Saturday, February 27, 2010

பப்பாளியும், கணக்கு வாத்தியாரும் - பதின்ம வயது தொடர் பதிவு


பதின்ம கால நினைவுகளை "கிளறி" பார்க்கும் இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த நண்பர்
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நிறைய இனிமையான விசயங்கள் இருந்தாலும், உங்களுடன் இரண்டு விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன். (அது சரி பிளேடுன்னா ரெண்டு பக்கமும் பதம் பார்க்குமுல்ல)

எங்கள் வீட்டில் பப்பாளி மரம் இருந்தது, அதனால் தங்கு தடையின்றி நிறைய பழங்கள் சாபிட்டதன் பலன் ஒரு கட்டத்தில் பப்பாளி என்று யாராவது சொன்னாலே காத தூரம் ஓடும் அளவுக்கு வெறுப்பு வந்து விட்டது.

இதே பழத்தை, சாப்பிடாமலே, பத்து ரூபாய் தண்டம் அழுத கதைதான்
இப்போ நான் சொல்லபோறது.

நான் படித்தது, ஆங்கிலோ இந்தியன் பள்ளியில்....
இருந்து 15 கி.மீ. தள்ளி இருந்த அரசு மேல் நிலைப்பள்ளியில்.
அங்கு நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்பொழுது மைசூர், பெங்களூர், கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு, பள்ளி மூலம் சுற்றுலா சென்றோம். "எங்கள் ஆசான்" ஒருவர், ஒய்வு எடுப்பதற்காக நீர் நிலைகளின் அருகே பேருந்து நிற்கும் போதெல்லாம் வருதோ, வரலியோ எல்லோரும் போய் "உக்காந்து முயற்சி" பண்ணிட்டு வாங்க, என்று சொன்ன போதெல்லாம்
வராதது, மைசூர் பிருந்தாவனம் சென்ற பின் வந்தது.

நானும் என் இரண்டு நண்பர்களும், இடத்தை தேடி அலைந்து, கடைசியில் இடுப்பளவு முள் வேலி கொண்ட ஒரு இடத்தினை காட்டி அங்கு "போகலாம்" என நண்பன் சொல்ல, வேலியை தாண்டி
நகத்தை கூட செலுத்த விரும்பாத நான் வேண்டாம் என கூறியும்,
அவர்களின் வற்புறுத்தலாலும், "உந்துதலாலும்" வேலி தாண்டி
சென்று "முடித்து" விட்டு, வெளியாகும் முன்பு,
தடியான இரு ஆசாமிகள் எங்களை பிடித்து கொண்டனர்.

அது ஒரு பப்பாளி தோட்டம், இது வரை காணாமல் போன பப்பாளிகள் எல்லாம் நாங்கள் திருடியதாகவும், இப்பொழுது எடுத்ததை எங்கே வைத்து இருக்கிறீர்கள் எனவும் மிரட்ட
ஆரபித்து விட்டார்கள்.

பின்னர் நாங்கள் சுற்றுலா வந்த மாணவர்கள் என்றும், தோட்டத்துக்கு "உரம் போட" வந்த விசயத்தையும் விளக்கினோம்.
சரி.. சரி.. 30 ரூபா கொடுங்கள் என எங்களை மிரட்டி, வாங்கியும்
கொண்டார்கள். என்ன கொடும மேம் இது.

************************************

கணக்கு புத்தகத்தை ஒரு பக்கம் வைத்து, வேப்பங்காயை இன்னொரு பக்கம் வைத்தால், இரண்டாவதை எடுத்து கொள்வேன். அவ்வளவு "ஆர்வம்" கணக்கு பாடத்தில்.

இந்த "ஆர்வத்தை" திசை திருப்பியவர், பத்தாம் வகுப்பு கணக்கு வாத்தியார்.

ஒவ்வொரு ஸ்டெப்பையும் மிக பொறுமையாக, நிதானமாக விளக்கி கூறுவார். புரிய வில்லை என்றால், கேளுங்க கண்ணுகளா என்று அன்பாக கூறுவார். இவை அனைத்தும் பள்ளி நேரம் முடிந்து, அவரின் சொந்த டியூஷன் எடுக்கும் நேரத்தில்!! அவருக்கு செலுத்த வேண்டிய தொகை மிக
அதிகமானது.

