Sunday, May 16, 2010

கிரீன் பார்க்

வாசு, குணா மறந்துராதீங்கடா நாளைக்கு காலையில பத்து மணி நேரா வந்துருங்கடா கிரீன் பார்க்குக்கு.

இரவு முச்சூடும் எனக்கு தூக்கம் வரல. நாளை அடையப்போற "உன்மத்த நிலைய" இப்பவே
மனசால அனுபவிக்க ஆரம்பிச்சேன். இதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவ அங்கே போயிருக்கேன்
அதிகாரப்பூர்வமா!!

நாளைக்கு நானும், என் நண்பர்களும் திருட்டுத்தனமா அங்க போறதா பிளான். திருட்டு
மாங்கான்னாலே தனி ருசிதானே!!

"அங்க" போறது நீங்க நினைக்கிற மாதிரி அவ்ளோ சுலபமில்லைங்க, நீங்க மில்லியனரா
இருக்கணும் அல்லது ஏதாவது "நல்ல செயல்" செஞ்சி இருந்தீங்கன்னா அங்க போக முடியும்.
முக்கியமா அங்க மட்டும்தான் சிலிண்டர் இல்லாம
"இருக்க முடியும்."

அப்போ நீ எப்படி போனேன்னு கேக்குறீங்களா!!அஞ்சு வருசத்துக்கு முன்னால அதாகப்பட்டது
கடந்த 15 May 2096 - ல, சாலை விபத்துல ஒருத்தர்
மூச்சு விட சிரமப்பட்டபோது, என்னோட "ஸ்பேர் சிலின்டர"
அவருக்கு கொடுத்து உதவினேன்.

அதுக்கு பரிசா அரசாங்கத்துல எனக்கு ஒரு ப்ரீ டிக்கெட் கொடுத்தாங்க "கிரீன் பார்க்குக்கு"

பத்து மணி ஆச்சு, இதோ வாசு, குணா ரெண்டு பெரும் வந்தாச்சு!! டேய் குணா நல்லா
கேட்டுக்க, சரியா 10 .10 மணிக்கு மெயின் கேட்டை திறப்பான்,
12.00 மணிக்கு
செக்யுரிட்டி "சார்ஜ்" ஏத்திக்கபோகும். அப்போ கிடைக்கிற ரெண்டு செகண்ட் கேப்பில நாம உள்ள பூந்துடனும் சரியா?

11.00 மணி வாக்கில கிரீன் பார்க் ஹவுஸ் புல் ஆயிருச்சு!!
எல்லாம் பண "முதலைங்க", உள்ள பூந்தவுடனே எல்லோரும்
சிலின்டர, சந்தோசமா தூக்கி எரியுதுங்க!!

இது போன்ற ஆட்களால்தான், இப்போ இந்த நிலைமைக்கே வந்திருக்கோம்ன்னு
எங்கள் முப்பாட்டர்களின் வலைப்பூ மூலமா தெரிஞ்சுகிட்டேன்.

மணி இப்போ 11.30.

சீக்கிரம் நம்ம "ஸ்பெசல் உடுப்ப" போட்டுக்கோங்க.

போட்டுகொண்டோம்.......... 11.40.................11.50..................

ஆச்சு 12.00 மணி "அது சார்ஜ்" ஏத்திக்க கிளம்பிருச்சு........

நாங்க மூணு பேரும் மின்னலென "உள்ளே" பாய்ந்தோம்.

சிலிண்டரை வீசிவிட்டு, "மரங்களோடு மரங்களாய்" ஐக்கியமாகி "இயற்கையான காற்றை" ஆனந்தமாக சுவாசிக்க ஆரம்பித்தோம்!!

********************************************************

37 comments:

முகிலன் said...

அருமையான science fiction..

நீச்சல்காரன் said...

அப்படியே நமக்கு ஒரு பாக்கெட் அக்சிசனை வாங்கி கொரியர் பண்ணிருங்க வயிதுலயிருக்கிற பேரபிள்ளைக மூச்சுவிடனும்

ஜில்தண்ணி said...

\\ இரவு முச்சூடும் எனக்கு தூக்கம் வரல. நாளை அடையப்போற "உன்மத்த நிலைய" இப்பவே
மனசால அனுபவிக்க ஆரம்பிச்சேன்.\\

உன்மத்த நிலைனா இன்னா?

நாளைக்கு நாம போவோமா க்ரீன் பார்க்குக்கு
(திருட்டு தனமாதான்)

நல்ல முயற்சி,யோசிக்க வைத்தது

நாடோடி said...

இதுதான் முன்னோக்கி யோசிக்கிற‌தா?.... ந‌ல்லா இருக்குங்க‌..

ஜெய்லானி said...

போகிற போக்கை பார்தால் அப்படிதான் தெரியுது. (முப்பாட்டனரின் வலைப்பூ யாருடையது )

தமிழ் உதயம் said...

இப்படி நடந்தால் ஆச்சரியமில்லை. நல்ல கற்பனை.

Jaleela said...

பரோட்டா கற்பனை நல்ல தான் இருக்கு

அஹமது இர்ஷாத் said...

