Wednesday, February 10, 2010

அழகிய முரண்

உன்னை கண்டால்
மேககூட்டம் கூட நங்கூரம் இடுகிறது

மயிலும் குயிலும்
உன்னிடம் சரணடைந்து விட்டது

ஆயிரம் கரங்கள் கொண்ட
ஆதவன் கூட உன்னை தீண்ட முடியவில்லை

உன் வனப்பை பார்த்தாலே
என் நகக்கண் வரை குளுமை பாய்கிறது

அபாய வளைவு நெளிவுகளை
தாண்டி உன்னைச்சரணடைந்தேன்

என் எலும்பு வரை ஊடுருவி
புல்லாங்குழல் வாசிக்கிறாய்

இவ்வளவு இளமை கொண்ட
இளவரசியே

ஏனடி எழுச்சியாய் விழும் உன் கூந்தல் மட்டும்
வெண்பஞ்சு நிறமாய்.


*********************************************************

டிஸ்கி:என் காதலி கிழவியோ என்று ராஜுவும், நேபாமூடியும் நினைத்துவிட்டதால் அவளின் படத்தை
(அவள் சம்மதம் இல்லாமலே) கிழே இணைத்துள்ளேன், ஸ்டார்ட் ஸ்க்ரோல்.ஆத்தாடி எம்பூட்டு வேகம்....பொறுமை.......

எப்பூடி.... :))


***********************************************************

அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

42 comments:

♠ ராஜு ♠ said...

நல்லாருக்கு தல..!
அதுவும் அந்த எலும்பு-புல்லாங்குழல் மேட்டர் புடிச்சது..முடி-வெண்பஞ்சு கிழவியா..?
அவ்வ்வ்வ்.

பேநா மூடி said...

ரொம்ப லேட்டா எழுதுன கவிதையோ.....,

சைவகொத்துப்பரோட்டா said...

@ராஜு

//முடி-வெண்பஞ்சு கிழவியா..?
அவ்வ்வ்வ்.//

தல எனக்கு அழுகாச்சியா வருது, என் ஆளு படத்த இப்போ போட்டாச்சு, பாருங்க. நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

@நேபா மூடி

//ரொம்ப லேட்டா எழுதுன கவிதையோ.....,//

ராஜுவுக்கு சொன்னத ரிப்பீட்.... நன்றி தல.

முனைவர்.இரா.குணசீலன் said...

அடடே !
நல்லாருக்கே..
அருமை..

அண்ணாமலையான் said...

கடேசில ட்விஸ்ட் வச்சீங்க பாருங்க அங்கதான் நீங்க நிக்கறீங்க..

Madurai Saravanan said...

armaiyaana kavithai. patam kaatti vilakka vandiya avasiyam illai. irunthaluum athuvum aruputhamaaka irunthathu.ithu asaiva koththupurotta. (pataththai kaattiyathaal )

Toto said...

:) ந‌ல்ல‌ குறும்பு

-Toto

thenammailakshmanan said...

ஹாஹாஹா சைவக்கொத்துப்பரோட்டா இதை ...இதை... நான் எதிர்பார்க்கலை

கலகலப்ரியா said...

ரைட்டு... சூப்பரு.... (படமும் கவிதையும் நிஜம்மாவே வாவ்...)

மயில்ராவணன் said...

//ஏனடி எழுச்சியாய் விழும் உன் கூந்தல் மட்டும்
வெண்பஞ்சு நிறமாய்.//
இங்கதான் ஸ்டூல் போட்டு நிக்கிறீங்க மனசுல..வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

//அடடே !
நல்லாருக்கே..
அருமை..//

அப்படியா, நன்றி முனைவரே.

சைவகொத்துப்பரோட்டா said...

//கடேசில ட்விஸ்ட் வச்சீங்க பாருங்க அங்கதான் நீங்க நிக்கறீங்க..//

நன்றி அண்ணாமலை, தொடர் வருகைக்கும், கருத்துக்கும்.

சைவகொத்துப்பரோட்டா said...

