Thursday, February 25, 2010

சாமி

எங்களின் பள்ளி பருவம் முதலே, சாமியை எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் என்னோட பாட்டியும், அம்மாவும் அவன் கூட பழகாதே, அவனுக்கு அந்த தகுதி கிடையாது என்று சொல்லி எங்களின் நட்பு பாலத்தை உடைக்க நிறைய சதி செய்தார்கள்.

ஆனால் என் அப்பா தூணாக தாங்கியதால் உறுதியாக நின்றது எங்கள் நட்பு பாலம்.
அம்மாவும், அவள் அம்மாவும் கறுவி கொண்டுதான் இருந்தனர். அவன் என்னுடன் படித்து கொண்டே எங்கள் வீட்டில் உள்ள (நாலு கால்) மாடுகளை பராமரிக்கும் பணி செய்தான்.

அப்பா வீட்டில் இருந்தால் சாமியிடம், மாதுளை பற்கள் தெரிய அம்மாவும், ஒட்டுப்பல் தெரிய பாட்டியும் பேசுவார்கள். அப்பா இல்லை என்றால் சாமிக்கு "பூஜைதான்." அந்த சமயங்களில் நான்
அவனுக்கு பரிந்து பேசினால் எனக்கும் "மண்டகப்படிதான்"

அவன் வேலை முடித்து புற வாசல் வழியாகத்தான் செல்ல வேண்டும், (வரவும் அதே வழிதான்) ஒரு நாள் வீட்டினுள் படையை நடுங்க செய்யும் பாம்பார் வந்து விட்டார், நம்ம சாமிதான் அவருக்கு இந்த பூலோகத்தில் இருந்து விடுதலை கொடுத்தான்.

சாமி நின்ற இடத்தை, ஒரு புல் பாட்டில் (பினயில்ப்பா!!) போட்டு கழுவினாள் பாட்டி (தீட்டு பட்டு விட்டதாம்)ஒரு முறை அப்பா தொழில் விசயமாக பக்கத்துக்கு ஊருக்கு சென்று திரும்பும் வழியில் ஒரு சிறிய விபத்தில் மாட்டி கொண்டார்.

நிறைய இரத்தம் தேவைப்படுவதாக மருத்துவர் கூற அப்பாவின் ரத்த வகை, எங்கள் குடும்பத்தில்
பாட்டிக்கும், என் தாய் வழி மாமா ஆகிய இருவருக்கு மட்டுமே
இருந்தது.

பாட்டிக்கு "கொழுப்பு அதிகம்" என்பதால் பி.பி, மாமா முந்தைய இரவு, இலவச திட்டத்திற்கு, "நிதி வழங்கி" வந்து இருந்ததால் அவரும் இரத்தம் கொடுக்கும் தகுதியை இழந்து விட,
சாமி விஷயம் கேள்விப்பட்டு பதறியபடி வந்து இரத்தம் கொடுத்தான். (சோதனை செய்ததில் அவனுக்கும், அப்பாவுக்கும் ஒரே இரத்த வகைதான் என்று தெரிந்தது)

அம்மாவும், பாட்டியும் போட்டி போட்டு கொண்டு கடவுளுக்கு நன்றி சொல்ல, நான் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட,

அட கடன்கார, உங்கப்பன் எமனோட போராடி, இப்பதான் தேறி இருக்கான், இந்த நிலமையில உனக்கு எப்படித்தான் சிரிப்பு வருதோ என்றாள் பாட்டி.

இல்ல பாட்டி, அன்னைக்கி, சாமி நடுக்கூடம் வரை வந்ததுக்கே ஒரு பாட்டில் பினையில, காலி செஞ்ச, இப்ப அப்பா உடம்புல ஓடுறது அவன் இரத்தம்தான், அப்படின்னா, அப்பாவ எத்தனை பாட்டில் பினாயில் ஊத்தி குளிப்பாட்ட போறியோன்னு நினைச்சேன், சிரிப்பு
வந்திருச்சு.

***************************************************************

அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

31 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நான் உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடரை தொடர்ந்து எழுதி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வால்பையன் said...

பிரச்சனை வரும்போது நாம் யார் என்றி அறிய வாய்ப்பு அமைக்கிறது!
அப்படியே மற்றவர்களையும்!

அண்ணாமலையான் said...

புரிஞ்சா சரி

ர‌கு said...