இடுகை அருமை...நல்லாயிருக்குங்க........

வானம்பாடிகள் said...

simply wow.:)

சேட்டைக்காரன் said...

பிரமாதம்! நடந்தாலும் வியப்பில்லை!!

பட்டாபட்டி.. said...

நாம மரம் வெட்டும் ஸ்பீட் பார்த்தா, அதுதான் நடக்கும் போல....

ர‌கு said...

2096 வ‌ரைக்கும் ம‌ர‌த்தையெல்லாம் விட்டு வெச்சிருப்போம்னா நினைக்க‌றீங்க‌?

இராமசாமி கண்ணண் said...

நல்லாயிருக்கு நண்பா.ரொம்ப முன்னோக்கி யோசிக்கிறீங்க. நன்று.

சைவகொத்துப்பரோட்டா said...

//முகிலன் said...
அருமையான science fiction..//

நன்றி முகிலன்.


// நீச்சல்காரன் said...
அப்படியே நமக்கு ஒரு பாக்கெட் அக்சிசனை வாங்கி கொரியர் பண்ணிருங்க வயிதுலயிருக்கிற பேரபிள்ளைக மூச்சுவிடனும்//

ம்ம்......சீரியஸ் மேட்டரையும், நகைச்சுவையாய் சொல்லி விட்டீர்கள்!! நன்றி நண்பா.


// ஜில்தண்ணி said...
உன்மத்த நிலைனா இன்னா?

நாளைக்கு நாம போவோமா க்ரீன் பார்க்குக்கு
(திருட்டு தனமாதான்)

நல்ல முயற்சி,யோசிக்க வைத்தது//

இது ஒரு "எளக்கிய" வார்த்தை...........ஹி............ஹி........
நன்றி ஜில்லு.


// நாடோடி said...
இதுதான் முன்னோக்கி யோசிக்கிற‌தா?.... ந‌ல்லா இருக்குங்க‌..//

நன்றி ஸ்டீபன்.


// ஜெய்லானி said...
போகிற போக்கை பார்தால் அப்படிதான் தெரியுது. (முப்பாட்டனரின் வலைப்பூ யாருடையது )//

நிறய இருக்கு!! சட்டுன்னு வரது "நம்ம சாமக்கோடாங்கி"தேன்!!
நன்றி ஜெய்லானி.


// தமிழ் உதயம் said...
இப்படி நடந்தால் ஆச்சரியமில்லை. நல்ல கற்பனை.//

நன்றி நண்பரே.


// Jaleela said...
பரோட்டா கற்பனை நல்ல தான் இருக்கு//

நன்றி அக்கா.


// அஹமது இர்ஷாத் said...
இடுகை அருமை...நல்லாயிருக்குங்க........//

நன்றி இர்ஷாத்.


// வானம்பாடிகள் said...
simply wow.:)//

நன்றி அய்யா.// சேட்டைக்காரன் said...
பிரமாதம்! நடந்தாலும் வியப்பில்லை!!//

வாங்க ஆசிரியரே!!
நன்றி.// பட்டாபட்டி.. said...
நாம மரம் வெட்டும் ஸ்பீட் பார்த்தா, அதுதான் நடக்கும் போல....//

அதேதான் பட்டு!!
நன்றி.// ர‌கு said...
2096 வ‌ரைக்கும் ம‌ர‌த்தையெல்லாம் விட்டு வெச்சிருப்போம்னா நினைக்க‌றீங்க‌?//

இருக்கும், இதே போல் கிரீன் பார்க்கில் மட்டும் :(
நன்றி ரகு.// இராமசாமி கண்ணண் said...
நல்லாயிருக்கு நண்பா.ரொம்ப முன்னோக்கி யோசிக்கிறீங்க. நன்று.//

ஊக்கத்திற்கு நன்றி ராம்.

ஸ்ரீராம். said...

நல்ல முயற்சி. சுஜாதாவோட திமலா படிச்சிருக்கீங்களா?

NIZAMUDEEN said...

2096-ல் இப்படி என்றால்,
இப்பவே சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

VISA said...

நறுக் சுருக் நச்!!!

சைவகொத்துப்பரோட்டா said...

// ஸ்ரீராம். said...
நல்ல முயற்சி. சுஜாதாவோட திமலா படிச்சிருக்கீங்களா?//

இல்லையண்ணா, இனிதான் படிக்க வேண்டும்,
கதையின் தலைப்பு கொடுத்ததற்கு நன்றி!!


// NIZAMUDEEN said...
2096-ல் இப்படி என்றால்,
இப்பவே சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.//

நன்றி நிஜாமுதின்.// VISA said...
நறுக் சுருக் நச்!!!//

ஆஹா!! உங்க விமர்சனமமும் ரத்தினச்சுருக்கம்!!!

சாய்ராம் கோபாலன் said...

நாம் இன்று உலகுக்கு செய்யும் தீங்குக்கு அனேகமாக நீங்கள் சொன்ன மாதிரி நல்ல காற்று சுவாசிக்க இப்படித்தான் ஆகும். நல்ல ஒரு சயின்ஸ் பிக்க்ஷன். சூப்பர்

சைவகொத்துப்பரோட்டா said...