//armaiyaana kavithai. patam kaatti vilakka vandiya avasiyam illai. irunthaluum athuvum aruputhamaaka irunthathu.ithu asaiva koththupurotta. (pataththai kaattiyathaal )//

ஹா..ஹா... நன்றி சரவணன், முதலில் படம் இணைக்கவில்லை, எனக்கே சந்தேகம் வந்துவிட்டது, நாம் புரியும்படி எழுதவில்லையோ என்று, அதனால்தான் படத்தை இணைத்தேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

//:) ந‌ல்ல‌ குறும்பு//

அப்படியா, மகிழ்ச்சி, நன்றி Toto

சைவகொத்துப்பரோட்டா said...

//ஹாஹாஹா சைவக்கொத்துப்பரோட்டா இதை ...இதை... நான் எதிர்பார்க்கலை//

அதுதானே இன்பம், நன்றி தேனம்மை.

சைவகொத்துப்பரோட்டா said...

//ரைட்டு... சூப்பரு.... (படமும் கவிதையும் நிஜம்மாவே வாவ்...)//

நானும் கவிஞன்(!!) ஆயிட்டேனா.... நன்றி ப்ரியாக்கா, படம் கொடுத்த கூகுலாருக்கும் நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

((((( //ஏனடி எழுச்சியாய் விழும் உன் கூந்தல் மட்டும்
வெண்பஞ்சு நிறமாய்.//
இங்கதான் ஸ்டூல் போட்டு நிக்கிறீங்க மனசுல..வாழ்த்துக்கள்.)))))

நிசமாத்தான் சொல்றீகளா.... :)) நன்றி மயில்ராவணன், தொடர்ந்து உங்கள் கருத்துக்களை
கூறுங்கள்.

சி. கருணாகரசு said...

கவிதை குறும்பு அழகு!

சேட்டைக்காரன் said...

அண்ணே, அஞ்சப்பருலே கொத்துப்பரோட்டா சாப்பிட்டா மாதிரியே இருக்குதண்ணே உங்க கவிதை! இதே மாதிரி அடிக்கடி ஒரு பிளேட் கொடுங்கண்ணே

டவுசர் பாண்டி said...

நானு , வென்பஞ்சி நிறம் இன்னு சொன்னதும் , ஊட்டி மலையோ , இல்லா காட்டி காஸ்மீரு மலையோ இன்னு நென்ஜெம்பா, அப்பாலிக்கா பாத்தா , ஆத்தாடி இன்னா மேரி தண்ணி ஊத்துற எடமா கீதே !! ஜுப்பரு அதாங்க சூப்பர் !!

சைவகொத்துப்பரோட்டா said...

//கவிதை குறும்பு அழகு!//

நன்றி சி.கருணாகரசு

சைவகொத்துப்பரோட்டா said...

//அண்ணே, அஞ்சப்பருலே கொத்துப்பரோட்டா சாப்பிட்டா மாதிரியே இருக்குதண்ணே உங்க கவிதை! இதே மாதிரி அடிக்கடி ஒரு பிளேட் கொடுங்கண்ணே//

என்ன வச்சு காமெடி, கீமெடி பண்ணலையே.... :))
கொடுத்திட்டாபோச்சு, நன்றி சேட்டைகாரரே.

சைவகொத்துப்பரோட்டா said...

//நானு , வென்பஞ்சி நிறம் இன்னு சொன்னதும் , ஊட்டி மலையோ , இல்லா காட்டி காஸ்மீரு மலையோ இன்னு நென்ஜெம்பா, அப்பாலிக்கா பாத்தா , ஆத்தாடி இன்னா மேரி தண்ணி ஊத்துற எடமா கீதே !! ஜுப்பரு அதாங்க சூப்பர் !! //

வா தலீவா, டான்க்சுப்பா இம்மாம் தூரம் வந்து பச்சி, கர்த்து சொன்னதுக்கு :))

பின்னோக்கி said...