டியூஷன் செண்டர், பள்ளி வகுப்பறைதான். பள்ளி நேரத்தில் ஏனோ,தானோ என்று வகுப்பு எடுப்பார், ஒரு பயலுக்கும் ஒன்றும் விளங்காது.

அவரிடம் டியூஷன் படிக்காத பயல்களா பார்த்து கேள்வி கேட்பார்,
விடை தெரியாமல் முழித்தால் "வெளுத்து" விடுவார்.

வேற வழி, மறு நாளே அவரின் டியூஷன் வகுப்பில் அந்த பையன்
இருப்பான். என்ன கொடும சார் இது.


டிஸ்கி:
இதெல்லாம் ஒரு மலரும் நினைவுகளான்னு கேட்டீங்கன்னா,
குட்டை நண்பர் ஸ்டார்ஜனுக்கு வைங்க.

பூச்செண்டு!!!! கொடுக்கணும்னு தோணினா இங்க கொடுங்க, ஹி...ஹி...ஹி....

இத்த படிச்சதுக்கு அப்பால யாருக்கெல்லாம் பழைய நினைவுகள்
பீறிட்டு திரும்புதோ, அவங்க அனைவரும் இதை தொடர அன்புடன்
அழைக்கிறேன்.
*********************************************************************

அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

51 comments:

ஸ்ரீராம். said...

பப்பாளித் தோட்டம் = கட்டணக் கழிப்பிடம்..!
மொத்த பதின்ம வயதுக்கும் இரண்டு அனுபவம்தானா? என்ன கொடும சைகொப இது..

Unknown said...

லவ் பீலிங் எதும் இல்ல்யோ

Raju said...

நல்லா எழுதியிருக்கீங்க தல.

Prathap Kumar S. said...

//உக்காந்து முயற்சி" பண்ணிட்டு வாங்க, என்று சொன்ன போதெல்லாம்
வராதது,//

ஏங்க கூப்பிட்ட உடனே வர்றதுக்க அது என்ன நாய்க்குட்டியா? கொடுமை...

பா.ராஜாராம் said...

:-)

நல்லா எழுதி இருக்கீங்க எஸ்.கே.பி!

பூச்செண்டு.

க ரா said...

:) நல்லா எழுதிருகிங்க. எல்லா கணக்கு வாத்திஸும் இப்படித்தானோ ?

Jaleela Kamal said...

//அவரிடம் டியூஷன் படிக்காத பயல்களா பார்த்து கேள்வி கேட்பார்,
விடை தெரியாமல் முழித்தால் "வெளுத்து" விடுவார்.

வேற வழி, மறு நாளே அவரின் டியூஷன் வகுப்பில் அந்த பையன்
இருப்பான். என்ன கொடும சார் இது//

ஆஹா எல்லா இடத்திலும், எல்லா வாத்தியும் இப்படி தானா?

மாதேவி said...

"அவரிடம் டியூஷன் படிக்காத பயல்களா பார்த்து கேள்வி கேட்பார்,"

அதே..

ஓரிருவர் விதிவிலக்காகவும் இருக்கிறார்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நண்பரே அசத்தலா எழுதி இருக்கீங்க. ககபோ...

/// எங்கள் வீட்டில் பப்பாளி மரம் இருந்தது, அதனால் தங்கு தடையின்றி நிறைய பழங்கள் சாபிட்டதன் பலன் ஒரு கட்டத்தில் பப்பாளி என்று யாராவது சொன்னாலே காத தூரம் ஓடும் அளவுக்கு வெறுப்பு வந்து விட்டது.///

///தடியான இரு ஆசாமிகள் எங்களை பிடித்து கொண்டனர். அது ஒரு பப்பாளி தோட்டம், இது வரை காணாமல் போன பப்பாளிகள் எல்லாம் நாங்கள் திருடியதாகவும், இப்பொழுது எடுத்ததை எங்கே வைத்து இருக்கிறீர்கள் எனவும் மிரட்ட ஆரபித்து விட்டார்கள்.///

பப்பாளி ரொம்பத்தான் மிரட்டீருக்கு போல..

ஓஹோ ! இதுனாலதான் பப்பாளிமேல இத்தன வெறுப்பா...

இந்தாங்க பூச்செண்டு.

சைவகொத்துப்பரோட்டா said...

