Wednesday, May 12, 2010

சஞ்சனா

மாப்ள அவ என்ன பாத்து சிரிச்சாடா, அருவி பக்கத்துல
நின்னா மாதிரி ச்சும்மா மனசெல்லாம் சில்லுன்னு இருக்குடா.

டேய், இன்னும் எத்தனை நாளைக்குடா இதயம் முரளி மாதிரி
இப்படியே இருக்கு போற. அவனவன், பாத்தமா, பேசினோமா,
கல்யாணத்தை பண்ணினோமான்னு இருக்கான். இன்னும் பீல்
பண்ணிகிட்டே இருக்கியாடா. அவகிட்ட எப்படா உன் காதலை
சொல்லப்போற.

இன்னும் நாலு வருஷம் ஒரே இடத்துலதாண்டா படிக்க போறோம்,
அவளோட பேசிப்பழகி, அவ இல்லைன்னா நான் இல்ல, நான்
இல்லைன்னா அவ இல்லைங்கிற நிலை வந்த அப்புறம்
சொல்வேண்டா, அதுல இருக்குற சுகமே தனிதான். உனக்கு ஒரு
விசயம் தெரியுமாடா எனக்கும், சஞ்சுவுக்கும் பிறந்த நாள்
ஒரே மாதம், ஒரே தேதியிலடா!!

ஆச்சு நாலு வருஷம், ஆனா எனக்குதான் சஞ்சனாவ பாத்து
என் காதல சொல்ற "தைரியம்" இன்னும் வரல.

அப்புறம் கேம்பஸ் இன்டர்வியு மூலம் எங்க ரெண்டு பேருக்கும் ஒரே
கம்பெனியில வேலை கிடைச்சது. இன்னைக்கி வரை என்
காதலை அவ கிட்ட சொல்ல முடியலை.

சஞ்சனா......ஓ.........சஞ்சனா.......என் மொபைல் ரிங்கியது........
யாராய் இருக்கும்........

ஸ்க்ரீன் டிஸ்ப்ளேயில், சஞ்சனா காலிங்.........

ஹாய் சஞ்சு, எப்படிம்மா இருக்க.........

ஐ'ம் பைன்.......ஹாப்பி பர்த் டே டூ யூ டாட்...........

என் செல்ல மகளிடம் பேசிய பின்புதான் நியாபகம் வந்து தேதி
பார்த்தேன் 13 .03 .2011௦ இன்னைக்கி என்னோட பிறந்த நாள்!!
அட இன்னைக்கிதானே "அவளுக்கும்" பிறந்த நாள்
*********************************************

36 comments:

இராமசாமி கண்ணண் said...

நல்லா இருக்கு சை.கொ.ப.

padma said...

அட போங்க பா .தைரியமா இருங்க .வேறென்ன சொல்ல .
twist தான் கடைசில

Chitra said...

சஞ்சனா பாட்டி, நல்லா மனதை "கொத்தி" இருக்காங்க.....

ஜில்தண்ணி said...

பக்கா பக்கா சிறுகதை தான்

\\ ஐ'ம் பைன்.......ஹாப்பி பர்த் டே டூ யூ டாட்...........\\

சரியான பினிஷிங்க் டச்
இப்படி முடிப்பீங்கன்னு எதிர்பார்கள
நன்றி

தமிழ் உதயம் said...

விடுங்க சார். சஞ்சனா இல்லேன்னா அஞ்சனா.

VISA said...

இத்தன வயசான லவ்வா? இப்பவே கண்ண கட்டுதே...........

நாடோடி said...

பினிசிங் ந‌ல்ல‌ இருந்த‌து...

அன்புடன் மலிக்கா said...

ஆகா அசத்தல் லவ்தான் அன்புன்னா அன்பு இப்படியும் ஓர் அன்பு ஜூப்பர்ரூ

Anonymous said...

