அந்த வீடியோ மேட்டரா, பாக்கலையே மச்சி...
அட அதில்லைப்பா, நடு சாமத்துல ஒரு நூசு சொன்னாம்ப்பா, நம்ம ஊரு எல்லைக்கு அப்பால
பறக்கும் தட்டு ஒன்னு சுத்தி வந்துச்சாம்பா, அது வந்து போன தடம் கூட இன்னும் அப்படியே
இருக்காம், நம்ம பக்கத்துக்கு ஊரையே தூக்கிட்டு போயிருச்சாம் நூசுல சொன்னான், வாரியா போய் பாத்துட்டு வரலாம்.
எதுனா டுபாக்கூர் நூசா இருக்கப்போவுது, வா பொழப்ப பாப்போம்.
நிசமான நூசுதாம்பா, என் பக்கத்துக்கு வூட்டுக்காரன், அவன் வயலுக்கு காவல் இருக்கும்போது
பாத்திருக்காம்பா, நம்ம ஜம்போ பிளேன்ஐ விட பத்து மடங்கு பெருசா இருந்திச்சாம் அந்த பறக்கும் தட்டு.
அவன் விவரிக்க....எனக்கு ஆர்வம் தொற்றி கொண்டது, வா போய் பார்க்கலாம்.
நங்கள் அந்த இடத்தை (கிராமத்தை?) நெருங்க முடியாத அளவுக்கு கூட்டம், பட்டணத்துல இருந்து குறுந்தாடி
வச்ச விஞ்ஞானிகள் (!!!) எல்லாம் வந்து இருந்தாங்க. உள்ளூர் ஏட்டு அல்லாரையும் விரட்டிகிட்டு இருந்தாரு.
அந்த இடத்தை யாரும் நெருங்கவே முடியலை, ராத்திரி நூசுல பார்த்துக்கலாம்னு கிளம்பி
வந்திட்டோம்.
நூசு போடற நேரம் ஆச்சு.....ஊரு சனம் மொத்தமும் பஞ்சாயத்து பொட்டி முன்னால
உக்காந்து கிடந்துச்சுங்க.
ஒரு சோகமான செய்தி, நேற்று நள்ளிரவு, அடையாளம் தெரியாத ஒரு பறக்கும் தட்டு வந்து சென்ற பின்னர் ஒரு ஊரே காணாமல் போய் விட்டது, இது பற்றி நம் விஞ்ஞானிகள் மேலதிக தகவல் ஏதும் இப்பொழுது தர இயலாத
நிலைமையில் இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரம் கூறியது.......
ஓர் மகிழ்ச்சியான செய்தி.... நாம் அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை
கண்டு பிடித்து உள்ளது, அதோடு அனுப்பிய துணை விண்கலம்
"25 - கிராம் எடை கொண்ட மண்ணையும்" எடுத்து கொண்டு வெற்றிகரமாக நம் பூமியின் சுற்று பாதைக்குள் நுழைந்து விட்டது.
கதைக்கான விளக்கவுரை!!!!!!!
முதலில் வரும் கிராமம் இருப்பதே செவ்வாய் கிரகத்தில்தான், அவர்கள்
உருவம் மிக சிறியது!!!(எனது கற்பனைதான்) , அதை குறிக்கவே அந்த 25 - கிராம் எடை மண்ணை குறிப்பிட்டேன், அதாவது நமது விண்கலம் எடுத்து வந்த அந்த 25 - கிராம் எடை கொண்ட மண்தான் அவர்களின் "காணாமல் போன" கிராமம்.
***********************************************************************
எனக்கான உற்சாக டானிக்கை (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.
55 comments:
அடுத்த முறை ராகெட் உட்டா நாட்டெ விட்டுக் கெளம்பச் சொல்லுதிக.. நச்சுவே.
நல்லா இருக்குது இந்த மேட்டர்.
செய்திகள் நல்லா இருக்கு..
