Sunday, March 21, 2010

செக்கச்சிவந்தவளே!!

சைக்கிள் பெடல அப்படியே பின்னால சுத்துனா......

என்னோட பள்ளி பருவம் வந்திருச்சு.......
பள்ளி விடுமுறை நாட்களில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு காட்டுக்குள் செல்வது, அட நீங்க வேற அமேசான் காடெல்லாம் இல்லை, பருத்தி காடுதேன்.

அந்த மாதிரி "அட்வெஞ்சர்" பயணத்தின் போது, அங்கே இருக்கும் இலந்தை பழங்களை, மிகவும் விரும்பி சாப்பிடுவேன். (யார் வீட்டு காடா?..... யாருக்கு தெரியும்)

பொழுது போகாத பொம்முவாய், வேட்டையாடி சாப்பிட்ட அந்த பழத்துல எம்பூட்டு
மகத்துவம் இருக்குன்னு இப்பதேன் தெரிஞ்சுகிட்டேன்.

வைட்டமின் - A, மற்றும் சுண்ணாம்பு சத்து இதுல நிறைய இருக்காம், எனவே இதை அடிக்கடி
சாப்பிட்டால் 100 - வயசுலயும் கரும்பு கடிக்கலாம் (நாமளும் இருந்து, பல்லும் இருந்தா),
புரூஸ்லீ மாதிரி கல்லும் ஒடைக்கலாம், எலும்பு அவ்வளவு உறுதியாகும்.

அப்புறம் சில பேர், வருவார் பின்னே ஆனால் அவர் "வாசம்" வரும் முன்னே, இந்த மாதிரி
பிரச்சனை உள்ளவங்க, வாசனை உருவாகும், இடத்துல (under arm) இலந்தை செடியோட
இலைகளை இடித்து சாறாக்கி அதனை தேய்த்து காய விட்டு, அப்பாலிக்கா கழுவுங்க.
(குளிக்கும் பழக்கம் இருந்தால் குளிப்பதற்கு முன்னும் செய்யலாம்.... ஹி.........ஹி...........டமாசு)
அப்புறம் "வாசனை" காணாமல் போய் விடும்.

சில பேர் தலை வாரிய அப்புறம் பார்த்தா, சீப்புக்கே முடி முளைச்சி இருக்கும், சிலருக்கு
முன்னாலோ அல்லது நடுவாலோ கொஞ்சம் "கிரௌண்ட்" இருக்கும், இந்த மாதிரி
உள்ளவங்க இந்த இலையோட சாறு எடுத்து தலையில தடவுங்க, உங்க முடி சீப்புக்கு
போகாது, கிரௌன்ட்ல புல்லு.........ச்சே.....முடி முளைக்கும் (அல்லோ இது சின்ன வயசுல
கிரௌண்ட் வாங்கினவங்களுக்கு மட்டும்தான்)

நீரிழிவு நோயுக்கும் இது மருந்தா செயல் படுதாம், ப்ரீயா போகவும் இது "வழி" செய்யும். (இப்பதான தெரியது, காட்டுக்கு போயிட்டு வந்த அப்புறம் ஏன் "வந்திச்சின்னு",
இது தெரியாம என் நண்பன், டேய் அந்த காட்டுக்காரன் நமக்கு "சூனியம்" வச்சிட்டான்ட்டா
அப்படின்னு புலம்பி கிட்டு இருந்தது தனி ட்ராக்)

பின் குறிப்பு:
"காசு கொடுத்தும்" இத்த வாங்கி இருக்கேன், எங்கையா.....
பள்ளிகூட வாசல்ல ஒரு பாட்டி ஜவ்வு மிட்டாயோட சேர்ந்து, இலந்தை பழமும் விப்பாங்க, அவுக கிட்டதேன்.

இப்ப எங்க கிடைக்குது அப்படின்னுதான நினைக்கிறீங்க, கிழே
படத்துல இருக்கே அது மாதிரி "ஜாம்" ஆகத்தான் கிடைக்கும்.

******************************************************************

அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

60 comments:

Chitra said...

செக்க சிவந்த பழம், இப்போ ஜாம் ஆக மட்டும் தான் கிடைக்குதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ........

நாடோடி said...

ஜாம் நல்லா இருக்கு. அதனுடைய விளக்கமும் அருமை..

எறும்பு said...

