ஞானியை தேட சொல்லி (கவனிக்க ஞாநி அல்ல!!) என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த நண்பர் ஜீவன்சிவம் அவர்களுக்கு எனது நன்றி.
உங்கள் வாழ்வில் மறக்க முடியாத பருவம் எது என கேட்டால் அனைவருக்கும் உடனே மனதில் எழுவது, பள்ளி மற்றும் கல்லூரி பருவமாகத்தான் இருக்கும்.
ஏன் நமக்கு, நிகழ்காலம் பிடிப்பதில்லை?
நிகழ்காலத்தில் நாம் நாமாக இருப்பதில்லை. பெரும்பாலான சமயங்களில், இதை செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்வார்களோ என்று, நம்மை மறந்து நாமே
அவர்களாகி விடுகிறோம்.
ஆரோக்கியமற்ற போட்டி, பொறமை, பேராசை எல்லாம் நம்முள் புகுந்து விடுவதன் பலன் மன நிம்மதியை இழக்கிறோம்.
நம்முள் இருந்த "நிம்மதியை" நாமே தொலைத்து விட்டு, பின்னர் அதை வெளியே தேடினால் எப்படி கிடைக்கும்.
வாழ்வில் லட்சியம் என்ற இலக்கு தேவைதான். அதற்காக வேண்டி நிகழ கால சந்தோஷ தருணங்களை நாம் அனுபவிக்க மறக்கிறோம்.
ஒரே ஒரு நாள் குளிப்பதில் இருந்து, சாப்பிடுவது வரை நாம் தினமும்
செய்யும் செயல்களை ரசித்து செய்து பாருங்கள். முக்கியமாக நாம்
செய்யும் வேலையினை, "விரும்பி" செய்து பாருங்கள். நிச்சயம் நம்
மனதில் ஒரு சந்தோசம் பரவும்.
உங்களால் முடிந்த வரை அடுத்தவருக்கு உதவுங்கள், அப்போது
கிடைக்கும் உற்சாகத்தை நீங்கள் மறக்கவே முடியாது.
முக்கியமாக நினைவில் நிறுத்த வேண்டியது, மந்திரத்தில் மாங்காய் கூட பறிக்க முடியாது. விதைத்து விட்டு முறையாக அதனை பராமரித்து வளர்த்தால் மட்டுமே முடியும் என்கிற போது,
எப்படி மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோயினை
அறவே மருத்துவ அறிவு இல்லாத ஒரு சந்நியாசி குணபடுத்த முடியும்.
ஆரோக்கியமான உணவு முறையினையும் கடை பிடித்து
சிறிதளவு உடற் பயிற்சியிலும் ஈடு பட்டாலே போதும்.
ஞானியை தேடும் வேலை தேவையற்ற ஒன்றாகி விடும்.
மொத்தத்தில் நாம் நாமாகவே இருந்தால் போதும், அனைவருமே
ஞானிகள்தான்.
இதை தொடர யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ, அவர்கள்
அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
********************************************************************
அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.
*
*
47 comments:
//நிகழ்காலத்தில் நாம் நாமாக இருப்பதில்லை. பெரும்பாலான சமயங்களில், இதை செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்வார்களோ என்று, நம்மை மறந்து நாமே
அவர்களாகி விடுகிறோம்.//
ஊரோடு ஒத்துவாழ்னு பழமொழி சொல்லியே கெடுத்து வச்சிட்டாங்க தல...
அருமை நண்பரே..:)
அருமையா எழுதியிருக்கீங்க! ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு ஞானி இருக்காருங்க! அது உண்மை தான்!
நமக்குள்ளே தேடுவோம்.... நல்ல சிந்தனை. பாராட்டுக்கள்.
இந்த விசயத்தை எழுத
பிறப்பால் முஸ்லிமான என்னால் முடியாது., காரணம் நான் சொல்லி பிறர் புரியவேண்டியதில்லை !
