ஜானும்மா இன்னைக்கு ஸ்கூல்ல நடந்த ரன்னிங் ரேஸ்ல நான்தான் பர்ஸ்ட் பெருமையாக
வெற்றிகோப்பையை, தன்னையும் வீட்டையும் பராமரிக்கும் பணிப்பெண்னிடம் நீட்டினான்
விக்கி.
படிப்பிலும், விளையாட்டிலும் நீதானே ராசா என்னைக்கும் பர்ஸ்ட்.
ஹைய்யோ.....என் பேர் ராசா இல்லை, விக்கி.
எனக்கு நீ ராசாதான், குளிச்சிட்டு வா சாப்பிடலாம்.
அம்மா வந்திரட்டும், இன்னைக்காவது அம்மா கூட சேர்ந்து சாப்பிடனும்.
ஜானகி.....விக்கிய உள்ள படுக்க வைக்க வேண்டியதுதான, ஏன் இப்படி ஹால்ல படுக்க
வைச்சிருக்கே....
இல்லமா..........ராசா இன்னும் சாப்பிட கூட இல்ல........இன்னைக்காவது உன்கூட
சேர்ந்து சாப்பிடனும்னு...........
அறிவில்ல உனக்கு, ஆபிசில தலைக்கு மேல வேலை இருக்கு, எங்களால
இவன பார்த்துக்க முடியலைன்னுதான உன்ன வேலைக்கு வச்சி இருக்கு,
சின்னைபையன் சொன்னான்னு........
ராசா........ராசா........
ம்மா.......இன்னைக்கு ஸ்கூல்ல...........
அம்மா வரலியா.........ஜானும்மா, அம்மா எங்க.....
அவுங்க இப்பதான் வந்தாங்க, களைப்பா இருக்குன்னு தூங்க போய்ட்டாங்க ராசா, வா
சாப்பிடலாம்.......
ப்போ............எனக்கு வேணாம்.............அம்.....மா...........அம்மா...........
தூக்கம் கலைந்த அம்மா எழாமலே சொன்னாள், போய் சமத்தா சாப்பிட்டு படு விக்கி,
அம்மாவுக்கு டயர்டா இருக்கு........
அப்பா..........அப்பா.........
அவரிடம் இருந்து குறட்டை மட்டுமே வந்தது.
ஹைய்யோ.........இங்க பாருங்க சின்ன வயசு விக்கி மாதிரியே இருக்கான் நம்ம பேரன்.
விக்கி......விக்கி......இங்க பாரேன்...........
என்னங்க........விக்கி நம்ம கூட பேசவே மாட்டேங்குறான்,
நம்மள மதிக்கிறதும் இல்ல.....
தன் குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த ஜானகியிடம், சென்ற
விக்கி, உங்க பேரன கொஞ்சுற ஆர்வத்துல என்னை மறந்துராதீங்க
என்றான்.
உன்னை எப்படி ராசா மறக்க முடியும்.
அய்யோ.......என் பேரு விக்......
இல்ல ......ராசான்னே கூப்பிடுங்க ஜானும்மா,
****************************************************
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.
54 comments:
அண்ணே.. புரோட்டா சூப்பர்..
நல்லாயிருக்கு...
”பெற்றால் மட்டும் பத்தாது” ...என நெஞ்சில அடிக்கிற மாறி சொல்லியிருக்கீங்க...
உண்மை....
பாவம் இந்த காலத்து பெற்றோர்
நல்ல புனைவு
பணமா? பாசமா?
:-(
விக்கி விக்கி அழுதுட்டேன்... வசந்தமாளிகை சிவாஜி மாதிரி...!
சின்ன வயதில் கொடுக்கப்படாத பாசத்தின் ஏமாற்றம் ஆயுளுக்கும் மறக்கமுடியாது.
பட்டா பட்டியையே பீல் பண்ண வெச்சிட்டீங்களே..:)
--
சூப்பர்.:)
விக்கி போல் பலரும் இன்று பாசத்திற்காக வாடுவதை அழகாக எழுதியிருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள் நண்பா...
-
DREAMER
நல்ல ஆழமான கருத்து...
வேலை வேலை என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். குழந்தையின் ப்ரியமும், பாசமும் மட்டும் விதிவிலக்காகுமா.
சுரை விதைக்க பனையா முளைக்கும்!!!
// பட்டாபட்டி.. said...
அண்ணே.. புரோட்டா சூப்பர்..
நல்லாயிருக்கு...