கொசுவத்திய சுத்த வச்சுடீங்க... சின்ன வயசுல சாப்டது..ஹும்...

padma said...

ஆமாம் எங்க ஸ்கூல் வாசலேயும் ஒரு பாட்டி விப்பாங்க .எலந்த வத்தல் .எலந்த ஜூஸ் .அந்த பாகுல ஊறின எலந்த வத்தல காட்டாமணி செடி எலைல போட்டு தருவாங்க சுப்பர் (எத்தன கிருமி இருந்ததோ!) ஆனா அத மிஸ் பண்ணினவங்க பாவம் .இப்போவும் என் கைபைல நாலு எலந்த வடாம் இருக்கும் .செம டேஸ்ட்.என் பொண்ணுக்கு தெரியாம வச்சுருக்கேன் .

ஜெட்லி said...

:))

மங்குனி அமைச்சர் said...

எல்லாம் சரி ,காட்டுகுள்ள தனியாவா போன? கூட கூட்டிட்டு போன அந்த பொம்பள புள்ளைய பத்தி எதுவும் எழுதலையே ?

சேட்டைக்காரன் said...

சென்னையில் கிடைக்குதுண்ணே! எனக்கு ரொம்ப பிடிக்கும்!

எலந்தப்பயம் பளுத்திருந்தா எட்த்து எட்த்துக் கடிக்கலாம்!
உலந்துபோன பின்னாலே ஊற வச்சுத்துண்ணலாம்!

:-)))

ஸ்ரீராம். said...

இலந்தைப் பழம்..இலந்தைப் பழம்...எல். ஆர். ஈஸ்வரி பாட்டை விட்டுட்டீங்க...
ரெண்டு இலந்தை கிடைக்கும்....ஒண்ணு, சாதா, ரெண்டாவது சீமை.!
இலந்தைவடைனு ஒண்ணு, அதைக் காய வச்சு, உப்பு, புளி, காரம் போட்டு ரௌண்டா தட்டித் தருவாங்க..அதுவும் சுவை.
இப்போல்லாம் இலந்தை செடியை பார்க்கவே முடியறதில்லை.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

செக்கசிவந்தவளே செக்கசிவந்தவளே!!

என் மனதை கொள்ளை கொண்டவளே..

DREAMER said...

நண்பா,
எலந்தபயம் பற்றீ நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் அருமை..!
எந்தப்பழத்தை மறந்தாலும், இந்த எலந்தைப்பழத்தை என்னால மறக்கவே முடியாது. காரணம், நான் 10th படிக்கும்போது, Biology Master, Match the Following டெஸ்ட் வச்சார். அதுல 10க்கு 10 எடுக்குறவங்களுக்கு 100 ரூபா பரிசுன்னு அறிவிச்சார்.
நான் எல்லாத்தையும் கரெக்டா எழுதிட்டேன். ஆனா, இந்த Zizipus jujupaங்கிற எலந்தைபழத்தோட scientific name, என்னை பயங்கரமா குழப்பிடிச்சி... so 2 மார்க்ல நூறு ரூபாவை இழந்தேன்.

பி.கு. யாருமே அந்த 100 ரூபாவை ஜெயிக்கலை

தலைப்பும் அருமையாயிருக்கு நண்பா..! கலக்குங்க..!

-
DREAMER

தமிழ் உதயம் said...

மங்குனி அமைச்சர் said...

எல்லாம் சரி ,காட்டுகுள்ள தனியாவா போன? கூட கூட்டிட்டு போன அந்த பொம்பள புள்ளைய பத்தி எதுவும் எழுதலையே ?


எனக்கும் அந்த உண்மை தெரிஞ்சாகணும்

அன்புடன் மலிக்கா said...

செக்கச்சிவந்தவளே! அழகிய தலைப்பு.


//மங்குனி அமைச்சர் said...

எல்லாம் சரி ,காட்டுகுள்ள தனியாவா போன? கூட கூட்டிட்டு போன அந்த பொம்பள புள்ளைய பத்தி எதுவும் எழுதலையே ?


எனக்கும் அந்த உண்மை தெரிஞ்சாகணும்//

எல்லாருக்கும் உண்மையை சொல்லிடுங்க பரோட்டா இல்லாட்டி இவுகளெல்லாம் நோண்டி நொங்கெடுத்துடுவாகபோல் அதுவும் மங்குனியார் இருக்காரே!!!!!!!!!!!

