Wednesday, September 22, 2010

எக்ஸின் அழைப்பு 1

இந்த ஒரு மணி நேர பேருந்துப்பயணம் எனக்கு ரொம்ப பிடிக்கும், கிண்டலாய் பேசிக்கொள்ளும் கல்லூரி இளசுகள், பவ்யமான பள்ளி சிறுசுகள்,
ஒரு இன்ச் பவுடர் கோட்டிங்கில் நீரோடை போல வியர்வையுடன் பயணிக்கும் ஆண்ட்டிகள் என
மனிதர்களை பார்த்து கொண்டே இருந்தால் நேரம் போவதே தெரியாது.

உன் போன்லதான் ரிங் அடிக்குதும்மா, என் பக்கத்தில் இருந்த ஆண்டி சொன்னபின்தான்
சுய நினைவு வந்தவளாய் ஹான்ட் பேக்கை திறந்து யார் அழைப்பது எனப்பார்த்தேன்.
புதிரான புதிய நம்பர்(+85 ****), யாராக இருக்கும் என யோசித்தவாறே ஹலோ என்றேன்.

டேய் பாபு, நான் விஷ்வா பேசறேன்டா நல்லா இருக்கியா மச்சான் என எதிர்முனையில் எவனோ
பேசினான்.

ஹலோ நான் பாபு இல்லீங்க, ராங் நம்பர் என்றேன்.

ஓ....சாரி...மேம்..என்று அவன் சொல்ல தொடர்பை துண்டித்தேன்.

மதியம் இரண்டு மணி அளவில், தூக்கம் கண்ணை செருக மிகவும் சிரமப்பட்டு லெட்ஜரை
முறைத்து கொண்டிருந்தேன். போன் அழைத்தது, தூக்க கலக்கத்தில்
ஹலோ என்றேன்.

மச்சான், என்னடா ஆச்சு, காலையில் இருந்து உன் நம்பருக்கு
ட்ரை பண்றேன், எவளோ ஒருத்தி பேசுறா...

ஹலோ, இப்பவும் அந்த "எவளோ ஒருத்திகிட்டதான்" பேசிகிட்டு இருக்கீங்க.

சா...ரி... மேம்...

ஹலோ சார் நீங்க எந்த நம்பருக்கு ட்ரை பண்றீங்க,

சொன்னான், ஒரு நம்பர் வித்தியாசம்!! என் நம்பர் 6-ல முடியுது சார், நீங்க கூப்பிட வேண்டிய நம்பர் 9 பின்ன எப்படி "கரெக்டா" நம்பர் மாத்தி கூப்பிடுறீங்க.

அதான் மேம், எனக்கு புரியல...

ஹலோ நக்கலா... இன்னோர்தடவை கால் பண்ணீங்கன்னாமரியாதை கெட்டிரும் என
சொல்லிவிட்டு லைனை கட் செய்தேன். அவன் நம்பரை "எக்ஸ்" எனப்போட்டு வைத்தேன்.

Picture:Thanks tradebitcom

சில்லென காற்று வீசும் இரவு, தூக்கம் வராமல் ஹாஸ்டல் மொட்டை
மாடியில் உலாத்தி கொண்டிருந்தேன். என் ரூம்மெட் சுதா
மூச்சிரைக்க ஓடி வந்தாள்.

ஜோதி உனக்கு போன் என்றவாறே சார்ஜரில் போட்டிருந்த என் மொபைலை
கொண்டு வந்தாள்.

யார் இந்த நேரத்தில் என யோசனை செய்தவாறே டிஸ்ப்ளே
பார்த்தேன் "எக்ஸ் காலிங்" என காட்டியது.

அழைப்பு தொடரும்

அழைப்பு 2

27 comments:

எல் கே said...

todar kathaya.. koncham perusa potrukalam thala

Unknown said...

x நிச்சயமாய் .. தெரிந்தவராக மாறப்போகும் சாத்தியம் தெரிகிறது ....

சசிகுமார் said...

யார் அந்த எக்ஸ் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது நண்பா சீக்கிரம்.

RVS said...

எக்ஸ் இப்போது போனில் பேசிக்கொண்டிருக்கும் ஒய்யுடன் எப்போது சேரும் சை.கொ.ப

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஸ்ரீராம். said...

