Thursday, March 18, 2010

பின்னூட்ட "குலசாமிக்கு" ஒரு படையல் (தொடர் பதிவு)

இந்த தொடர் "படையலுக்கு" என்னை அழைத்த நண்பர் மங்குனி அமைச்சர்ருக்கு எனது நன்றி.

கண்டிசன்ஸ் 1 ) உங்களுக்கு வந்த , நீங்க அனுப்பிய பின்னூட்டங்கள்ள உங்களுக்கு பிடித்த பத்து2 ) மொக்கைக்கு முன்னுரிமை3 )காப்பி அடிக்க கூடாது (டீ வேனா அடிச்சுக்கல்லாம்)4 ) :-) , :-)) இப்படி போடக்கூடாதுஅப்புறம் இது தான் முக்கியமான கன்டிசன்5) மேலே உள்ள எந்த கன்டிசனையும் பாலோ பன்னக்கூடாது.

எச்சரிக்கை:இது 100% மொக்கை மட்டுமே, தொடர விருப்பம் இருந்தால் தொடரவும்.

இனி மொக்கை ஆ"ரம்பம்"

எனக்கு வந்த பின்னூட்டங்கள்:

பி.ஆர் said

ஏய் பரோட்டா
என் கிட்ட வச்சுக்காத கலாட்டா
அப்புறம் நீ ஆயிருவ கொத்துபரோட்டா
இப்ப நான் போய்ட்டு வரட்டா.

மதனபாப் said

:) :))

:))) :))))))))

விச்சு said

கண்ணா நீ, ஒரு பதிவையாவது உருப்படியா எழுதுவியானு
எதிர்பார்த்திருக்கேன்......
எதிர்பார்க்கிறேன்.....
எதிர்பார்த்து கொண்டே இருக்கிறேன்....

பெரியாரசு said

பழனியா........

திருப்பாச்சியா......

திருப்பதியா.......

உன் பேர் என்ன ராசா....... இந்த மொக்கை போடுற.

வெடிவேலு said

நீ வச்சு இருக்கிற பேர பாத்து நம்ம மதுரை முனியாண்டி விலாஸ்
கணக்கா, ஜூடா பரோட்டா கொடுப்பியோன்னு நினைச்சு "நம்பி"
வந்தனைய்யா........ஏன்யா இந்த கொல வெறி...........நடக்கட்டும்....

அல்லோ, நானும் பதிவர்தான்..... நானும் பதிவர்தான்.........வரட்டா,,,,,,,,


இனி நான் அனுப்பிய பின்னூட்டங்கள்:

To: அரசு போக்குவரத்து கழக கடமையாளர்

கடமை உணர்ச்சி பற்றிய உங்களின் இந்த இடுகையில், "இலவச பஸ் பாஸ்" எடுத்து வராத "பள்ளி சீருடை அணிந்திருந்த" எட்டாம் வகுப்பு மாணவியிடம் அபராத தொகை வசூலித்த உங்களின் கடமை
உணர்ச்சியை அறிந்து கொண்டேன், "பாராட்ட" தமிழில் வார்த்தைகள் இல்லை. (அனைவரயும் இலவசமாக பயணப்பட அனுமதியுங்கள் என்று
கேட்கவில்லை, குறைந்த பட்சம் அந்த மாணவியை அடுத்த முறை
பாஸ் இல்லாமல் பயணம் செய்ய இயலாது என அறிவுரை கூறி
விட்டு இருக்கலாமே)

To:"ஆராய்ச்சியாளர்"

நான் ஒரு "ஆராய்ச்சியாளன்" என்ற உங்களின் இந்த இடுகை அருமை,
இனிமை , இளமை . நானும் உங்கள் ஆராய்ச்சி கூடத்தில் சேர ஆவலை
தூண்டுகிறது இந்த இடுகை. ஆனால் "சீருடை" மட்டும் மாற்றி விடுங்களேன்.

To:தொல்லைகாட்சிகள்

குழந்தைகளும் உங்கள் இடுகைகளை பார்ப்பதை
நினைவில் வைத்து கொள்ளுங்கள், இனிமேல் "அந்த" மாதிரி படங்களை
போட்டு கொண்டு இருக்காதீர்கள்.

To: மாண்புமிகு "மாண்புமிகுக்கள்"

உங்களின் பட்ஜெட் பற்றிய இந்த இடுகை அருமை, ஆனால் பெட்ரோல்
"பற்றிய" விஷயம் மற்றும் என் வயிற்றில் நெருப்பை கட்டியது போல்
இருக்கிறது.

