அக்கவுண்டுக்கே பணம் அனுப்பிச்சிருவேன், ப்ளீஸ் ஹெல்ப் மீ சார், எனக்கு அரைகுறையாக தெரிந்த அவர்கள் மொழியில் கேட்டேன் அவரிடம்.
அட யாருய்யா நீ சாவுகிராக்கி, காலங்காத்தால, இப்படி எத்தனை பேருய்யா கிளம்பி இருக்கீங்க,
காசு இல்ல போய்யா. (அவன் சொன்னதின் தமிழ் பெயர்ப்பு!!)
என்ன கொடும சார் இது, மாசம் பொறந்தா சுளையா 35,000/- சம்பளம் எனக்கு, இப்ப என்
நிலமைய பார்த்தீங்களா.
என் வீட்டுக்கோ, நண்பர்களுக்கோ போன் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம், அதுக்கு போன் கூட இல்லையே, நான் இருக்கும்
இடமோ வேறு மாநிலம். எல்லோரும் "தார்" பாஷையில
பேசுறாணுவ, ஒருத்தன் கூட "பரங்கியில" பதில் சொல்ல
மாட்றான்.
அடச்சே, யாருக்கும், மனிதாபிமானமே கிடையாது,
மனிதம் செத்து விட்டது. பின்ன என்ன சார், மொழி தெரியாத
ஊர், எனக்கு நண்பர்களோ, உறவினர்களோ கூட இந்த ஊரில்
கிடையாது. அய்யோ நான் எப்படி ஊருக்கு செல்வேன், பசி
வேறு வயிற்றை கிள்ள, செய்வது அறியாது நின்றேன்.
நான் இதுவரை யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணலையே, கடவுளே எனக்கு
மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது.
அப்பொழுதுதான் (தெய்வம் மாதிரி) அங்கு இருந்த ஒரு பெண்மணி
(அவர் பரங்கி மொழியில் பேசினார்)
என் நிலைமை கண்டு இரக்கப்பட்டு பணம் கொடுத்து உதவினார், அவரின் முகவரி, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை வாங்கி கொண்டு அவரிடம் விடை பெற்று பஸ்சில் ஏறி அமர்ந்தேன்.
காசோட மகத்துவம் இப்ப புரிஞ்சது, இனி வீக் என்ட் பார்டிக்கெல்லாம்
ஒரு எண்டு போட்டிரனும், சிகரட் நோ, காஸ்ட்லி சர்டிங்க்ஸ் நோ,
இன்னும் ஏகப்பட்ட "நோ"க்கள் மனதில் வந்து போனது. இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இப்பொழுது,
மனசுக்குள்ள ஒரு வைராக்கியம் உண்டாச்சு, இனிமேல்
ரோட்டில் ஒரு
பிச்சைக்காரன் காசு கேட்டால் கூட 50 - பைசாவாவது தரனும் (என்ன ஒரு தாராள மனசு!!)
சார், கொஞ்சம் எழுந்திருங்க, என் பக்கத்துக்கு சீட்காரர் என்
தோளை தட்ட, சட்டென முழிப்பு வந்தது,ஹைய்யா இவ்ளோ நேரம் கண்டதெல்லாம் (கெட்ட) கனவா!!
பஸ் அந்த மோட்டலில் நின்றது, அப்படியே இறங்கி சூடாக ஒரு
டீயை என் ஜீரண மண்டலத்திற்கு அனுப்பினேன்.
சார் நான் என்னோட உடமைகள தவற விட்டுட்டேன், ஒரு 35/-
ரூபா மட்டும் கொடுத்தீங்கன்னா, ஊருக்கு போன பின்ன உங்க
பணத்த அனுப்பி வச்சிருவேன்...
இப்படி எத்தன பேர் கிளம்பி
இருக்கீங்க, காசு இல்ல போய்யா,
என் அருகில் இருந்த நபர், காசு கேட்ட அந்த ஆளை விரட்ட அவன், பரிதாபமாக அடுத்து யாரிடம்
கேட்காலாம் என் யோசனையாய் என்னைப்பார்த்தபடி நிற்க....
நான் மெல்ல நழுவி என் பேருந்தை நோக்கி சென்றேன்.
****************************************************************
அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.
57 comments:
அடடே, இது நல்லா இருக்கே
//நான் மெல்ல நழுவி என் பேருந்தை நோக்கி சென்றேன்.//
புடிங்கய்யா.. புடிங்க... எஸ்கேப் ஆக ட்ரை பண்றீங்களா?
//அடடே, இது நல்லா இருக்கே//
அப்படியா, நன்றி நண்பா.