என்னமோ விஷயம் இருக்கும் ...அது ரைட் கால் தான் போல...! தொடர்கதையா.. கலக்குங்க.

ஹுஸைனம்மா said...

ம்ம்.. தொடருங்க..

ஜெய்லானி said...

ஹா...ஹா... இதே மாதிரி எனக்கு நடந்த கதையும் இருக்கு...

Ahamed irshad said...

நண்பா இப்படி எல்லாம் நகம் கடிக்க வைக்கப்புடாது என்ன..சஸ்பென்ஸ் தாங்கல..சீக்கிரம்..

சைவகொத்துப்பரோட்டா said...

@LK
ஓ.கே பாஸ்!! பார்ட் -2 சற்றே விரிவாக எழுதுகிறேன்.

@கே.ஆர்.பி.செந்தில்
வாங்க பாஸ்!!

@சசிகுமார்
அப்படியா!! அடுத்த பாகத்தில் வருவார், சசி.

@RVS
வரும் பாகங்களில் பார்ப்போம் RVS சார்.

@ஸ்ரீராம்.
நன்றி அண்ணா.

@ஹுஸைனம்மா
தொடர்கிறேன்!! நன்றி ஹுஸைனம்மா.

@ஜெய்லானி
அப்படியா!! நேரம் கிடைக்கும்போது அந்த கதையை எழுதுங்களேன்!!

@அஹமது இர்ஷாத்
வரும் பாகங்களில் சொல்கிறேன்
இர்ஷாத்.

க ரா said...

தொடரா.. கலக்குங்க...

தமிழ் உதயம் said...

தொடருங்கள். சஸ்பென்ஸ் வேண்டாம்.

சைவகொத்துப்பரோட்டா said...

@இராமசாமி கண்ணண்
தொடர் ஊக்கத்திற்கு நன்றி ராம்.

@தமிழ் உதயம்
அப்படியா!! சரி நண்பரே.

Chitra said...

நல்ல தொடர் கதை. "X"actly!!!

நாடோடி said...

தொட‌ருங்க‌ள் சை.கொ.ப‌ .. நானும் தொட‌ர்கிறேன்..

Unknown said...

கதை அருமையாக இருக்கு... அடுத்த பதிவை படிக்க ஆவலாக இருக்கேன்

சைவகொத்துப்பரோட்டா said...

@Chitra
வாங்க கமென்ட் க்வீன் :))

@நாடோடி
நன்றி ஸ்டீபன்.

@சிநேகிதி
நன்றி சிநேகிதி.

r.v.saravanan said...

சஸ்பென்ஸ் தாங்கல.
தொடருங்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

@r.v.saravanan
ரைட்டு, தொடர்கிறேன் சரவணன்.

thiyaa said...

கதை அருமை

Anonymous said...

அட.. சஸ்பென்ஸ் ஆரம்பிச்சிடுச்சா..

அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க அண்ணாத்தை..

சைவகொத்துப்பரோட்டா said...

@தியாவின் பேனா
நன்றி நண்பா.

@இந்திரா
ரைட்டு தங்கச்சி.

Dhanalakshmi said...

நடத்துங்க... சீக்கிரமே நட்பாயிடுங்கப்பா....

சைவகொத்துப்பரோட்டா said...

@gunalakshmi
ரைட்டு...சேர்த்து வச்சுறலாம் :))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. ரெண்டாம் பாகம் படிச்சிட்டு இங்க வந்தேன்..
எனக்கு குழப்பம் ஆகி போச்சே..
எச்சூச்மி... எனக்கு ஒரு சுமால் டவுட்....
ரெண்டு பார்ட்-ல வர விஷ்வா வும் ஒரே விஷ்வா...தானே...

சொல்லுங்க.. பாஸ் ஆய்ட்டேனா??
நல்லா இருக்குதுங்க.. :-)))

மாதேவி said...

தொடருங்கள்....ஆவலுடன்.

சைவகொத்துப்பரோட்டா said...

@Ananthi
நன்றி ஆனந்தி :))

@மாதேவி
தொடர்கிறேன் மகிழ்ச்சியுடன் :))

சைவகொத்துப்பரோட்டா said...

@V.Radhakrishnan
நன்றி நண்பரே.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)