//சாமிக்கு "பூஜைதான்//

//பாட்டிக்கு "கொழுப்பு அதிகம்" என்பதால் பி.பி, மாமா முந்தைய இரவு, இலவச திட்டத்திற்கு, "நிதி வழங்கி" வந்து இருந்ததால்//

ர‌சிக்கும்ப‌டி இருந்த‌து, வார்தைக‌ள்ல‌ விளையாடியிருக்கீங்க‌:)

சைவகொத்துப்பரோட்டா said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நான் உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடரை தொடர்ந்து எழுதி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.//மாட்டி வுட்டுடீங்களே அப்பு, ரைட்டு...பிட் அடிச்சாவது எழுதி விடுகிறேன் :))
நன்றி நண்பர் ஸ்டார்ஜன்.
// வால்பையன் said...
பிரச்சனை வரும்போது நாம் யார் என்றி அறிய வாய்ப்பு அமைக்கிறது!
அப்படியே மற்றவர்களையும்!//சரியாக சொன்னீர்கள் தல, கருத்து பகிர்வுக்கு நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

// அண்ணாமலையான் said...
புரிஞ்சா சரி //


நன்றி அண்ணாமலையாரே, மலை போன்ற உங்களின் பின்னூட்ட உற்சாகத்திற்கு :))
ர‌கு said...
//சாமிக்கு "பூஜைதான்//

//பாட்டிக்கு "கொழுப்பு அதிகம்" என்பதால் பி.பி, மாமா முந்தைய இரவு, இலவச திட்டத்திற்கு, "நிதி வழங்கி" வந்து இருந்ததால்//

ர‌சிக்கும்ப‌டி இருந்த‌து, வார்தைக‌ள்ல‌ விளையாடியிருக்கீங்க‌:)மிக்க நன்றி ரகு, உங்கள் கருத்தை கூறியதற்கு.

க.இராமசாமி said...

கலக்குறிங்க. நல்லா இருக்கு கதை.

பிரவின்குமார் said...

ஏதோ சினிமா பார்த்தா மாதிரி இருக்கு நீங்க சொன்ன இந்த சாமி கதை... அப்புறம் இடையில காமெடி வேற... சோ்ந்ததால இன்னும் ஆர்வமாக இருந்தது படிப்பதற்கு..!!
பாரட்டுகள் சார்.

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு உங்க சிந்தனை...

சி. கருணாகரசு said...

வால்பையன் said...
பிரச்சனை வரும்போது நாம் யார் என்றி அறிய வாய்ப்பு அமைக்கிறது!
அப்படியே மற்றவர்களையும்!//

இதையே வழிமொழிகிறேன்..... அப்புறம்... மாமா நிதிவழங்கியதை.... மிக நேர்த்தியா சொல்லியிருக்கிங்க... பாராட்டுக்கள்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

மண்டகப்படிதான் போன்ற பேச்சு வழக்குகளுடன் நல்ல சுவையான பதிவு.

Chitra said...

இல்ல பாட்டி, அன்னைக்கி, சாமி நடுக்கூடம் வரை வந்ததுக்கே ஒரு பாட்டில் பினையில, காலி செஞ்ச, இப்ப அப்பா உடம்புல ஓடுறது அவன் இரத்தம்தான், அப்படின்னா, அப்பாவ எத்தனை பாட்டில் பினாயில் ஊத்தி குளிப்பாட்ட போறியோன்னு நினைச்சேன்,


........சிரிக்க மட்டும் அல்ல, சிந்திக்க வைக்கும் விஷயமும் கூட.

thenammailakshmanan said...

காமெடியிலும் கலக்குறீங்க சைவ கொத்துப்பரோட்டா பாட்டிக்கும் அம்மாவுக்கும் புரிஞ்சுதா

சைவகொத்துப்பரோட்டா said...

// க.இராமசாமி said...
கலக்குறிங்க. நல்லா இருக்கு கதை.//நன்றி ராம், கருத்து
பகிர்வுக்கு.// பிரவின்குமார் said...
ஏதோ சினிமா பார்த்தா மாதிரி இருக்கு நீங்க சொன்ன இந்த சாமி கதை... அப்புறம் இடையில காமெடி வேற... சோ்ந்ததால இன்னும் ஆர்வமாக இருந்தது படிப்பதற்கு..!!
பாரட்டுகள் சார்.//
மிக்க நன்றி பிரவின், சாரா, அப்படியெல்லாம் சொல்லப்படாது :)) நாம் நண்பர்கள்,
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள், நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

// ஸ்ரீராம். said...
நல்லா இருக்கு உங்க சிந்தனை...//
நன்றி அண்ணா.//சி. கருணாகரசு said...
வால்பையன் said...
பிரச்சனை வரும்போது நாம் யார் என்றி அறிய வாய்ப்பு அமைக்கிறது!
அப்படியே மற்றவர்களையும்!//

இதையே வழிமொழிகிறேன்..... அப்புறம்... மாமா நிதிவழங்கியதை.... மிக நேர்த்தியா சொல்லியிருக்கிங்க... பாராட்டுக்கள்.//மிக்க நன்றி நண்பர் கருணாகரசு, தொடர்ந்து வாருங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

// Dr.எம்.கே.முருகானந்தன் said...
மண்டகப்படிதான் போன்ற பேச்சு வழக்குகளுடன் நல்ல சுவையான பதிவு. //
மிக்க நன்றி, மருத்துவர் அவர்களுக்கு.//Chitra said...
இல்ல பாட்டி, அன்னைக்கி, சாமி நடுக்கூடம் வரை வந்ததுக்கே ஒரு பாட்டில் பினையில, காலி செஞ்ச, இப்ப அப்பா உடம்புல ஓடுறது அவன் இரத்தம்தான், அப்படின்னா, அப்பாவ எத்தனை பாட்டில் பினாயில் ஊத்தி குளிப்பாட்ட போறியோன்னு நினைச்சேன்,


........சிரிக்க மட்டும் அல்ல, சிந்திக்க வைக்கும் விஷயமும் கூட.//


மிக்க நன்றி சித்ரா, உங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்கும்.

