பஞ்சபூதங்கள் ஆகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை வழிபாடும் நாளே பொங்கல் திருநாள் ஆகும். எப்படி என்று கேட்குறீர்களா? நமது மரபுப்படி மண்பானையில் தண்ணீர் விட்டு அரிசியினை கொதிக்க வைக்க பனை ஓலை மூலம்
நெருப்பு வைக்கிறோம் வீட்டுக்கு வெளியில். நெருப்பு எறிவதற்கு காற்றும் ஒரு காரணம்.
பொங்கல் பொங்கியவுடன் சூரியனை பார்த்து நன்றி சொல்லுகிறோம். இந்த செயலில்
பஞ்ச பூதங்களும் இருப்பதை கவனித்தீர்களா.
பொங்கல் என்றதும் சிறியோர் முதல் பெரியோர் வரை நினைவுக்கு வருவது கரும்பு.
இந்த கரும்பானது நுனியில் உப்பு கரிக்கும், அடிக்கரும்பு ரொம்ப இனிப்பாகவும் இருக்கும்,
இதில் நம் வாழ்வியல் உள்ளது. ஆரம்ப காலங்களில் நாம் எதிர்கொள்ளும் சிரமங்கள் நுனிகரும்பு போன்றது, பின் பெரும் வெற்றிகள் அடிக்கரும்பு போல தித்திப்பாக இருக்கும். எனவே, தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள்.
பொங்கல, நாம தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்ன்னு மூணு நாள் கொண்டாடுறோம், அந்த காலத்துல 28 நாட்கள் கொண்டாடி
இருக்காங்க. (ம்... கொடுத்து வச்சவங்க.. இப்ப பொங்கல் நாள, காலண்டர் பாத்துதான்
தெரின்சிக்கவேண்டி இருக்கு)
அனைவருக்கும் இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.
அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.
8 comments:
இந்த கரும்பானது நுனியில் உப்பு கரிக்கும், அடிக்கரும்பு ரொம்ப இனிப்பாகவும் இருக்கும்,
இதில் நம் வாழ்வியல் உள்ளது. ஆரம்ப காலங்களில் நாம் எதிர்கொள்ளும் சிரமங்கள் நுனிகரும்பு போன்றது, பின் பெரும் வெற்றிகள் அடிக்கரும்பு போல தித்திப்பாக இருக்கும். எனவே, தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள்.//
உண்மைதான்..
தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்..
நன்றி குணசீலன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
பொங்கல் வாழ்த்துக்கள்.
தங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
நன்றி சூர்யா கண்ணன்
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே..::))
நன்றி, ஷங்கர் உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் வந்தா எல்லாரும் மக்கள் டிவிக்கு மாறிடுறீங்க
நாலு நாள் பொட்டிக்கு லீவு விட வேண்டியதுதான் ..................
ஹி ..ஹி..சும்மா
டைம் இருந்தா எங்களையும் கொஞ்சம் கவனிங்க
நல்லாவே குழப்புறீங்க, இன்னும் நிறய குழப்பி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா.
Post a Comment