மற்றபடி அவசியமான பதிவு
( மொத்தத்தில் ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் மனிதர்களால் சாமியாக முடியாது, ஒரு வேளை அவர்கள் அற்புதங்கள் நிஜமாகவே செய்தார்கள் என்றாலும்.,!
அலெக்சாண்டர் பிளமிங்கை தொழவா செய்கிறோம்?!!
முக்கியமாக நினைவில் நிறுத்த வேண்டியது, மந்திரத்தில் மாங்காய் கூட பறிக்க முடியாது.
........ :-) very nice!
ஏற்று கொள்ள வேண்டிய உண்மைகள்- உங்களின் யார் ஞானி பதிவு.
//மொத்தத்தில் நாம் நாமாகவே இருந்தால் போதும், அனைவருமே
ஞானிகள்தான். //
இது தான் நிகழ்கால உண்மை...
//புலவன் புலிகேசி said...
//நிகழ்காலத்தில் நாம் நாமாக இருப்பதில்லை. பெரும்பாலான சமயங்களில், இதை செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்வார்களோ என்று, நம்மை மறந்து நாமே
அவர்களாகி விடுகிறோம்.//
ஊரோடு ஒத்துவாழ்னு பழமொழி சொல்லியே கெடுத்து வச்சிட்டாங்க தல... //
அதேதான்...... :))
நன்றி புலவரே.
// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அருமை நண்பரே..:)//
நன்றி ஷங்கர்.
//சேட்டைக்காரன் said...
அருமையா எழுதியிருக்கீங்க! ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு ஞானி இருக்காருங்க! அது உண்மை தான்!//
ஆம் நண்பா, நன்றி உங்கள் கருத்தை கூறியதற்கு.
// சி. கருணாகரசு said...
நமக்குள்ளே தேடுவோம்.... நல்ல சிந்தனை. பாராட்டுக்கள்.//
மிக்க நன்றி கருணாகரசு, உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும்.
// வெள்ளிநிலா ஷர்புதீன் said...
இந்த விசயத்தை எழுத
பிறப்பால் முஸ்லிமான என்னால் முடியாது., காரணம் நான் சொல்லி பிறர் புரியவேண்டியதில்லை !
மற்றபடி அவசியமான பதிவு
( மொத்தத்தில் ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் மனிதர்களால் சாமியாக முடியாது, ஒரு வேளை அவர்கள் அற்புதங்கள் நிஜமாகவே செய்தார்கள் என்றாலும்.,!
அலெக்சாண்டர் பிளமிங்கை தொழவா செய்கிறோம்?!!//
மிக்க நன்றி ஷர்புதீன், உங்கள் கருத்தை கூறியதற்கு, தொடர்ந்து வாருங்கள்.
// Chitra said...
முக்கியமாக நினைவில் நிறுத்த வேண்டியது, மந்திரத்தில் மாங்காய் கூட பறிக்க முடியாது.
........ :-) very nice!//
மிக்க நன்றி சித்ரா.
// தமிழ் உதயம் said...
ஏற்று கொள்ள வேண்டிய உண்மைகள்- உங்களின் யார் ஞானி பதிவு.//
அப்படியா, மிக்க மகிழ்ச்சி, நன்றி உங்கள் கருத்துக்கு.
// நாடோடி said...
//மொத்தத்தில் நாம் நாமாகவே இருந்தால் போதும், அனைவருமே
ஞானிகள்தான். //
இது தான் நிகழ்கால உண்மை...//
நன்றி நண்பரே, உங்கள் கருத்துக்கு.
அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே ஞானத்தின் வெளிப்படு தான்!!! அருமை.
நல்லாயிருக்கு நண்பா...
//மொத்தத்தில் நாம் நாமாகவே இருந்தால் போதும், அனைவருமே
ஞானிகள்தான். //
END PUNCH சூப்பர்...