ஓடிடு மல்லி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்

இராமசாமி கண்ணண் said...

நல்ல பகிர்வு சைவகொப. நன்றி.

இராமசாமி கண்ணண் said...

வாழ்த்துக்கள் சைவகொப ஐம்பதாவது பதிவுக்கு.

VISA said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். ஐம்பதாவது பதிவு மருத்துவ பதிவா. சொன்ன விதம் நல்லா இருந்திச்சு.

சுரேஷ் said...

நல்ல பிளாஷ்பேக். எனக்கும் இது படிக்கும்.

ஆனால், 100 வயசுல கரும்பு கடிப்பது எல்லாம் உங்க சொந்தசரக்கா? :)

ர‌கு said...

//அந்த மாதிரி "அட்வெஞ்சர்" பயணத்தின் போது//

எந்த‌ மாதிரி? ஓ, ஓகே ஒகே ;)))

malar said...

துபாயில் இந்த மரம் அதிகம்...மரதின் கீழே பழம் நிறைய கிடக்கும்..

நல்ல பதிவு...

Dr.P.Kandaswamy said...

எலந்த வடகம் சாப்பிட்டதில்லீங்களா நீங்க, ஐயய்யோ, எப்படிப்பட்ட சொர்க்கத்துக்கு போகாம இருந்துட்டீங்க.

சைவகொத்துப்பரோட்டா said...

// Chitra said...
செக்க சிவந்த பழம், இப்போ ஜாம் ஆக மட்டும் தான் கிடைக்குதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ........//

சென்னையிலும், துபாயிலும் கிடைக்குது...........
பின்னூட்ட தகவல் அறிக்கை சொல்லுது, நன்றி சித்ரா.// நாடோடி said...
ஜாம் நல்லா இருக்கு. அதனுடைய விளக்கமும் அருமை..//

நன்றி நண்பரே.// எறும்பு said...
கொசுவத்திய சுத்த வச்சுடீங்க... சின்ன வயசுல சாப்டது..ஹும்...//

அப்ப நீங்களும் சைக்கிள் பெடல பின்னால சுத்த ஆரம்பிங்க :))
நன்றி.// padma said...
ஆமாம் எங்க ஸ்கூல் வாசலேயும் ஒரு பாட்டி விப்பாங்க .எலந்த வத்தல் .எலந்த ஜூஸ் .அந்த பாகுல ஊறின எலந்த வத்தல காட்டாமணி செடி எலைல போட்டு தருவாங்க சுப்பர் (எத்தன கிருமி இருந்ததோ!) ஆனா அத மிஸ் பண்ணினவங்க பாவம் .இப்போவும் என் கைபைல நாலு எலந்த வடாம் இருக்கும் .செம டேஸ்ட்.என் பொண்ணுக்கு தெரியாம வச்சுருக்கேன் .//


பத்மா அவர்களின் பெண் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும், அம்மாவின் கைபையை
சோதனை இடவும் :))
நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

// ஜெட்லி said...
:)) //

புன்னகைக்கு நன்றி ஜெட்லி.// மங்குனி அமைச்சர் said...
எல்லாம் சரி ,காட்டுகுள்ள தனியாவா போன? கூட கூட்டிட்டு போன அந்த பொம்பள புள்ளைய பத்தி எதுவும் எழுதலையே ?
//

அமைச்சரே, உடன் வந்தது "நண்பன்"..... நண்பி அல்ல...........
குசும்பு......... :))
நன்றி அமைச்சரே.// சேட்டைக்காரன் said...
சென்னையில் கிடைக்குதுண்ணே! எனக்கு ரொம்ப பிடிக்கும்!

எலந்தப்பயம் பளுத்திருந்தா எட்த்து எட்த்துக் கடிக்கலாம்!
உலந்துபோன பின்னாலே ஊற வச்சுத்துண்ணலாம்!

:-)))//

அப்படியா!! தகவலுக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே.// ஸ்ரீராம். said...
இலந்தைப் பழம்..இலந்தைப் பழம்...எல். ஆர். ஈஸ்வரி பாட்டை விட்டுட்டீங்க...
ரெண்டு இலந்தை கிடைக்கும்....ஒண்ணு, சாதா, ரெண்டாவது சீமை.!
இலந்தைவடைனு ஒண்ணு, அதைக் காய வச்சு, உப்பு, புளி, காரம் போட்டு ரௌண்டா தட்டித் தருவாங்க..அதுவும் சுவை.
இப்போல்லாம் இலந்தை செடியை பார்க்கவே முடியறதில்லை.//

ஆகா!! புதிய தகவல்களுக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா.