To:பொது ஜனங்கள்

எவ்வளவு அடித்தாலும், "உரலாகி" நிற்கும் உங்கள் வலிமையும்,
அலுவலகத்தில், (or) தொழிற்சாலையில் எப்படி பிழிந்தாலும்,
"இடியாப்பமாய்" வெளி வரும் உங்களின் "திறமையையும்" இந்த
இடுகை பறை சாற்றுகிறது.


டிஸ்கி (or) குஸ்கி :
மேலே சொல்லப்பட்ட கண்டிசனில் 5-வதை மட்டும் நான் பின்
பற்றி இருக்கிறேன். (ஹி,,,,,ஹி.....)
மேலே சொல்லப்பட்ட பின்னூட்டங்கள் அனைத்தும் எனது
கற்பனையே(!!!) இந்த தொடர் படையலை படைக்க
விருப்பம் உள்ளவர்கள், விரைவாக "சமையலை" ஆ"ரம்பி"க்குமாறு
அன்புடன் கேட்டு கொள்(கொல்)கிறேன் :))

****************************************************************


அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

46 comments:

Raghu said...

எப்ப‌டிலாம் யோசிக்க‌றாங்க‌!

//அனைவரயும் இலவசமாக பயணப்பட அனுமதியுங்கள் என்று கேட்கவில்லை, குறைந்த பட்சம் அந்த மாணவியை அடுத்த முறை பாஸ் இல்லாமல் பயணம் செய்ய இயலாது என அறிவுரை கூறி
விட்டு இருக்கலாமே//

ஹி..ஹி..அப்புற‌ம் அவ‌ர் எப்ப‌டிங்க‌ 'நேர்மை'யை நிரூபிக்க‌ற‌து? இதுல‌ இன்னொரு வியூவும் இருக்கு....அவ‌ங்க‌ அட்வைஸ் ப‌ண்ணி விட்டுடுவாங்க‌, அத‌னால‌ க‌வ‌லை இல்லைன்னு அந்த‌ மாண‌வியும் நினைக்க‌ சான்ஸ் இருக்கு இல்லியா....

தமிழ் மதுரம் said...

கொத்துப் பரோட்டா சுவையாக இருக்கிறது. வித்தியாசமான படையல்

Muruganandan M.K. said...

மிகச் சுவையான படையல். நான் தொடரில் சமைத்து சுவையைக் கெடுக்கப் போவதில்லை.

Muruganandan M.K. said...

நல்ல பதிவு.
நான் பருத்தித்துறை ஆனாலும் எமது பகுதியிலும் மட்டுவில் கத்தரியின் புகழ் என்றுமே ஓங்கியிரக்கும்.

settaikkaran said...

கலக்கறீங்க! அதுலேயும் பொதுஜனங்களுக்கு நீங்க போட்ட பின்னூட்டம் தூள்!

VISA said...

பதிவுக்கு பின்னூட்டம் போய் இப்போ பின்னூட்டத்துக்கு பதிவா? நடக்கட்டும்

சிவாஜி சங்கர் said...

லகலகலக..கலக்கல்

சசிகுமார் said...

நல்ல கற்பனை செம மொக்கை போடுறீங்க, தொடர்ந்து கலக்குங்கள்

Chitra said...

பழனியா........

திருப்பாச்சியா......

திருப்பதியா.......

உன் பேர் என்ன ராசா....... இந்த மொக்கை போடுற.


...ha,ha,ha...... super comments.....

Anonymous said...

ரூம் போட்டு யோசிப்பிங்களோ??
மொக்கை பரோட்டா தாங்க முடியல டா சாமி
உங்க கற்பனை நல்ல இருக்கு
வாழ்த்துக்கள்

நாடோடி said...

கொத்து கொத்து... நல்லா இருக்கு.....

ஆர்வா said...

உங்களுக்கு பின்னூட்ட மின்னல்'ன்னு பட்டம் கொடுக்கலாமுன்னு இருக்கேன்..

Thenammai Lakshmanan said...

நல்ல படையல் குலசாமிக்கு
சை கொ ப ஒரே சிரிப்பு மழைதான்

சைவகொத்துப்பரோட்டா said...

// ர‌கு said...
எப்ப‌டிலாம் யோசிக்க‌றாங்க‌!

