Friday, September 3, 2010

வர்ணம்

பள்ளி முடிய இன்னும் 15 நிமிடம் இருந்தது, நிமிடங்களை விழுங்கும் பொருட்டு மனித முகங்களை படிக்க
ஆரம்பித்தேன். அநேகம் பேரிடம் ஆயாசமும், கவலைகளுமே தெரிய
இதிலிருந்து சற்றே மாறுபட்டு இருந்தால் "அவள்." கிட்டத்தட்ட என்
வயதையொட்டி இருந்தாள்.

ஒரு சிநேகப்புன்னகையை உதிர்த்தேன், அவளும்.

சம்பாத்தியம் இல்லையென்றால், நம் வீட்டு நபர்களே நம்மை
"அந்நியன்" ஆக்கி விடுகிறார்கள். மனதை ரணமாக்கும் பேச்சுக்கள்
வேறு, இவற்றில் இருந்து தற்காலிக விடுதலை அவளின் மூலம்
கிடைத்தாற்போல இருந்தது.

அடுத்து வந்த நாட்களில் அவளை பார்ப்பதற்காகவே முன் கூட்டியே
சென்று காத்திருக்க ஆரம்பித்தேன்.

வெறும் பார்வைகளும், புன்னகையுமாய் நாட்கள் கழிந்து
கொண்டிருந்தது.

இன்று மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த அடை மழை 3 மணிக்குத்தான் விட்டது.
பள்ளிக்கு 1 கிலோ மீட்டருக்கு முன்பாகவே மிகப்பெரிய கூட்டம்.
அருகே சென்ற பின் தெரிந்தது, வயதான புளிய மரம் ஒன்று நெடுஞ்சான் கிடையாக சாலையின் குறுக்கே உயிரை விட்டிருந்தது.

"போஸ்ட்மார்ட்டம்" செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும் என
நகராட்சி ஆட்கள் மூலம் செய்தி கசிய, அருகில் இருந்த டீக்கடை பாய்லர் அதிகமாக சூடு வாங்கியது.

குளிருக்கு இதமாக, டீயை வார்க்கும்போது "அவள்" வந்தாள்,
என்னங்க இப்படி ஆகிருச்சு என்றாள்.

வேற வழி இல்லீங்க, ஒரு மணி நேரம் காத்துதான் இருக்கணும்
என்ற பின், அவளுக்கும் ஒரு டீ சொல்லிவிட்டு நிறய பேச
ஆரம்பித்தோம்.

எங்களுக்குள் நல்லதொரு நட்பை ஏற்படுத்தி இருந்தது கடந்த
ஒரு மணி நேரம்.

பிரியும் பொழுதில் அந்த மரத்திற்கு மானசீகமாய் நன்றி சொல்லி
கொண்டேன்.

அதன்பின் ஒரே மாதத்தில் என் சந்தோஷ தருணங்கள் கலைந்து விட்டன.
அவளை பார்த்து இரண்டு வாரம் ஆயிற்று, எந்த
தகவலும் இல்லை. ஏனோ என் மனதில் இனம் புரியா வலி.

இரு வாரங்கள் ஆகி விட்டது, என் நிம்மதி இழந்து. பெற்றவள் என்று
கூட நினையாமல் கடுஞ்சொற்களை பேசி விட்டான், என் மகன்.
இப்போதெல்லாம், ஆட்டோவில்தான் செல்கிறாள் என் பேத்தி நான்கு தெரு தள்ளி இருக்கும் பள்ளிக்கு.

நரைகளின் நட்பிற்கும் வர்ணம் பூசப்பட்டது.

42 comments:

cheena (சீனா) said...

அன்பின் சைகொப

அருமை அருமை கதை அருமை

வர்ணம் பூசப்படுவது நரைகளுக்கும் தான் - என்ன செய்வது.

உயிரை விட்ட புளிய மரம் - போஸ்ட்மார்ட்டம் - சூடான டீ பாய்லர் - பலே பலே

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

இராமசாமி கண்ணண் said...

கலக்கறீங்க சைகொப.

ப்ரியமுடன் வசந்த் said...

ஆரம்பத்தில விழுந்த சின்ன முடிச்சை அப்படியே சஸ்பென்சாவே எடுத்துட்டு கடைசில அவிழ்த்துட்டீங்க...மெச்சேஜோட.. சூப்பர் பிரசன்னா

இடையில ரசிச்சது பாய்லர் சூடாக ஆரம்பித்தது என்ற இடத்தில்...!

RVS said...
This comment has been removed by the author.
RVS said...

மரம் உயிரை விட்டதும்.. போஸ்ட்மார்டமும் அருமை.. வாழ்த்துக்கள் சை.கொ.பரோட்டா..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

VISA said...

:)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

சை கொ ப அருமை.. நல்ல கதை

Chitra said...

புது template ..... மேலும் மெருகேறிய எழுத்து நடை...... கலக்குறீங்க, மக்கா!

சசிகுமார் said...

//வயதான புளிய மரம் ஒன்று நெடுஞ்சான் கிடையாக சாலையின் குறுக்கே உயிரை விட்டிருந்தது//

அருமை நண்பா

சசிகுமார் said...

//"போஸ்ட்மார்ட்டம்" செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும்//

ரசித்தேன் நண்பா

சசிகுமார் said...

//அருகில் இருந்த டீக்கடை பாய்லர் அதிகமாக சூடு வாங்கியது.//

This is your style super skp

நாடோடி said...

