உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் ஏறவில்லை
உன்னால்தானடா மெய் மறந்தேன் என்றாய்
பறந்தேன்
ஹைட்ரஜனும் நைட்ரஜனும் புரியவில்லை
என் ஆக்சிஜன் நீ என்றாய்
குளிர்ந்தேன்
ஒரு செல் உயிரியாம் அமீபா
நாமோ ஈருடலில் ஓருயிர் என்றாய்
நெகிழ்ந்தேன்
மல்லி படர வேண்டுமாம் பந்தல்
நீ படர நான் பந்தல் என்றாய்
பரவசமானேன்
பூமிக்கு துணையாய் நிலா
உன் வாழ்க்கை துணையாய் நான் என்றாய்
வலுவானேன்
ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்றாய்
கனவு பெருங்கடலில்
முழ்கினேன்
மணப்பந்தல் என்றதும் என் குடியில் பிறந்த
இவரே என்னவர் என்றாய்
நடை பிணமானேன்.
உன்னால்தானடா மெய் மறந்தேன் என்றாய்
பறந்தேன்
ஹைட்ரஜனும் நைட்ரஜனும் புரியவில்லை
என் ஆக்சிஜன் நீ என்றாய்
குளிர்ந்தேன்
ஒரு செல் உயிரியாம் அமீபா
நாமோ ஈருடலில் ஓருயிர் என்றாய்
நெகிழ்ந்தேன்
மல்லி படர வேண்டுமாம் பந்தல்
நீ படர நான் பந்தல் என்றாய்
பரவசமானேன்
பூமிக்கு துணையாய் நிலா
உன் வாழ்க்கை துணையாய் நான் என்றாய்
வலுவானேன்
ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்றாய்
கனவு பெருங்கடலில்
முழ்கினேன்
மணப்பந்தல் என்றதும் என் குடியில் பிறந்த
இவரே என்னவர் என்றாய்
நடை பிணமானேன்.
*************************************************************
அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.
28 comments:
நிகழ்காலத்த சொல்லிட்டீங்க..
nice n different
@அண்ணாமலையான்
மிக்க நன்றி, தங்களின் கருத்துக்கும் தொடர் வருகைக்கும்.
@angel
மிக்க நன்றி ஏஞ்சல்.
அறிவியலோடு கொணர்ந்து மனிதனின் சாதி வெறியை படம் பித்து காட்டிய கவிதை
@புலவன் புலிகேசி
நன்றி நண்பா, புலவருக்கே இந்த கவிதை பிடித்து உள்ளதா.
தலைப்பு,கவிதை,உங்கள் உணர்ச்சிகள் அனைத்தும் மிக அருமை..
@வெற்றி
மிக்க நன்றி நண்பரே. (உங்களுக்கு ஒரு உண்மை சொல்லவா, இதுவே எனது நாலாவது கவிதை முயற்சி.)
ஆமாங்க. நீங்க சொன்னது மாதிரி, கடைசியில ஏமாத்திடறாங்க :(
@பின்னோக்கி
//ஆமாங்க. நீங்க சொன்னது மாதிரி, கடைசியில ஏமாத்திடறாங்க :(//
(அச்சச்சோ பின்னோக்கி சாருக்கு ஏன் இவ்ளோ சோகம்.) தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :))
{{{{{{{{{ ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்றாய்
கனவு பெருங்கடலில்
முழ்கினேன் }}}}}}}}}
ஆஹா அற்புதமான உணர்வுகள் . அழகாக அரங்கெற்றி இருக்கிறீர்கள் .
வாழ்த்துக்கள் நண்பரே .
@சங்கர்
நன்றி நண்பா. அப்ப கூடிய சீக்கிரம் நானும் ஒரு கவிஞன் ஆகிவிடலாம் :))
வணக்கம் புலவரே..::)))
@பலா பட்டறை
வணக்கம் கவியரசரே :))
தங்கள் வரவு கண்டு யாம் மகிழ்ந்தோம்.
சாதீயத்திற்கு எதிரான குரலை நாசூக்காக எழுப்பியு்ளீர்கள். நல்ல கவிதை
@Dr.எம்.கே.முருகானந்தன்
நன்றி டாக்டர் தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
ம்ம்ம்... கரக்டா சொல்லீருக்கீங்க...
http://thisaikaati.blogspot.com
@ரோஸ்விக்
நன்றி நண்பரே, தங்கள் கருத்துக்கு.
Romba Nalla irukku.
Vazhlthukal.
Ragavachari Barathan
@ராகவாச்சாரி பரதன்
மிக்க நன்றி உங்களின் ஊக்கத்திற்கு.
முதல்லயே சொன்னா அடி சிறிதாக இருக்கும். படிப் படியா மேலே ஏற்றி மேலேருந்து கீழ தளளி விட்டா மாதிரி இல்லா இருக்கு..என்ன..கொடுமையா இல்ல இருக்கு..
@ஸ்ரீராம்
அதானே, என்ன கொடுமை சார் இது. தங்கள் கருத்துக்கு நன்றி.
எதார்த்த நிகழ்வுகளை வரிகளுக்குள் கொண்டுவந்தவிதம் அருமை..
@அன்புடன் மலிக்கா
மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு.
நல்ல கவிதை
வாழ்த்துக்கள் நண்பரே
// r.v.saravanan kudandhai said...
நல்ல கவிதை
வாழ்த்துக்கள் நண்பரே//
மிக்க நன்றி சரவணன்,
உங்களின் தொடர் பின்னூட்டங்கள்
உற்சாகம் அளிக்கிறது.
அன்பின் சைகொப
கவிதை அருமை
உவமைகள் நன்று
கற்பனை வளம் கொடி கட்டிப் பறக்கிறது
நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா
// cheena (சீனா) said...
அன்பின் சைகொப
கவிதை அருமை
உவமைகள் நன்று
கற்பனை வளம் கொடி கட்டிப் பறக்கிறது
நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா//
உற்சாகம் அளிக்கிறது உங்களின்,
பின்னூட்டங்கள்!!! நன்றி அய்யா.
Post a Comment