இதை படித்ததும் தான் ஞாபகம் வருகிறது. எனது களத்துமேட்டில் கருப்பு இட்லி கதையா இன்னும் முடிக்க வில்லை. விரைவில் நல்ல முடிவோடு நானும் வருகிறேன்.
எப்படியெல்லாம் யோசிக்கறீங்க? :-))))))
சுஜாதா பாணி சிறுகதைகள் எழுத விருப்பமா.
நல்லா கிளப்புறீங்க பீதியை.
நல்ல சயின்ஸ் பிக்சன்.
நல்லா கிளப்புறீங்க பீதியை.
//
அதே.... மீண்டும்.
ஏலேய் இது நல்ல நூசாவுல்ல இருக்கு. இதனால நாட்டுக்கு நன்ம விளைஞ்சா சந்தோசதாம்பல.. ஓய் நல்லாத்தேன் சொல்லிருக்கீக... அப்பூறம் வேறஎதாவது சொய்தி இருந்தா சொல்லி அனுப்பூஓய், வரட்டுமா...
என்னங்க பயமுறுத்தறீங்க....
// அப்பாதுரை said...
அடுத்த முறை ராகெட் உட்டா நாட்டெ விட்டுக் கெளம்பச் சொல்லுதிக.. நச்சுவே.//
இல்லை அப்பாதுரை..... முதலில் வரும் கிராமம் இருப்பதே செவ்வாய் கிரகத்தில்தான், அவர்கள்
உருவம் மிக சிறியது!!!(எனது கற்பனைதான்) , அதை குறிக்கவே அந்த 25 - கிராம் எடை மண்ணை குறிப்பிட்டேன், அதாவது நமக்கு அது 25 - கிராம் எடை கொண்ட மண், ஆனால் அதுவே அவர்கள் கிராமம்.
நன்றி அப்பாதுரை.
//இராமசாமி கண்ணண் said...
நல்லா இருக்குது இந்த மேட்டர்.//
அப்படியா........நன்றி ராம்.
//நாடோடி said...
செய்திகள் நல்லா இருக்கு..//
நன்றி நண்பரே.
// ஜீவன்சிவம் said...
இதை படித்ததும் தான் ஞாபகம் வருகிறது. எனது களத்துமேட்டில் கருப்பு இட்லி கதையா இன்னும் முடிக்க வில்லை. விரைவில் நல்ல முடிவோடு நானும் வருகிறேன்.//
விரைவா வாங்க........ஆவலாய் காத்திருக்கிறோம்......
நன்றி ஜீவன்சிவம்.
//சேட்டைக்காரன் said...
எப்படியெல்லாம் யோசிக்கறீங்க? :-)))))) //
ச்சு.....ம்மா.........ஒரு சின்ன முயற்சிதேன்........
நன்றி நண்பரே.
// தமிழ் உதயம் said...
சுஜாதா பாணி சிறுகதைகள் எழுத விருப்பமா.//
அவ்வ்..........தலைவா..........அவர் கடல்.............நான் சிறு துளி..............
நன்றி நண்பரே கருத்துக்கு.
// அக்பர் said...
நல்லா கிளப்புறீங்க பீதியை.
நல்ல சயின்ஸ் பிக்சன்.//
பீதி ஆவாதீங்க..........நன்றி அக்பர்.
// சி. கருணாகரசு said...
நல்லா கிளப்புறீங்க பீதியை.
//
அதே.... மீண்டும்.//
அக்பருக்கு சொன்னதே......ரிப்பீட்டுகிறேன்.........:))
நன்றி நண்பரே.
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஏலேய் இது நல்ல நூசாவுல்ல இருக்கு. இதனால நாட்டுக்கு நன்ம விளைஞ்சா சந்தோசதாம்பல.. ஓய் நல்லாத்தேன் சொல்லிருக்கீக... அப்பூறம் வேறஎதாவது சொய்தி இருந்தா சொல்லி அனுப்பூஓய், வரட்டுமா...//
ரைட்டு......கண்டிப்பா சொல்லி அனுப்புதேன் அண்ணாச்சி........