//ஸ்ரீராம். said...
மொத்த பதின்ம வயதுக்கும் இரண்டு அனுபவம்தானா? என்ன கொடும சைகொப இது..//

நிறைய இருக்கு அண்ணா, அனைத்தும் சொன்னால் உங்களுக்கு கொட்டாவி வந்து விடும் :))
நன்றி அண்ணா கருத்துக்கு.



//பேநா மூடி said...
லவ் பீலிங் எதும் இல்ல்யோ//

ஒன்றா...இரண்டா..."இத" சொல்லி "அத" சொல்லாம விட்டு அப்புறம், விடுபட்டவங்க
கோபபட்டா (இவர் பெரிய மன்மதரு அப்படின்னு நீங்க சொல்றது கேட்குது :)) )
நன்றி நண்பரே கருத்துக்கு.

அமுதா கிருஷ்ணா said...

என்ன கணக்கு டீச்சர் அவர்...இப்படியும் சில டீச்சர்கள்...

சைவகொத்துப்பரோட்டா said...

//♠ ராஜு ♠ said...
நல்லா எழுதியிருக்கீங்க தல.//


நன்றி ராஜு, நீங்க எப்ப எழுத போறீங்க.


//நாஞ்சில் பிரதாப் said...
//உக்காந்து முயற்சி" பண்ணிட்டு வாங்க, என்று சொன்ன போதெல்லாம்
வராதது,//

ஏங்க கூப்பிட்ட உடனே வர்றதுக்க அது என்ன நாய்க்குட்டியா? கொடுமை...//

ஹா...ஹா... அதானே என்ன கொடும சார்... நன்றி பிரதாப்.

சைவகொத்துப்பரோட்டா said...

// பா.ராஜாராம் said...
:-)

நல்லா எழுதி இருக்கீங்க எஸ்.கே.பி!

பூச்செண்டு.//


நன்றி பா.ரா. அண்ணா, கொடுங்க பூச்செண்ட, இதோ வாங்கிட்டேன் :)) நன்றி.



// க.இராமசாமி said...
:) நல்லா எழுதிருகிங்க. எல்லா கணக்கு வாத்திஸும் இப்படித்தானோ ?//

வர பின்னூடங்கள் பார்த்தா அப்படிதான் தெரியது ராம், நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

//Jaleela said...
//அவரிடம் டியூஷன் படிக்காத பயல்களா பார்த்து கேள்வி கேட்பார்,
விடை தெரியாமல் முழித்தால் "வெளுத்து" விடுவார்.

வேற வழி, மறு நாளே அவரின் டியூஷன் வகுப்பில் அந்த பையன்
இருப்பான். என்ன கொடும சார் இது//

ஆஹா எல்லா இடத்திலும், எல்லா வாத்தியும் இப்படி தானா?//

அப்படிதான்னு நினைக்கிறேன், நன்றி ஜலீலா அக்கா, தொடர்ந்து உங்கள்
கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்.


// மாதேவி said...
"அவரிடம் டியூஷன் படிக்காத பயல்களா பார்த்து கேள்வி கேட்பார்,"

அதே..

ஓரிருவர் விதிவிலக்காகவும் இருக்கிறார்கள்.//

வாய்ப்பு இருக்கிறது, நன்றி மாதேவி, தொடர்ந்து வாருங்கள்.

மங்குனி அமைச்சர் said...

சார் நீங்க பெரியகுளத்தில் படிச்சிங்களா??

சைவகொத்துப்பரோட்டா said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நண்பரே அசத்தலா எழுதி இருக்கீங்க. ககபோ...

பப்பாளி ரொம்பத்தான் மிரட்டீருக்கு போல..

ஓஹோ ! இதுனாலதான் பப்பாளிமேல இத்தன வெறுப்பா...

இந்தாங்க பூச்செண்டு.//

வாங்க ஸ்டார்ஜன், ரொம்பவே மிரட்டிருச்சி, கொடுங்க பூச்செண்ட, வாங்கிட்டேன்,
நன்றி நண்பரே இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்ததற்கு.


