இதை எழுதுவதற்கு என்னை அழைத்த
அன்னுவிற்கு நன்றி.
1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
வலைப்பதிவிற்காக நான் வைத்த பெயர் சைவகொத்துப்பரோட்டா
2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா?
ஹி...ஹி... இல்லவே இல்லீங்கோ.
இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
நம்ம கடை பக்கம் உங்களை வர வைக்கும் யுத்திதான்!!
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
ஆர்வக்கோளாறுதான்.
4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்வெளி, திரட்டி, உலவு மற்றும் தினமணி
போன்ற திரட்டிகளில் இணைத்தேன்.
5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா?
ஆம்.
ஆம் என்றால் ஏன்?
நண்பர் ஸ்டார்ஜன் இந்த தொடர்பதிவுக்கு அழைத்ததால்!
அதன் விளைவு என்ன?
எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது, இதன் "பின்விளை"வாக வந்த பின்னூட்டங்களை படித்தபோது.
இல்லை என்றால் ஏன்?
அதான் "ஆம்"ன்னு சொல்லிட்டோம்ல :))
6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
கதை விடலாம்ன்னுதான் (சிறுகதையை சொன்னேன்) எழுத ஆரம்பிச்சேன்.
என்னோட பதிவுகள படிச்சிட்டு நீங்க கொடுக்குற விமர்சனங்கள்
மட்டுமே இப்போதைய சம்பாத்தியம்.
7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்னே ஒண்ணுதான்! அதுவும் செம்மொழியான தமிழ் மொழியில்தான்!! (இந்த ஒண்ணுல பதிவு போடவே மண்ட காயுது)
8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.
(அப்பாடி தலைப்புக்கும், பதிவுக்கும் சம்பந்தம் வந்திருச்சு!)
இல்லை.
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
பேர் வச்சு கடை தொறந்து நாலு பதிவும் போட்டாச்சு. ஆனா
ஒரு கமெண்ட் கூட இல்லை. ஆனாலும் சளைக்காம அஞ்சாவது
பதிவு போட்டுட்டு, நாப்பது தடவ வலைப்பக்கம் வந்து எட்டிப்பார்த்து ஏமாந்து போன, 40 வது நிமிடம் ஒரு கமெண்ட் இருந்தது.
அந்த நிமிடம், எவரெஸ்ட் மேலே ஏறி நின்னா மாதிரி
ச்சும்மா ஜில்லுன்னு ஒரு பீலிங் வந்திச்சு பாருங்க...(நாம எழுதினதையும் மதிச்சு ஒருத்தர் கமெண்ட் போட்டுட்டாரே!)
அந்த கமெண்டுக்கு சொந்தக்காரர் சதுக்க பூதம் ,
நன்றி நண்பரே.
10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
என்னை பத்தி தெரிஞ்சுக்கனுமா இங்கே
போய் பாத்துக்கோங்க.
பாத்தாச்சா! சரி...சரி...மறக்காம உங்க கருத்துக்களை எழுதிட்டு போங்க,
நன்றி.
34 comments:
//ஒன்னே ஒண்ணுதான்! அதுவும் செம்மொழியான தமிழ் மொழியில்தான்!! (இந்த ஒண்ணுல பதிவு போடவே மண்ட காயுது//
இத சொன்னிங்களே.........ரொம்ப கரெக்ட் :-)
பதில் எல்லாம் ரத்தினச் சுருக்கமாய்.. அழகாய் சொல்லிட்டீங்க..
நல்லா இருக்குங்க.. :-))
PRESENT SIR...
GREAT ANNA...
HUMAR ANSWERS..
kazhuvura meenla nazhuvura meen ithana=)). nallarukku
இவ்வளவு அழகா யாரும் தங்களை சொல்லி கொண்டதில்லை. வாழ்த்துகள்.
Ushaar party!!!
கேட்கப் படாத கேள்வி
நீங்க பேருல மட்டும்தான் சைவமா, இல்லை, நெஜத்துலேயுமா ?
தலைப்ப பாத்துட்டு என்னவோ விசயம் இருக்குனு நம்ம்ம்ம்பி வந்தேன்..
ஏமாத்திப்புட்டீங்களே அண்ணாத்தை..
super ANNA
எனக்கு உங்க மேல கோபம். என்னை விட நல்ல எழுதிட்டீங்கலேன்னு.. வாழ்த்துக்கள்.. ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
@LK
மகிழ்ச்சி, கார்த்திக்!
@Ananthi
நன்றி ஆனந்தி.
@siva
நன்றி சிவா.
@வானம்பாடிகள்
:)) நன்றி அய்யா.
@தமிழ் உதயம்
வாழ்த்துக்கு, நன்றி நண்பரே.
@VISA
வாங்க விசா சார்!! எங்கே அடுத்த பதிவு.