//புடிங்கய்யா.. புடிங்க... எஸ்கேப் ஆக ட்ரை பண்றீங்களா?//
கிளப்பிட்டாங்கையா, கிளப்பிட்டாங்க... பஸ்ஸ..... ஹி...ஹி...
நன்றி கவிதை காதலரே.
கூடிய சீக்கிரம் ஒரு அசால்ட் கதை வந்திடும் ..:)) நேரமிருப்பின் நிறைய படிங்க நண்பரே..:)) வாழ்த்துகள்.
உண்மைதான்...இதுதான் மனித இயல்பு...
நெத்தியடி! இரட்டைநிலை என்றால் என்னவென்பதற்கு இவ்வளவு சுவாரசியமான, எளிதான, உங்களுக்கே உரிய நக்கலும் கலந்த பாணியில் இதை விட யாராலும் எழுதிப் புரிய வைக்க முடியாது. :-)))
என் அருகில் இருந்த நபர், காசு கேட்ட அந்த ஆளை விரட்ட அவன், பரிதாபமாக அடுத்து யாரிடம்
கேட்காலாம் என் யோசனையாய் என்னைப்பார்த்தபடி நிற்க....
நான் மெல்ல நழுவி என் பேருந்தை நோக்கி சென்றேன்.
........... எதார்த்தம். இது நல்ல கதையா இருக்கே........... ஆனால் உண்மையில் இப்படி கேட்கிறவர்கள், தர்மசங்கடமான நிலையில் உள்ளவர்களா? இல்லை இதே புளப்பா வச்சு இருப்பவர்களா? ..........mmm....
//பேநா மூடி said...
அடடே, இது நல்லா இருக்கே//
ரிப்பிட்டூ!
நல்ல கதை
அதானப் பாத்தேன் எங்க குடுத்துட்டீங்களோன்னு நெனச்சேன்..
//எல்லோரும் "தார்" பாஷையில
பேசுறாணுவ, ஒருத்தன் கூட "பரங்கியில" பதில் சொல்ல
மாட்றான்.//
இந்தக்கதையில் மிக ரசித்த இடம் இது சைவக்கொத்துப்பரோட்டா
நல்லாருக்கு தல..!
//கூடிய சீக்கிரம் ஒரு அசால்ட் கதை வந்திடும் ..:)) நேரமிருப்பின் நிறைய படிங்க நண்பரே..:)) வாழ்த்துகள்.//
நன்றி ஷங்கர், ஆலோசனைக்கும், வாழ்த்துக்கும்.
//உண்மைதான்...இதுதான் மனித இயல்பு...//
நன்றி ஸ்ரீராம் அண்ணா, கருத்துக்கு.
//நெத்தியடி! இரட்டைநிலை என்றால் என்னவென்பதற்கு இவ்வளவு சுவாரசியமான, எளிதான, உங்களுக்கே உரிய நக்கலும் கலந்த பாணியில் இதை விட யாராலும் எழுதிப் புரிய வைக்க முடியாது. :-)))//
மிக்க நன்றி நண்பரே.
//........... எதார்த்தம். இது நல்ல கதையா இருக்கே........... ஆனால் உண்மையில் இப்படி கேட்கிறவர்கள், தர்மசங்கடமான நிலையில் உள்ளவர்களா? இல்லை இதே புளப்பா வச்சு இருப்பவர்களா? ..........mmm....//
நன்றி சித்ரா, உங்கள் கேள்வி நியாமானதுதான். இதை தவிர்க்க நாமே அவர்களிடம் காசாக
கொடுப்பதற்கு பதில் டிக்கெட் ஆக எடுத்து கொடுத்து விடலாம்.
//பேநா மூடி said...
அடடே, இது நல்லா இருக்கே//
ரிப்பிட்டூ!//
நன்றி தல, கருத்துக்கு.
//நல்ல கதை//
நன்றி ராம்.
//அதானப் பாத்தேன் எங்க குடுத்துட்டீங்களோன்னு நெனச்சேன்..//
நமக்கு வரும் வரை அடுத்தவர்களின் வலி, நமக்கு புரிவதில்லையே புலவரே, நன்றி
கருத்துக்கு.
//இந்தக்கதையில் மிக ரசித்த இடம் இது சைவக்கொத்துப்பரோட்டா//
மிக்க நன்றி தேனம்மை அக்கா.
//நல்லாருக்கு தல..!//
மிக்க நன்றி ராஜு.
short and sweet story.
தமக்கும், மற்றவர்களுக்கும் சூழ்நிலை எப்படி மாறிவிடுகிறது என்பதை இயல்பாக சொல்லி இருக்கிறீர்கள்...
கொத்துபரோட்டா நல்லாருக்கு.... நானும் சைவம்தான்...........
