேட்டு இருப்பீர்கள்,.....

இருவரையும் எனக்கும் பிடிக்கும் நண்பா.. நீங்கள் சொன்னது போல கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க.. நன்றி.. நேரமின்மை காரணமாக இதுவரை பின்னூட்டம் இட முடியவில்லை..//

அப்படியா, மிக்க மகிழ்ச்சி, தாமதமானாலும் பரவாயில்லை, உங்கள்
கருத்தை சொன்னதுக்கு நன்றி சகோதரி.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)