சைவகொத்துப்பரோட்டா said...

//thenammailakshmanan said...
காமெடியிலும் கலக்குறீங்க சைவ கொத்துப்பரோட்டா பாட்டிக்கும் அம்மாவுக்கும் புரிஞ்சுதா//இந்த அம்மாவுக்கும், பாட்டிக்கும் கண்டிப்பா புரிஞ்சிருக்கும், இவர்களைப்போல் இன்னும் சிலர் இருக்கிறார்களே தேனம்மை அக்கா, மிக்க நன்றி, தங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும்.

புலவன் புலிகேசி said...

இப்படித்தான் பலர் மூட நம்பிக்கையில் திரிகின்றனர்..நல்லக் கருத்து...

சைவகொத்துப்பரோட்டா said...

//புலவன் புலிகேசி said...
இப்படித்தான் பலர் மூட நம்பிக்கையில் திரிகின்றனர்..நல்லக் கருத்து...//


மிக்க நன்றி நண்பரே, உங்கள் கருத்தை கூறியதற்கு.

ஈ ரா said...

ரசிக்கும்படி இருந்தது உங்கள் சொல்லாடல்

சைவகொத்துப்பரோட்டா said...

// ஈ ரா said...
ரசிக்கும்படி இருந்தது உங்கள் சொல்லாடல்//மிக்க நன்றி, ஈ ரா. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்.

மங்குனி அமைச்சர் said...

ஒரு சின்ன கதைல பெரிய மேட்டர் சொல்லிட்ட அதுவும் காமெடியா கிரேட் ஒரு சின்ன கதைல பெரிய மேட்டர் சொல்லிட்ட அதுவும் காமெடியா கிரேட் சைவகொத்துப்பரோட்டா
யப்பா உன் பேர டைப் பன்றதுதான் கஷ்டமா இருக்கு, (ஆனா நான் copy and paste pannitane)

சைவகொத்துப்பரோட்டா said...

// மங்குனி அமைச்சர் said...
ஒரு சின்ன கதைல பெரிய மேட்டர் சொல்லிட்ட அதுவும் காமெடியா கிரேட் ஒரு சின்ன கதைல பெரிய மேட்டர் சொல்லிட்ட அதுவும் காமெடியா கிரேட் சைவகொத்துப்பரோட்டா
யப்பா உன் பேர டைப் பன்றதுதான் கஷ்டமா இருக்கு, (ஆனா நான் copy and paste pannitane)//
மிக்க நன்றி அமைச்சரே, தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

பிரியமுடன்...வசந்த் said...

நல்ல கருத்து பாஸ்...!

சைவகொத்துப்பரோட்டா said...

// பிரியமுடன்...வசந்த் said...
நல்ல கருத்து பாஸ்...! //மிக்க நன்றி வசந்த், உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்.

பேநா மூடி said...

நல்லா தான் இருக்கு..., ஆனா இது பழய மேட்டர் ல

சைவகொத்துப்பரோட்டா said...

// பேநா மூடி said...
நல்லா தான் இருக்கு..., ஆனா இது பழய மேட்டர் ல //வாங்க நண்பரே, பழைய மேட்டரா இருந்தாலும், புதுசு கண்ணா புதுசுன்னு, சொல்ற ரேஞ்சுக்கு
இன்னும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கு. மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.

மயில்ராவணன் said...

இலக்கியவாதியாக வாழ்த்துக்கள்.நல்ல கருத்துள்ள கதை.நல்லாவே சொல்லொயிருக்கீங்க.தொடர்ந்து எழுதுங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

//மயில்ராவணன் said...
இலக்கியவாதியாக வாழ்த்துக்கள்.நல்ல கருத்துள்ள கதை.நல்லாவே சொல்லொயிருக்கீங்க.தொடர்ந்து எழுதுங்கள்.//உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி மயில், ஆனால் இலக்கியவியாதி, வேண்டாம்,
ஹி.....ஹி.... :))

Jaleela said...

நல்ல கருத்தை அழகான முறையில் நகைச்சுவையுடன் பதிந்து இருக்கீங்க அருமை.

(என்ன நீங்க எல்லாம் பதிவுலகில் குழந்தைய அத நாங்க நம்பனுமா?)

சைவகொத்துப்பரோட்டா said...

// Jaleela said...
நல்ல கருத்தை அழகான முறையில் நகைச்சுவையுடன் பதிந்து இருக்கீங்க அருமை.

(என்ன நீங்க எல்லாம் பதிவுலகில் குழந்தைய அத நாங்க நம்பனுமா?)//மிக்க நன்றி அக்கா, ஆமா நான் மூன்று மாத குழந்தை நம்புங்கள் :))

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)