//short and sweet story.//
நன்றி திவ்யாஹரி.
//தமக்கும், மற்றவர்களுக்கும் சூழ்நிலை எப்படி மாறிவிடுகிறது என்பதை இயல்பாக சொல்லி இருக்கிறீர்கள்...
கொத்துபரோட்டா நல்லாருக்கு.... நானும் சைவம்தான்...........//
நன்றி மோகன், வருகைக்கும், கருத்துக்கும்.
கண்ணிமைக்கும் பொழுதில் மாறுது மனம் தன்னுடைமைக்கு நஷ்டம் என்று வரும்போது! நல்ல தீம்! --கே.பி.ஜனா
கண்ணிமைக்கும் பொழுதில் மாறுது மனம் தன்னுடைமைக்கு நஷ்டம் என்று வரும்போது! நல்ல தீம்! --கே.பி.ஜனா
கண்ணிமைக்கும் பொழுதில் மாறுது மனம் தன்னுடைமைக்கு நஷ்டம் என்று வரும்போது! நல்ல தீம்! --கே.பி.ஜனா
//கண்ணிமைக்கும் பொழுதில் மாறுது மனம் தன்னுடைமைக்கு நஷ்டம் என்று வரும்போது! நல்ல தீம்! --கே.பி.ஜனா//
இதேதான் நான் சொல்ல வந்தது, நன்றி கே.பி.ஜனா.
எல்லோருமே நம்மளை மாதிரிதான்.ஏன்னா..உணமை எது பொய் எது என்று ஒண்ணும் தெரியமாடடீங்கிது..
//எல்லோருமே நம்மளை மாதிரிதான்.ஏன்னா..உணமை எது பொய் எது என்று ஒண்ணும் தெரியமாடடீங்கிது..//
நீங்கள் கூறுவதும் சரிதான், தீர விசாரித்த பின் உதவலாம், நன்றி உங்கள்
கருத்துக்கு.
ஆமாம். நீங்க எங்கியிருந்து எங்க போனிங்க?புகைபடத்தை பார்த்து ரொம்ப யோசிச்சுட்டேன்.சொல்லி விடுங்கள்
அட இது நல்லாயிருக்கே...
அப்படின்னு சொல்றா மாதிரி எழுதியிருக்கீங்க.
//ஆமாம். நீங்க எங்கியிருந்து எங்க போனிங்க?புகைபடத்தை பார்த்து ரொம்ப யோசிச்சுட்டேன்.சொல்லி விடுங்கள்//
கூகிள்-இல் இருந்து மை கம்ப்யூட்டர் வரை சென்றேன். ஹி...ஹி...
நன்றி நண்பா.
//அட இது நல்லாயிருக்கே...
அப்படின்னு சொல்றா மாதிரி எழுதியிருக்கீங்க.//
அப்படியா...நன்றி பொன் வாசு அவர்களே.
உண்மையறிந்து உதவி செய்யலாம்.... தவறில்லை.
சிலரை கேட்கும் இடத்திலும்....சிலரை கொடுக்கும் இடத்திலும் வைத்திருப்பது அதற்காகத்தான்.
//உண்மையறிந்து உதவி செய்யலாம்.... தவறில்லை.//
இதே கருத்தைத்தான் எனது பின்னூட்டத்திலும் கூறி உள்ளேன்,
நன்றி சி.கருணாகரசு உங்கள் கருத்துக்கு, தொடர்ந்து வாருங்கள்.
கட்சீல வெச்சியே பன்ச்சீ , அதாம்பா !! நம்ப பரோட்டா மாயம் !! இன்னு சொல்றது சூப்பர் !! அட ரெண்டு பரோட்டோவாது குத்து இருக்கலாம் !!
எனக்கும் இது போல் இருவருக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. இதில் போலி எது உண்மை
எது என்பது தெரியாமல் கூட போகலாம். நம்மிடமும் பணம் இருந்து அவர் உண்மையிலேயே
தவிப்பவராக இருந்தால் நாமும் ஒரு சந்த்ர்ப்பத்தை இழந்து விடுவோம்.. அவருக்கும் வழ்க்ஷிதெரியாம்னல்
போய்விடும்.. நேரமிருந்தால் நம்து நேரத்தை சற்று ஒதுக்கி டிக்கெட் எடுத்து கொடுக்கலாம்.
அல்லது அவரிடம் போன் நெம்பர் வாங்கி அந்தப் பக்கம் விசாரித்து உதவலாம். இதையும் மீறி
நம்மால் ஆராய்ச்சி எல்லாம் செய்து கொண்டிருக்கமுடியாது. நாமோ அல்லது நமது குடும்பத்தில்
ஒருவருக்கு இப்படி நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து ப் பார்த்து உதவ வேண்டியதுதான்.