// அமுதா கிருஷ்ணா said...
என்ன கணக்கு டீச்சர் அவர்...இப்படியும் சில டீச்சர்கள்...//

வாங்க டீச்சர் அக்கா, ஆம் சிலர் மட்டும் இப்படி இருக்கிறார்கள், நன்றி உங்கள் கருத்துக்கு,
தொடர்ந்து வாருங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

// மங்குனி அமைச்சர் said...
சார் நீங்க பெரியகுளத்தில் படிச்சிங்களா??//


வாங்க அமைச்சரே, அப்ப பெரிய குளத்திலும் இதே மாதிரிதானா?
நன்றி அமைச்சரே, "சாரை" கட் செய்யுங்கள் அமைச்சரே, இது அரசின் ஆணை :))

தேவன் மாயம் said...

கணக்கு புத்தகத்தை ஒரு பக்கம் வைத்து, வேப்பங்காயை இன்னொரு பக்கம் வைத்தால், இரண்டாவதை எடுத்து கொள்வேன். அவ்வளவு "ஆர்வம்" கணக்கு பாடத்தில்.//

அட!!! உண்மையா!!

தேவன் மாயம் said...

ஒவ்வொரு ஸ்டெப்பையும் மிக பொறுமையாக, நிதானமாக விளக்கி கூறுவார். புரிய வில்லை என்றால், கேளுங்க கண்ணுகளா என்று அன்பாக கூறுவார். இவை அனைத்தும் பள்ளி நேரம் முடிந்து, அவரின் சொந்த டியூஷன் எடுக்கும் நேரத்தில்!! அவருக்கு செலுத்த வேண்டிய தொகை மிக
அதிகமானது./

அதுதானே!! எல்லா வாத்தியாரும் இப்படித்தான் !

தமிழ் உதயம் said...

நல்லா நகைசுவையா எழுதி இருந்தீங்க.

நிலாமதி said...

உங்க நகைச்சுவைபதிவு.....நல்லாய் இருக்குங்க.

சாமக்கோடங்கி said...

கணக்கு மட்டும் இல்ல, அறிவியல் பாட வாத்தியாரும் இப்படி தான் இருந்தார்...

ஐயோ ஞாபகப் படுத்தி எனக்கு வெறி ஏத்தி விட்டுடீங்களே...

நாடோடி said...

நல்ல நகைச்சுவையான நினைவுகள்..இதுக்கு கண்டிப்பா பூச்செண்டு தான்.

Chitra said...

நல்லா நினைவுகளில் கொத்தி, பரோட்டா பண்ணி இருக்கீங்க. :-)

சைவகொத்துப்பரோட்டா said...

// தேவன் மாயம் said...
கணக்கு புத்தகத்தை ஒரு பக்கம் வைத்து......
அட!!! உண்மையா!!//


ஆமாம், அக்மார்க்!! உண்மை மருத்துவரே.


// தேவன் மாயம் said...
ஒவ்வொரு ஸ்டெப்பையும் மிக பொறுமையாக,.....
அதுதானே!! எல்லா வாத்தியாரும் இப்படித்தான் ! //

அவ்வ்.........உங்க வாத்தியாரும் இப்படிதானா.........
நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

// தமிழ் உதயம் said...
நல்லா நகைசுவையா எழுதி இருந்தீங்க.//


அப்படியா, மிக்க நன்றி தமிழ் உதயம், தொடர்ந்து வாருங்கள், நன்றி.


// நிலாமதி said...
உங்க நகைச்சுவைபதிவு.....நல்லாய் இருக்குங்க.//

மிக்க நன்றி நிலாமதி, தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள், நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
கணக்கு மட்டும் இல்ல, அறிவியல் பாட வாத்தியாரும் இப்படி தான் இருந்தார்...

ஐயோ ஞாபகப் படுத்தி எனக்கு வெறி ஏத்தி விட்டுடீங்களே...//


அறிவியலும் இப்படிதானா, வெறி வந்திருச்சா...ரைட்டு....அப்போ அடுத்த தொடர்பதிவு
நீங்க போட்டிருங்க, நன்றி.



// நாடோடி said...
நல்ல நகைச்சுவையான நினைவுகள்..இதுக்கு கண்டிப்பா பூச்செண்டு தான்.//


மிக்க நன்றி, உங்கள் பூச்செண்டை வாங்கி கொண்டேன், நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

//Chitra said...
நல்லா நினைவுகளில் கொத்தி, பரோட்டா பண்ணி இருக்கீங்க. :-)//


பரோட்டா சுவை எப்படி :))
நன்றி சித்ரா உங்கள் கருத்துக்கு.

புலவன் புலிகேசி said...

