Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவன் - என் பார்வையில்

ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது இந்த ஆயிரத்தில் ஒருவன், நேற்று மீண்டும் ஒருமுறை பார்த்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறமா தமிழ் படத்துல சுத்தமான தமிழ் கேட்டது செவிக்கு விருந்து.

கப்பலில் நாயகர் உள்பட அனைவரும் ஏற்றப்படும் காட்சியில் இருந்து ஆரம்பிக்கும் விறுவிறுப்பு, கடைசி வரை குறையவில்லை. இதில் முக்கியமான ஒரு நபரை பாராட்டியே ஆக வேண்டும், அவர்தான்
ஆர்ட் டிரெக்டர். அனைவரும் தீவுக்கு சென்ற பின் வரும் அந்த மாளிகை செட்டாகட்டும், கடைசி சண்டை காட்சியில் வரும் கப்பல்கள் எல்லாம் மிக தத்ரூபம்.

கதைன்னு பார்த்தா சர்வதிகாரம் நடக்குற எடத்துல இருக்கிற ஹீரோ அத எதிர்த்து மக்களாட்சி கொண்டுவர போராடுறதுதான் கதைக்களம். ஆனால் இதை, காதல், நகைசுவை எல்லாம் கலந்து மிக சுவாரசியமாய் படைத்து
உள்ளார்கள்.

கதையோட்டத்துடன் வரும் அந்த நகைச்சுவை அரசரின் நகைச்சுவை,
மற்றும் கடற்கொள்ளையனாக அறிமுகமாகி, பின் ஹீரோவினால் மனம் திருந்தி நல்லவராகும் பாத்திரத்தில்
நடித்தவரின் நடிப்பும் பாராட்டப்பட வேண்டியது.

ஹீரோயின் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம் உணர்ந்து நடித்து
உள்ளார்.

இந்த படத்திற்கு இசை "இரட்டையர்கள்" பாடல்கள் அனைத்தும் தேனில் தோய்த்த பலா, அத்தனை இனிமை.

கடைசியில் மக்களாட்சி மலர்ந்ததா இல்லையா என்பதை வெள்ளித்திரையில் அல்லது "இந்திய தொலைக்காட்சிகளில்
முதல் முறையாகவோ" அவரவர் வசதிக்கு ஏற்ப பார்த்து
கொள்ளவும்.


ஆயிரத்தில் ஒருவன் - என்றென்றும்



டிஸ்கி:நான் குறிப்பிட்டுள்ள இந்த படம் நிஜமாகவே எனக்கு
பிடித்த படம். நீங்கள் எதிர்பார்த்து வந்த படத்த நான் இன்னும்
பார்க்கல, ஹி..ஹி..ஹி..
ரெடி, ஸ்டாட், மியுசிக்....

**************************************************************************************



அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

14 comments:

புலவன் புலிகேசி said...

நாங்க எதிர்பார்த்த படமும் சூப்பர் தான் தல

அண்ணாமலையான் said...

நீங்க பாராட்டுன படம் சூப்பர்தான்

Paleo God said...

நீங்களுமா..??:))

சைவகொத்துப்பரோட்டா said...

@புலவன் புலிகேசி

நன்றி தலைவா, பாத்துட்டா போச்சு.

சைவகொத்துப்பரோட்டா said...

@அண்ணாமலையான்

நன்றி, இந்த மாதிரி படம் எத்துனை முறை பார்த்தாலும் சலிக்காது.

சைவகொத்துப்பரோட்டா said...

@பலா பட்டறை

//நீங்களுமா..??:))//

ச்ச்..சும்மா... ஒரு ட்விஸ்ட் கொடுக்கலாமேன்னு..ஹி..ஹி..

பின்னோக்கி said...

ஏமாத்திப்புட்டீங்களே அய்யா !!

சைவகொத்துப்பரோட்டா said...

@பின்னோக்கி

//ஏமாத்திப்புட்டீங்களே அய்யா !!//

அய்யோ.. பாவம், கொஞ்சம் பின்னோக்கி பார்த்துட்டேன்.... சும்மா... விளையாட்டுக்கு :))

angel said...

the film is too nice u too see

//நான் இன்னும்
பார்க்கல,//

i too
hehehe

சைவகொத்துப்பரோட்டா said...

@angel

திருநெல்வேலிக்கே, அல்வாவா.... அசத்துங்க :))

Muruganandan M.K. said...

வெஜி யான எனக்கு உங்கள் சைவகொத்துப்பரோட்டா பெயரைப் பாரத்ததும் உள்ளே நுழைய வேண்டும் போலிருந்தது.
புகுந்ததில் நல்ல விருந்து கிடைத்தது.
சுருக்கமான நல்ல விமர்சனம் நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

@Dr.எம்.கே.முருகானந்தன்

மிக்க நன்றி உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், தொடர்ந்து வாருங்கள்.

ஸ்ரீராம். said...

சரி...சரி...ஆயிரத்தில் ஒருவன் மூன்றாவது வரும்போது இப்போ வந்துள்ள படத்துக்கு விமர்சனம் எழுதிக்கலாம்...

சைவகொத்துப்பரோட்டா said...

@ஸ்ரீராம்

வாங்க கமெண்ட் கிங், மீண்டும் ஒரு முறையா.......
அப்புறம் என்ன கொத்துபரோட்டா போட்டிருவாங்க :))

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)