முன்பெல்லாம் கடைகளுக்கு செல்லும்பொழுது, கூடை அல்லது
(துணி) பை எடுத்து செல்வோம். இப்பொழுது மிக அரிதாகி விட்டது
இந்த செயல்.
இவைகளை எடுத்து செல்வதே "நாகரீகம் அற்ற" செயலாகி விட்டது.
கடைகளில் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கொடுத்து
விடுகிறார்கள்.
பொருட்கள் வீடு சேர்ந்தவுடன், பைகள் ரோட்டுக்கு சென்று
விடுகிறது. இவற்றை பசித்த மாடுகள்
சாப்பிட அவைகளின் "பின் விளைவுகள்" மிக மோசமாய் இருக்கும்.
சாலை ஓரங்களில் "கலர் பலூன்களாய்" பிளாஸ்டிக் பைகளை
பார்க்கலாம். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு இது
மிக பெரிய ஆபத்தை விளைவிக்க வாய்ப்புகள் அதிகம்.
(வேகமாக செல்லும்பொழுது, இவைகள் நம் கண்ணை மறைத்தால்...)
கடல் வரையிலும் இந்த (குப்)பைகள் செல்வதால், ஆமைகள்,
டால்பின்கள், பென்குயின்கள் போன்றவை இந்த பைகளை
உணவென நினைத்து உண்பதால் இறக்க நேரிடுகின்றன.
பங்களாதேஷில் வெள்ளம் வர இதுவும் ஒரு காரணியாம்.
தெருக்களில் வீசப்படும் பைகள், கழிவு நீர் குழாய்களை அடைத்து
கொள்வதால் மழை காலங்களில் தண்ணீர் வெளியேற வழி
இல்லாது போய் விடுகிறது. எனவே அந்த நாட்டில் இந்த
பைகளின் பயன்பாட்டை தடை செய்து விட்டார்கள்.
பெட்ரோல் விலையை நினைத்தாலே நம் அடி வயிறு பற்றி
எறிய ஆரம்பித்து விடும் காலம் இது.
பிளாஸ்டிக் பைகள், பெட்ரோலிய பொருட்கள் மூலமே தயாரிக்க
படுகிறது!! பெட்ரோல் விலை குறைய வேண்டும் என்று
நினைத்தால், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டையும்
குறைத்து விடுங்கள்.
இவைகளை எரித்தால் Toxic கலந்த புகை உண்டாவதனால்
காற்று மாசு படுகிறது.
இது மண்ணோடு மண்ணாக மக்கி போவதற்கு ஆயிரம்
வருடங்கள் ஆகுமாம்!!
எனவே இதனை தவிர்த்தல் நலம்.
இது ஒரு சிறிய நினைவூட்டல் மட்டுமே.

40 comments:
சரியா சொன்னீங்க சை கொ ப.. சரியான சமயத்திலும்... இப்போ சாப்பாடு எல்லாம் வேறு ப்ளாஸ்டிக் பார்சல்தான்..ப்ளாஸ்டிக் நாற்றத்தோடு சாப்பிட வேண்டி இருக்கு..
arumai nanbaa avasiyamaana padhivu.
மக்கள் எல்லாத்துலயும் வேகத்த விரும்புறாங்க , மற்ற எல்லா இடங்களிலும் கூட பிளாஸ்டிக் தவிர்த்திடலாம் ஆனால் ஹோடேலில்? கொஞ்சம் சோம்பல் படாம பழைய மாறி தூக்கு சட்டி எடுக்கணும் ..
எனக்கு அரசின் பிளாஸ்டிக் எதிர்ப்பு தியத்தில் பெரும் முரண் இருபதாக படுகிறது , பிளாஸ்டிக் உற்பத்தியை ,விற்பனையை தடை செய்யமால் உபயோகத்தை தடை செய்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை , உற்பத்தி தடை செய்தலே தானாக வேறு வழி பிறக்கும் மக்களும் மாற்று வழியை பயன் படுத்துவார்கள் .
இது ஒரு சிறிய நினைவூட்டல் மட்டுமே.
....விழிப்புணர்வு இடுகை கூட.... உண்மைதான், இதனால் விளையும் ஆபத்துக்களையும் விளைவுகளையும் பலர் உணர்வதில்லை.
