Friday, September 24, 2010

எக்ஸின் அழைப்பு 2

அழைப்பு 1

இரவு மணி ஒன்பதரை ஆன பொழுதும் பஸ் ஸ்டாப்பில் கூட்டம்
குறைந்தபாடில்லை. எனக்கான பஸ்சைதவிர மற்றதெல்லாம் வந்தது.
பழுதாகிப்போன என் பைக்கின் அருமை,
இப்போது புரிந்தது.

ஒரு பைக்காரன் வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல் என்னை பார்த்து க்கொண்டே சென்றான்.
என்ன நினைத்தானோ, சட்டென "யூ"டர்ன் எடுத்து என் அருகில் வந்தான்.

நீ...ங்க அருண்தானே...எப்படி இருக்கே என்றான்.

என் பெயரை சரியாக
சொன்னதோடு சட்டென ஒருமையில் அழைத்தான். நிச்சயம்
எனக்கு தெரிந்தவன்தான். ஆனால், தீவிரமாக யோசித்தும் எனக்கு
அவன் யாரென தெரியவில்லை.

மன்னிக்கணும், நீங்க யாரு...ன்னு...

தெரியலையா, நான்தாண்டா விஷ்வா.
ஆத்தூர் ஸ்கூல், பக்கத்துக்கு பெஞ்ச் நியாபகம் இருக்கா என
புதிர் போட்டான்.

ஆங்...இப்பொழுது எனக்கு நியாபகம் வந்துவிட்டது. எங்கள் குடும்பம்
ஆத்தூரில் ஒரு வருடம் இருந்தபொழுது, இவன் என் பள்ளி
நண்பன். கொஞ்சம் பந்தா பேர்வழி, பெண் பிள்ளைகளை
கண்டால் வழியலுடன் பேசிக்கொண்டே இருப்பான். அப்பொழுது பதினொன்றாம்
வகுப்பில் இருந்தோம், கூட படித்த பெண் ஒருத்தியை
காதல் செய்து கொண்டிருந்தான்.

அவள் வீட்டிற்கு விசயம் தெரிந்து, உடனே அவளுக்கு கல்யாண
ஏற்பாடெல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள். அவள் அழுது கொண்டே
இவனிடம் வர, இவனோ கூலாக டைம் பாசுக்குதான் உன்கூட
சுத்தினேன் என்றான்.

அதன்பின் அந்தபெண்ணை பள்ளி பக்கமே பார்க்கவில்லை.

அவனோட ஹிஸ்டரி முழுசும், நியாபகம் வந்து விட்டதால், ஓ..விச்சுவா பாத்து எவ்ளோ வருஷம் ஆச்சு. நல்லா இருக்கியா? எனக்கேட்டேன்.

வாயேன் காபி குடிச்சிகிட்டே பேசலாம், அப்படியே வீடு எங்கன்னு
சொல்லு, டிராப் பண்ணிட்டு போறேன் என்றான் விஷ்வா.

மறுக்க முடியாத நிலை, அருகே இருந்த ஹோட்டலில் நுழைந்தோம்.
காபியும், தோசையும் ஆர்டர் செய்துவிட்டு, தன்னுடைய பழைய வீரதீரங்களை அளந்து கொண்டிருந்தான் விச்சு.

தி.நகரில் சொந்தமாக பேன்சி ஷாப்
வைத்திருப்பதாகவும், விருகம்பாக்கத்தில் வாடகை வீட்டில்
தங்குவதாகவும் கூறினான்.


Picture:Thanks indiamike.com

அட!! நான் வடபழனியில் இருக்கேன்ப்பா, இங்க ராஜ் இன்டர்நேஷனல்
ஹோட்டல்ல கேட்டரிங்ல, இருக்கேன் என நான் சொல்லி முடிக்கும்
முன் விஷ்வாவின் மொபைல் ரிங்கியது.
தாழ்வான குரலில் யாரிடமோ பேசி விட்டு லைனை கட்
செய்தான்.

யாரு, உன் மனைவியா விஷ்வா, எனக்கேட்டேன்.

ச்சே...ச்சே...எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகலைப்பா,
கடையில வேலை பாக்குற பொண்ணு, என்றான்.

உனக்கு கல்யாணம் ஆயிருச்சா என என்னை கேட்டான்,

இன்னும் இல்லை என்றேன்.
சரி விச்சு, அம்மா காத்துகிட்டு இருப்பாங்க வாயேன் வீட்டுக்கு என
விச்சுவை அழைத்து விட்டு பில்லை கையில் எடுத்தேன்.

விச்சு வெடுக்கென பில்லை வாங்கி கொண்டு, நான்தான் பணம் கொடுப்பேன் என பிடிவாதம் பிடித்தவன் தன்
பைகளை துலாவியவன்
சற்றே கலவர முகத்துடன் என்னை பார்த்தான்.

என்ன ஆச்சு விஷ்வா என்றேன்.

பர்சை காணோம் அருண், எங்கேயோ தவற விட்டுட்டேன் என்றான்.

அடப்பாவமே, நிறய பணம் வச்சிருந்தயா...

கிட்டத்தட்ட் 500 ரூபாய் வச்சிருந்தேன், எங்கேயோ தவறி போச்சேஅருண், என்றான் பறிகொடுத்த கவலையுடன்.

இந்தா அவசரத்துக்கு வச்சுக்கோ என்று அவன் பையில் நூறு
ரூபாய் தாள் ஒன்றை திணித்துவிட்டு,
அவனிடமிருந்து பில்லை வாங்கி பணத்தை கொடுத்துவிட்டு திரும்பினால்
விஷ்வாவை காணவில்லை.