// சாய்ராம் கோபாலன் said...
நாம் இன்று உலகுக்கு செய்யும் தீங்குக்கு அனேகமாக நீங்கள் சொன்ன மாதிரி நல்ல காற்று சுவாசிக்க இப்படித்தான் ஆகும். நல்ல ஒரு சயின்ஸ் பிக்க்ஷன். சூப்பர்//

தங்களின் கருத்துக்கு, நன்றி அண்ணா.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

அருமையான அறிவியல் கற்பனை. இன்றைய காலத்திற்கு தேவையானது.

Anonymous said...

சமைக்கிறதுக்கும் அந்த சிலிண்டர யூஸ் பண்ணிக்கலாமா அண்ணாத்தே?

Mohan said...

நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைங்க....

LK said...

intha nilaai varamal iraivan kaapanaga

padma said...

நல்லா இருக்கு, நல்லா இருக்கு, நல்லா இருக்கு .
வாழ்த்துக்கள்

சாய்ராம் கோபாலன் said...

//சைவகொத்துப்பரோட்டா said...
தங்களின் கருத்துக்கு, நன்றி அண்ணா.//

Anna ? LOL. I thought I was just born ?

சைவகொத்துப்பரோட்டா said...

// Dr.எம்.கே.முருகானந்தன் said...
அருமையான அறிவியல் கற்பனை. இன்றைய காலத்திற்கு தேவையானது.//

கருத்துக்கு நன்றி மருத்துவரே.// கிறுக்கல்கள் said...
சமைக்கிறதுக்கும் அந்த சிலிண்டர யூஸ் பண்ணிக்கலாமா அண்ணாத்தே?//

2101 -ல சமையல் கிடையாது தங்கச்சி, எல்லாமே
கேப்ஸ்யுல்தான்!!!// Mohan said...
நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைங்க....//

நன்றி மோகன்.// LK said...
intha nilaai varamal iraivan kaapanaga//

இதுக்கு காரணமே நாமதானே (சிலர்)!!!
கருத்துக்கு நன்றி LK.


// padma said...
நல்லா இருக்கு, நல்லா இருக்கு, நல்லா இருக்கு .
வாழ்த்துக்கள்//

ஹை!! நிசமாலுமா!!
நன்றி பத்மா.// சாய்ராம் கோபாலன் said...
//சைவகொத்துப்பரோட்டா said...
தங்களின் கருத்துக்கு, நன்றி அண்ணா.//

Anna ? LOL. I thought I was just born ?//

அப்படியா!!! நன்றி குழந்தே :))

பிரசன்னா said...

மிக நன்று..!
2100ல சிலின்டர தூக்கிட்டே அலையனுமா.. பாவம் தான் அவங்க :)

r.v.saravanan said...

good good saivakothu parotta

r.v.saravanan said...

good good saivakothu parotta

Minmini.com said...

MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..

சைவகொத்துப்பரோட்டா said...

// பிரசன்னா said...
மிக நன்று..!
2100ல சிலின்டர தூக்கிட்டே அலையனுமா.. பாவம் தான் அவங்க :)//

கருத்துக்கு நன்றி பிரசன்னா.


// r.v.saravanan said...
good good saivakothu parotta//

நன்றி சரவணன்.// Minmini.com said...
MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..//

துண்ட போட்டு வைங்க மின்மினி, இதோ
வந்திடறேன் :))

மசக்கவுண்டன் said...

H.G.Wells ரேன்ச்சுக்கு போயிட்டீங்க சை.கொ.பரோட்டா.

சசிகுமார் said...

நல்லா இருக்கு நண்பா, நண்பா பணிச்சுமை காரணமாக ஒருவாரமாக என்னால் கருத்துக்கள் போட முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

// மசக்கவுண்டன் said...
H.G.Wells ரேன்ச்சுக்கு போயிட்டீங்க சை.கொ.பரோட்டா.//

அப்படியா!! கருத்துக்கு நன்றி அய்யா.
// சசிகுமார் said...
நல்லா இருக்கு நண்பா, நண்பா பணிச்சுமை காரணமாக ஒருவாரமாக என்னால் கருத்துக்கள் போட முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

இதுக்கு போய் ஏன் நண்பா மன்னிப்பு எல்லாம்
சொல்லிக்கிட்டு. தொழில் முக்கியம் நண்பா. இவ்ளோ தூரம் வந்து சொன்னது மகிழ்ச்சியே!!
நன்றி சசி.

cheena (சீனா) said...

அன்பின் சை கொ ப - சிந்தனை நன்று - இக்கற்பனை ஒரு நாள் நடக்கத்தான் போகிறது. 2096 ல் அல்ல - இன்னும் விரைவினிலேயே - இப்பொழுதே நாம் திருந்த வேண்டும். ம்ம்ம்ம்

நல்லதொரு இடுகை- நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

சைவகொத்துப்பரோட்டா said...

@cheena (சீனா)
நடப்பை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது!
நன்றி அய்யா.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)