வரும்போது இருட்டுக்கடை அல்வா வேங்கிட்டு வாங்க அண்ணாச்சி......
அயத்து புட்டேன்ல்லா அப்படின்னு சொல்லபடாது.......:))
நன்றி ஸ்டார்ஜன்.
// ஸ்ரீராம். said...
என்னங்க பயமுறுத்தறீங்க....//
பயப்படாதீங்க அண்ணா.........பயப்பட வேண்டியது செவ்வாய் கிரக வாசிகள்தான்....:))
நன்றி அண்ணா.
நல்லா மூளையை கொத்தி, கதை பரோட்டா ரெடி ஆகி இருக்கிறது.
ஏலேய் நான் அப்பவே சொன்னேன் கேட்டியா? நேரம் கெட்ட நேரத்துல கிணத்தடிக்குப் பக்கத்துல குத்த வைக்காதேன்னு, இப்ப பாரு வித்தியாசமா சிந்திக்க ஆரம்பிச்சுட்டே. இதை பதிவா போட்டதால தப்பிச்ச, இதையே ஊருக்குள்ள சொல்லியிருந்தீனா என்ன ஆகும். மஞ்சத் தண்ணி தெளிச்சு,வேப்பிலை அடிச்சுருப்பாங்க.
கற்பனை பண்ணுப்பா, வேண்டாம்ன்னு சொல்லலை, ஆனா கொஞ்சம் ரியாலிஸ்டிக்கை வைத்து ஒரு ஆதாரத்தோடு கற்பனை இணைக்கவும். செவ்வாய் நம்மை வீட பெரிய கிரகம், அதுனால அதில் ஜீவராசிகள் இருந்தால் பெரிசாதானே இருப்பார்கள். மாஸ் எந்த அளவே அது போல உயிரினங்களும் இருக்கும் அல்லவா?. இரண்டாவது பறக்கும் தட்டுன்னு பீலா விட்டு எண்டேவர் ராக்கெட் லாஞ்சரை போட்டால் என்ன அர்த்தம். கூகிளாண்டவரில் ஃப்ளையிங் ஆப்ஜெக்டஸ்ன்னு போட்டால் பறக்கும் தட்டு,அதன் தடம் போட்டே எல்லாம் கிடைக்கும் அல்லவா. கொஞ்சம் ரியலிஸ்டிக் மற்றும் காதுல பூ சுத்தும் உத்தியைக் கையாளவும். இப்படி முழுக்க முழுக்க சுத்தக் கூடாது. இது பதிவு டிரிக். ஓகேவா. மனசுல பட்டதை டக்குன்னு சொல்லிட்டேன், வருத்தம் இல்லைலியே? நன்றி.
ஐயையோ எங்கெங்கோவெல்லாம் போறீங்களே............
கற்பனையோ கற்பனை..........
அசத்துங்க..........
நல்லா யோசிக்கிறீங்கண்னேய்..!
நண்பர் சைவகொத்துப்பரோட்டா அவர்களுக்கு இப்படியெல்லாம் கதை எழுத நிறைய நேரம் உக்காந்து யோசிப்பீங்களோ ஆனாலும் கதையில் ஒரு ட்விஸ்ட் கொடுத்திருந்தீர்கள் அதை இன்னும் உங்கள் நடையில் கொடுத்திருக்கலாம். செவ்வாய் கிரகத்தில் சிறு மனிதர்கள் இருக்கலாம் என்று சொன்னீர்கள் வெறும் 25 கிராம் மண்ணில் ஒரு கிராமமே காணமால் போனதாக கூறுவது எவ்வளவு பெரிய கற்பனை வாழ்த்துக்கள்
//Chitra said...