ஹோட்டலை விட்டு வெளி வந்து அவன் பைக் நிறுத்திய
திசையில் பார்த்தேன். பைக்கருகில் நின்று
கொண்டு, "மச்சான், விஷ்வா பேசறேன்டா"
என யாரிடமோ போனில் பேசி கொண்டிருந்தான்.

அழைப்பு தொடரும் அழைப்பு 3

28 comments:

பின்னோக்கி said...

முதல் பாகத்தை மிஸ் பண்ணிட்டு, இரண்டாம் பாகம் படித்துவிட்டு, முதல் பாகம் படித்து, அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

எல் கே said...

rendukkum enna sambantham

சசிகுமார் said...

நண்பா சீக்கிரம் சொல்லிடு நண்பா தலையே வெடிச்சிடும் போல இருக்கு

அப்பாதுரை said...

ஆர்வத்தைக் கிளறி விட்டீங்க

Praveenkumar said...

நண்பா அடுத்த அழைப்புக்காக... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

r.v.saravanan said...

ஆர்வமா இருக்கு அழைப்புக்கு காத்திருக்கிறேன்

Chitra said...

அந்த வளையல்கள் போட்டோ ரொம்ப நேரம் பார்த்துக்கிட்டு இருந்தேன்.... கொள்ளை அழகு..... கதையும் நல்லா போகுது..... சூப்பர்!

சைவகொத்துப்பரோட்டா said...

@பின்னோக்கி
குறும்பு :))

@LK
தொடரை தொடர்வதற்கு, மகிழ்ச்சி கார்த்திக்.
தொடர்ந்து பார்ப்போமே :))

@சசிகுமார்
சொல்லிடறேன் நண்பா.

@அப்பாதுரை
நன்றி அய்யா.

@பிரவின்குமார்
விரைவில் வரும் நண்பா.

@r.v.saravanan
நன்றி சரவணன்.

@Chitra
தொடர், ஊக்கத்திற்கு நன்றி சித்ரா.

Unknown said...

கதை அருமையாக இருக்கிறது.அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

@ஜிஜி
மகிழ்ச்சி!!நன்றி ஜிஜி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

போன்-ல என்னங்க சொன்னாரு?? சீக்கிரம் சொல்லுங்க.
நல்லா இருக்குங்க..
தொடருங்க.. :-))

சைவகொத்துப்பரோட்டா said...

@Ananthi
நன்றி ஆனந்தி.

ஸ்ரீராம். said...

எந்தக் கோடுல இவங்கள்ளாம் இணையப் போறாங்கன்னு பார்ப்போம்... நல்லா போகுது..!

Ahamed irshad said...

கதை வேகம் பிடிக்கிறது..தொடருங்க நண்பரே

நாடோடி said...

க‌தை ந‌ல்லா இருக்கு ந‌ண்ப‌ரே.. தொட‌ருங்க‌ள்.

சைவகொத்துப்பரோட்டா said...

@ஸ்ரீராம்.
நன்றி அண்ணா.

@அஹமது இர்ஷாத்
நன்றி இர்ஷாத்.

@நாடோடி
நன்றி ஸ்டீபன்.

RVS said...

அப்புறம்...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மாதேவி said...

பரோட்டா தீர்ந்துவிட்டதா தோசை சாப்பிடப் போய்விட்டீர்கள்.:)))

அடுத்து...வெயிட்டிங்.

சைவகொத்துப்பரோட்டா said...

@RVS
X - காலுக்காக வெய்ட்டிங்கு :))

@மாதேவி
அடுத்த பரோட்டா ரெடி ஆகி கொண்டிருக்கு :))
நாளை அல்லது திங்கள் பரிமாறப்படும், மாதேவி.

Riyas said...

MMMMM NALLAIRUKKU

சைவகொத்துப்பரோட்டா said...

@Riyas
நன்றி ரியாஸ்.

அன்பரசன் said...

நல்லா இருக்குங்க.
அடுத்தது எப்போ?

சைவகொத்துப்பரோட்டா said...

@அன்பரசன்
அடுத்தது நாளை,நன்றி அன்பரசன்.

Aathira mullai said...

முதன் முதலில் தங்கள் பரோட்டா ஸ்டாலுக்கு வருகிறேன். முழுவதும் சைவம். ருசிக்க அருமையாக..... நிறைந்தது வயிறும் மனமும் ....

இந்தப் பதிவில் அப்பறம் எப்ப வரும்னு காத்திருக்க வைத்து விட்டீர்கள்.. அருமை நண்பரே.

Muruganandan M.K. said...

"சைவகொத்துப்பரோட்டாவா விஷ்வா பேசறேன்டா"
ஒரு காப்பி சாப்பிட்டுவோமா?

சைவகொத்துப்பரோட்டா said...

@ஆதிரா
முதல் வருகைக்கு நன்றி ஆதிரா, தொடர்ந்து வாருங்கள்.

@Dr.எம்.கே.முருகானந்தன்
ஓ...தாராளமாய் சாப்பிடலாமே :))
நன்றி டாக்டர்.

Jaleela Kamal said...

போன பதிவில் பதில் போட முடியல

Jaleela Kamal said...

சித்ரா நானும் அந்த் வளையல் டப்பாவையே தான் ரொமப்நேரமா பார்த்து கொண்டு இருந்தேன்.

ம்ம அப்பரம் என்ன ஆச்சு

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)