சைவகொத்துப்பரோட்டா said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
செக்கசிவந்தவளே செக்கசிவந்தவளே!!

என் மனதை கொள்ளை கொண்டவளே.. //

ஹை.....உங்களுக்கும் பிடிக்குமா............
நன்றி நண்பரே.
// DREAMER said...
நண்பா,
எலந்தபயம் பற்றீ நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் அருமை..!
எந்தப்பழத்தை மறந்தாலும், இந்த எலந்தைப்பழத்தை என்னால மறக்கவே முடியாது. காரணம், நான் 10th படிக்கும்போது, Biology Master, Match the Following டெஸ்ட் வச்சார். அதுல 10க்கு 10 எடுக்குறவங்களுக்கு 100 ரூபா பரிசுன்னு அறிவிச்சார்.
நான் எல்லாத்தையும் கரெக்டா எழுதிட்டேன். ஆனா, இந்த Zizipus jujupaங்கிற எலந்தைபழத்தோட scientific name, என்னை பயங்கரமா குழப்பிடிச்சி... so 2 மார்க்ல நூறு ரூபாவை இழந்தேன்.

பி.கு. யாருமே அந்த 100 ரூபாவை ஜெயிக்கலை

தலைப்பும் அருமையாயிருக்கு நண்பா..! கலக்குங்க..!

-
DREAMER//

இப்படி ஒரு கொசுவத்தி இருக்கா...........
ஜஸ்ட் மிஸ் பண்ணிடீங்க..........
நன்றி ஹரீஷ், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கும், கருத்துக்கும்.// தமிழ் உதயம் said...
மங்குனி அமைச்சர் said...

எல்லாம் சரி ,காட்டுகுள்ள தனியாவா போன? கூட கூட்டிட்டு போன அந்த பொம்பள புள்ளைய பத்தி எதுவும் எழுதலையே ?


எனக்கும் அந்த உண்மை தெரிஞ்சாகணும்//

சொல்லிட்டேன்..........
ஆமா பேசி வச்சி பின்னூட்டம் போட்டீங்களோ.........ஹி..........ஹி.........
நன்றி.


// அன்புடன் மலிக்கா said...
செக்கச்சிவந்தவளே! அழகிய தலைப்பு.


//மங்குனி அமைச்சர் said...

எல்லாம் சரி ,காட்டுகுள்ள தனியாவா போன? கூட கூட்டிட்டு போன அந்த பொம்பள புள்ளைய பத்தி எதுவும் எழுதலையே ?


எனக்கும் அந்த உண்மை தெரிஞ்சாகணும்//

எல்லாருக்கும் உண்மையை சொல்லிடுங்க பரோட்டா இல்லாட்டி இவுகளெல்லாம் நோண்டி நொங்கெடுத்துடுவாகபோல் அதுவும் மங்குனியார் இருக்காரே!!!!!!!!!!!

ஓடிடு மல்லி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்//

அவ்வ்வ்வ்.......................
ஒரு குரூப்பாத்தேன் கிளம்பி இருக்கீக......................
உண்மையை சொல்லிபோட்டேன்...............
நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

// இராமசாமி கண்ணண் said...
நல்ல பகிர்வு சைவகொப. நன்றி.

March 21, 2010 5:04 PM


இராமசாமி கண்ணண் said...
வாழ்த்துக்கள் சைவகொப ஐம்பதாவது பதிவுக்கு.//

நன்றி ராம்............
அய்..........50-து கவனிச்சு இருக்கீங்க........
மிக்க நன்றி ராம்.// VISA said...
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். ஐம்பதாவது பதிவு மருத்துவ பதிவா. சொன்ன விதம் நல்லா இருந்திச்சு.//

மிக்க மகிழ்ச்சி............
நன்றி விசா.// சுரேஷ் said...
நல்ல பிளாஷ்பேக். எனக்கும் இது படிக்கும்.