நல்லா மூளையை கொத்தி, கதை பரோட்டா ரெடி ஆகி இருக்கிறது.//
மிக்க நன்றி சித்ரா. (ஆமா மூளையை கொத்தினால் சிதறி விடாதா........ஹி.........ஹி.... :)) )
//பித்தனின் வாக்கு said...
ஏலேய் நான் அப்பவே சொன்னேன் கேட்டியா? நேரம் கெட்ட நேரத்துல கிணத்தடிக்குப் பக்கத்துல குத்த வைக்காதேன்னு, இப்ப பாரு....//
செவ்வாய் கிரகம் பெரிதாக இருந்தாலும், ஜீவராசிகள் (இருந்தால்) பெரிதாக இருக்க வேண்டும் என்று
எந்த கோட்பாடும் இல்லையே....
அந்த படம் விசயத்தில் அடுத்த முறை கவனம் செலுத்துகிறேன்....
வருத்தம் இல்லை நண்பரே.......
உங்களிடம் எனக்கு பிடித்ததே, உங்களின் இந்த உண்மையான விமர்சனம்தான்.....
உங்கள் கருத்தை எப்போதும் ஆவலுடன் வரவேற்கிறேன்....
மிக்க நன்றி நண்பரே.
// vidivelli said...
ஐயையோ எங்கெங்கோவெல்லாம் போறீங்களே............
கற்பனையோ கற்பனை..........
அசத்துங்க..........//
மிக்க நன்றி விடிவெள்ளி. (நான் எங்கும் போகலை.....இங்கதான் இருக்கேன்...ஹி...ஹி... :)) )
// ♠ ராஜு ♠ said...
நல்லா யோசிக்கிறீங்கண்னேய்..!//
அப்படியா!! மிக்க நன்றி ராஜு.
//வடிவேலன் ஆர். said...
நண்பர் சைவகொத்துப்பரோட்டா அவர்களுக்கு இப்படியெல்லாம் கதை எழுத நிறைய நேரம் உக்காந்து யோசிப்பீங்களோ ஆனாலும்....//
எப்பொழுதாவது இந்த மாதிரி சின்ன கதைகரு தோன்றும், அப்பொழுது எழுதுவதுதான்......
மிக்க நன்றி வடிவேலன், அடுத்த முறை இன்னும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன்.
ஏம்பா ஒரு பொண்ணுக்காக அந்த ஊரையே தூக்கிட்டு வந்துட்டியா ? நான் தான் அப்பவே சொன்னன்லே , நம்ம நாடாமை கிட்ட சொல்லு அவரு பஞ்சாயத்து பேசி அந்த பொன்னையே உனக்கு கண்யானம் பண்ணி வப்பாருன்னு, ஏன் இப்படி அவசரப்பட்ட ?
அட வித்யாசமா இருக்கே சைவகொத்துபரோட்டா. மன்னிச்சிடுப்பா ரொம்ப லேட் ஆயிருச்சி
நேத்து மேட்ச் பாக்க போயிட்டேம்பா அதான் லேட்.
;)
நல்லா கெளப்புராங்கப்பா பீதிய!
ஹி...ஹி... நல்ல கற்பனை வளம்க உங்களுக்கு!
//மங்குனி அமைச்சர் said...
ஏம்பா ஒரு பொண்ணுக்காக அந்த ஊரையே தூக்கிட்டு வந்துட்டியா ? //
ஹா.........ஹா..........
அமைச்சர் வந்தாலே நகைச்சுவைதான்........
நன்றி அமைச்சரே.
// சசிகுமார் said...
அட வித்யாசமா இருக்கே சைவகொத்துபரோட்டா. மன்னிச்சிடுப்பா ரொம்ப லேட் ஆயிருச்சி
நேத்து மேட்ச் பாக்க போயிட்டேம்பா அதான் லேட்.//
மன்னிப்பு, தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை.......