//பெட்ரோலிய பொருட்கள் மூலமே தயாரிக்க
படுகிறது!! பெட்ரோல் விலை குறைய வேண்டும் என்று
நினைத்தால், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டையும்
குறைத்து விடுங்கள்.//
அப்படியே செஞ்சிருவோம் .....
சொல்லி சொல்லி பார்த்தாச்சு. யாரு கேட்கிறா. பொருள் வாங்க போகும் ஒரு மஞ்சள் துணிப்பை கொண்டு போவதில் என்ன கஷ்டம் இருக்கு.
துணிப்பை உபயோகம் வரவேண்டும். கடைக்காரர்கள் முன்வந்து ,பாலித்தீன் பை பயன்பாட்டை தடுக்க வேண்டும் ,அல்லது குறைக்கவாவது செய்ய் வேண்டும். நல்ல இடுகை.பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
விழிப்புணர்வூட்டும் இடுகை. நம் மக்கள் எதையுமே முறையாக பயன்படுத்துவதில்லை. எல்லாவற்றிலும் அலட்சியம். இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நாமே காரணம்.
@தேனம்மை லெக்ஷ்மணன்
அதோடு ரசாயன பொருட்களும் சேர்ந்து உள்ளே செல்கிறது :(
நன்றி அக்கா.
@சசிகுமார்
நன்றி சசி.
@dr suneel krishnan
விரிவான கருத்துரைக்கு நன்றி டாக்டர்.
@Chitra
உண்மைதான் சித்ரா.
@ப்ரின்ஸ்
மகிழ்ச்சி நண்பா!!
@தமிழ் உதயம்
சொல்லி கொண்டே இருப்போம் :))
நன்றி நண்பரே.
@மதுரை சரவணன்
நல்ல யோசனைதான்!! நன்றி சரவணன்.
@சிநேகிதன் அக்பர்
சரியாக சொன்னீர்கள். ரமலான் வாழ்த்துக்கள் அக்பர்.
நல்ல நேரத்தில் பயனுள்ள பதிவு. எல்லா பதிவர்களுமே ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது இதை நினைவூட்டி பதிவுகள் போட வேண்டும் என்று தோன்றுகிறது. மதுரையில் பிளாஸ்டிக் பைகள் இல்லாமல் பாத்திரம் எடுத்துக் கொண்டு கறி வாங்க வரும் அன்பர்களுக்கு இரண்டு முட்டை இலவசம் என்று ஒரு வியாபாரி செய்கிறாராம். அவரால் முடிந்த தொண்டு இயற்கைக்கு.. பாராட்டுக்கள் .
@ஸ்ரீராம்
இப்படியும் ஒரு வியாபாரியா!! மகிழ்ச்சி!!
தகவலுக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா.
நல்ல விஷயம் சை.கொ. பரோட்டா! நன்றி! இதைப்பற்றி நானும் சில மாதங்களுக்கு முன் எழுதினேன்..தற்சமயம் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை..விசாரிக்க வேண்டும்!
http://arumaiyanaerumai.blogspot.com/2009/12/blog-post_30.html
@அருமையான எருமை
தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே.
மேலை நாடுகளிலிருந்து இந்தப் பழக்கங்களையெல்லாம் பிடித்துக் கொள்கிறோம். விடுபட வருடக்கணக்கில் ஆகும். இந்தியாவில் ப்லேஸ்டிக் உபயோகத்தைக் குறைக்க சட்டம் போட்டிருக்கிறார்களாமே? (பலே!)
விழிப்புணர்வை தூண்டும் நல்ல பதிவு.... வாழ்க..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
@அப்பாதுரை
கருத்துக்கு நன்றி அப்பாதுரை.
@RVS
நன்றி ஆர்.வி.எஸ்.
நல்ல அறிவுறுத்தல் நண்பா :) நன்றி :)
@இராமசாமி கண்ணண்
இது நினைவூட்டல் :)) நன்றி ராம்.
இது சிறிய நினைவூட்டல் அல்ல என்றும் நினைவில் வைத்திருக்க கூடிய ஒன்று நல்ல ஒரு விழிப்புணர்வு இடுகை நண்பா வாழ்த்துக்கள்
@r.v.saravanan
வாங்க சரவணன்,மிக்க மகிழ்ச்சி!!
நல்ல பதிவு..சை.கொ.ப.
நல்ல தகவல்கள். இன்று தேடுதலில் தங்களின் அறிமுகம் கிடைத்தது.