ஆனால், 100 வயசுல கரும்பு கடிப்பது எல்லாம் உங்க சொந்தசரக்கா? :)//

பல்லு அவ்ளோ உறுதியா இருக்கும்னு, ஒரு "நயத்தோட" சொல்ல
நினச்சேன்........ஹி.........ஹி.........
நன்றி சுரேஷ், தொடர்ந்து வாருங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

// ர‌கு said...
//அந்த மாதிரி "அட்வெஞ்சர்" பயணத்தின் போது//

எந்த‌ மாதிரி? ஓ, ஓகே ஒகே ;)))//

ஹையோ..........ஹையோ...........
நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.............
நிஜமாவே இலந்தைபழம் தேடி தான் "புனித பயணம்"
நன்றி ரகு.// malar said...
துபாயில் இந்த மரம் அதிகம்...மரதின் கீழே பழம் நிறைய கிடக்கும்..

நல்ல பதிவு...//

அப்படியா.........மிக்க நன்றி மலர் தகவலுக்கும், கருத்துக்கும்.
தொடர்ந்து வாருங்கள்.//Dr.P.Kandaswamy said...
எலந்த வடகம் சாப்பிட்டதில்லீங்களா நீங்க, ஐயய்யோ, எப்படிப்பட்ட சொர்க்கத்துக்கு போகாம இருந்துட்டீங்க.//

இப்பவும் கிடைக்குமா..........
கிடைத்தால் கண்டிப்பாக சாப்பிடுவேன்.........
நன்றி அய்யா, கருத்துக்கும், தகவலுக்கும்.

புலவன் புலிகேசி said...

டானிக் கொடுத்தச்சு...ஜாம் சூப்பர்...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஐம்பதாவது பதிவுக்கு என் வாழ்த்துகள்!

எல்லாம் சொன்னீங்க, இலந்தைப் பழத்தை கொட்டையோடு முழுங்கிவிட்டு மரம் முளைக்குமோ என்ற பயத்தில் சாமியை வேண்டிய அனுபவம் உண்டா? (ஹி....ஹி...எனக்கு உண்டு)

சைவகொத்துப்பரோட்டா said...

// புலவன் புலிகேசி said...
டானிக் கொடுத்தச்சு...ஜாம் சூப்பர்...//


ரைட்டு..........மிக்க நன்றி புலவரே.

// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ஐம்பதாவது பதிவுக்கு என் வாழ்த்துகள்!

எல்லாம் சொன்னீங்க, இலந்தைப் பழத்தை கொட்டையோடு முழுங்கிவிட்டு மரம் முளைக்குமோ என்ற பயத்தில் சாமியை வேண்டிய அனுபவம் உண்டா? (ஹி....ஹி...எனக்கு உண்டு)//

நாங்க எல்லாம் பழம் தின்னு கொட்டை போட்டவங்க...............ஹி........ஹி.....
உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து வாருங்கள்.

சசிகுமார் said...

//மங்குனி அமைச்சர் said...
எல்லாம் சரி ,காட்டுகுள்ள தனியாவா போன? கூட கூட்டிட்டு போன அந்த பொம்பள புள்ளைய பத்தி எதுவும் எழுதலையே ?
எனக்கும் அந்த உண்மை தெரிஞ்சாகணும்//

ரிப்பீட்டே

அக்பர் said...

அப்படியா சங்கதி, நானும் ஏதோ பாட்டு வரியில ஆரம்பிக்குதே அப்படின்னு பார்த்தேன்.

சில பழங்களில் புழு இருக்கும். பார்த்து சாப்பிடவேண்டும்.

சைவகொத்துப்பரோட்டா said...

// சசிகுமார் said...
//மங்குனி அமைச்சர் said...
எல்லாம் சரி ,காட்டுகுள்ள தனியாவா போன? கூட கூட்டிட்டு போன அந்த பொம்பள புள்ளைய பத்தி எதுவும் எழுதலையே ?
எனக்கும் அந்த உண்மை தெரிஞ்சாகணும்//

ரிப்பீட்டே//

நம்புங்கப்பு, நண்பனுடன்தான் போனேன் :))
நன்றி சசி.
// அக்பர் said...
அப்படியா சங்கதி, நானும் ஏதோ பாட்டு வரியில ஆரம்பிக்குதே அப்படின்னு பார்த்தேன்.

சில பழங்களில் புழு இருக்கும். பார்த்து சாப்பிடவேண்டும்.//

நன்றி அக்பர், நினைவூட்டலுக்கும், கருத்துக்கும்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////////சைக்கிள் பெடல அப்படியே பின்னால சுத்துனா......

