Wednesday, January 20, 2010

வரதட்சணை


இது வரை சினமாவில் மட்டுமே பெண் பார்க்கும் படலம் பார்த்த நான் முதன் முறையாக எனக்கான, பெண் பார்க்க வந்து இருந்தேன், அப்பா, அம்மா, அண்ணன்கள்.அக்கா, தங்கை, மாமன், அத்தை மற்றும் நண்பர்கள் படை சூழ.

வரதட்சனை வாங்க கூடாது என்ற கொள்கை வைத்து இருந்தேன்.
என் அண்டை வீட்டில், அவர்களின் மருமகள் வீட்டார் கொடுத்த
"வாக்கை" காப்பாற்ற வில்லை என அந்த பெண்ணை, அவள்
பிறந்த வீட்டிற்கே அனுப்பி விட்டனர். இந்த கொடுமைகள் எல்லாம்
பார்த்ததன் பாதிப்பினால் நாம் வரதட்சனை வாங்க கூடாது
என்பதில் உறுதியாக இருந்தேன்.

என் அம்மா, அக்காவிற்கு இதில் ஆரம்பத்தில் உடன்பாடு இல்லை
என்றாலும், அப்பா என் பக்கம் இருந்ததால் வேறு வழி இன்று
ஒத்து கொண்டனர்.

இந்த பெண்ணையும் பேப்பரில் "வரதட்சணை கொடுக்க மாட்டேன்" பகுதியில் பார்த்துதான் தேர்ந்து எடுத்தோம். இதோ இப்ப பெண் பார்க்கும் படலம்.

வந்தாள் என்(!!) தேவதை, வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்த பின்பு நாங்கள் தனியாக பேசும் வாய்ப்பு வந்தது.(ஏற்படுத்தி கொண்டேன்)

அவளிடம் உங்களுக்கு என்னை பிடிச்சு இருக்கா என்றேன், அவள் எனது கண் பார்த்து, என் அப்பா, அம்மா சரி என்றால் எனக்கும் சரிதான் என்றாள்.
அப்புறம் என்ன பேசுவது எனதெரியாமல், கொஞ்ச நேரம் "பொதுவான"
விசயங்கள் பேசி விட்டு வந்தேன்.

ஒரு வழியாக கடையில் வாங்கப்பட்ட பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் சாப்பிட்ட பின்பு வீடு வந்து
சேர்ந்தோம்.

அம்மா போடும் காபி வாசனை பிடித்து சமையலறை சென்று
அம்மாவிடம் (வெட்கம் விட்டு!!) கேட்டேன், கல்யாண தேதி எப்பம்மா குறிச்சு இருக்கே.

ரொம்ப ஆசயை வளத்துக்காதடா, என அம்மா சொன்னதும் எனக்கு சகலமும் அடங்கிவிட்டது. ஏம்மா நிறைய வரதட்சணை கேட்டு டார்ச்சர் பண்ணினயா, உனக்கு நிறைய பேராசைம்மா என்று கோபமாக கத்தினேன் அம்மாவிடம்.

பேசி முடிச்சாச்சா, பேராசைப் பட்டதும், வரதட்சணை கேட்டதும்
நானில்லடா, அவங்கதான் என்று புதிர் போட்டாள் அம்மா.

என்னம்மா சொல்லுற, புரியும்படி சொல்லும்மா.

அவங்க பொண்ணை கட்டிக்க போற மாப்பிளைக்கு சொந்தமா வீடு,
கார் எல்லாம் இருக்கனுமாம், மாச சம்பளம் "குறைஞ்ச பட்சம்" 60,000௦௦௦-ம் ஆவது இருக்கனுமாம் ,முக்கியமா கல்யாணம் முடிஞ்ச உடனே தனி குடித்தனம் போகணுமாம், அவங்க பொண்ணுக்கு வீட்டில் கூட்டமாக ஆட்கள் இருந்தால்
அலர்ஜியாம், பிடிக்காதாம், என அம்மா அவர்கள் சொன்னதை அடுக்கிகொண்டே போக எனக்கு
மயக்கமா வருது...

*************************************








அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

14 comments:

negamam said...

ரொம்ப ஆசயை வளத்துக்காதடா....

சைவகொத்துப்பரோட்டா said...

@negamam

நன்றி.

ஸ்ரீராம். said...

இதுதாங்க ட்விஸ்ட்...பாரா வோட வௌவ்வால் கவிதையும் ப்ரியமுடன் வசந்தோட எதிர்பாரா கணங்கள் பற்றிய கேள்வியும் ஞாபகம் வருது...

சைவகொத்துப்பரோட்டா said...

@ஸ்ரீராம்

மிக்க நன்றி, பெரிய லெவெல்ல என் கதையை கம்பேர் பண்ணி அலசிட்டிங்க.

thenammailakshmanan said...

சைவக்கொத்துப்பரோட்டா வரதட்சணை இல்ல ஆனா வதுதட்சணை வாங்கிருவாங்க போல இருக்கே

சைவகொத்துப்பரோட்டா said...

@தேனம்மைலக்ஷ்மணன்

//ஆனா வதுதட்சணை வாங்கிருவாங்க போல இருக்கே//

ஹா..ஹா..ஹா... நன்றி அக்கா உங்கள் பின்(ஊட்டம்)நூட்டதிற்கு.

பின்னோக்கி said...

ஓ.. இது கதையா ?.. நான் உண்மையில் நடந்தது என்று நினைத்தேன்.

இப்பொழுது, வர போற மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என பலர் எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மைதான்.

பின்னோக்கி said...

ஹி..ஹி.. இப்பத்தான் லேபிள் பார்த்தேன். கதை ரொம்ப நல்லாயிருக்கு

சைவகொத்துப்பரோட்டா said...

@பின்னோக்கி

//ஓ.. இது கதையா ?.. நான் உண்மையில் நடந்தது என்று நினைத்தேன்//

நான் அழுதிடுவேன்...

//ஹி..ஹி.. இப்பத்தான் லேபிள் பார்த்தேன். கதை ரொம்ப நல்லாயிருக்கு//

நல்ல வேளை இத போஸ்ட் பண்ணீட்டிங்க:))
மிக்க நன்றி பின்னோக்கி, தங்கள் கருத்துக்கும், வருகைக்கும்.

அண்ணாமலையான் said...

க்ளைமேக்ஸ்தான் சூப்பர்..

சைவகொத்துப்பரோட்டா said...

@அண்ணாமலையான்

மிக்க நன்றி அண்ணாமலையாரே, தொடர்ந்து உங்கள் கருத்துக்கள் எதிர் பார்க்கிறேன்

kggouthaman said...

Good.

சைவகொத்துப்பரோட்டா said...

@கேஜிகௌதமன்

மிக்க நன்றி. உங்களின் பின்னூட்டங்கள் எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

Suresh Ram said...

பெண்கள் நாட்டின் கண்கள்!!
பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்! பெண்கள் நாட்டின் கண்கள்!

http://ipc498a-misuse.blogspot.com/2010/04/blog-post.html

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)