ஹி..ஹி..அப்புற‌ம் அவ‌ர் எப்ப‌டிங்க‌ 'நேர்மை'யை நிரூபிக்க‌ற‌து? இதுல‌ இன்னொரு வியூவும் இருக்கு....அவ‌ங்க‌ அட்வைஸ் ப‌ண்ணி விட்டுடுவாங்க‌, அத‌னால‌ க‌வ‌லை இல்லைன்னு அந்த‌ மாண‌வியும் நினைக்க‌ சான்ஸ் இருக்கு இல்லியா....//

சில நடத்துனர்கள் பாக்கி சில்லறை கொடுக்காமல் பதுக்கி விடுகிறார்களே, அவர்களை
யார் சோதிப்பது......

பள்ளி மாணவிதானே, ஒரு முறை மன்னித்து விட்டால் தவறேதும் இல்லை என்றே தோன்றுகிறது....

நன்றி ரகு.



// கமல் said...
கொத்துப் பரோட்டா சுவையாக இருக்கிறது. வித்தியாசமான படையல்//

மிக்க நன்றி கமல், அடுத்து என்ன படம் பண்ணுறீங்க :))



// Dr.எம்.கே.முருகானந்தன் said...
மிகச் சுவையான படையல். நான் தொடரில் சமைத்து சுவையைக் கெடுக்கப் போவதில்லை.//

அப்படியெல்லாம் ஒதுங்க கூடாது, என்னை விட நீங்க நல்லாவே படையல் போடுவீர்கள்.......
போடுங்களேன்.........
நன்றி மருத்துவரே.



// Dr.எம்.கே.முருகானந்தன் said...
நல்ல பதிவு.
நான் பருத்தித்துறை ஆனாலும் எமது பகுதியிலும் மட்டுவில் கத்தரியின் புகழ் என்றுமே ஓங்கியிரக்கும்.//

மன்னிக்கவும்.......

எதை (அல்லது) யாரை பற்றி கூறுகிறீர்கள் என்பது புரியவில்லை மருத்துவர் அய்யா.

சைவகொத்துப்பரோட்டா said...

// சேட்டைக்காரன் said...
கலக்கறீங்க! அதுலேயும் பொதுஜனங்களுக்கு நீங்க போட்ட பின்னூட்டம் தூள்!//

மிக்க நன்றி நண்பரே.




// VISA said...
பதிவுக்கு பின்னூட்டம் போய் இப்போ பின்னூட்டத்துக்கு பதிவா? நடக்கட்டும்//

ஹி.......ஹி.......இதோட இது முடியாது........
ஏன்னா இது ஒரு தொடர்பதிவு :))
மிக்க நன்றி விசா.





// Sivaji Sankar said...
லகலகலக..கலக்கல்//

ஓ.....வேட்டைய ராசாவா........வாங்க.........:))
மிக்க நன்றி சங்கர்.



// சசிகுமார் said...
நல்ல கற்பனை செம மொக்கை போடுறீங்க, தொடர்ந்து கலக்குங்கள்//

மிக்க நன்றி சசி.

சைவகொத்துப்பரோட்டா said...

// Chitra said...
பழனியா........

திருப்பாச்சியா......

திருப்பதியா.......

உன் பேர் என்ன ராசா....... இந்த மொக்கை போடுற.


...ha,ha,ha...... super comments.....//

மிக்க நன்றி சித்ரா.



// எனது கிறுக்கல்கள் said...
ரூம் போட்டு யோசிப்பிங்களோ??
மொக்கை பரோட்டா தாங்க முடியல டா சாமி
உங்க கற்பனை நல்ல இருக்கு
வாழ்த்துக்கள்//

ஹி.....ஹி.......எல்லாம் அப்படியே தோனுறதுதான்....... :))
நன்றி உங்கள் கருத்துக்கு.



// நாடோடி said...
கொத்து கொத்து... நல்லா இருக்கு.....//

அப்படியா..........மகிழ்ச்சி.........
நன்றி நண்பரே.

சைவகொத்துப்பரோட்டா said...

// கவிதை காதலன் said...
உங்களுக்கு பின்னூட்ட மின்னல்'ன்னு பட்டம் கொடுக்கலாமுன்னு இருக்கேன்..//

ரைட்டு......
பட் ஒன் கண்டிசன்.........
மானாட மயிலாட குழுவ கூப்பிட்டு விழா நடத்தி மேடையில்தான்
கொடுக்கணும்........ஹி.......ஹி........
நன்றி நண்பரே.