என்னோட பள்ளி பருவம் வந்திருச்சு....... ////////


அட போங்க நீங்க சொல்றீங்கணு நானும் போய் சைக்கிள் பெடல அப்படியே பின்னால சுத்தினேன் ஜெயினு கையில வந்திருச்சு . அவளவுதான் ஒருத்தன் உருட்டுக் கட்டையுடன் வந்துட்டான் . என்ன பாக்குறீங்க சைக்கிள் நம்மலது இல்ல .

Anonymous said...

செக்கசிவந்தவேளே தலைப்பு படிச்சதும்
ஏதோ உங்க காதலிய பத்தி தான் சொல்லபோரிங்கனு
நெனச்சேன்.. இப்படி ஜாம் பத்தி சொல்லி ஏமாத்திட்டிங்களே..
போங்க அண்ணாத்தை..

thenammailakshmanan said...

முதல்ல ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் சை கொ ப அப்புறம் இலந்தை பழம் என்று சொல்லி பள்ளிக்கூட ஞாபகத்தையெல்லாம் கிளப்பி விட்டுடீங்க எங்க வீட்டுல இதை எல்லாம் வாங்கக் கூடாதுன்னு காசு தர மாட்டாங்க வேணும்னா வீடுல செய்றதுதான் அல்லது அவங்க வாங்கித்தரதுதான் எனவே சாப்பிட்டதேயில்லை :((((((((((((((((((((((

lolly999 said...

பதிவும் 50, வயதும் பொன்விழாவை நெருங்குகிறது என நினைக்கிறேன் 50 th பதிvu நல்ல விடயம். சொல்லிய விதம் அருமை

சைவகொத்துப்பரோட்டா said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
///////////சைக்கிள் பெடல அப்படியே பின்னால சுத்துனா......

என்னோட பள்ளி பருவம் வந்திருச்சு....... ////////


அட போங்க நீங்க சொல்றீங்கணு நானும் போய் சைக்கிள் பெடல அப்படியே பின்னால சுத்தினேன் ஜெயினு கையில வந்திருச்சு . அவளவுதான் ஒருத்தன் உருட்டுக் கட்டையுடன் வந்துட்டான் . என்ன பாக்குறீங்க சைக்கிள் நம்மலது இல்ல .//

அடுத்தவாட்டி, ஆள் இல்லாத இடத்துக்கு முதல்ல சைக்கிள ஓட்டிட்டு போய்,
அப்புறமா சுத்துங்க தல.............:))

நன்றி சங்கர்.// thenammailakshmanan said...
முதல்ல ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் சை கொ ப அப்புறம் இலந்தை பழம் என்று சொல்லி பள்ளிக்கூட ஞாபகத்தையெல்லாம் கிளப்பி விட்டுடீங்க எங்க வீட்டுல இதை எல்லாம் வாங்கக் கூடாதுன்னு காசு தர மாட்டாங்க வேணும்னா வீடுல செய்றதுதான் அல்லது அவங்க வாங்கித்தரதுதான் எனவே சாப்பிட்டதேயில்லை :(((((((((((((((((((((( //

மிக்க நன்றி அக்கா, வாழ்த்துக்கும், கருத்துக்கும்.
ஏன் இம்பூட்டு சோகம், இப்பவே போய், வாங்கி சாப்பிடுங்க :))// lolly999 said...
பதிவும் 50, வயதும் பொன்விழாவை நெருங்குகிறது என நினைக்கிறேன் 50 th பதிvu நல்ல விடயம். சொல்லிய விதம் அருமை//

நல்ல வேளை, நான் இன்னும் 200-வது பதிவு எழுதல........

என்னா ஒரு குறும்பு..............:))

மிக்க நன்றி சகோதரி, உங்கள் கருத்து குறும்புக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

// எனது கிறுக்கல்கள் said...
செக்கசிவந்தவேளே தலைப்பு படிச்சதும்
ஏதோ உங்க காதலிய பத்தி தான் சொல்லபோரிங்கனு
நெனச்சேன்.. இப்படி ஜாம் பத்தி சொல்லி ஏமாத்திட்டிங்களே..
போங்க அண்ணாத்தை..//

வாங்க தங்கச்சி.............
நல்லா கிளப்பி விடுறீங்க.......அவ்வவ்...............:))
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

சிரிக்க வைத்தது உங்கள் பதிவு.

சைவகொத்துப்பரோட்டா said...

