Friday, August 27, 2010

சீட்

பஸ் நிற்பதற்குள் பாதி ஆட்கள் உள்ளே ஏறிவிட வழக்கம்போல்
கைக்குட்டை வீசி எனக்கான "சீட்டை" பிடித்த பின்புதான் நிம்மதியாக
இருந்தது.

மூவர் உட்காரும் சீட்டில் நானும் இன்னோர் நபர் மட்டும் இருக்க, மிக வசதியாக சாய்ந்து கொண்டு பாக்கெட் நாவலில் மூழ்க
ஆரம்பித்தேன். பஸ் குலுங்கலுடன் ஒரு நிறுத்தத்தில் நிற்க 50 வயது
மதிக்கத்தக்க "மஞ்சள்பை" பெரியவர் ஒருவர் ஏறிய பின்பு பஸ் கிளம்பியது.

உட்கார இடம் தேடி அவர் கண்கள் அலை பாய்ந்து என் சீட் பக்கம்
நங்கூரம் இட, நான் சட்டென தூங்குவது போல் பாசாங்கு செய்ய
ஆரம்பித்தேன்.


மோட்டல் ஒன்றில் பஸ் நிற்க, இனிப்பு கலந்த "சுடு தண்ணி"
குடித்து விட்டு சற்றே வேடிக்கை பார்த்ததில் நான் வந்த பஸ்
கிளம்பியதை தாமதமாக கவனித்துவிட்டு, அவசரமாக ஓடும்
பஸ்சில் ஏறியது வரைதான் நினைவிரு..........

பயப்படாதீங்க தம்பி, உங்களுக்கு ஒன்னும் ஆகல, அடி பட்டதுல நிறய இரத்தம் இழப்பாகிருச்சு, உங்க ரத்த வகை
எங்ககிட்ட ஸ்டாக் இல்லாம தவிச்சப்ப, இதோ இவங்கதான் இரத்தம் கொடுத்தாங்க, என டாக்டர் காட்டிய நபர் அதே "மஞ்சள்பை"

54 comments:

எல் கே said...

i think u came back ? welcome back.. nice story

சசிகுமார் said...

என்ன தலைவா இதோ போயிட்டு ஒரு மாசத்துல வரேன்னு சொல்லிட்டு இவ்ளோ நாள் கடைய மூடிட்டு நல்லா ஊரு சுத்துனீங்க போல, நாங்கெல்லாம் பரோட்டா சாப்பிட்டே ரொம்ப நாள் ஆச்சி இன்னைக்காவது கடைய திறந்து இருக்கீங்களே இனிமே பரோட்டா தொடர்ந்து கிடைக்குமா

சசிகுமார் said...

நண்பா இந்த பதிவு தங்களுக்கு நிகழ்ந்ததா

க ரா said...

சூப்பரப்பு.. திரும்பி வந்தாச்சா.. தொடர்ந்து கலக்குங்க :)

சைவகொத்துப்பரோட்டா said...

@LK
வரவேற்பிற்கும், கருத்துக்கும் நன்றி LK.


@சசிகுமார்
கண்டிப்பா புரோட்டா கிடைக்கும் நண்பா :))
"இது கற்பனை மட்டுமே"



@இராமசாமி கண்ணண்
உற்சாகம் கொடுப்பதற்கு நன்றி ராம்.

அன்புடன் நான் said...

கதை நல்லாயிருக்கு.... அதுக்கு ஏன் விமானத்த படம் போட்டிருக்கிங்க?
தலைப்பில் தமிழ் இருக்கட்டுமே... இருக்கை என்று!

கதைக்கு என் பாராட்டுக்கள்.

Mohan said...

வருக....வருக...இவ்வளவு நாள் எங்கே போய் இருந்தீர்கள்?
வாழ்க வளமுடன்!

Riyas said...

கதை நல்லாயிருக்குங்க..

பின்னோக்கி said...

குமுதம் ஒரு பக்க கதை மாதிரி நல்லாயிருக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

@சி. கருணாகரசு
இனி,குறைகள் களையப்படும். மிக்க நன்றி கருணாகரசு.


@Mohan
விடுமுறையில் இருந்தேன், வாழ்த்துக்கு நன்றி மோகன்.

