Tuesday, January 12, 2010

என்னை தூக்கி எறிய வேண்டாம்


யாரவது நம்மை அவமதித்து விட்டால் அவன் என்னை கறிவேப்பிலையை தூக்கி எரியுற
மாதிரி என்ன எறிஞ்சிட்டான் என புலம்புவோம். விடுங்கள் கவலையை கறிவேப்பிலையின்
மகத்துவம் தெரியாமல் அதனை நாம் எறிவது போல், நம்மை உதாசீன படுத்தினால்
நஷ்டம் அவர்களுக்குதான்.

இதுல அப்படி என்னதான் இருக்குன்னு கேட்குறீங்களா, இத படிச்ச அப்புறமா என்ன இல்லைன்னு நம்ம கேள்வியை மாத்திக்கிற அளவுக்கு இதுல மருத்துவ குணங்கள் இருக்கு.

பலருக்கு கண்ணாடி முன்னால நிக்கும்போது நம்ம தலை முடி இன்னும் வளந்தா
நல்லா இருக்குமேன்னு தோணும், இத (கறிவேப்பிலை) சாப்பிடுங்க முடி
வளரும் அதோட இலவச இணைப்பா கண் பார்வையும் பிரகாசமாகும்.




சிலருக்கு முகத்தில அம்மை நோய் வந்ததோட வடு இருக்கும். அத நிரந்தரமா போக்கணுமா,
கறிவேப்பிலை ஒரு பிடி, கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு, கசகசா ஒரு கரண்டி இதை
எல்லாம் சேர்த்து அரைத்து முகத்தில் தடவுங்கள். அரை மணி நேரத்துக்கு மனசுக்கு
பிடிச்ச பாட்டை கேளுங்க அப்புறமா மறக்காம முகத்தை கழுவுங்க. இதே
மாதிரி குறைந்த பட்சம் பதினைந்து (15) நாளைக்கு செய்யுங்க, அப்புறம் பாருங்க முகத்துல இருக்குற
தழும்புகள் போயே போச்சே, போயிந்தே, இட்ஸ் கான்ன்னு உங்களுக்கு பிடிச்ச பாசையில நீங்களே சொல்லுற லெவெல்ல உங்க முகம் இருக்கும்.

சில அம்மாக்கள் என் புள்ள சாப்பிடவே மாட்டேன்குது, அப்படியே சாப்பிட்டாலும்
ஜீரணம் ஆக மாட்டேன்குதுன்னு புலம்புவாங்க,
கவலையை விடுங்க. கறிவேப்பிலையுடன், சுக்கு, மிளகு, சீரகம் எல்லாம் சேர்த்து
வறுத்து, இதோட உப்பை சேர்த்து சாதத்துடன் பிசைந்து கொடுங்க, அப்புறம் பிள்ளைங்க
அம்மா ஒன் மோர் தோசைம்மான்னு சொல்லும், இது சிறுவர்களுக்கு மட்டும்ன்னு நினைக்காதீங்க, பெரியவர்களுக்கும் பொருந்தும்.


இது மட்டுமில்லாம, இதுக்கு சில தொற்று நோய்கள், சோகை நோய் போன்றவற்றை
தடுக்கும் ஆற்றல் உண்டு, வாயப்புன்ன குணமாக்கும், பல் ஈறுகளையும் எலும்புகளையும் வலுபடுத்தும், மலசிக்கலை போக்கும்.
இதோட இதுல ஏ, சி, இருக்கு, (அதாங்க விட்டமின்ஸ்.)

இனிமே கறிவேப்பிலையை தூக்கி எறியாதீங்க, அப்படி செய்றவங்கள பார்த்தா இதோட
மகத்துவத்த எடுத்து சொல்லுங்க.


பி.கு.துவையலா செஞ்சும் சாப்பிடலாம்.
எங்க அம்மா கறிவேப்பிலை துவையல் செய்வாங்க, ருசியாக
இருக்கும்.


டிஸ்கி:நான் படித்தவற்றை பெருக இவ்வையகம் என உங்கள்
பார்வைக்கு கொடுத்துள்ளேன்.











அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

14 comments:

Raju said...

பயனுள்ள தகவல்கள் தல.

சைவகொத்துப்பரோட்டா said...

@ராஜு

மிக்க நன்றி தலைவா

angel said...

very nice and useful ideas

சைவகொத்துப்பரோட்டா said...

@angel

நன்றி ஏஞ்சல், இனிமே தூக்கி எறியாதீங்க.

Paleo God said...

உண்மை நண்பரே.. நல்ல பதிவு. பொங்கல் வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

@பலா பட்டறை

நன்றி நண்பரே, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல்
வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

ம் நல்ல பதிவு. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி நண்பா, உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

சினிமா புலவன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

@சினிமா புலவன்

நன்றி நண்பரே. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல்
வாழ்த்துக்கள்.

Unknown said...

பயனுள்ள தகவல்கள்
நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

@ஜெயா

நன்றி ஜெயா, இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

கறிவேப்பிலை வீட்டில் சமையலில் பயன்படுத்தும் ஒரு இலை - அது பல வித மருத்துவ குணங்களை உடையது என்பது பலருக்குப் பயன்படும் தகவல்.

நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா

சைவகொத்துப்பரோட்டா said...

// cheena (சீனா) said...
கறிவேப்பிலை வீட்டில் சமையலில் பயன்படுத்தும் ஒரு இலை - அது பல வித மருத்துவ குணங்களை உடையது என்பது பலருக்குப் பயன்படும் தகவல்.

நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா//

நன்றி அய்யா.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)