ஹி.......ஹி.......ச்சு.....ம்மா.........நன்றி நண்பா.
// Sivaji Sankar said...
;)//
நன்றி நண்பரே புன்னகைக்கு.
// Mohan said...
நல்லா கெளப்புராங்கப்பா பீதிய!
ஹி...ஹி... நல்ல கற்பனை வளம்க உங்களுக்கு!//
அப்படியா........மகிழ்ச்சி..........
நன்றி மோகன்.
எப்படி இப்படியெல்லாம் யோசிக்க தோணுது . கலக்கல் . வாழ்த்துக்கள் !
// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
எப்படி இப்படியெல்லாம் யோசிக்க தோணுது . கலக்கல் . வாழ்த்துக்கள் !//
அப்பப்ப தோன்றதுதான்.............:))
நன்றி சங்கர்.
சயின்ஸ் பிஃக்ஷன் கதையும் நல்ல வருது சை கொ ப படத்துல எச்சரிக்கையா போடுங்க
படிச்சு முடிக்கும்போது நிஜமாவே 'அட!' சொல்லவெச்சுது. சைகொப, குமுதம், விகடனுக்கு இந்த கதையை அனுப்புங்க. தமாஷ் இல்ல, சீரியஸாவே சொல்றேன் :)
// thenammailakshmanan said...
சயின்ஸ் பிஃக்ஷன் கதையும் நல்ல வருது சை கொ ப படத்துல எச்சரிக்கையா போடுங்க//
மிக்க நன்றி அக்கா, கண்டிப்பாக அடுத்த முறை பட விசயத்தில் கவனம் செலுத்துகிறேன்.
// ரகு said...
படிச்சு முடிக்கும்போது நிஜமாவே 'அட!' சொல்லவெச்சுது. சைகொப, குமுதம், விகடனுக்கு இந்த கதையை அனுப்புங்க. தமாஷ் இல்ல, சீரியஸாவே சொல்றேன் :)//
அப்படியா அவ்ளோ நல்லா இருக்கா, நன்றி ரகு.
ம், வித்தியாசமா எழுதிருக்கீங்க. நல்லா இருக்கு. எனக்குப் பிடிச்சிருக்கு.
//விக்னேஷ்வரி said...
ம், வித்தியாசமா எழுதிருக்கீங்க. நல்லா இருக்கு. எனக்குப் பிடிச்சிருக்கு.//
அப்படியா, மகிழ்ச்சி. நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு.
என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .
மீண்டும் வருவான் பனித்துளி !
செவ்வாய்கிரகத்திற்கு பதில் வேறு பெயர் வைத்திருந்தால் அருமையான விஞ்ஞானபுனைவு சிறுகதையாயிருக்கும்!
// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .
மீண்டும் வருவான் பனித்துளி !//
அப்படியா.............மிக்க மகிழ்ச்சி........கூடிய விரைவில் புதிய இடுகை எழுதுகிறேன்.......
நன்றி சங்கர், தொடர்ந்து வாருங்கள்.
// வால்பையன் said...
செவ்வாய்கிரகத்திற்கு பதில் வேறு பெயர் வைத்திருந்தால் அருமையான விஞ்ஞானபுனைவு சிறுகதையாயிருக்கும்!//
ஆலோசனைக்கு மிக்க நன்றி, இனி வரும் காலங்களில் இந்த தவறுகள்
வராமல் பார்த்து கொள்கிறேன்.
அட்டகாசமான கற்பனை...
சூப்பர்..
நன்றி..
// பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
அட்டகாசமான கற்பனை...
சூப்பர்..
நன்றி..//
நன்றி பிரகாஷ், வருகைக்கும், கருத்துக்கும்.
சைவத்துலேயே பரோட்டா நல்ல கொத்துறீங்கோ சூப்பரப்பூஊஊஊஊஊஉ.
சைவத்துலேயே பரோட்டா நல்ல கொத்துறீங்கோ சூப்பரப்பூஊஊஊஊஊஉ.