அந்த சஞ்சனா பாட்டி அட்ரஸ் குடுங்க அண்ணாத்தை
நா வேணும்னா உங்களுக்காக பேசிப்பாக்குறேன்..

கவிதை காதலன் said...

அட.. அட.. அட... டச் பண்னிட்டீங்க..

Mohan said...

வித்தியாசமான கதைங்க... நல்லாருக்கு.....

வானம்பாடிகள் said...

குட் குட்

malgudi said...

//அருவி பக்கத்துல
நின்னா மாதிரி ச்சும்மா மனசெல்லாம் சில்லுன்னு இருக்குடா.//

உங்க கதைய படிச்சதுக்கு அப்புறம் எனக்கும் அப்படித்தான் இருக்கு

ஜெய்லானி said...

அது சரி. நிறைய காதல் இப்படிதானே போகுது. கிடைக்காட்டி பொண்ணுக்கு பேரை வக்கிறது.

சைவகொத்துப்பரோட்டா said...

// இராமசாமி கண்ணண் said...
நல்லா இருக்கு சை.கொ.ப.//

உற்சாகம் கொடுப்பதற்கு நன்றி ராம்.


// padma said...
அட போங்க பா .தைரியமா இருங்க .வேறென்ன சொல்ல .
twist தான் கடைசில//

"தைரியம்" கொடுத்ததற்கு நன்றி பத்மா :))// Chitra said...
சஞ்சனா பாட்டி, நல்லா மனதை "கொத்தி" இருக்காங்க.....//

உங்களுக்கு கமெண்ட் அரசி என்ற
பட்டம் அளிக்கிறேன் :))
தொடர் ஊக்கத்திற்கு நன்றி சித்ரா.


// ஜில்தண்ணி said...
பக்கா பக்கா சிறுகதை தான்

\\ ஐ'ம் பைன்.......ஹாப்பி பர்த் டே டூ யூ டாட்...........\\

சரியான பினிஷிங்க் டச்
இப்படி முடிப்பீங்கன்னு எதிர்பார்கள
நன்றி//

வாங்க ஜில்லு. நான் எழுதின
கதையை படிச்சதுக்கு நான்தான்
உங்களுக்கு நன்றி சொல்லணும்.
நன்றி.// தமிழ் உதயம் said...
விடுங்க சார். சஞ்சனா இல்லேன்னா அஞ்சனா.//

அவ்வ்.............இந்த கதையின் நாயகன்
நொந்துடப்போறார் :))
நன்றி நண்பரே.// VISA said...
இத்தன வயசான லவ்வா? இப்பவே கண்ண கட்டுதே...........//

வயசானாலும் அவோரடா "சொல்லாத காதலை"
மறக்க முடியல போல.
நன்றி விசா.

சைவகொத்துப்பரோட்டா said...

// நாடோடி said...
பினிசிங் ந‌ல்ல‌ இருந்த‌து...//

நன்றி ஸ்டீபன்.


// அன்புடன் மலிக்கா said...
ஆகா அசத்தல் லவ்தான் அன்புன்னா அன்பு இப்படியும் ஓர் அன்பு ஜூப்பர்ரூ//

ஆமா!! சரியா சொன்னீங்க கவியரசி!!


//எனது கிறுக்கல்கள் said...
அந்த சஞ்சனா பாட்டி அட்ரஸ் குடுங்க அண்ணாத்தை
நா வேணும்னா உங்களுக்காக பேசிப்பாக்குறேன்..//

அவ்வ்........இந்த கதையில வர
ஹீரோவுக்கு இப்படி ஒரு தங்கச்சி கிடைக்காம
போயிருச்சே............
டாங்க்ஸ் தங்கச்சி :))


// கவிதை காதலன் said...
அட.. அட.. அட... டச் பண்னிட்டீங்க..//

அப்படியா!! நன்றி நண்பா.


// Mohan said...
வித்தியாசமான கதைங்க... நல்லாருக்கு.....//

நன்றி மோகன்.