// thenammailakshmanan said...
நல்ல படையல் குலசாமிக்கு
சை கொ ப ஒரே சிரிப்பு மழைதான்//

மிக்க மகிழ்ச்சி அக்கா.......
நன்றி உங்கள் கருத்துக்கு.

lolly999 said...

இன்னும் சிரித்து முடியவில்லை!!!!!ஏற்கனவே வெங்காய கொத்தை நினைத்து சமைக்கும் போதெல்லாம் சிரிப்பேன்!!!GOODDDDDDDDDDD.....

சைவகொத்துப்பரோட்டா said...

// lolly999 said...
இன்னும் சிரித்து முடியவில்லை!!!!!ஏற்கனவே வெங்காய கொத்தை நினைத்து சமைக்கும் போதெல்லாம் சிரிப்பேன்!!!GOODDDDDDDDDDD.....//

மகிழ்ச்சியாக இருக்கிறது, நன்றி சகோதரி.

பனித்துளி சங்கர் said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !

பனித்துளி சங்கர் said...

ஆஹா !
ஏலே மக்கா பின்னூட்டம் போட்டு பின்னூட்டம் வாங்குற ஒரே ஆளு நீங்கதான் .

மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????


மீண்டும் வருவான் பனித்துளி !

Mohan said...

சுவையான பரோட்டாக்கள்!
குருமாவுந்தேன்...

பனித்துளி சங்கர் said...

குலசாமி பெயரை சொல்லி எல்லோரையும் காலியாக்கப்பார்த்தியால ????????????



மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

நாங்கெல்லாம் ராவான ரவுடிக .மலையையே உருட்டுவோம்ல

சைவகொத்துப்பரோட்டா said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !//

ரூம் போட்டு யோசிப்போம்ல ..........:))

ஆமா பனித்துளிக்கு என்னாச்சு............

நன்றி சங்கர், மீண்டும், மீண்டும் வாங்க.




// Mohan said...
சுவையான பரோட்டாக்கள்!
குருமாவுந்தேன்...//

அப்படியா..........
சாருக்கு ரெண்டு பரோட்டா பார்சல்........
ஹி......ஹி.....
நன்றி மோகன்.

மங்குனி அமைச்சர் said...

ஆகா பிரிச்சு மேஞ்சிடியே தல ..........
நன்றி

புலவன் புலிகேசி said...

:))

சைவகொத்துப்பரோட்டா said...

// மங்குனி அமைச்சர் said...
ஆகா பிரிச்சு மேஞ்சிடியே தல ..........
நன்றி//

ஆஹா......அமைச்சரே பாராட்டியாச்சு........:))
நன்றி அமைச்சரே.




// புலவன் புலிகேசி said...
:)) //

புன்னகைக்கு நன்றி புலவரே.

DREAMER said...

வாழையிலையில் போட்டு பரோட்டாவை சாப்பிடலாம்... ஆனால், பரோட்டாவில் வாழையிலையைப் போட்டு சாப்பிட்டுள்ள இந்த இடுகையும் வித்தியாசமாகத்தான் உள்ளது.

குறிப்பு
இடுகைகள் - பரோட்டாக்கள்
பின்னூட்டங்கள் - வாழையிலை

பி.கு.
இதையும் மொக்கை பின்னூட்டங்கள் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளவும்.

-
DREAMER

Starjan (ஸ்டார்ஜன்) said...

அசத்துங்க அசத்துங்க...

ரோஸ்விக் said...

அப்பவே சொன்னேன்... பட்டு, மங்குனி, வெளியூரு இவனுகளோட சேராதன்னு... கேட்டியா ராசா...

க ரா said...

விருதுநகர் என்னை பரோட்டா சாப்பிட்ட மாதிரி இருக்கு நண்பா. கலக்குங்க.

சைவகொத்துப்பரோட்டா said...

// DREAMER said...
வாழையிலையில் போட்டு பரோட்டாவை சாப்பிடலாம்...
-
DREAMER//


அட இது கூட நல்லா இருக்கு நண்பா,
நன்றி ஹரீஷ்.



// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அசத்துங்க அசத்துங்க...//

நன்றி ஸ்டார்ஜன்.

சைவகொத்துப்பரோட்டா said...

// ரோஸ்விக் said...
அப்பவே சொன்னேன்... பட்டு, மங்குனி, வெளியூரு இவனுகளோட சேராதன்னு... கேட்டியா ராசா...//


ஏதோ நம்மால முடிஞ்ச சேவை.......ஹி........ஹி......
நன்றி ரோஸ்விக்.