@Riyas
நன்றி ரியாஸ்.


@பின்னோக்கி
மிக்க நன்றி பின்னோக்கி சார்.

prince said...

Welcome Back!...

VISA said...

Welcome back!!!

RAJA RAJA RAJAN said...

நல்லாத் தான் இருக்கு...

DREAMER said...

Welcome Back..!

நீங்களும் என்னை மாதிரி நீண்ட நாளுக்கு பிறகு பதிவுலகுக்கு திரும்பியிருக்கீங்க... வாழ்த்துக்கள்..!

ஒரு பக்க கதை அருமை...

இனி பரோட்டா நிறைய கிடைக்கும்தானே..?

-
DREAMER

ப்ரியமுடன் வசந்த் said...

good ..!

vasu balaji said...

short and sweet

r.v.saravanan said...

வாங்க வாங்க தங்கள் வரவு நல்வரவாகுக
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க வாழ்த்துக்கள்

கற்பனை என்றாலும் நிஜம் போன்றதொரு உணர்வு

r.v.saravanan said...

என்னது விடுமுறையில் இருந்தீர்களா
இனி தினமும் ஒரு இடுகை தர வேண்டும் இது என் அன்பு கட்டளை

Chitra said...

WELCOME BACK!!!!!!

மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி...... கலக்குங்க!

ஜில்தண்ணி said...

வாங்க வாங்க சை.கொ.ப

நீங்க இல்லாம சரியான பரோட்டாவை சுவைக்க முடியல

இனி தினம் தினம் பரோட்டாதான் :)

ஹைக்கூ சிறுகதைகளின் ஆழத்தை தொட்டு விட்டீர்கள் அருமை :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

கதை மனதை கனக்க வைத்துவிட்டது சைவகொத்துப்பரோட்டா..

நல்ல கதை.. ஊருக்குபோயிட்டு வந்தாச்சா.. ஊரில் எல்லோரும் நல்லாருக்காங்களா.. ஊர் நிலவரம் எப்படி இருக்கு..

ஜெய்லானி said...

WELCOME BACK!!!!!! ....WELCOME BACK!!!!!! ..WELCOME BACK!!!!!!

ஜெய்லானி said...

WELCOME BACK!!!!!! ....WELCOME BACK!!!!!! ..WELCOME BACK!!!!!!

சைவகொத்துப்பரோட்டா said...

@ப்ரின்ஸ்
நன்றி நண்பா.

@VISA
நன்றி விசா.

@ராஜ ராஜ ராஜன்
நன்றி மகாராஜா :))

@DREAMER
நிச்சயம் கிடைக்கும் ஹரீஷ் :))

@ப்ரியமுடன் வசந்த்
நன்றி வசந்த்.

@வானம்பாடிகள்
நன்றி அய்யா.

@r.v.saravanan
மகிழ்ச்சி சரவணன் :))

@Chitra
ஊக்கத்திற்கு நன்றி சித்ரா.

@ஜில்தண்ணி - யோகேஷ்
நன்றி யோகேஷ்.

@Starjan ( ஸ்டார்ஜன் )
அனைவரும் நலம் நண்பா, விலைவாசிதான் ஏறு முகமாக இருக்கு :))

@ஜெய்லானி
நன்றிகள் ஜெய்லானி :))

ஸ்ரீராம். said...

சின்னஞ்சிறு கதையில் பெரிய விஷயம்...

ஒரு மாதம் என்றால் தொண்ணூறு நாள் என்று மாற்றி விட்டார்களா என்ன..?!!

சைவகொத்துப்பரோட்டா said...

@ஸ்ரீராம்
சில தவிர்க்க முடியாத காரணிகளால் 90 நாட்கள் ஆகி விட்டது :))

நாடோடி said...

வாங்க‌ சைவ‌கொத்துப்ப‌ரோட்டா.... வ‌ந்து க‌ல‌க்குங்க‌.. :)

rajasundararajan said...

சி. கருணாகரசு said...
கதை நல்லாயிருக்கு.... தலைப்பில் தமிழ் இருக்கட்டுமே... 'இருக்கை' என்று!

