Sunday, January 10, 2010

முதல் கொலை

நாளைக்கு நீ அவனை போட்டுறனும் மச்சான், சரியா காலைல பத்து மணிக்கு
அய்யனார் கோவில் கிட்ட வச்சு முடிக்கிற. அவன் வந்த உடன நான் அவன் பின்னால
சத்தம் இல்லாம போய் அவன வாக்கா பிடிசிக்கிறேன், நீ அவன போடுற.

ஒன்னும் பிரச்சினை ஆய்டாதே, அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடா, அவன் இருந்த சுவடு தெரியாம
பண்ணிரலாம். கைய நீட்டி காசு வாங்கியாச்சு, வாங்குன
கூலிக்கு துரோகம் பண்ணக்கூடாதுல.

இரவெல்லாம் நாளை நடக்க போவதை நினைத்து தூக்கம் வரல, என்னதான் மாமன்
காரன் சமாதானம் சொன்னாலும் எனக்கு பயமாக இருந்தது. எனக்கு இதுல முன் அனுபவம் கிடையாது. மாமன் கொடுத்த குருட்டு தைரியத்துல சரின்னு ஒதுக்கிட்டேன்.

பேசாம ராவோட ராவா எங்கையாவது ஓடிரலாமா, மனசு
கல்லு வீட்டு கடிகார பெண்டுலம் கணக்கா ஆடுச்சு, ரவை பத்து மணிவாக்கில டாஸ்மாக் போய் ஒரு கட்டிங்க போட்டதுக்கு அப்புறமா நங்கூரம் போட்ட கப்ப (கப்பல்) கணக்கா நச்சுன்னு நின்னுச்சு. வூட்டுக்கு போற வழியில அவன பார்த்தேன்.அவன் வக்கனையா
வூட்டு பொறவாசல்ல சாப்பிட்டுகிட்டு இருந்தான்.

நல்லா சாப்பிடு மவனே, இதுதான் உனக்கு கடைசி சாப்பாடு, நாளைக்கு நீ குலோசு. நாளைக்கு எங்க மாஸ்டர் பிளான்ல நீ அவுட்டுதாண்டி.

சேவல் கூவுற சத்தம் கேட்டுச்சு, பொழுது விடிஞ்சிருச்சா,
எழுந்திரு மச்சான், சீக்கிரம் குளிச்சிட்டு, அந்த திருபாச்சி அருவாவ எடுத்து வை, மாமன் ஆர்டர்
போட்டுட்டு குளிக்க போச்சு. நானும் குளிச்ச அப்புறமா கிளம்பினோம். மாமன் அருவாவ விருமாண்டி கணக்கா முதுகுக்கு பின்னால சொருகி வச்சுகிச்சி.

மணி காலை 9.50 - ஆச்சு, எனக்கு கை கால் எல்லாம் உதறல் எடுக்க ஆரம்பிச்சிருச்சி,
மாமன் கிட்ட, நீயே போட்ரு மாமா எனக்கு பயமா இருக்குன்னு சொன்னேன்.

அட கோட்டிக்காரா, பயப்படாத, மொதல்ல அப்படித்தான் இருக்கும், போக போக சரி
ஆயிரும்ன்னு சொல்லுச்சு.

9.55- அவன் வந்துட்டான், மாமன் சொல்லுச்சு, நான் அவன நவுறமா இறுக்கமா
பிடிச்சுக்கிறேன், நீ முடிச்சிருன்னு திரும்ப சொல்லுச்சு.
9.56
அவன் நாங்க "ஸ்பாட்" பண்ணுன இடத்து கிட்ட வந்தான்.

9.57
மாமன் நைசா அவனுக்கு தெரியாம அவன் பின்னாடி போச்சு...

9.58
மாமான் அவன நவுர விடாம பிடிச்சுகிச்சு...

9.59
மாப்ள போடுல...

10.00
நான் போட்டதுல அவன் தலை தனியாகவும், உடம்பு தனியாகவும் போயிருச்சு, அந்த இடமே ரத்த களரி ஆச்சு...
சபாஸ்ல மாப்பிள இப்படிதான், நேந்து விட்ட கெடாவ வெட்டனும். நீதாம்ல என் தொழில் வாரிசின்னு
அய்யனார் கோவில்ல பூசாரியா இருக்க என் மாமன் சந்தோசமா சொல்லுச்சு.
அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

12 comments:

ஜாக்கி சேகர் said...

பேசாம ராவோட ராவா எங்கையாவது ஓடிரலாமா, மனசு
கல்லு வீட்டு கடிகார பெண்டுலம் கணக்கா ஆடுச்சு,---//

இந்த வரிகளை ரொம்பவே ரசிச்சேன்..
முடிவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் ஓகே...


ஓட்டு போட்டாச்சு நண்பா..

சைவகொத்துப்பரோட்டா said...

@ஜாக்கி சேகர்

நன்றி தலைவா, ரொம்பவே சஸ்பென்சா எழுதி இருக்கோம்னு நினைச்சேன்.. ம்..ம்..

புலவன் புலிகேசி said...

முடிவை முன்னரே கண்டு பிடிச்சுட்டேன். இருந்தாலும் அருமையா சொல்லிருக்கீங்க

அன்புடன் மலிக்கா said...

நானும் முன்னமே கண்டுபிடித்திட்டேனே முடிவை ஹ ஹ. எப்படிருந்தாதும் கதை சூப்பர் ..

சைவகொத்துப்பரோட்டா said...

@புலவன் புலிகேசி

நன்றி நண்பரே. அடுத்த முறை சஸ்பென்ஸ் உடையாமல் எழுத
முயற்சி செய்கிறேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

@அன்புடன் மலிக்கா

நன்றி தோழி, புலவரிடம் சொன்னதையே உங்களிடமும் ரிப்பீட்
உங்கள் பாராட்டுக்கு நன்றி.

சினிமா புலவன் said...

நல்லா இருந்துதுங்க...ஆனா நான் கண்டு புடிக்கல

சைவகொத்துப்பரோட்டா said...

@சினமா புலவன்

//ஆனா நான் கண்டு புடிக்கல//

ஹையா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, நன்றி சினிமா புலவரே.

சுடுதண்ணி said...

//(குருமாவுந்தேன்...)/
nice :D

சைவகொத்துப்பரோட்டா said...

@சுடுதண்ணி

நன்றி சுடுதண்ணி.

பின்னோக்கி said...

எதிர்பார்த்த முடிவு தான் என்றாலும், நேந்துவிட்ட கடா மற்றும் பூசாரிதான் மாமா என்பது எதிர்பாராதது ஆனால் கதைக்கும் வர்ணனைக்கும் மிகவும் பொருத்தமானது. கலக்குங்கள்.

அப்புறம் இன்னும் குழந்தயா ? பெரிசாயாட்சு..அதுனால பதிவுலகின் 2 வகுப்புன்னு போடுங்க :)

சைவகொத்துப்பரோட்டா said...

@பின்னோக்கி

//அப்புறம் இன்னும் குழந்தயா ? பெரிசாயாட்சு..அதுனால பதிவுலகின் 2 வகுப்புன்னு போடுங்க :)//

ஹைய்யா நான் வளந்துட்டேனா, ஆனாலும் முதல்ல ப்ரீ கேஜி சேரணுமே, வேணும்னா "ப்ரீ கேஜி"ன்னு போட்டுக்கலம்மா? :))

நன்றி உங்கள் கருத்துக்கு.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)