-
DREAMER
நிகழ்காலத்தில் வாழ்தலே ஞானம் என அருமையாக விளக்கியமைக்கு நன்றி நண்பரே
// ஏன் நமக்கு, நிகழ்காலம் பிடிப்பதில்லை?
நிகழ்காலத்தில் நாம் நாமாக இருப்பதில்லை.//
ஆண்டவனே ஆண்டவனே என்று ஏன் கடந்தகாலத்திலேயே
கூப்பிடுகிறார்கள் என்று அடிக்கடி நினைப்பேன்?
இப்போது தான் ஏன் என்று விளங்கியது,
இனி ஆளுபவரை அழைத்து நாம் நாமாக வேண்டும்,
எளிமை...அருமை....உண்மை.
அருமை நண்பரே.
ஞானி ஞானி தான் சந்தேகமில்லை; அவர் ஞானி இருப்பதால் தான் ஞானி ஞானி என்றே எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
:)))
சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி விட்டீர்கள்.
தகுந்த சமயத்தில் தேவையான பதிவு சை கொ ப
நல்லாருக்கு..
// VISA said...
அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே ஞானத்தின் வெளிப்படு தான்!!! அருமை.//
மிக்க நன்றி விசா, கருத்துக்கும், வருகைக்கும்.
//DREAMER said...
நல்லாயிருக்கு நண்பா...
//மொத்தத்தில் நாம் நாமாகவே இருந்தால் போதும், அனைவருமே
ஞானிகள்தான். //
END PUNCH சூப்பர்...
-
DREAMER//
நன்றி ஹரீஷ்.
// நிகழ்காலத்தில்... said...
நிகழ்காலத்தில் வாழ்தலே ஞானம் என அருமையாக விளக்கியமைக்கு நன்றி நண்பரே//
நன்றி நண்பரே, தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்.
// Anonymous said...
// ஏன் நமக்கு, நிகழ்காலம் பிடிப்பதில்லை?
நிகழ்காலத்தில் நாம் நாமாக இருப்பதில்லை.//
ஆண்டவனே ஆண்டவனே என்று ஏன் கடந்தகாலத்திலேயே
கூப்பிடுகிறார்கள் என்று அடிக்கடி நினைப்பேன்?
இப்போது தான் ஏன் என்று விளங்கியது,
இனி ஆளுபவரை அழைத்து நாம் நாமாக வேண்டும்,
//
அப்படியா.......நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு, நன்றி அனானி.
// ஸ்ரீராம். said...
எளிமை...அருமை....உண்மை.//
மிக்க நன்றி அண்ணா, உங்கள் கருத்துக்கு.
//இராமசாமி கண்ணண் said...
அருமை நண்பரே.//
நன்றி ராம், உங்கள் கருத்துக்கு.
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஞானி ஞானி தான் சந்தேகமில்லை; அவர் ஞானி இருப்பதால் தான் ஞானி ஞானி என்றே எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
:)))//
ஆமா, விசு படம் பார்த்ததுக்கு அப்புறமா, இந்த கருத்துரை எழுதுனீங்களா நண்பா :))
நன்றி ஸ்டார்ஜன்.
// அக்பர் said...
சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி விட்டீர்கள்.//
நன்றி அக்பர், தொடர்ந்து வாருங்கள்.
//thenammailakshmanan said...
தகுந்த சமயத்தில் தேவையான பதிவு சை கொ ப//
நன்றி அக்கா, உங்களின் தொடர் ஊக்கத்திற்கு.
//தியாவின் பேனா said...
நல்லாருக்கு..//
மிக்க நன்றி, தொடர்ந்து வாருங்கள்.
நன்றி சைகொபு.
கனமான ஒரு விஷயத்தை மிக இலகுவாக அதே சமத்தில் தேர்ந்த வார்த்தை கோர்வைகளுடனும் சொல்லியதற்கு.
மீண்டும் பிரிதொரு நாளில் இணைவோம்
//எப்படி மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோயினை
அறவே மருத்துவ அறிவு இல்லாத ஒரு சந்நியாசி குணபடுத்த முடியும்//
சாட்டையடி!