ஏன் தல முப்பது ரூவா கொடுத்தாப் போறது....அப்புறம் அம்மாதிரி டியூசன் வாத்திகளை நானும் சந்தித்திருக்கிறேன்...

settaikkaran said...

கலக்கலா இருக்குதுண்ணே! படு சுவாரசியம்!! :-)

Jaleela Kamal said...

கண்டிப்பாக முடிந்த போது வருகிறேன்.

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

அந்த ரெண்டாவது விஷயம் எனக்கும் நடந்தது - கணக்கு வாத்தியார்களின் கடுமைதான் கணக்கில் வெறுப்பு வர வைத்தது என்பது என் கருத்து. பப்பாளி கதையில் “முயற்சி செய்தல்” பள்ளி சுற்றுலாவில் எல்லாருக்கும் கிடைக்கும் அனுபவம்..!! ஹா.. ஹா..!!

திவ்யாஹரி said...

//பூச்செண்டு!!!! கொடுக்கணும்னு தோணினா இங்க கொடுங்க, ஹி...ஹி...ஹி....//

இந்தாங்க பூச்செண்டு வாங்கிக்கோங்க சார்.. ரெண்டாவது எனக்கும் நடந்தது..

சைவகொத்துப்பரோட்டா said...

//புலவன் புலிகேசி said...
ஏன் தல முப்பது ரூவா கொடுத்தாப் போறது....அப்புறம் அம்மாதிரி டியூசன் வாத்திகளை நானும் சந்தித்திருக்கிறேன்...//


இந்த டியூஷன் மேட்டர் பல பேர பாதிச்சு இருக்கு போல, நன்றி புலவரே.



// சேட்டைக்காரன் said...
கலக்கலா இருக்குதுண்ணே! படு சுவாரசியம்!! :-)//

அப்படியா, நன்றி சேட்டை :))

சைவகொத்துப்பரோட்டா said...

// Jaleela said...
கண்டிப்பாக முடிந்த போது வருகிறேன்.//


நன்றி அக்கா, கடை உங்கள் அனைவருக்கும் 24 மணி நேரம் திறந்து இருக்கும் :))



// TechShankar @ டெக்‌ஷங்கர் said...
தங்கள் பதிவுக்கு நன்றிகள்..//

நன்றி சங்கர், உங்கள் கருத்துக்கும், சச்சின் பற்றிய சுட்டிக்கும்.

சைவகொத்துப்பரோட்டா said...

// முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...
அந்த ரெண்டாவது விஷயம் எனக்கும் நடந்தது - கணக்கு வாத்தியார்களின் கடுமைதான் கணக்கில் வெறுப்பு வர வைத்தது என்பது என் கருத்து. பப்பாளி கதையில் “முயற்சி செய்தல்” பள்ளி சுற்றுலாவில் எல்லாருக்கும் கிடைக்கும் அனுபவம்..!! ஹா.. ஹா..!! //

வாத்தியார் உங்களையும் பாதித்து விட்டாரா..... மிக்க நன்றி உங்கள் கருத்தை
கூறியதற்கு, தொடர்ந்து வாருங்கள்.




// திவ்யாஹரி said...
//பூச்செண்டு!!!! கொடுக்கணும்னு தோணினா இங்க கொடுங்க, ஹி...ஹி...ஹி....//

இந்தாங்க பூச்செண்டு வாங்கிக்கோங்க சார்.. ரெண்டாவது எனக்கும் நடந்தது..//

வாங்க திவ்யாஹரி, கொஞ்ச நாளா காணோம் :))
பூச்செண்டை பெற்று கொண்டேன், உங்களுக்கும் வாத்தியார் மேட்டர் இருக்கா,
அப்ப நீங்களும் தொடர்பதிவு போடுங்களேன், நன்றி.

DREAMER said...

நண்பா,
முதல் மேட்டர் சூப்பர்... என்னதான் பிருந்தாவனத்துக்கு உரம் போட்டாலும், 15 ரூபா (ஒருத்தருக்கு) ரொம்ப காஸ்ட்லிதான். இருந்தாலும் சம்பவம் சுவாரஸ்யமாயிருக்கு.

-
DREAMER

Thenammai Lakshmanan said...

கணக்கு பண்ணது எல்லாம் எழுதாம கணக்குல வீக்குன்னு மட்டும் எழுதித் தப்பிச்சுட்டிங்களே சை கொ ப

கலகலப்ரியா said...