// வானம்பாடிகள் said...
குட் குட்//

ஆஹா!! ரெண்டுவாட்டி நல்லா இருக்குன்னு
சொல்லிட்டீங்க!! மகிழ்ச்சி!! நன்றி அய்யா.// malgudi said...
//அருவி பக்கத்துல
நின்னா மாதிரி ச்சும்மா மனசெல்லாம் சில்லுன்னு இருக்குடா.//

உங்க கதைய படிச்சதுக்கு அப்புறம் எனக்கும் அப்படித்தான் இருக்கு//

ஹை!!! மகிழ்ச்சியா இருக்கு, முதல்
வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்களேன்.


// ஜெய்லானி said...
அது சரி. நிறைய காதல் இப்படிதானே போகுது. கிடைக்காட்டி பொண்ணுக்கு பேரை வக்கிறது.//

அதேதான்!! நன்றி ஜெய்லானி.

philosophy prabhakaran said...

யார் சார் அந்த பிகரு...?

சைவகொத்துப்பரோட்டா said...

// philosophy prabhakaran said...
யார் சார் அந்த பிகரு...?//

வாங்க பிரபாகரன், இது "நிஜமல்ல, கதை"

Hanif Rifay said...

மினி பரோட்டா... சூப்பர் சார்...

பிரசன்னா said...

இப்படி விட்டு விட்டுதான் 6 லவ்வு வேஸ்டா போச்சு (அவருக்கு) :)

r.v.saravanan said...

நல்லாஇருக்கு தொடருங்கள்


போட்டோ சூப்பர்

சேட்டைக்காரன் said...

இந்தக் கதையைப் பத்தி ஒரே வார்த்தையிலே சொல்லணுமுன்னா.."நச்!"

காஞ்சி முரளி said...

சே.....
'மரோ சரித்ரா" ரேஞ்சுக்கு intrestஆக கொண்டுபோய்ட்டு கடைசியில கவுத்திடீங்கள... சை.கோ.ப....

any have...
சிறந்த கதை... கொண்டு சென்ற விதமும் சூப்பர்....

நட்புடன்..
காஞ்சி முரளி...

சைவகொத்துப்பரோட்டா said...

// Hanif Rifay said...
மினி பரோட்டா... சூப்பர் சார்...//

அப்படியா!! ஹனிப் சாருக்கு ரெண்டு பரோட்டா
பார்சல்!!! :))//பிரசன்னா said...
இப்படி விட்டு விட்டுதான் 6 லவ்வு வேஸ்டா போச்சு (அவருக்கு) :)//

இது என்ன புதுக்கதை!! ஆமா யாரு அவர், சொல்லுங்களேன் பிரசன்னா :))// r.v.saravanan said...
நல்லாஇருக்கு தொடருங்கள்


போட்டோ சூப்பர்//

நன்றி சரவணன். படம் கொடுத்த "கூகுலரசிக்கு" நன்றிகள்.// சேட்டைக்காரன் said...
இந்தக் கதையைப் பத்தி ஒரே வார்த்தையிலே சொல்லணுமுன்னா.."நச்!"//

வாங்க ஆசிரியரே!! மிக்க நன்றி.// காஞ்சி முரளி said...
சே.....
'மரோ சரித்ரா" ரேஞ்சுக்கு intrestஆக கொண்டுபோய்ட்டு கடைசியில கவுத்திடீங்கள... சை.கோ.ப....

any have...
சிறந்த கதை... கொண்டு சென்ற விதமும் சூப்பர்....

நட்புடன்..
காஞ்சி முரளி...//

ஆஹா!! உற்சாகமாய் இருக்கிறது!!
நன்றி முரளி, தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும்
எதிர் பார்க்கிறேன்.

ஸ்ரீராம். said...

தொடரும் காதல்கள்...வருடங்களைக் கடந்து...நெறிகளைக் கடந்து....!!