ஆனா இதெல்லாம் கொஞ்ச நாள்தாங்க, மறுபடியும் வேற சாமியாரை தேடி நம்மாளுங்க ஓடுவாங்க பாருங்க. எவ்வளவோ அவஸ்தைபட்டாங்க, ஆனா இன்னமும் ஃபைனான்ஸ் கம்பெனிங்கல்லாம் இருக்கே....நம்ம ஜனங்க அவ்வளவுதான்:(
நல்ல பதிவு சார்
// ஜீவன்சிவம் said...
நன்றி சைகொபு.
கனமான ஒரு விஷயத்தை மிக இலகுவாக அதே சமத்தில் தேர்ந்த வார்த்தை கோர்வைகளுடனும் சொல்லியதற்கு.
மீண்டும் பிரிதொரு நாளில் இணைவோம்//
நன்றி நண்பரே, கருத்துக்கும், இந்த தொடருக்கு என்னை அழைத்ததற்கும்.
// ரகு said...
//எப்படி மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோயினை
அறவே மருத்துவ அறிவு இல்லாத ஒரு சந்நியாசி குணபடுத்த முடியும்//
சாட்டையடி!
ஆனா இதெல்லாம் கொஞ்ச நாள்தாங்க, மறுபடியும் வேற சாமியாரை தேடி நம்மாளுங்க ஓடுவாங்க பாருங்க. எவ்வளவோ அவஸ்தைபட்டாங்க, ஆனா இன்னமும் ஃபைனான்ஸ் கம்பெனிங்கல்லாம் இருக்கே....நம்ம ஜனங்க அவ்வளவுதான்:( //
எல்லாம் பேராசைதான் காரணம், நன்றி ரகு, கருத்துக்கு.
// மங்குனி அமைச்சர் said...
நல்ல பதிவு சார் //
நன்றி அமைச்சரே, ஆனால் நீங்கள் சார் போட்டு அழைக்கும் அளவிற்கு நான் பெரிய
ஆள் கிடையாது நண்பரே. நண்பா என்றே அழைக்கலாம்.
இப்படித்தான் நித்தியானந்தாவும் ஆன்மீக உரை ஆற்றி இருந்தார் .
sorry brother just for fun!!
// lolly999 said...
இப்படித்தான் நித்தியானந்தாவும் ஆன்மீக உரை ஆற்றி இருந்தார் .
March 8, 2010 3:06 PM
lolly999 said...
sorry brother just for fun!!
March 8, 2010 3:20 PM //
ஹா........ஹா............. :))
நன்றி தோழி, sorry எதற்கு, நீங்கள் வேடிக்கையாகதான் எழுதி இருக்கிறீர்கள்
என்று புரிகிறது.
உங்கள் blog - படிக்கலாம் என்று வந்தேன், வேறு ஏதோ மொழியில் இருக்கிறதே,
மிக்க நன்றி, தொடர்ந்து வாருங்கள்.
உண்மையான ஆன்மீக வாதிகளை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.நீங்கள் கூறியது போல் எங்களுக்குள்ளே ஞானியத் தேடுவது எத்தனை பேருக்கு சாத்தியமாகும்.பசி,நோய்,வறுமை,போரினால் பாதிப்பு என எத்தனையோ துன்பங்களை அனுபவிக்கும் அப்பாவிகள் இப்படியான மகான்கள்,சாமியார்களை தேடி போவது இயல்பானது.இப்படியான போலிகளிடம் ஏமாறுவது தான் மிகவும் வேதனையானது.
எங்கள் ப்ளோகில் 3 மொழிகளில் பதிவுகள் உள்ளன.தமிழிலும் உள்ளது.தேடுங்கள் கிடைக்கும்.
// lolly999 said...