க‌தை ந‌ல்லா இருக்கு சை.கொ.ப‌. :)

க.பாலாசி said...

ரொம்ப நல்லாயிருக்குங்க கதை...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

கதை நல்லாயிருக்குங்க.....வாழ்த்துக்கள்.

பதிவுலகில் பாபு said...

நல்லாயிருக்குங்க கதை..

சைவகொத்துப்பரோட்டா said...

@cheena (சீனா)
உங்கள் பின்னூட்டம் உற்சாகம் அளிக்கிறது, நன்றி அய்யா.

@இராமசாமி கண்ணண்
ஊக்கத்திற்கு நன்றி ராம்.

@ப்ரியமுடன் வசந்த்
ரசித்து எழுதியதற்கு நன்றி வசந்த்.
பிரசன்னாவின் தளம் "கொத்துபரோட்டா"
நான் அவர் இல்லை.
நன்றி வசந்த்.

@RVS
நன்றி RVS.

@VISA
புன்னகைக்கு நன்றி விசா.

@தேனம்மை லெக்ஷ்மணன்
நன்றி அக்கா.

@Chitra
ஊக்கத்திற்கு நன்றி சித்ரா.

சைவகொத்துப்பரோட்டா said...

@சசிகுமார்
உற்சாகம் அளிக்கிறது நண்பா, தங்களின் பின்னூட்டம்.

@நாடோடி
நன்றி ஸ்டீபன்.

@க.பாலாசி
நன்றி பாலாசி.

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து
நன்றி முத்து.

@பதிவுலகில் பாபு
நன்றி பாபு.

ப்ரின்ஸ் said...

ஏதோ ட்ரைலர் பார்த்தது போல் ஒரு உணர்வு

r.v.saravanan said...

கதை அருமை நண்பா வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

@ப்ரின்ஸ்
நன்றி ப்ரின்ஸ்.

@r.v.saravanan
நன்றி சரவணன்.

Ananthi said...

உண்மையிலயே சூப்பர்.. ரசித்து படித்தேன்...
ஒரே ஒரே சஸ்பென்ஸ்....

லாஸ்ட் வரிகள்-ல.. ...... ஹ்ம்மம்ம்ம்ம்.. கலக்கலா இருந்தது...

தொடர்ந்து இது போல் படைப்பிற்கு வாழ்த்துக்கள்.. :-))

ஸ்ரீராம். said...

குளிருக்கு சூடா டீ சாப்பிட்ட உணர்வு...

கவிதை காதலன் said...

வாவ்...புத்தம் புதிய சுவையில் இன்னொரு படைப்பு

சைவகொத்துப்பரோட்டா said...

@Ananthi
நன்றி ஆனந்தி.

@ஸ்ரீராம்.
நன்றி அண்ணா.

@கவிதை காதலன்
நன்றி நண்பா.

அஹமது இர்ஷாத் said...

ரசித்தேன்..

ஜெய்லானி said...

ப்ச்..சோகக்கதை...!!நல்லா இருக்கு..நட்புக்கு வயசா ...!!

சாய் said...

Good one

சைவகொத்துப்பரோட்டா said...

@அஹமது இர்ஷாத்
நன்றி இர்ஷாத்.

@ஜெய்லானி
நன்றி ஜெய்லானி.

@சாய்
நன்றி அண்ணா.

பத்மா said...

மக்களின் பார்வை!my foot
நல்ல கதை

சைவகொத்துப்பரோட்டா said...

@பத்மா
நன்றி பத்மா.

அன்புடன் மலிக்கா said...

சை கோ பா. சூப்பர் அருமையான கதை. டெம்பிளேட் மற்றும் அருமையான கதை கலக்குறீங்க நண்பா. தொடர்ந்து எழுதுங்க.வாழ்த்துக்கள்..

ஹுஸைனம்மா said...

சுவாரசியமான வார்த்தைப் பிரயோகங்கள். நல்லாருக்கு கதை.

சைவகொத்துப்பரோட்டா said...

@அன்புடன் மலிக்கா
கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி மலிக்கா.

@ஹுஸைனம்மா
நன்றி ஹுஸைனம்மா.

இன்றைய கவிதை said...

நல்ல கவிதை நடையில் ஒரு கதை எல்லோரும் சொல்வது போல் இடையில் வார்த்தையலங்காரம் அருமை...


ரசித்தேன் நன்றி சைகொப

ஜேகே

சைவகொத்துப்பரோட்டா said...

@இன்றைய கவிதை
நன்றி ஜேகே.

இந்திரா said...

கலக்கிட்டீங்க அண்ணாத்தை

சைவகொத்துப்பரோட்டா said...

@இந்திரா
நன்றி இந்திரா.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

அருமையான படைப்பு. சில காலமாக இணையத்தில் உலவுவது குறைந்ததால் உங்களையும் தப்பவிட்டு விட்டேன.

சைவகொத்துப்பரோட்டா said...

@Dr.எம்.கே.முருகானந்தன்
நன்றி டாக்டர்.

ராதை/Radhai said...

அருமை :))

சைவகொத்துப்பரோட்டா said...

@ராதை/Radhai
நன்றி ராதை.

ஜிஜி said...

கதை ரொம்ப சூப்பரா இருக்கு.. கலக்கிட்டீங்க .

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)

There was an error in this gadget