நம்மைப் போல் நாலு பேரு இருப்பதனால்தானே நாடு இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கு
{இது எப்பிடி இருக்கு}
கதை மிகவும் அருமை
நிறைய எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
//கட்சீல வெச்சியே பன்ச்சீ , அதாம்பா !! நம்ப பரோட்டா மாயம் !! இன்னு சொல்றது சூப்பர் !! அட ரெண்டு பரோட்டோவாது குத்து இருக்கலாம் !!//
டாங்க்ஸ் அண்ணாத்தே, கர்த்து சொன்னதுக்கு, கண்டிப்பா அவருக்கு பரோட்டா குத்துறலாம்
:))
//நம்மைப் போல் நாலு பேரு இருப்பதனால்தானே நாடு இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கு
{இது எப்பிடி இருக்கு} //
ஜூப்பர், உங்க பேர போலவே இனிமையா இருக்கு, நன்றி பாலாஜி தொடர்ந்து வாருங்கள்.
நல்லாக்குங்க கதை... இது மனித இயல்பு. சட்டுன்னு குரங்கு மாதிரி மனம் தாவிடுது.
//சட்டுன்னு குரங்கு மாதிரி மனம் தாவிடுது.//
சரியா சொன்னீங்க, நன்றி பிரதாப் உங்கள் கருத்துக்கு. உங்க எக்ஸ்ப்ரெஸ் நல்ல வேகம் :))
சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
//சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//
நன்றி டாக்டர், கருத்தை கூறியதற்கு.
எல்லோருக்கும் நிகழ கூடிய அனுபவம்.
அழகான தொகுப்பு.
//எல்லோருக்கும் நிகழ கூடிய அனுபவம்.
அழகான தொகுப்பு.//
நான் சிறுகதை என்று லேபல் இட்டது தவறோ....... சும்மா :))
கருத்துரை இட்டதற்கு நன்றி ஜீவன் சிவம், தொடர்ந்து வாருங்கள்.
நண்பா,
பரோட்டா அருமை... மனித நேயம் போன்ற மேட்டரெல்லாம் கனவுல மட்டும்தான் வாழுதுன்னு நீங்க கொடுத்த சால்னாவும் அருமை...
தொடருங்கள்...
பசியுடன் காத்திருக்கிறேன்.
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
//பசியுடன் காத்திருக்கிறேன்.
அன்புடன்
ஹரீஷ் நாராயண்//
ரைட்டு, சாருக்கு ஒரு பரோட்டா... :))
நன்றி ஹரீஷ், தொடர்ந்து வாருங்கள்.
//நாமோ அல்லது நமது குடும்பத்தில்
ஒருவருக்கு இப்படி நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து ப் பார்த்து உதவ வேண்டியதுதான்//
ரிப்பீட்டு.
//ஆதி மனிதன் said...
//நாமோ அல்லது நமது குடும்பத்தில்
ஒருவருக்கு இப்படி நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து ப் பார்த்து உதவ வேண்டியதுதான்//
ரிப்பீட்டு.//
ஓ.கே.,நன்றி ஆதி மனிதன்.
நல்லாயிருக்கு. என்னையும் ஏமாத்தியிருக்காங்க இப்படி. ஆனா, இதே மாதிரி எங்க அப்பா ஒரு தடவை கஷ்டப்பட்ட போது யாரோ ஹெல்ப் பண்ணுனாங்க. அது நினைவுக்கு வரும்.
// பின்னோக்கி said...
நல்லாயிருக்கு. என்னையும் ஏமாத்தியிருக்காங்க இப்படி. ஆனா, இதே மாதிரி எங்க அப்பா ஒரு தடவை கஷ்டப்பட்ட போது யாரோ ஹெல்ப் பண்ணுனாங்க. அது நினைவுக்கு வரும்.//
மிக்க நன்றி, உங்கள் சம்பவங்களை பகிர்ந்து கொண்டதற்கு.
அன்பின் சைகொப
கனவு கலைந்தது - நனவில் நழுவி மெல்ல பேருந்துக்குச் சென்ற விதம் சிறப்பு - தார் பரங்கி கற்ப்னை அருமை அருமை
நன்று - நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா
// cheena (சீனா) said...
அன்பின் சைகொப
கனவு கலைந்தது - நனவில் நழுவி மெல்ல பேருந்துக்குச் சென்ற விதம் சிறப்பு - தார் பரங்கி கற்ப்னை அருமை அருமை
நன்று - நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா//
மிக்க மகிழ்ச்சி!!!
நன்றி அய்யா.
Post a Comment