அழகிய பூந்தோட்டமாய் இந்த
பூமிபந்து
இதன் வண்ணமலர்களாய்
தாவரங்கள், விலங்குகள், மானிடர்கள்
முன்னவை இரண்டும் தன் இயல்பில் இருக்க
சில மானிடர்
விலங்காய் மாறியதால்
பூந்தோட்டம் போர்க்களமாகியது
போர்க்களம் மீண்டும் பூந்தோட்டமாய்
மாற பூக்க வேண்டும்
மனித நேயம்.
அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.
11 comments:
நல்லா இருக்கு..இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் சிறப்பாக இருக்கும் நண்பா..(இந்த அன்பு அட்வைஸ் எனக்கும் சேர்த்துதான் :)
நன்றி நண்பா. இப்பொழுதுதான் கவிதை எழுதும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.
பிழைகளை சுட்டிகாட்டுங்கள். நான் மெருகேற்ற வழி காட்டுங்கள்.
தாவர விலங்கின பறப்பன
பூக்கள் விளையுற
பூமி தோட்டத்தில்
மானிட தாவர களை எடுக்க
இயற்கை தோட்டக்காரன்
சுனாமி பூகம்ப
உரம் போட்டான்...
அவ்வளவுதான் தலைவரே கவிதை ....சும்மா பிச்சி உதறுங்க...
((உங்களதுதான் நான் சும்மா கட்டிங் பிட்டிங் பண்ணினேன் ...:))
அருமை நண்பரே, உங்களுடைய பினிஷிங்.
நன்றி.
அருமைங்க.. அரும!!
@கலையரசன்
மிக்க நன்றி. (நிசமாத்தான் சொல்றீகளா :)
நல்ல கவிதை முயற்சி நண்பரே. அருமையான கருத்து. பூங்குன்றன் சொன்னது போல் முயற்சித்தால் இன்னும் சிறப்பாக வரும்.
கருத்தாழம் நிறைந்த கவிதை. வாழ்த்துக்காள் நண்பரே.
@சினிமா புலவன்
மிக்க நன்றி நண்பரே, உங்களின் ஊக்கத்திற்கும், கருத்திற்கும்.
வலிக்கின்ற மனதிற்கு ஆறுதலாக உள்ளது உங்கள் பதிவுகள்.நன்றாக கொத்துகின்றீர்கள்.தொடரட்டும் பணி
//lolly999 said...
வலிக்கின்ற மனதிற்கு ஆறுதலாக உள்ளது உங்கள் பதிவுகள்.நன்றாக கொத்துகின்றீர்கள்.தொடரட்டும் பணி//
நன்றி தோழி, உங்கள் கருத்துக்கு. ரொம்ப பொறுமைதான் உங்களுக்கு, பழைய இடுகைகளையும்
படித்து இருக்குறீர்களே!!
Post a Comment