சைவத்துலேயே பரோட்டா நல்ல கொத்துறீங்கோ சூப்பரப்பூஊஊஊஊஊஉ.
சைவத்துலேயே பரோட்டா நல்ல கொத்துறீங்கோ சூப்பரப்பூஊஊஊஊஊஉ.
உங்களிடம் எனக்கு பிடித்ததே, உங்களின் இந்த உண்மையான விமர்சனம்தான்.....
உங்கள் கருத்தை எப்போதும் ஆவலுடன் வரவேற்கிறேன்
மிக்க நன்றி..
//அன்புடன் மலிக்கா said...
சைவத்துலேயே பரோட்டா நல்ல கொத்துறீங்கோ சூப்பரப்பூஊஊஊஊஊஉ.//
அப்படியா.....மகிழ்ச்சி........அது சரி, நீங்க ஏன் இப்படி நாலு தடவை கொத்தி இருக்கீங்க கமெண்ட்டை!!!
ஹி.........ஹி........., நன்றி மலிக்கா.
// பித்தனின் வாக்கு said...
உங்களிடம் எனக்கு பிடித்ததே, உங்களின் இந்த உண்மையான விமர்சனம்தான்.....
உங்கள் கருத்தை எப்போதும் ஆவலுடன் வரவேற்கிறேன்
மிக்க நன்றி..//
மிக்க நன்றி நண்பரே.
ப்ரியமுடன் வசந்த் கூட பழக்கம் வச்சிருக்கீங்களா? அவங்க மாதிரியே யோசிக்கிறீங்க.. ரொம்ப நல்லா இருக்குங்க சைவ கொத்து பரோட்டா..
விளக்க உரை இல்லாமலே கதை புரிஞ்சுதுங்க. நல்ல கற்பனை.
//திவ்யாஹரி said...
ப்ரியமுடன் வசந்த் கூட பழக்கம் வச்சிருக்கீங்களா? அவங்க மாதிரியே யோசிக்கிறீங்க.. ரொம்ப நல்லா இருக்குங்க சைவ கொத்து பரோட்டா..//
மிக்க நன்றி சகோதரி உங்கள் கருத்துக்கு.
// பின்னோக்கி said...
விளக்க உரை இல்லாமலே கதை புரிஞ்சுதுங்க. நல்ல கற்பனை.//
முதலில் விளக்கஉரை இல்லாமல்தான் வெளியிட்டேன், புரியாமல் போய் விடுமோ என்று
நினைத்து பின்னர்தான் இணைத்தேன். மிக்க நன்றி பின்னோக்கி, உங்கள் கருத்துக்கு.
என்னா தல sci-fi கதயெல்லாம் பட்டயக் கிளப்பிறீங்க.....நானும் மூளைக் கதை ஒண்ணு எழுதி வச்சிருக்கேன்.போடலாமான்னு தான் யோசனையாக்கீது சார்.......
// மயில்ராவணன் said...
என்னா தல sci-fi கதயெல்லாம் பட்டயக் கிளப்பிறீங்க.....நானும் மூளைக் கதை ஒண்ணு எழுதி வச்சிருக்கேன்.போடலாமான்னு தான் யோசனையாக்கீது சார்.......//
யோசிக்கப்படாது, உடனே வெளியிடுங்கள் பாஸ், நன்றி.
wow... viththiyaasamaana josanai....
super a irukku... :)
ana Dakkindu mudinchuthu... :(
innum ithu maari vera eluthalaame...
// வளாகம் said...
wow... viththiyaasamaana josanai....
super a irukku... :)
ana Dakkindu mudinchuthu... :(
innum ithu maari vera eluthalaame...//
மிக்க நன்றி நண்பரே,
யோசனை வரும்பொழுது கண்டிப்பாக
இதே போல் எழுதுகிறேன்.
Post a Comment