சமூக அக்கறையுள்ள நல்ல பதிவு.
@ராஜா
மகிழ்ச்சி, நன்றி ராஜா.
@Dr.எம்.கே.முருகானந்தன்
வாங்க டாக்டர், கருத்துக்கு நன்றி.
நல்ல பயனுள்ள பதிவு! நன்றி!
வாழ்க வளமுடன்!!
மிகச்சரியான எல்லோருக்கும் சென்றடைய வேண்டிய நினைவூட்டல்,
கண்டிப்பாக பலரை சென்றடையும்
சை.கொ.ப, உங்கள் பணி சம்பந்தமா எனக்கு ஒரு கேள்வி, இல்லை டவுட் கிளியர் பண்ணுங்க
புதிதாக வீடு கட்டி 9 வருடம் ஆகிறது ஒரு இடத்தில். நோன்பில் திடீரென சமையலரை மட்டும் டைல்ஸ், பட் பட் என வெடித்துவிட்டதாம்.
இது ஏன் தரை பூசும் போது சிமெண்ட் சரியாக கலககததாலா?
இல்லை வீடு துடைக்க பயன் படுத்தும் லைசால், ஹார்பிக்காளா?
இல்லை அதிக மாக அங்கு வைத்து சமைத்ததாலா??
@Mohan
நன்றி மோகன்.
@Jaleela Kamal
நன்றி அக்கா.
@Jaleela Kamal
உங்கள் கேள்விக்கு எனக்கு தெரிந்த வரையில் இரண்டு விதமான பதில்
கொடுத்துள்ளேன்.
1.டைல்ஸ் இடைவெளிகள் சரியாக கிரௌட் செய்யப்படாவிட்டால் கிராக் விழ நிறய வாய்ப்பு
உள்ளது. (அதாவது டைல்சின் அடிப்பாகத்தில் போதிய அளவு கலவை செலுத்தப்படவில்லை
என்பது இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அப்படி இருந்தால் நாம் டைல்சின் மேல் பாகத்தை
தட்டினால் அதன் ஒலி, மாறுபட்டு இருக்கும்.)
2.டைல்ஸ் போடப்பட்டுள்ள தளத்தில் (கான்க்ரீட் அல்லது சிமெண்ட் தளம்) கிராக்ஸ் இருந்தாலும்
டைல்ஸ் உடையும்.
நன்றி.
சரியான நினைவூட்டல்தான்!
ஒரு செட்-புரோட்டா பார்சல்!
(பிளாஸ்டிக் வேணாம்!)
:)
அவசியமான பதிவு.
எல்லாருக்கும் தெரிஞ்சது தான். ஆனா,
இந்த மாதிரி அடிக்கடி நியாபகப் படுத்திக்கிட்டே இருக்கிறது அவசியம்.
நன்றி சை.கொ.ப.
@அண்ணாமலை..!!
சாருக்கு பரோட்டா பார்சல்!!!!
நன்றி அண்ணாமலை.
@ராதை/Radhai
கருத்துக்கு நன்றி ராதை.
எல்லாருக்குமே இது தெரிஞ்ச விசயம் தான். ஆனாலும் யாரும் கண்டுகொள்வதில்லை..
என்ன பண்றது அண்ணாத்தை..
நினைவூட்டும் பதிவு அவசியமானதே.
@இந்திரா
கருத்துக்கு டாங்க்ஸ் தங்கச்சி.
@மாதேவி
வாங்க மாதேவி!! நீண்ட இடைவெளிக்கு பின் வந்துள்ளீர்கள் மகிழ்ச்சி,நன்றி.
நன்றி
மிக மிக அவசியமான பதிவு.
பகிர்வுக்கு நன்றி.
@Jaleela Kamal
படித்து விட்டீர்களா!! நன்றி அக்கா.
@அன்பரசன்
கருத்துக்கு நன்றி அன்பரசன்.
அருமையான பதிவுங்க.. இங்கயும், கடைகளில்... திரும்ப உபயோகிக்கும் வகையில் உள்ளவாறு இருக்கற துணி பைகளை அறிமுகப் படுத்தியிருக்காங்க.. உண்மையில், சிந்தித்து, செயல்பட வேண்டிய விஷயம் சொல்லி இருக்கீங்க.. பகிர்வுக்கு நன்றி.. :-))
@Ananthi
கருத்து பகிர்வுக்கு நன்றி ஆனந்தி.
Post a Comment