நீச்சல்காரன் said...

உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

//ஸ்ரீராம். said...
தொடரும் காதல்கள்...வருடங்களைக் கடந்து...நெறிகளைக் கடந்து....!!//

உங்க லிஸ்டோட இதையும் சேத்துக்கோங்கன்னா, "சொல்லாத காதல்" :))// நீச்சல்காரன் said...
உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

வாங்க நீச்சல்காரரே!! "நான் அவன் இல்லை"
இது ஒரு கற்பனை கதை மட்டுமே, நன்றி நண்பா.

மயில்ராவணன் said...

அது ஏண்ணே காதலி பேரத்தான் புள்ளைக்கு வைக்கனுமா? மாத்தி யோசிங்கண்ணே :)

சைவகொத்துப்பரோட்டா said...

//மயில்ராவணன் said...
அது ஏண்ணே காதலி பேரத்தான் புள்ளைக்கு வைக்கனுமா? மாத்தி யோசிங்கண்ணே :)//

வாங்க மயிலண்ணே!! இந்த கதையில், காதலி பேரை
வைத்தே முடிவில் ட்விஸ்ட்(!!) கொண்டு வர நினைத்தேன்.
அதனால் வேறு சாய்ஸ் இல்லை :))
நன்றி.

Ananthi said...

சப்பாஹ்.. ஏதோ... புரிஞ்ச மாதிரி இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கு.. குழப்பிடீங்க.. ரெம்ப நன்றி..
எப்படி இப்படிங்க..??

(பி.கு: ஒரு சிறு விண்ணப்பம்.. உங்கள் தொடர் பதிவிற்கு ஒரு வழிய ரெடி பண்ணிட்டேன்.. சீக்கிரம் போடறேன்.. லேட் பண்ணதுக்கு ரொம்ப சாரி.. [ mind வாய்ஸ் கேக்குது... நல்ல ஆள போயி கூப்பிட்டனே...!! ] ஹி ஹி.. வரேன்.. )

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

// Ananthi said...
சப்பாஹ்.. ஏதோ... புரிஞ்ச மாதிரி இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கு.. குழப்பிடீங்க.. ரெம்ப நன்றி..
எப்படி இப்படிங்க..??//

அதெல்லாம் அப்படியே ஒரு
ப்ளோவில(??) வரதுதான்..........ஹி..........ஹி...........:))
தொடர்பதிவை போடுங்கள், காத்திருக்கிறேன்.// சசிகுமார் said...
நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

நன்றி சசி.

பிரவின்குமார் said...

சிறுகதை நல்லாயிருக்கு நண்பரே..! சுருக்கமா சொல்லனும்னா.. ஒரு நிமிட கதைபோல் உள்ளது. உங்க எழுத்து நடையில் கதையை மிகவும் அருமையாக மெருகேற்றே இருக்கீங்க...

சைவகொத்துப்பரோட்டா said...

//பிரவின்குமார் said...
சிறுகதை நல்லாயிருக்கு நண்பரே..! சுருக்கமா சொல்லனும்னா.. ஒரு நிமிட கதைபோல் உள்ளது. உங்க எழுத்து நடையில் கதையை மிகவும் அருமையாக மெருகேற்றே இருக்கீங்க...//

உற்சாகமாய் இருக்கிறது!! நன்றி பிரவின்.

NIZAMUDEEN said...

கதையில் கொசுவத்தி, புகை
இதெல்லாம் சொல்லவேயில்ல.
(ரொம்ப அருமை)

சைவகொத்துப்பரோட்டா said...

// NIZAMUDEEN said...
கதையில் கொசுவத்தி, புகை
இதெல்லாம் சொல்லவேயில்ல.
(ரொம்ப அருமை)//

அதெல்லாம் சொன்னா, தொடர்கதை ஆகிவிடுமே..........ஹி.........ஹி........
நன்றி நிஜாமுதின்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)