// Dr.எம்.கே.முருகானந்தன் said...
சிரிக்க வைத்தது உங்கள் பதிவு.//

ஆஹா!! மகிழ்ச்சியாக இருக்கிறது, நன்றி மருத்துவர் அய்யா.

மயில்ராவணன் said...

50 க்கு வாழ்த்துக்கள். சீக்கிரம் 90 க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

சைவகொத்துப்பரோட்டா said...

// மயில்ராவணன் said...
50 க்கு வாழ்த்துக்கள். சீக்கிரம் 90 க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)//

மிக்க நன்றி நண்பரே இரண்டு வாழ்த்துக்களுக்கும்.

பித்தனின் வாக்கு said...

இந்த இலையோட சாறு எடுத்து தலையில தடவுங்க, உங்க முடி சீப்புக்கு
போகாது, கிரௌன்ட்ல புல்லு.........ச்சே.....முடி முளைக்கும் (அல்லோ இது சின்ன வயசுல
கிரௌண்ட் வாங்கினவங்களுக்கு மட்டும்தான்)

என்ன சைவ கொத்துபுரோட்டா. ஆகா அருமையான ஜடியான்னு பார்த்தாக் கடைசியில ஒரு வரியில் பொசுக்குன்னு சொல்லிட்டிங்க.
சரி விடுங்க. நம்ம மண்டையில முடி முளைக்க சான்ஸ் இல்லை. கட்டுரை அருமை. ஆனாலும் ஒன்னை மறைத்து விட்டீர்கள். இலந்த மர முள்ளுக் குத்தியதை மறைச்சுட்டிங்களே. நாங்களும் திருடித் திண்ண அனுபவம் இருக்கு. அதுக்கும் உதையும் வாங்கி இருக்கேம். பழம் திருடியதுக்கு அல்ல, அதை பொறிக்க கிணற்றைத் தாண்டிப் போனதுக்கு. மிக்க நன்றி.

Mohan said...

எலந்தப் பழத்தோட பயனை இவ்வளவு நகைச்சுவையாக வேறு யாரும் இதுவரை சொன்னதில்லை....
வாழ்த்துக்கள்...பரோட்டா....

சைவகொத்துப்பரோட்டா said...

//பித்தனின் வாக்கு said...
என்ன சைவ கொத்துபுரோட்டா. ஆகா அருமையான ஜடியான்னு பார்த்தாக் கடைசியில ஒரு வரியில் பொசுக்குன்னு சொல்லிட்டிங்க...//

நன்றி நண்பரே, உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு.
// Mohan said...
எலந்தப் பழத்தோட பயனை இவ்வளவு நகைச்சுவையாக வேறு யாரும் இதுவரை சொன்னதில்லை....
வாழ்த்துக்கள்...பரோட்டா....//

நன்றிகள் மோகன், வாழ்த்துக்கும், கருத்துக்கும்.

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு நண்பா.

சைவகொத்துப்பரோட்டா said...

// முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல பகிர்வு நண்பா.//

நன்றி முனைவரே, உங்கள் கருத்துக்கு.

பட்டாபட்டி.. said...

அய்.. அம்பது அடிச்சாச்சு..
இவ்வளவு சொன்னீங்களே.. எனக்கு எப்ப ஜாம் பாட்டில் அனுப்பப்போறீங்க சார்?.

vidivelli said...

நாசூக்காய் பகிர்ந்தீங்களே.....
இந்த வேலைக்கு வந்ததால் இவற்றில் ஈடுபாடோட இருக்கிறீங்க....
இல்லா விட்டால் சமையல் பக்கம் தெரியுமோ??????????
சுப்பர்..............

சைவகொத்துப்பரோட்டா said...

// பட்டாபட்டி.. said...
அய்.. அம்பது அடிச்சாச்சு..
இவ்வளவு சொன்னீங்களே.. எனக்கு எப்ப ஜாம் பாட்டில் அனுப்பப்போறீங்க சார்?.//

வாங்க!! வாங்க!! பட்டா பட்டியாரே.....
சாருக்கு ஒரு ஜாம் பாட்டில் பார்சல் பண்ணுப்பா,
நன்றி நண்பரே.
// vidivelli said...
நாசூக்காய் பகிர்ந்தீங்களே.....
இந்த வேலைக்கு வந்ததால் இவற்றில் ஈடுபாடோட இருக்கிறீங்க....
இல்லா விட்டால் சமையல் பக்கம் தெரியுமோ??????????
சுப்பர்..............//

நான் சமைச்சா கடை ஓனர், கல்லாவுல உக்காந்துகிட்டு "ஈ"தான் ஓட்டனும் :))
நன்றி நண்பரே.