உண்மையான ஆன்மீக வாதிகளை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.நீங்கள் கூறியது போல் எங்களுக்குள்ளே ஞானியத் தேடுவது எத்தனை பேருக்கு சாத்தியமாகும்.பசி,நோய்,வறுமை,போரினால் பாதிப்பு என எத்தனையோ துன்பங்களை அனுபவிக்கும் அப்பாவிகள் இப்படியான மகான்கள்,சாமியார்களை தேடி போவது இயல்பானது.இப்படியான போலிகளிடம் ஏமாறுவது தான் மிகவும் வேதனையானது.
எங்கள் ப்ளோகில் 3 மொழிகளில் பதிவுகள் உள்ளன.தமிழிலும் உள்ளது.தேடுங்கள் கிடைக்கும்.//
நம்முடைய இயலாமையைத்தான் அவர்கள் பயன்படுத்துகிறார்கள், நம்மால் முடிந்த அளவு
அடுத்தவருக்கு உதவி வாழ்ந்தாலே போதும், நம் மனம் நிம்மதி பெரும். நன்றி தோழி உங்கள் கருத்துக்கு.
"ஞானியை தேடும் வேலை தேவையற்ற ஒன்று..."
சரியாகச் சொன்னீர்கள். நாம் செய்வதை நல்ல மனத்துடன் செய்தால் ஞானி ஏன்?.
ஞானிகள் Or அஞ்ஞானிகள் எல்லாம் இப்ப வேறு வேலைகளில் இறங்கிவிட்டதாகத் தெரிகிறதே.
// Dr.எம்.கே.முருகானந்தன் said...
"ஞானியை தேடும் வேலை தேவையற்ற ஒன்று..."
சரியாகச் சொன்னீர்கள். நாம் செய்வதை நல்ல மனத்துடன் செய்தால் ஞானி ஏன்?.
ஞானிகள் Or அஞ்ஞானிகள் எல்லாம் இப்ப வேறு வேலைகளில் இறங்கிவிட்டதாகத் தெரிகிறதே.//
வாங்க டாக்டர், அவர்களுக்கு "அந்த" வேளையில்தான், நாட்டம் அதிகம் போல, :))
நன்றி டாக்டர்.
தல அப்படியா எனக்குள்ளும் யாராவது இருக்காங்களா, நல்ல பதிவு நண்பரே
very very good...........
supper..............
//சசிகுமார் said...
தல அப்படியா எனக்குள்ளும் யாராவது இருக்காங்களா, நல்ல பதிவு நண்பரே//
நிச்சயம் இருக்காங்க சசி.
நன்றி கருத்துக்கு.
// vidivelli said...
very very good...........
supper..............//
நன்றி விடிவெள்ளி, தொடர்ந்து வாருங்கள்.
சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், தாங்கள் சொல்ல வந்த கருத்து உண்மை,அருமை. மிக்க நன்றி.
// பித்தனின் வாக்கு said...
சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், தாங்கள் சொல்ல வந்த கருத்து உண்மை,அருமை. மிக்க நன்றி.//
மிக்க மகிழ்ச்சி, உங்கள் நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு.
மிக்க நன்றி நண்பரே, தொடர்ந்து வாருங்கள்.
நான் ஊருக்குப்புதுசுங்க. இப்பத்தான் ரோடு ரோடா போயி பாத்துட்டிருக்கனுங்க. அப்பறமா சாவகாசமா வந்து கண்டுக்கிறனுங்க
//Dr.P.Kandaswamy said...
நான் ஊருக்குப்புதுசுங்க. இப்பத்தான் ரோடு ரோடா போயி பாத்துட்டிருக்கனுங்க. அப்பறமா சாவகாசமா வந்து கண்டுக்கிறனுங்க//
ஹா.......ஹா......, இதோ நீங்க மாதிரியே இப்ப நான் வந்து உங்கள் blog - ஐ follow - பண்ணப்போறேன், நானும் பிரபல பதிவர் ஆகோணும் :))
உங்க பதிவ படிச்சேன்.
Post a Comment