வழிமொழிகிறேன், தமிழ் வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல. 'சீட்' எனக்குக் குண்டியை நினைவுக்குள் இழுக்கிறது, ஆனால் 'இருக்கை' அந்த நாட்டுபுறத்து மனிதரிடம் இருக்கிறதோர் இருப்பையும் குறிக்கிறது. பிறகும் அவருக்கு - அவர் குணத்துக்கு - முக்கியத்துவம் வருவதால், நாட்டுமொழியில் அமைவதே சிறப்பு.

சைவகொத்துப்பரோட்டா said...

@நாடோடி
நன்றி ஸ்டீபன்.

@rajasundararajan
தங்களின் கருத்துக்கு நன்றி, இனி வரும் காலங்களில் இந்த
குறைகளை நிவர்த்தி செய்து விடுகிறேன்.

priyamudanprabu said...

கதை நல்லாயிருக்கு....

RVS said...

பரோட்டா நல்ல ருசியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.
http://mannairvs.blogspot.com

a said...

பரோட்டா நல்லா இருக்கு..........

Anandkrish said...

good one

பத்மா said...

எங்க ரொம்ப நாளா காணும்?
welcome back

சைவகொத்துப்பரோட்டா said...

@பிரியமுடன் பிரபு
நன்றி பிரபு.

@RVS
நன்றி RVS.

@வழிப்போக்கன் - யோகேஷ்
அப்போ இன்னோர் பரோட்டா போடலாமா யோகேஷ் :))

@Anandkrish
நன்றி ஆனந்த்.

@பத்மா
நீண்ட விடுமுறை :))
நன்றி பத்மா.

Ahamed irshad said...

Welcome Back..

ஹுஸைனம்மா said...

வருக.

சைவகொத்துப்பரோட்டா said...

@அஹமது இர்ஷாத்
நன்றி இர்ஷாத்.

@ஹுஸைனம்மா
நன்றி ஹுஸைனம்மா.

Anonymous said...

நல்ல பரோட்டா,,,,, சாரி.. சிறுகதை :)

சைவகொத்துப்பரோட்டா said...

@ராதை
நன்றி ராதை.

ஆர்வா said...

என்ன பரோட்டாக்கடைக்கு கொஞ்ச நாள் லீவ் விட்டுட்டீங்களா?

சைவகொத்துப்பரோட்டா said...

@கவிதை காதலன்
இப்போ கடை திறந்தாச்சு நண்பரே!!

Thenammai Lakshmanan said...

முதல் பரோட்டாவே செம்ம கொத்து பரோட்டாவா இருக்கே சை கொ ப

Anonymous said...

வந்துட்டீங்களா அண்ணாத்தை???

இது தான் ஒரு மாசத்துல வர்ர லட்சணமா???

சைவகொத்துப்பரோட்டா said...

@தேனம்மை லெக்ஷ்மணன்
மகிழ்ச்சி!! நன்றி அக்கா.

@இந்திரா
வாங்க தங்கச்சி, ஒரு மாதம் என்றால் 90 நாள்தானே :))

vasan said...

தூர‌ப்ப‌ய‌ண‌த்தின் போது சீட்டுக்காக‌ சில‌ சீட்டிங் நியாய‌ம் தான்.
விப‌த்தில் ச‌க‌ப‌ய‌ணிக‌ள் உத‌வுவ‌தும், அது போல‌த்தான்.

சைவகொத்துப்பரோட்டா said...

@vasan
தங்கள் கருத்துக்கு நன்றி வாசன்.

கே. பி. ஜனா... said...

நல்லாயிருக்கு!

சைவகொத்துப்பரோட்டா said...

@K.B.JANARTHANAN
நன்றி ஜனா.

Unknown said...

கலக்குறீங்க...

சைவகொத்துப்பரோட்டா said...

@கலாநேசன்
நன்றி கலாநேசன்.

DR said...

இன்னாதி இதி...

சைவகொத்துப்பரோட்டா said...

@தனுசுராசி
தீனிக்கு பேரு கத :))

Jaleela Kamal said...

பரோட்டா கதை நல்ல இருக்கு.
வாஙக் நீங்க வந்தாச்சு நான் இப்பதான் உங்கள் பதிவுக்கு வ்ந்தென்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)