// இராமசாமி கண்ணண் said...
விருதுநகர் என்னை பரோட்டா சாப்பிட்ட மாதிரி இருக்கு நண்பா. கலக்குங்க.//

அப்படி..........யா!!!!
நன்றி ராம்.

vidivelli said...

கொத்துக் கொத்தா போட்டு மொங்கிறீங்களே...........
வேறுபட்ட படையல்.........நல்லாயிருக்குங்க..

சைவகொத்துப்பரோட்டா said...

// vidivelli said...
கொத்துக் கொத்தா போட்டு மொங்கிறீங்களே...........
வேறுபட்ட படையல்.........நல்லாயிருக்குங்க..//


அப்படியா..........மிக்க நன்றி.

ஸ்ரீராம். said...

To: அரசு போக்குவரத்து கழக கடமையாளர்...

உண்மை.
படிக்கும் போது வேதனையுடன் எரிச்சல் வந்த சம்பவம்

சைவகொத்துப்பரோட்டா said...

// ஸ்ரீராம். said...
To: அரசு போக்குவரத்து கழக கடமையாளர்...

உண்மை.
படிக்கும் போது வேதனையுடன் எரிச்சல் வந்த சம்பவம்//


எளியோரிடம்தான், சட்டம் பாயுது,
நன்றி அண்ணா உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு.

பத்மா said...

என்கிட்டே ஒரே ஒரு கேள்வி தாங்க இருக்கு .நேரம் இருந்தா சொல்லுங்க .
சொல்வீங்களா? அட்லீஸ்ட் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க .நா ரொம்ப ஆவலா வெயிட் பண்ணிட்டு இருப்பேன். இந்த கேள்விக்கு விடை தெரியலேன்னா என் தலை சுக்கு நூறா வெடிச்சுடுங்க.
என்ன கேள்வியா? வேற ஒண்ணும் இல்லை .
பரோட்டா எத்தனை வகைப்படும்?
இவ்ளோதாங்க .........

நீச்சல்காரன் said...

அருமையாயிருக்கு

சைவகொத்துப்பரோட்டா said...

// padma said...
என்கிட்டே ஒரே ஒரு கேள்வி தாங்க இருக்கு .நேரம் இருந்தா சொல்லுங்க .
சொல்வீங்களா? அட்லீஸ்ட் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க .நா ரொம்ப ஆவலா வெயிட் பண்ணிட்டு இருப்பேன். இந்த கேள்விக்கு விடை தெரியலேன்னா என் தலை சுக்கு நூறா வெடிச்சுடுங்க.
என்ன கேள்வியா? வேற ஒண்ணும் இல்லை .
பரோட்டா எத்தனை வகைப்படும்?
இவ்ளோதாங்க .........//

குட் கொஸ்டின்..........பதில் ரொம்ப சுலபம்தான்.........

பத்து வகைப்படும் (இப்போதைக்கு...........ஹி........ஹி......)

நன்றி தங்கள் கருத்துக்கும், வருகைக்கும்.



// நீச்சல்காரன் said...
அருமையாயிருக்கு//

நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

Jaleela Kamal said...

பின்னூட்டம் , கற்பனை கொத்து பரோட்டாவா ம்ம் சூப்பர்


பரோட்டா எத்தனை வகைப்படும்?

அது கொத்துபவரை பொறுத்து...

சைவகொத்துப்பரோட்டா said...

// Jaleela said...
பின்னூட்டம் , கற்பனை கொத்து பரோட்டாவா ம்ம் சூப்பர்


பரோட்டா எத்தனை வகைப்படும்?

அது கொத்துபவரை பொறுத்து...//

சரியா சொன்னீங்க அக்கா,
நன்றி உங்கள் கருத்துக்கு.

Vijiskitchencreations said...

நான்ன்ன்ன் இன்று தான் முதலில் வந்தேன். நல்ல காமெடி பரோட்டாவா இருக்கு. குட்.

சைவகொத்துப்பரோட்டா said...

// Vijis Kitchen said...
நான்ன்ன்ன் இன்று தான் முதலில் வந்தேன். நல்ல காமெடி பரோட்டாவா இருக்கு. குட்.//


மிக்க மகிழ்ச்சி.........:))
தொடர்ந்து வாருங்கள், நன்றி.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)