”பெற்றால் மட்டும் பத்தாது” ...என நெஞ்சில அடிக்கிற மாறி சொல்லியிருக்கீங்க...
உண்மை....//
வருக!! பட்டாபட்டியாரே, அதேதான்,
பாவம் குழந்தைகள்.
நன்றி.
// padma said...
பாவம் இந்த காலத்து பெற்றோர்
நல்ல புனைவு//
குழந்தைகள்தான் அதைவிட பாவம்,
என நினைக்கிறேன்.
இதே போன்ற சூழ்நிலையில்
உள்ள குழந்தைகள் அன்புக்கு ஏங்குகிறார்கள்.
நன்றி.
// Chitra said...
பணமா? பாசமா?
:-( //
பணத்தை இழந்தாலும், மீண்டும் சம்பாதிக்க
முடியும், பாசத்தை..........
மிக கடினம் என்று நினைக்கிறேன்.
நன்றி.
// ஸ்ரீராம். said...
விக்கி விக்கி அழுதுட்டேன்... வசந்தமாளிகை சிவாஜி மாதிரி...!//
அய்யோ பாவம், அழுவாதீங்க
அண்ணா.
நன்றி.
// Dr.P.Kandaswamy said...
சின்ன வயதில் கொடுக்கப்படாத பாசத்தின் ஏமாற்றம் ஆயுளுக்கும் மறக்கமுடியாது.//
சரியாக சொன்னீர்கள் அய்யா!!
மறையாத வடுவாக நிலைத்து விடும்.
நன்றி.
// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
பட்டா பட்டியையே பீல் பண்ண வெச்சிட்டீங்களே..:)
--
சூப்பர்.:)//
அவரும் நம்மைபோல்தானே.
நன்றி ஷங்கர்.
// DREAMER said...
விக்கி போல் பலரும் இன்று பாசத்திற்காக வாடுவதை அழகாக எழுதியிருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள் நண்பா...
-
DREAMER//
முயற்சித்து பார்த்தேன்,
மிக்க நன்றி ஹரீஷ்,
கருத்துக்கும், வாழ்த்துக்கும்.
//நாடோடி said...
நல்ல ஆழமான கருத்து...//
நன்றி நண்பரே.
// தமிழ் உதயம் said...
வேலை வேலை என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். குழந்தையின் ப்ரியமும், பாசமும் மட்டும் விதிவிலக்காகுமா.//
அவர்களையும் சற்று கவனித்து
உரையாட வேண்டும்,
நன்றி நண்பரே.
// ஜெய்லானி said...
சுரை விதைக்க பனையா முளைக்கும்!!!//
ஆஹா!! பொருத்தமான
பழமொழிதான்.
நன்றி நண்பரே.
சூப்பர் கருத்து பரோட்டா..
இங்க வாங்க வந்து வாங்கிக்குங்க
http://kalaisaral.blogspot.com/2010/03/blog-post_27.html
பணம் சேர்க்கும் காலத்தில் சொந்த மகனைக்
கொஞ்சுவதற்கு, கொஞ்ச நேரம்கூட ஒதுக்காத
பெற்றோர்கள், நிச்சயம் மாறுவார்கள்,
இ(ந்தக்க)தைப் படித்துவிட்டு!
//அன்புடன் மலிக்கா said...
சூப்பர் கருத்து பரோட்டா..
இங்க வாங்க வந்து வாங்கிக்குங்க
http://kalaisaral.blogspot.com/2010/03/blog-post_27.html//
பரோட்டாவ பிச்சி போட போறீங்களோன்னு
பயந்துகிட்டே வந்தேன்...........
அய்!!! விருது கொடுத்து இருக்கீங்க,
எடுத்து நம்ம கடையில வச்சிகிட்டேன்,
மிக்க நன்றி.
// NIZAMUDEEN said...
பணம் சேர்க்கும் காலத்தில் சொந்த மகனைக்
கொஞ்சுவதற்கு, கொஞ்ச நேரம்கூட ஒதுக்காத
பெற்றோர்கள், நிச்சயம் மாறுவார்கள்,
இ(ந்தக்க)தைப் படித்துவிட்டு!//
ஆஹா!!!
படிக்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
நிசாமுடீன், மிக்க நன்றி உங்களின்
ஊக்கத்திற்கும், வருகைக்கும்.
நல்லாயிருக்கு.
இந்த காலத்துல இதுதான் நிலமை.
