யோவ் நான் சொல்லுறத கவனமா கேட்டுக்க, எங்க இயக்குனர் ரொம்ப கோபக்காரர், அவர் எதிர்பார்க்கிற நடிப்பு உன்கிட்ட இருந்து வர வரைக்கும் உடமாட்டாரு, சட்டுன்னு
கோவம் வரும், எக்கு தப்பா திட்டுவாரு, அதெல்லாம் நீ மனசுல வச்சுக்க படாது, பேட்டா காசு எல்லாம் கரெக்டா வாங்கி கொடுத்திருவேன், என்ன யமன் வேஷம் போடுறியா?
சரி சார், என்ன வேஷம் கொடுத்தாலும் செய்றேன் சார், நீங்க எனக்கு வாழ்க்கை கொடுத்த
தெய்வம் சார், இதுவரை ஹீரோவா ஆகணும்னு வறட்டு பிடிவாததுல இருந்து, வறுமையினால என் அம்மாவை
தொலைச்சதுதான் மிச்சம், மீதம் இருக்குற நாளையாவது என் அப்பா, தங்கைக்கு உபயோகமா
இருக்கனும்ன்னு நினைக்கிறேன் என்றான் சாரதி.
சரி...சரி... போய் "யமன்" கெட் அப் போட்டு ரெடியா இரு.
ஹீரோ இலட்சியத்தை கொன்று விட்டு, "யமனாகி" இயக்குனர் வருகைக்கு காத்திருந்தான் சாரதி.
அந்த கோபக்கார இயக்குனர் வந்த உடனே மொத்த யூனிட்டும் பொதுத்தேர்வு எழுதும் கூடமாகியது. கதாநாயகன், நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து கொண்டிருந்தார்கள்.
உச்சி வெயில் மண்டையை பிளந்தது, காலையில் அவசரமாக
புறப்பட்டதால் சாப்பிடவில்லை, பசி, தாகம், எல்லாம் சேர்ந்து
சாரதியை வாட்டியது.
உணவு இடைவேளை வந்து அனைவரும் சாப்பிட்டனர், சாரதி புதுவரவு துணை நடிகன் ஆனதால் அவனுக்கான சாப்பாடு மறதியால் விடுபட்டது.
யாரோ ஒரு நல்ல உள்ளம் கவனித்து, சாரதிக்கான சாப்பாடு
வந்து சேர்ந்த பொழுது, இயக்குனரின் கர்ஜனை குரல் கேட்டது...
யாருய்யா "யமன்"....
சாப்பட்டை அப்படியே வைத்துவிட்டு, அவர் முன் ஓடிசென்று
நான்தான் சார், சாரதி பவ்யமாக நின்றான்.
இதுக்கு முன்னால நடிச்ச அனுபவம் இருக்காயா?
காலேஜ் நாடகத்துல நடிச்ச அனுபவம் இருக்கு சார்...
சீன நான் ஒரு தடவை சொல்றேன், கவனமா கேட்டுக்க, அதோ நிக்குது பாரு எருமை அது மேல நீ
நல்லா நெஞ்ச நிமித்தி உக்காந்துகிட்டு, உன் முன்னால நிக்குற ஆள பார்த்து, ஏய் மானிடா பூமாதேவிக்கு பாரமாக இருந்தது போதும்,
கிளம்பு என்னோடு" அப்படின்னு
கம்பீரமா சொல்லணும் புரிஞ்சதா?
சரி சார்.
ரெடி, ஸ்டார்ட் காமிரா, ஆக்சன்...
கட்... யோவ்...யோவ்.... நல்லா கம்பீரமா உக்காருயா, சொங்கி மாதிரி உக்காந்துகிட்டு...
(சாரதிக்கு லேசாக பசி + பயத்தில் வியர்த்து நடுங்கியது)
ரெடி, ஸ்டார்ட் காமிரா, ஆக்சன்...
கட்...டேய்.. நல்லா வீரமா பேசுடா, வாயில என்ன கொழுக்கட்டையா வச்சு இருக்க....
(சாரதிக்கு அவமானமாக இருந்தது)
ரெடி, ஸ்டார்ட் காமிரா, ஆக்சன்...