Jaleela said...

இலந்த பழம் என்றாலே எல்லோருக்கும் நினைவு வருவது ஸ்கூல் வாசலில் கட்ட வண்டியும், செக்கச்சிவந்த பழம் பாடலும் தான். இப்ப இங்கு நிறைய கிடைக்குது போன வாரமெல்லாம் , நல்ல சாப்பிட்டாச்சு.


50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

// Jaleela said...
இலந்த பழம் என்றாலே எல்லோருக்கும் நினைவு வருவது ஸ்கூல் வாசலில் கட்ட வண்டியும், செக்கச்சிவந்த பழம் பாடலும் தான். இப்ப இங்கு நிறைய கிடைக்குது போன வாரமெல்லாம் , நல்ல சாப்பிட்டாச்சு.


50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்//

எனக்கு கொஞ்சம் அனுப்பி வைங்க அக்கா!!
என்னை 50-வது பின்னூட்டம்(!!!) எழுத வைத்தமைக்கும்,
உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

கவிதை காதலன் said...

கொஞ்ச நாள் பின்னோக்கி பார்த்த நியாபகம்.. நல்லா இருக்கு நண்பரே

சைவகொத்துப்பரோட்டா said...

// கவிதை காதலன் said...
கொஞ்ச நாள் பின்னோக்கி பார்த்த நியாபகம்.. நல்லா இருக்கு நண்பரே//

அப்ப உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்குன்னு சொல்லுங்க,
நன்றி நண்பரே.

திவ்யாஹரி said...

ஒரு நல்ல விஷயத்தை நகைச்சுவையோட சொல்லிருக்கீங்க.. எல்லாருக்கும் பயன்படுகிற பதிவு..

சைவகொத்துப்பரோட்டா said...

// திவ்யாஹரி said...
ஒரு நல்ல விஷயத்தை நகைச்சுவையோட சொல்லிருக்கீங்க.. எல்லாருக்கும் பயன்படுகிற பதிவு..//


நன்றி திவ்யாஹரி உங்கள் கருத்துக்கு.

NIZAMUDEEN said...

நாவில் எச்சில் ஊறிவிட்டது.
நல்ல சுவை, மன்னிக்கவும் நல்ல பதிவு!

ஜெய்லானி said...

ஃபுஜைரா போகிற வழியில் நிறைய கிடைக்கும் அது நமது ஊர் பழம் மாதிரி சின்னதா இல்லை.ஒவ்வொன்னும் கொய்யாக்காய் சைசில நல்ல டேஸ்ட்.

ஜெய்லானி said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

// NIZAMUDEEN said...
நாவில் எச்சில் ஊறிவிட்டது.
நல்ல சுவை, மன்னிக்கவும் நல்ல பதிவு!//


நன்றி நண்பரே, உங்கள் கருத்துக்கு.

// ஜெய்லானி said...
ஃபுஜைரா போகிற வழியில் நிறைய கிடைக்கும் அது நமது ஊர் பழம் மாதிரி சின்னதா இல்லை.ஒவ்வொன்னும் கொய்யாக்காய் சைசில நல்ல டேஸ்ட்.

March 27, 2010 12:36 AM


ஜெய்லானி said...
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

March 27, 2010 12:38 AM //

நன்றி நண்பரே, கருத்துக்கும், வாழ்த்துக்கும்.

பின்னோக்கி said...

பள்ளியில் படிக்கும் போது ஒண்ணுக்கு இடைவெளியில், வெளியே இலந்தைப்பழ வடை விற்கும் பாட்டி நினைவுக்கு வருகிறது. அந்த சுவையே சுவை

சைவகொத்துப்பரோட்டா said...

// பின்னோக்கி said...
பள்ளியில் படிக்கும் போது ஒண்ணுக்கு இடைவெளியில், வெளியே இலந்தைப்பழ வடை விற்கும் பாட்டி நினைவுக்கு வருகிறது. அந்த சுவையே சுவை//

நிச்சயமாக, உங்களுக்கும் இந்த
அனுபவம் இருக்கிறது போல,
மிக்க நன்றி.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)