இன்றைய பெற்றோர் குழந்தைகள் உறவை அருமையாக நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொன்னீர்கள் !!!
அருமையான சிறுகதை!!!
பகிர்வுக்கு நன்றிகள்!!
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே. கலக்கறீங்க.
//அக்பர் said...
நல்லாயிருக்கு.
இந்த காலத்துல இதுதான் நிலமை.//
நன்றி அக்பர்.
// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
இன்றைய பெற்றோர் குழந்தைகள் உறவை அருமையாக நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொன்னீர்கள் !!!
அருமையான சிறுகதை!!!
பகிர்வுக்கு நன்றிகள்!!//
மிக்க நன்றி சங்கர் உங்களின்
ஊக்கமான கருத்துரைக்கு.
// இராமசாமி கண்ணண் said...
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே. கலக்கறீங்க.//
மிக்க மகிழ்ச்சி,
நன்றி ராம் தொடர் ஊக்கத்திற்கு.
இத....இததான் நான் என் பாணியில் எழுதியிருக்கேன், படியுங்க!
http://ulagamahauthamar.blogspot.com/2010/03/blog-post_28.html
ஜானு போன்ற ஒரு பாசமுள்ளவர் கிடைத்ததே பெரும் ஆறுதல்.
// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
இத....இததான் நான் என் பாணியில் எழுதியிருக்கேன், படியுங்க!
http://ulagamahauthamar.blogspot.com/2010/03/blog-post_28.html//
அட!! ஆமா, நாம் இருவரும் சொல்ல
வந்தது ஒரே மாதிரிதான் இருக்கிறது!!!
நன்றி நண்பரே.
//ஹுஸைனம்மா said...
ஜானு போன்ற ஒரு பாசமுள்ளவர் கிடைத்ததே பெரும் ஆறுதல்.//
வாங்க ஹுஸைனம்மா.
மிக்க நன்றி உங்கள் கருத்தை
கூறியதற்கு.
நல்லா எழுதிருக்கீங்க தல
ஃபான்ட் இன்னும் கொஞ்சம் சிறியதா மாத்துங்க..
செம செண்டிமெண்ட்... நானும் கூட பலமுறை இதுபோல பாசத்துக்காக ஏங்கியிருக்கிறேன்..
//பிரியமுடன்...வசந்த் said...
நல்லா எழுதிருக்கீங்க தல
ஃபான்ட் இன்னும் கொஞ்சம் சிறியதா மாத்துங்க..//
நன்றி வசந்த்,
மாற்றி விடுகிறேன்.
//philosophy prabhakaran said...
செம செண்டிமெண்ட்... நானும் கூட பலமுறை இதுபோல பாசத்துக்காக ஏங்கியிருக்கிறேன்..//
நன்றி பிரபாகரன்.
நல்லாருக்கு சைகொப, இதுதான் இன்னைக்கு இருக்கற யதார்த்த வாழ்க்கை :(
// ரகு said...
நல்லாருக்கு சைகொப, இதுதான் இன்னைக்கு இருக்கற யதார்த்த வாழ்க்கை :( //
நன்றி ரகு.
நன்று.
// மன்னார்குடி said...
நன்று.//
மிக்க நன்றி நண்பரே.
நல்லா சொல்லியிருக்கீங்க. மிக அருமை. கிளைமேக்ஸ் எதிர்பார்த்ததுதான் என்றாலும் நடைமுறையில் வராது. பெற்றேர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பான் என எதிர்பார்த்தேன். கொஞ்சம் சினிமா ஸ்டைலில் முடித்து விட்டீர்கள். நன்றி.
ரொம்ப நல்லா எழுதுறிங்க சைவ கொத்து பரோட்டா.. ரொம்ப நல்லா இருக்கு உங்க கதை.. அடிக்கடி கதை எழுதுங்க..
இந்த கால பெற்றோர்களுக்கு ஒரு நெத்தியடி நண்பா, நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//பட்டா பட்டியையே பீல் பண்ண வெச்சிட்டீங்களே..:)
//
REPEATOOOOOOOO!!!
// பித்தனின் வாக்கு said...
நல்லா சொல்லியிருக்கீங்க. மிக அருமை. கிளைமேக்ஸ் எதிர்பார்த்ததுதான் என்றாலும் நடைமுறையில் வராது. பெற்றேர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பான் என எதிர்பார்த்தேன். கொஞ்சம் சினிமா ஸ்டைலில் முடித்து விட்டீர்கள். நன்றி.//
நன்றி உங்களின்
கருத்துரைக்கு.