கட்...எருமை...எருமை.... யோவ் அசிஸ்டென்ட் இவன எங்கயா பிடிச்ச, ஒரு டயலாக் உருப்படியா சொல்ல தெரியுதா, தடிமாடு...அஞ்சறிவு உள்ள அந்த மாடு
கூட அழகா சொன்னபடி செய்யுது, உனக்கு புத்தி இல்ல...
(சாரதியின் விழித்து கொண்ட தன்மானத்தை வறுமை "தூங்க சொல்லியது")
சாரதி இயக்குனரிடம் கெஞ்சினான், இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க சார், சரியா பண்ணிடுறேன்...
இன்னோர் தடவ சரியா பண்ணல தொலச்சிருவேன் ராஸ்கல்...
ரெடி, ஸ்டார்ட்...
சார் தயவு செய்து படபிடிப்ப நிப்பாட்டுங்க, வேடிக்கை பார்த்த கூட்டத்தை பிளந்து கொண்டு ஒரு கூட்டம் வந்தது இயக்குனரிடம்.
நீங்கல்லாம் யாரு, இந்த இடத்துல படபிடிப்பு நடத்த நாங்க முறையா அனுமதி வாங்கி இருக்கோம் தெரியுமா?
சார் நாங்க ப்ளு கிராஸ்ல இருந்து வரோம், இந்த மாதிரி வாய் இல்லா ஜீவன்கள
வதைக்குரத நாங்க அனுமதிக்க மாட்டோம்....

***********************************************************************************
அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

16 comments:
அட, அதுக்கு கூட ஆள் இருக்கு..:((
நல்லா கலக்குங்க நண்பரே..:))
@பலா பட்டறை
நன்றி ஷங்கர். ஒரு பின்னூட்டமும்
வரலையே, ஒரு வேளை "அதுக்கு" எதிரா எழுதிட்டோமோன்னு நினைச்சேன் :))
உன்னால் முடியும் தம்பி உதயம் சொல்வது போல ஒரு வீச்சு குறைகிறது...
ஒரு சிறு முத்தாய்ப்பு தேவை போல தோன்றுகிறது..
நல்ல முயற்சி.
@ஸ்ரீராம்
மிக்க மகிழ்ச்சி, இதைத்தான் எதிர்பார்க்கிறேன். குறைகளையும் சுட்டிக்காட்டுங்கள், மேலும்
மெருகேற்ற வசதியாக இருக்கும். நன்றி, ஸ்ரீராம் அண்ணா உங்களின் ஊக்கத்திற்கு.
படித்து முடித்த உடன் கமல் பட சீன் தானே இது என்ற நினைவு. உடனடியாக சாரதி மனதில் வந்து கதைக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுத்தான். நல்லாயிருக்கு
நல்லாயிருக்கு.நம்ம வலை பக்கம் கொஞ்சம் எட்டி பார்க்கலாமே!
@பின்னோக்கி
மிக்க நன்றி, தொடர் வருகைக்கும், கருத்துக்கும்.
@மலர்விழி
//நல்லாயிருக்கு.நம்ம வலை பக்கம் கொஞ்சம் எட்டி பார்க்கலாமே!//
பார்த்தாச்சு, சேர்ந்தாச்சு, மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்..
@அன்புடன் மலிக்கா
மிக்க நன்றி, தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்கும்.
வாழ்த்துக்கள்
பம்மல் கே சம்பந்தம்படம் நினைவில் வந்து சிரித்துவிட்டேன் சைவ கொத்துப் பரோட்டா
நச்சுனு உங்க கதை. நெஞ்ச டச் பண்ணிடுச்சு.
@தேனம்மைலக்ஷ்மணன்
மிக்க நன்றி தங்களின் கருத்துக்கும், தொடர் வருகைக்கும். உங்களுக்கும் பம்மல் கே...நினைவுக்கு வந்துவிட்டதா :))
@ஆதி மனிதன்
மிக்க நன்றி, ஆதி மனிதன். (வித்தியசமான பெயர் வைச்சி இருக்கீங்க!!)
கடைசியில் வருபவர்கள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்? எருமைக்கா? அல்லது சாரதிக்கா?
@கேஜிகௌதமன்
//கடைசியில் வருபவர்கள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்? எருமைக்கா? அல்லது சாரதிக்கா?//
ரொம்பதான் குறும்பு உங்களுக்கு :))
Post a Comment