=)) enna kodumai saaar ithu...

ஈ ரா said...

அப்பமே அதிகம் பரோட்டா சாப்பிட ஆரம்பிச்சுட்டீங்களா?

காசையும் கொடுத்துப்புட்டு சரக்கையும் கொடுத்துட்டீங்களே ....

சைவகொத்துப்பரோட்டா said...

// DREAMER said...
நண்பா,
முதல் மேட்டர் சூப்பர்... என்னதான் பிருந்தாவனத்துக்கு உரம் போட்டாலும், 15 ரூபா (ஒருத்தருக்கு) ரொம்ப காஸ்ட்லிதான். இருந்தாலும் சம்பவம் சுவாரஸ்யமாயிருக்கு.

-
DREAMER //


ஆமா, காஸ்ட்லி "ஆயி"ருச்சு, ஹி....ஹி....
நன்றி ஹரீஷ்.

சைவகொத்துப்பரோட்டா said...

//thenammailakshmanan said...
கணக்கு பண்ணது எல்லாம் எழுதாம கணக்குல வீக்குன்னு மட்டும் எழுதித் தப்பிச்சுட்டிங்களே சை கொ ப //


அக்கா, நான் கொஞ்சம் கூச்ச சுபாவி, அதானால நிஜமாவே கணக்கு பண்ற மேட்டர் இல்லை :))
நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

// கலகலப்ரியா said...
=)) enna kodumai saaar ithu... //


அதானே, அந்த கணக்கு வாத்தியாரை தானே சொல்றீங்க :))
நன்றி பிரியாக்கா.

சைவகொத்துப்பரோட்டா said...

// ஈ ரா said...
அப்பமே அதிகம் பரோட்டா சாப்பிட ஆரம்பிச்சுட்டீங்களா?

காசையும் கொடுத்துப்புட்டு சரக்கையும் கொடுத்துட்டீங்களே ....//


ஹி......ஹி.......ஆமா,
நன்றி ஈ ரா.

Mohan said...

//என்ன கொடும மேம் இது.
//
இதுதான் வித்தியாசமான சிந்தனையோ(!)?

சைவகொத்துப்பரோட்டா said...

// Mohan said...
//என்ன கொடும மேம் இது.
//
இதுதான் வித்தியாசமான சிந்தனையோ(!)?/


என்னை வச்சி காமெடி, கீமெடி பண்ணலையே :))
நன்றி மோகன்.

Raghu said...

"போனா போகுது"ன்னு உர‌ம் போட்டா உங‌ககிட்ட‌யே காசு புடுங்கிட்டாங்க‌ளே:(

எங்க‌ ப‌ள்ளியிலும் இந்த‌ மாதிரி ஆசிரிய‌ர்க‌ள் நிறைய‌ பேர் இருந்தாங்க‌, எங்கேயுமே 95% ஆசிரிய‌ர்க‌ள் இப்ப‌டிதான் இருப்பாங்க‌ போல‌!

சைவகொத்துப்பரோட்டா said...

// ர‌கு said...
"போனா போகுது"ன்னு உர‌ம் போட்டா உங‌ககிட்ட‌யே காசு புடுங்கிட்டாங்க‌ளே:(

எங்க‌ ப‌ள்ளியிலும் இந்த‌ மாதிரி ஆசிரிய‌ர்க‌ள் நிறைய‌ பேர் இருந்தாங்க‌, எங்கேயுமே 95% ஆசிரிய‌ர்க‌ள் இப்ப‌டிதான் இருப்பாங்க‌ போல‌!//

ஆமா ரகு, உரமும் போட்டு, காசும் கொடுத்து வந்தோம்,
நன்றி ரகு.

ஜீவன்சிவம் said...

பதின்ம வயது அனுபவங்கள் என்றவுடன் சேரனின் ஆட்டோகிராப் ஞாபகம் வந்தது...
அந்த மாதிரி ஏதாவது....?

சைவகொத்துப்பரோட்டா said...

// ஜீவன்சிவம் said...
பதின்ம வயது அனுபவங்கள் என்றவுடன் சேரனின் ஆட்டோகிராப் ஞாபகம் வந்தது...
அந்த மாதிரி ஏதாவது....?//


வாங்க ஜீவன்சிவம், அந்த அனுபவம் இல்லை :))

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)