@Madhavan
ஹி...ஹி...எப்போதும், நன்றி மாதவன்.
@DrPKandaswamyPhD
நன்றி அய்யா.
@இந்திரா
ஆச...தோச....ஆங்...
நன்றி தங்கச்சி.
@prabhadamu
நன்றி பிரபா.
@RVS
நன்றி ஆர்.வி.எஸ்.
தலைப்ப பார்த்து என்ன்வோன்னு நினைத்தேன்.
யார் மேலே கோபம்,
பளிச்சிடும் சுருக்கமான பதில் கள்,,
அழகான பதில்கள்
சுருக்கமான, அழகான பதில்கள்.
@Jaleela Kamal
யார் மீதும் கோபம் இல்லை அக்கா, வித்தியாசமாக இருக்க வேண்டும் என
நினைத்து வைத்த தலைப்பு. கொஞ்சம் நகைச்சுவையாக முயன்று பார்த்தேன்.
@சிநேகிதி
நன்றி சிநேகிதி.
@சே.குமார்
நன்றி குமார்.
ரசிக்கும் பதில்கள்..:)
@நாடோடி
நன்றி ஸ்டீபன்.
அளவா சொல்லியிருக்கீங்க...
cute answers buddy :)
நறுக்குன்னு நல்லாயிருக்கு பதிவும் பதில்களும்..
//அந்த நிமிடம், எவரெஸ்ட் மேலே ஏறி நின்னா மாதிரி
ச்சும்மா ஜில்லுன்னு ஒரு பீலிங் வந்திச்சு பாருங்க...(நாம எழுதினதையும் மதிச்சு ஒருத்தர் கமெண்ட் போட்டுட்டாரே// இது உண்மைங்க..
தலைப்பை விவகாரமா வச்சிட்டு....இந்த தலைப்புல எழுத அழைத்த அன்னுவிற்கு நன்றின்னு வேற முத வரில எழுதியிருக்கீங்க....ஏனுங்ணா.... நானென்னங்கண்ணா தப்பா சொல்லிட்டேன்....ஆட்டோ மட்டுமில்லாம எல்லாம் வரும் போலிருக்கே...முதல்ல என்னுடைய வலைப்பூவை நானே கொஞ்ச நாளைக்கு ஹேக் செய்யனும்:)
சின்னதா அழகா எழுதியிருக்கீங்க. நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்!! (இந்த மூணு லைன்தானே எழுதச்சொன்னீங்க??)
:))
@ஸ்ரீராம்.
நன்றி அண்ணா.
@இராமசாமி கண்ணண்
நன்றி ராம்.
@Riyas
நன்றி ரியாஸ்.
@அன்னு
ஹா...ஹா...தலைப்பு, சற்றே வித்தியாசமாக இருக்கட்டுமே என வைத்தது. (ன் என்றால், கிட்டத்தட்ட
இந்த தொடரை அனேகம்பேர் எழுதி விட்டார்கள் என நினைக்கிறேன்)
அப்புறம் அன்னு, குறைகளையும் சுட்டிக்காட்டலாம். நான் குறிப்பிட்ட அந்த முதல் கமெண்ட்டே
நான் எழுதியதற்கு எதிர்மறையான கருத்துதான்!
நன்றி அன்னு.
நல்ல பதில்கள்.ரசித்தேன்
@மோகன்ஜி
நன்றி ஜி.
அருமையான சுயபுராணம்..சைவ.கொ.சூப்பர்
@அஹமது இர்ஷாத்
நன்றி இர்ஷாத்.
நல்லாருக்கு பதில்கள் சைவ கொத்து பரோட்டா வாழ்த்துக்கள்
ஆனாலும் இந்த தன்னடக்கம் ரொம்பவும் அநியாயம்யா!
ஆமா... இந்த சீரிஸ் இன்னுமா ஓடிட்டு இருக்கு?!
@r.v.saravanan
நன்றி சரவணன்.
@விந்தைமனிதன்
ஹி...ஹி... ஆமா இன்னும் போய்கிட்டிருக்கு!
நன்றி நண்பரே.
பதில்கள் அனைத்தும் நல்லா
கலகலன்னு விறுவிறுப்பாக
இருக்கின்றன.
@NIZAMUDEEN
நன்றி நண்பரே.
உங்கள் பதிவுகள் எல்லாம் நன்றாக உள்ளது.
http://mxstar.blogspot.com
:) நல்லா இருந்துச்சி.
Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com
I??m now not certain where you're [url=http://cheappandorajewelrysuk.co.uk]pandora jewelry sale[/url] getting your information, but great topic. [url=http://cheappandorajewelrysuk.co.uk]cheap pandora charms[/url] , I must spend some time studying more or working out more. Thank you for great info I used to be on the lookout for this information for my mission.
Post a Comment