Friday, January 8, 2010

அதாண்ணே இது

தானைத்தலைவர் டவுசர் நாயகன் நடித்த படத்தில்
அண்ணன் செந்தில் ஒரு வாழைபழத்தை ஏமாற்றி சாப்பிட்ட பின்னர் சொல்ற டயலாக் இது.

வாழைப்பழம் சாப்பிடுவதால்
நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்குது.சுளுவா கிடைக்கிற இந்த வாயபயத்தில, ச்சே.. வாழைபழத்தில எவ்வளவு மருத்துவ குணம் இருக்கு தெரியுமா?

சிலர் கழிவறைக்குள் போனாலே, தீ படித்து ஓய்ந்த ஒரு எபெக்ட் இருக்கும்.
(அவ்வளவும் சிகரெட் புகை) சிகரெட் பிடித்தால்தான் அவர்களுக்கு "வருமாம்"

இந்த மாதிரி "வரும் ஆனா வராது" பிரச்சினை உள்ளவர்கள் வாழைபழம் சாப்பிட்டால் இனிதே காலைக்கடனை கழி(களி)க்கலாம். இதில் அதிகமான பைபர் இருப்பதால் குடலை சுத்தமாக்கி "ஸ்மூத்தா" வெளியாவதற்கு உதவுகிறது.

அத்தி பூத்தாப்புல சில நாள் நல்ல சாப்பாடு கிடைச்சுட்டா, பிரிச்சு மேஞ்சுருவோம், அப்புறம் ஒரே "மந்தகாசமா" இருக்கும். இந்த மாதிரி
நேரத்துல ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு பாருங்க, சுறுசுறுப்பு தானா வரும். எப்படின்னு கேட்டா, இதுல நம்ம
மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களும் இருக்கு.

இந்த மேட்டர் நம்ம முன்னோர்களுக்கு தெரியும்போல, அதனாலதான் கல்யாண வீடுகள்ல தாம்பூலப்பை (அப்படின்னு ஒன்னு கொடுப்பாங்க) உள்ள வெத்திலை, பாக்கு இதோட
வாழைப்பழம்மும் இருக்கும்.

நம்ம பீட்டருங்க இத்த பத்தி (இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்) ஆராய்ஞ்சி சொன்னது, ‌தினமும் ‌மூணு வேளை சாப்பாட்டுக்கு அப்பால ஒத்த வாழை‌ப்பழ‌ம் சாப்டாக்க, மூளை சுறுசுறு‌ப்பாக இ‌ய‌ங்கு‌ம்.

அது மட்டும் இல்லீங்கோ, இது
மனத்தளர்ச்சியையும் நீக்க கூடிய ஆற்றல் கொண்டது.

இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டா ஒன்னரை மணி நேரத்தில நம்ம உடலுக்குத் தேவையான, உறுதியான, கணிசமான, ஊட்டச்சத்தை பெற முடியும்ன்னு ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இதுல மூணு வகையான இனிப்பு பொருட்கள் இருக்கு. சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ், மேலும் நம்ம குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அ‌திகமாக‌க் கொண்டுள்ளது.

இதோட உடல் பரும‌ன், மற்றும் நம்ம உடம்போட வெப்பநிலையை ‌நல்லா வச்சுக்கவும், குட‌ற்பு‌ண்,போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு வாழை‌ப்பழ‌ம் ந‌ல்ல மரு‌ந்தாக உ‌ள்ளது.


டிஸ்கி:இதெல்லாம் உடல்நிலை ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே.
சிலருக்கு உடலில் சர்க்கரை அளவு சரியாக இருக்காது, மற்றும்
சளி, காய்ச்சல் இருந்தால் தவிர்க்கவும்.


அப்பாவி அங்கு:கவுண்டமணி அங்கிள் அந்த இன்னொரு
வாழைப்பழம் என்ன ஆச்சுன்னு கண்டு
பிடிச்சிடீங்களா?அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க.
(தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

10 comments:

malarvizhi said...

நல்ல உபயோகமான அறிவுரைகள்..நன்றி..

சைவகொத்துப்பரோட்டா said...

@மலர்விழி

நன்றி மலர்விழி, இது அறிவுரை அல்ல, சிறிய நினைவூட்டல் மட்டுமே.

பலா பட்டறை said...

சர்க்கரை நோயாளிகளும் அவ்வப்போது சாப்பிடலாம்...பதிவு சூப்பர்:)

சைவகொத்துப்பரோட்டா said...

@பலா பட்டறை

நன்றி நண்பரே. (மேலதிக தகவலுக்கும் சேர்த்து நன்றிகள்)

சினிமா புலவன் said...

நல்ல விசயம் தான் சொல்லிருக்கீங்க

சைவகொத்துப்பரோட்டா said...

@சினமா புலவன்

மிக்க நன்றி நண்பரே, உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்.

தேவன் மாயம் said...

இதுல மூணு வகையான இனிப்பு பொருட்கள் இருக்கு. சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ், மேலும் நம்ம குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அ‌திகமாக‌க் கொண்டுள்ளது.

இதோட உடல் பரும‌ன், மற்றும் நம்ம உடம்போட வெப்பநிலையை ‌நல்லா வச்சுக்கவும், குட‌ற்பு‌ண்,போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு வாழை‌ப்பழ‌ம் ந‌ல்ல மரு‌ந்தாக உ‌ள்ளது.
//

ஏ அப்பா! வாழைப்பழ மகிமையை அள்ளி விளையாடீட்டீங்களே!!

சைவகொத்துப்பரோட்டா said...

@தேவன் மாயம்

நன்றி டாக்டர், இதில் ஏதும் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள்.

சங்கர் said...

உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள் !!


வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

சைவகொத்துப்பரோட்டா said...

@சங்கர்

மிக்க நன்றி சங்கர், உங்கள் கருத்துக்கு.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)