// திவ்யாஹரி said...
ரொம்ப நல்லா எழுதுறிங்க சைவ கொத்து பரோட்டா.. ரொம்ப நல்லா இருக்கு உங்க கதை.. அடிக்கடி கதை எழுதுங்க..//
ரைட்டு எழுதிரலாம் :))
நன்றி.
// சசிகுமார் said...
இந்த கால பெற்றோர்களுக்கு ஒரு நெத்தியடி நண்பா, நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
நன்றி சசி.
// VISA said...
//பட்டா பட்டியையே பீல் பண்ண வெச்சிட்டீங்களே..:)
//
REPEATOOOOOOOO!!! //
நன்றி விசா.
சிம்ப்லி சூபெர்ப்....
நல்லா வந்திருக்கு...புரோட்டா....
இன்னொன்னு பார்சல்ல்..
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் சைவகொத்து பரோட்டா..
// Mohan said...
சிம்ப்லி சூபெர்ப்....//
நன்றி மோகன்.
//கண்ணா.. said...
நல்லா வந்திருக்கு...புரோட்டா....
இன்னொன்னு பார்சல்ல்..//
கண்ணா சாருக்கு பார்சல் ஒண்ணு :))
நன்றி கண்ணா, தொடர்ந்து வாருங்கள்.
// திவ்யாஹரி said...
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் சைவகொத்து பரோட்டா..//
மிக்க மகிழ்ச்சி,
எடுத்துகிட்டேன்.
நன்றி திவ்யாஹரி.
நல்ல சமுதாயச் சிந்தனை; வளர்க,
(HOTEL ஆக)
//lolly999 said...
நல்ல சமுதாயச் சிந்தனை; வளர்க,
(HOTEL ஆக)//
மிக்க நன்றி, ஆமா 3 - hotel - ஆ,
5-hotel - ஆ.........ஹி............ஹி......:))
மனத்தில் உறைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறீர்கள்.
//Dr.எம்.கே.முருகானந்தன் said...
மனத்தில் உறைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறீர்கள்.//
மிக்க நன்றி மருத்துவரே.
பளிச்சின்னு சொல்லியிருக்கீங்க:)
www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.
எனக்கு மணல் கயிறு படம் ஞாபகம் வந்தது சை கொ ப
//வானம்பாடிகள் said...
பளிச்சின்னு சொல்லியிருக்கீங்க:)//
வருக, வருக,
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
// தீபிகா சரவணன் said...
www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும்....//
மிக்க நன்றி, பார்க்கிறேன்.
// thenammailakshmanan said...
எனக்கு மணல் கயிறு படம் ஞாபகம் வந்தது சை கொ ப //
அந்த படத்திலும் இதே போல்
வருமோ!!
நான் இன்னும் அந்த படம் பார்க்கவில்லை.
நன்றி அக்கா.
kidsthan first panam velailam appuram
// LK said...
kidsthan first panam velailam appuram//
நிச்சயம்!!
நன்றி நண்பரே, தொடர்ந்து வாருங்கள்.
சூப்பருங்க.
அந்த வரியையும் உரையாடலாக எழுதியிருந்தால், வர்ணனையில்லாத கதையாக இருந்திருக்கும்.
வர்ணனையில்லாமல் எழுதுவது ரொம்ப கடினம். உங்களுக்கு வருகிறது.
// பின்னோக்கி said...
சூப்பருங்க.
அந்த வரியையும் உரையாடலாக எழுதியிருந்தால், வர்ணனையில்லாத கதையாக இருந்திருக்கும்.
வர்ணனையில்லாமல் எழுதுவது ரொம்ப கடினம். உங்களுக்கு வருகிறது.//
ஆஹா!!!
உற்சாகம் அளிக்கிறது உங்கள்
பின்னூட்டம், மிக்க நன்றி.
அன்பின் சைகொப
அருமை அருமை கதை இயல்பாகச் சென்றது - ராசாவும் ஜானும்மாவும் வாழ்க
நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா
// cheena (சீனா) said...
அன்பின் சைகொப
அருமை அருமை கதை இயல்பாகச் சென்றது - ராசாவும் ஜானும்மாவும் வாழ்க
நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா//
ஆஹா!!! என்னை "நம்பி" இவ்ளோ
தூரம் வந்து படிச்சதுக்கு நன்றி அய்யா :))
Post a Comment