டிவிஸ்ட் கவிதை நல்லாயிருக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

//டிவிஸ்ட் கவிதை நல்லாயிருக்கு.//

"டிவிஸ்ட் கவிதை", உங்க குறும்பு அழகு, நன்றி பின்னோக்கி.

கமலேஷ் said...

///என் எலும்பு வரை ஊடுருவி
புல்லாங்குழல் வாசிக்கிறாய்///

அழகான வரி...வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

சைவகொத்துப்பரோட்டா said...

//அழகான வரி...வாழ்த்துக்கள்...தொடருங்கள்..//

நன்றி கமலேஷ், வருகைக்கும், கருத்துக்கும்.

புலவன் புலிகேசி said...

நான் கூட எதோ வெள்ளக்காரியோன்னு நெனச்சிட்டேன்

கவிதை காதலன் said...

எப்படி சார் இதெல்லாம்.. நல்லா இருக்கு

மின்னல் said...

அடுத்த புரோட்டா எப்போது?நச் கவிதை.வாழ்த்துகள்

சைவகொத்துப்பரோட்டா said...

//நான் கூட எதோ வெள்ளக்காரியோன்னு நெனச்சிட்டேன்//

கோவா படம் பார்த்தீங்களோ:))
நன்றி புலவரே.

சைவகொத்துப்பரோட்டா said...

//எப்படி சார் இதெல்லாம்.. நல்லா இருக்கு//

கவிதைகளின் காதலரே, உங்க கவிதைகள் அத்தனையும்
ஆரஞ்சு, இப்பதான் சாப்பிட்டேன்,
நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

//அடுத்த புரோட்டா எப்போது?நச் கவிதை.வாழ்த்துகள்//

நன்றி மின்னலாரே, கூடிய விரைவில் சுட்டுரலாம்.

K.B.JANARTHANAN said...

அசத்தல் சார், தொடரட்டும் அருவியாக உங்கள் கவிதைகள்! -- கே பி. ஜனா

சைவகொத்துப்பரோட்டா said...

//அசத்தல் சார், தொடரட்டும் அருவியாக உங்கள் கவிதைகள்! -- கே பி. ஜனா//

நன்றி கே பி. ஜனா, உங்கள் கவிதையும் அருமை, தொடர்ந்து வாருங்கள்.

ஸ்ரீராம். said...

நெனச்சேன்...இப்படி ஏதாவது லொள்ளு இருக்கும்னு...
அழகான லொள்ளுதான்..
'அங்கே நிக்கறீங்க, அங்கே நிக்கறீங்க'னு ரெண்டு பின்னூட்டம் பார்த்ததும், 'நாமதான் சரியாப் பார்க்கலயோ'ன்னு மறுபடி போய் படத்தைப் பார்த்தேன்.. எங்க நிக்கறீங்க?

சைவகொத்துப்பரோட்டா said...

//'அங்கே நிக்கறீங்க, அங்கே நிக்கறீங்க'னு ரெண்டு பின்னூட்டம் பார்த்ததும், 'நாமதான் சரியாப் பார்க்கலயோ'ன்னு மறுபடி போய் படத்தைப் பார்த்தேன்.. எங்க நிக்கறீங்க?//


ஹா...ஹா... இங்கதாண்ணா நீங்க நிக்கிறீங்க :)) நன்றி.

கவிதை காதலன் said...

காதலர் தினத்துக்கு ஸ்பெஷலா "பரோட்டா" போடணும். சொல்லிட்டேன்

சைவகொத்துப்பரோட்டா said...

//காதலர் தினத்துக்கு ஸ்பெஷலா "பரோட்டா" போடணும். சொல்லிட்டேன்//

ரைட்டு, காதலரே, போட்டுறலாம், அப்ப நீங்க. நன்றி, தொடர்ந்து வாருங்கள்.

ஜீவன்சிவம் said...

நல்லாருக்கு கவிதை குறும்பு

சைவகொத்துப்பரோட்டா said...

//நல்லாருக்கு கவிதை குறும்பு//


நன்றி ஜீவன் சிவம்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)